(Reading time: 4 - 8 minutes)

சிறுகதை - கல்லரையிலாவது கைபிடிக்கலாம் - சான்டி வெங்கட்

Suicide

"ப்போழுது நான் எவ்வளவு சந்தோஷமாக உள்ளேன் என்று உனக்கு தெரியுமா???"

"அதுவும் இப்படி யாருமில்லாத இடத்தில் உன் தோள் சாய்ந்து உன் கரத்தோடு என் கரம் கோர்த்து உன் விழிமொழியோடு கதைபேசிக்கொண்டு இப்படியே இந்த நிமிடம் நிலைக்காதா நம் ஆயூள் முழுவதும் என்று மனம் பரிதவிக்கின்றது"--அவள்.

"நான் என்ன இங்கு கதையா சொல்லிக் கொண்டிருக்கின்றேன் என்னையே பார்த்துக் கொண்டிருக்கின்றாய்???"

"என்ன இப்போழுது எதற்கு சிரிக்கின்றாய்???"

"என்ன தான் நினைத்து கொண்டிருக்கின்றாய் உன் மனதில் பதில் சொல்லடா??"--அவள்.

"ஏன் அது உனக்கு தெரியாத உன்னை தான் என்று"--அவன்.

"அதனால் தானே நீ என்னை விட்டு பிரிந்து செல்ல நினைத்ததும் உன்னுடனே மௌனமாக வந்தேன் என்றான் சிறு கோபத்துடன்"---அவன்.

"நான் என்ன செய்வது என் அப்பா உன்னை கொன்றுவிடுவேன் என்றாரே"--அவள்.

"அதற்காக என்னை விட்டு போய்விடுவாயா நீ ??? "

"இல்லை நான் உன்னை விட்டுவிடுவேன் என்று எண்ணினாயா???" --அவன்

"இல்லை...இல்லை..., அது உன்மேல் நான் வைத்த அன்பால் தானே அப்படி செய்தேன்...."--அவள்.

"இல்லை நீ பொய் சொல்கிறாய்...."

"என்மேல் உனக்கு அன்பிருந்தால் இப்படி என்னை விட்டுச்செல்ல நினைப்பாயா???" --அவன் .

"போதும் என்னிடம் சண்டைப் போடத்தான் என்னை தேடி வந்தாயா நான் போகிறேன்"--அவள்.

"பார் இப்போழுதுக் கூட என்னை விட்டு செல்ல தான் துடிக்கின்றாய் நான் தான் உன்னை விட முடியால் தவிக்கின்றேன்"என்றான் வேதனையோடு--அவன்.

"அய்யோ நான் உன்னை விட்டு எங்கு செல்வேன் ".

"ஏன் இப்படி கோபப்டுகின்றாய்?? எனக்கு உன்னைவிட்டால் யார் இருக்கின்றார்கள்... "

"உனக்காகத் தான் பிரிய நினைத்தேன் ஏன் புரிந்துக்கொள்ள மறுக்கின்றாய்???" என்றாள் அழுதுக்கொண்டே --அவள் .

"அவள் அழுவதை பார்த்தவுடன்  மனதில் உள்ள கோபம் சூரியனை கண்ட பனி போல் உருகிவிட  "சரி சரி முதலில் என் முன்னால் அழுவதை நிறுத்து."என்றான் மென்மையாக-- அவன்

"ம்ம்ம்..... சரி".--அவள்.

"இங்கே வா"--அவன்.

"ம்ம்ம் என்ன...."--அவள்.

"என்னை நிமிர்த்து பார்க்க மாட்டாயா ம்ம்ம்???"-- காதலில் கரைந்து வந்தது அவனது குரல்.

"அவனது குரலில் என்றும் போல் இன்றும் மயங்கி அவனின் விழியோடு விழி கலந்தாள்"--அவள்.

"அவனோ கண்ணால் காதல் பேசி கையால் கைது செய்தான் அவளை".

"எவ்வளவு நேரம் அந்நிலையில் இருந்தார்களோ " திடீரேன்று யாரே வரும் சத்தம் கேட்க இருவரும் பிரிந்தார்கள்".

"அவள் பயத்துடன் அவனை பார்க்க நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான் கண்ணால்"-அவன்.

"ம்ம்ம் என்று அவன் கையை இருக்க பிடித்துக்கொண்டாள் "--அவள்.

வர்கள் இருவரையும் தேடி வந்த அவர்கள் சுற்றி வளைந்தனர்.

"ஏலேய் இதுங்க ரெண்டையும் தூக்கிட்டு வாங்கலேய்"

"சனியன் பிடிச்சதுங்க ரெண்டும் ஓன்னா செத்து நம்ம உயிரை வாங்குதுங்க"--அவர்களின் தலைவன்.

"ஏண்ணா... இதுங்களை ஓன்னாவே பொதசிடலாமா"--அவர்களின் ஒருவன்.

"என்னலேய் செல்ற ஜாதிவிட்டு ஜாதி காதலிச்சதால தானே அந்த பையனை நம்ம ஐயா கொள்ள சென்னாரு"

"அதுக்குள்ள இதுங்களே ரெண்டும் விஷம் குடிச்சீ செத்துடுச்சிங்க".

"நம்ம ஊருல காதலிச்சா கீழ் ஜாதி பசங்களை தான் கொள்ளுவாங்க ஆனா ரெண்டுங்களும் செத்துடுச்சீனா உசுரே போனாலும் ஒன்ன பொதைக்க மாட்டாங்கலே இப்போ ஓன்னா இதுங்களை பொதச்சோம்னா நம்ம உசுரு போய்டோம்லே"

"போ போய் மேல் ஜாதி கல்லரையிலும் கீழ் ஜாதி கல்லரையிலும் குழி வெட்டுங்கலே தனி தனியா"--அவர்களின் தலைவன்.

"அய்யா நான் நினைத்தது மாதிரியே நடந்து விட்டதே வாழும்போது தான் ஜாதி என்று பிரித்து ஒன்றாக வாழ விடவில்லை..."

"இப்போ கல்லரையில் கூட நம்மை பிரிக்கின்றார்களே..!!

"என்னவனே என்னவனே என்னை விட்டு பிரிந்து இருக்க முடியாமல் தானே என்னுடன் இறந்தாய் என்றாய்.....!!!

"இப்போழுது எதும் பேசாமல் அவர்களுடன் வேறு கல்லரைக்கு செல்கிறாயே....???"-என்று கதறினாள் அவள்.

"கடவுளே இறக்கும் போதுகூட இவளை விட்டு பிரியாமல் இருக்க தானே அவள் இறத்த மறு நோடி நான் இறந்தேன்".

"இப்போது கல்லரையில் கூட பிரித்துவிட்டார்களே என்றான் வேதனையோடு--அவன்.

"இல்லை இல்லை நான் நான் உன்னுடனே வருவேன் அய்யோ... என்னை விட்டு செல்லாதே....."

"யாருக்காவது நான் செல்வது கேட்கிறதா என்னவனை என்னைவிட்டு பிரிக்காதீர்கள்........"

"அவள் கண்ணீர் கரைந்ததே அன்றி யாரும் அவள் குரலுக்கு செவிசாய்க்கவில்லை."

"என்னவனே  நீ இறந்தால் தான்

நான் இருப்பேன் என்றால்

நான் இறப்பேனடா.....!

உன்னை காதலித்தால்

உன் கைபிடிக்க

முடியாது என்றார்கள்.....!

சரி கல்லரையிலாவது

கைபிடிக்கலாம் என்றால்

இங்கும் இடமில்லையாம்

காதலர்களுக்கு---- ஜாதிவேறியினர்....!"

"இவர்களை போல் இன்னும் பலபேர் கதறல்களும் கைவிடப்பட்டுள்ளன.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.