(Reading time: 31 - 62 minutes)

ர்மதா” என்று அவள் உதடுகள் முனுமுனுக்க, அவள் பார்வையோ வாசல் பக்கம் இருந்தது, அதை பார்த்த இளங்கோவும் திரும்பி வாசல் பக்கம் பார்த்தான்.

அப்போது தான் ரெஸ்ட்டாரன்ட்டிற்குள் நுழைந்த நர்மதா, எங்கே உட்காரலாம் என்று இருக்கைகளை பார்வையிட்டவள், இருவரையும் ஒன்றாய் பார்த்து கண்களில் இருமடங்கு திகைப்பைக் காட்டினாள்.. வேகமாக அவர்களை நோக்கி வந்தவள், இளங்கோ அருகில் இருந்த இருக்கையில் உட்கார்ந்தப்படியே,

“இது எத்தனை நாளா நடக்குது.. அண்ணா நீங்கக் கூட என்கிட்ட சொல்லலப் பார்த்தீங்களா??” என்று குற்றம் சாட்டினாள்.

“ஹே நர்மதா ஓவர் கற்பனை பண்ணிக்காத.. நாங்க ரெண்டுப்பேரும் எதெச்சயா தான் இங்க மீட் பண்ணிக்கிட்டோம்..” என்று யமுனா சொல்ல,

“ஆமாம் நர்மதா.. தீபாவளிக்கு அப்பாக்கும், குட்டிக்கும் ட்ரஸ் எடுக்க வந்தேன்.. இப்போ தான் யமுனாவை பார்த்தேன்..” என்று இளங்கோவும் கூறினான்.

“அதானே பார்த்தேன்… இந்நேரம் இடி, மின்னல், மழையெல்லாம் வந்துருக்கனுமே.. தீபாவளி வரப்போகுது இன்னும் சென்னையில் மழைப் பிச்சுக்கலையேன்னு பார்த்தேன்..” என்று நர்மதா இருவரையும் கேளி செய்ததும், யமுனா அவளை முறைத்தாள்.

“சரி நீ எப்படி இருக்க நர்மதா..?? புது வீடெல்லாம் பழகிடுச்சா..??”

“ம்ம் நல்லா இருக்கேன் அண்ணா.. என்னோட வீட்ல இருக்க ஃபீல்க்கு வந்துட்டேன்..”

“நர்மதா ஷாப்பிங்க்கா வந்த.. அதுவும் தனியா??”

“ஷாப்பிங்க்கு தான் யமுனா.. தனியா இல்ல, ரிஷப் கூட வந்தாரு.. பில் போட்ற இடத்துல ரஷ் இருந்துச்சு, அதான் இங்க வெய்ட் பண்ண சொன்னாரு.. இந்நேரம் வந்திருக்கனுமே என்றப்படி அவளும் வாசலை திரும்பிப் பார்க்க, செல்வாவும் உள்ளே வந்துக் கொண்டிருந்தான்.

நர்மதா யாருடனோ உட்கார்ந்திருப்பதை பார்த்து முதலில் விழித்தவன், பிறகு யமுனாவை பார்த்ததும், சிரித்தப்படியே அவர்கள் அருகில் வந்தான்..

“ஹாய் யமுனா.. நீங்க எங்க இங்க..” என்று சொல்லியப்படியே, அருகில் இருந்த புதியவனை தெரியவில்லையென்றாலும், “பாஸ் கொஞ்சம் அப்படி உக்காந்துக்கிறீங்களா?? மது பக்கத்துல உட்காரனும் அதான்..” என்று இளங்கோவை பார்த்துக் கேட்டான்.

யமுனாவை பார்த்தப்படியே இளங்கோ அவள் அருகில் உட்கார, நர்மதாவின் அருகில் உட்கார்ந்த செல்வா, அவளைப் பார்த்து கண்ணடித்தான்.. பதிலுக்கு நர்மதா அவனை பார்த்து முறைத்தாள்.. அதை கவனித்துக் கொண்டிருந்த யமுனா, இளங்கோ இருவரும் ஒருவரையொருவர் பார்த்தப்படி சிரித்துக் கொண்டனர்.

“என்ன யமுனா, தீபாவளி ஷாப்பிங்கா..??” என்றுக் கேட்டப்படியே, அந்த புதியவன் யார் என்று திரும்ப செல்வா இளங்கோவை பார்க்க..

“இவர் இளங்கோ அண்ணா.. எனக்கும் யமுனாக்கும் நல்ல ப்ரண்ட்..” என்று நர்மதா இளங்கோவை அறிமுகப்படுத்தினாள். இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கியதும்,

“நதிகள் பதிப்பகம் கேள்விப் பட்ருக்கீங்களா?? அது இளங்கோ அண்ணாவோடது தான்..” என்று நர்மதா சொல்லிக் கொண்டிருந்த போதே, அந்த டேபிளில் இன்னும் இரண்டு ஆட்கள் வந்திருப்பதைப் பார்த்து சர்வர் அவர்கள் அருகில் வந்தார்.

“ஏற்கனவே ஆர்டர் கொடுத்திருக்கீங்களா??* என்று செல்வா இருவரையும் பார்த்து பொதுவாக கேட்க,

“ ஆமாம் சிக்கன் ப்ரைட் ரைஸ் ஆர்டர் செஞ்சுருக்கோம்..” என்று யமுனா பதில் சொன்னாள்.

செல்வா நால்வருக்கும் சேர்த்து இன்னும் சில உணவு வகைகளை ஆர்டர் செய்தவன், “இவங்க ஆர்டர் கொடுத்ததையும் இதோடவே சேர்த்து எடுத்துட்டு வாங்க..” என்று சொல்லி சர்வரை அனுப்பி வைத்தான்.

“இளங்கோ உங்களை பார்த்ததும், எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு தோனுச்சு.. நதிகள் பதிப்பகம் பேரை கேட்டதும் தான் ஞாபகம் வந்துச்சு.. நீங்க துஷ்யந்த் அண்ணா ப்ரண்ட் தானே.. அண்ணாவ பார்க்க ரெண்டு, மூனு முறை ஆஃபிஸ் வந்திருக்கீங்கல்ல.. “ என்றுக் கேட்டு  இளங்கோவை அதிர வைத்தான்.

இளங்கோவிற்கு துஷ்யந்தை தெரியுமா?? என்று நர்மதாவும், யமுனாவும் இளங்கோவை பார்த்தனர்…. அதுவும் நர்மதாவிற்கு கூட அது பெரிதாக தெரியவில்லை.. ஏற்கனவே இளங்கோவிடம் இதுப்பற்றி கேட்டிருந்ததால், யமுனா தான் இளங்கோ சொல்லப் போகும் பதிலுக்காக ஆர்வமாக காத்திருந்தாள்.

“அப்பா என்ன ஞாபக சக்திடா இவனுக்கு..” என்று மனதில் நினைத்துக் கொண்டான் இளங்கோ.. நதிகள் பதிப்பகம் ஆரம்பிக்க இருந்த புதிதில் அடிக்கடி துஷ்யந்தை பார்க்க இளங்கோ அவன் அலுவலகத்திற்கு செல்லும்போது, அங்கு செல்வாவையும் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்த போது, துஷ்யந்த் தான் இருவருக்கும் மற்றவரை அறிமுகப்படுத்தி வைத்தான்.. இப்போதோ நதிகள் பதிப்பகம் ஆரம்பித்து மூன்றாண்டுகள் முடிந்துவிட்டது… இப்போதும் செல்வா இவனை நினைவில் வைத்திருப்பதை எண்ணி வியந்தான். அதே சமயம் இப்படி மாட்டிவிட்டுடானே என்றும் நினைத்தான்.. இதை எப்படி சமாளிப்பது எனறு சிந்தித்தப்படியே யமுனாவை பார்க்க, அவள் இன்னும் அவன் பதிலுக்கு தான் எதிர்பார்த்திருந்தாள்.

“நான் முன்ன வேலைப் பார்த்துகிட்டுருந்த பதிப்பகத்தோட ஓனர், உங்க அண்ணாவுக்கு தெரிஞ்சவர், நான் புதுசா தொடங்க இருந்த பதிப்பக விஷயமா, அவர்தான் உங்க அண்ணாவை பார்க்க ஆஃபிஸ்க்கு அனுபிச்சாரு.. அது நடந்து ஒரு மூனு வருஷம் இருக்குமா?? இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்க… உங்க அண்ணாவே என்னை இந்நேரம் என்னை மறந்திருப்பார்..” என்று சமாளித்துப் பேசியவன்,

“இப்போ உங்க அண்ணா எப்படி இருக்கார்.. இன்னைக்கு சண்டே ஆஃபிஸ் போயிருக்காரா..?? இல்ல வீட்ல இருக்காரா?? என்று துஷ்யந்த் இப்போது அவனுக்கு ரொம்ப பழக்கமில்லாதவன் போல ஒரு கேள்வியை கேட்டு வைத்தான்.

“அண்ணா நல்லா தான் இருக்கார்.. இப்போ அவர் சென்னையில இல்ல… குன்னூர்ல எங்க எஸ்டேட் ஒன்னு இருக்கு, அங்க கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்க போயிருக்கார்..” என்று இளங்கோ கேள்விக்கு செல்வா பதில் சொல்ல,

“என்ன குன்னூரா?? அங்க உங்களுக்கு எஸ்டேட் இருக்கா என்ன??” என்று யமுனாக் கேட்டாள்.

“ஆமாம் குன்னூர்ல ஒரு டீ எஸ்டேட் இருக்கு.. எஸ்டேட் பங்களாவும் இருக்கு… ஆனா அங்க நாங்க சின்ன வயசா இருக்கப்ப போனது தான், இப்போ அங்க வேலையைப் பார்த்த மாதிரியும் இருக்கும், கொஞ்சம் ரெஸ்ட் எடுத்த மாதிரியும் இருக்கும்னு தான் அண்ணன் போயிருக்கார்.. ஆமா நீங்கல்லாம் குன்னூர் போயிருக்கீங்களா??” என்று மூவரையும் பார்த்து அவன் பொதுவாக கேட்க,

“ம்ம் நான் ஸ்கூல் படிக்கும் போது ஊட்டிக்குப் போயிருக்கேன், அப்ப குன்னூரும் பார்த்திருக்கேன்..” என்று நர்மதா கூறினாள்.

“நான் காலேஜ் படிக்கிறப்போ ப்ரண்ட்ஸோட போயிருக்கேன்..” என்று இளங்கோ கூறினான்.

அடுத்து யமுனா சொல்லும் பதிலுக்காக செல்வா அவளை பார்த்திருக்க, இளங்கோவும் அவள் என்ன சொல்லப் போகிறாள் என்ற ஆவலோடு யமுனாவை பார்த்திருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.