(Reading time: 39 - 78 minutes)

ங்க கணவருக்கு நீங்க கல்யாணத்துக்கு முன்னாடி இவரை கல்யாணம் செஞ்சுக்க இருந்தது முன்னாடியே தெரியுமா? அதான் ஒருவேளை அப்படி நடந்துக்கிறாரோ?”

“இல்லை கங்கா.. ஆரம்பத்துல நான் கூட அப்படி தான் நினைச்சேன்.. ஆனா அவரோட சுபாவமே அப்படித்தான், அவர் வளர்ந்த விதமே அதான், மனைவின்னா இப்படி தான் இருக்கனும்னு அவர் நினைக்கிறாரு..”

“உங்களுக்கு குழந்தை..”

“ஒரு பொண்ணு இருக்கா.. 3 வயசு ஆகுது, என்னோட கவலைகளுக்கு மருந்துன்னா, அது அவ மட்டும் தான்”

“கடவுள் ஒரு விஷயத்துல கதவை சாத்தினா, இன்னொரு விஷயத்துல கதவை திறப்பாரு.. கணவன் அன்பா இல்லைன்னாலும், அழகான குழந்தையை கொடுத்திருக்காரில்ல, அவக்கிட்ட உங்க அன்பைப்காட்டுங்க, கண்டிப்பா அதுக்கு பலன் இருக்கும், செஞ்சது தப்புன்னு உணர்ந்திட்டீங்கல்ல, கண்டிப்பா உங்க கணவர்க்கிட்டேயும் மாற்றம் வரும், கவலைப்படாம இருங்க..”

“துஷ்யந்தை பார்த்து மன்னிப்பு கேட்க வந்தேன், ஆனா நீங்க எனக்கு ஆறுதலா பேசறீங்க, நீங்க ரொம்ப நல்லவங்க கங்கா.. நீங்க துஷ்யந்துக்கு கிடைச்சது அதிர்ஷ்டம்.. நீங்க ரெண்டுப்பேரும் ரொம்ப வருஷம் சந்தோஷமா இருக்கனும்,

துஷ்யந்த் உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்க கூட எனக்கு தகுதியில்ல, முடிஞ்சா என்னை மன்னிக்கப் பாருங்க, இப்பன்னு இல்ல, எப்போ மன்னிக்க தோனுதோ அப்ப, வீட்ல இருக்கவங்கக்கிட்டேயும் சொல்லுங்க, நான் வரேன்.. வரேன் கங்கா..”

“சாரு.. கங்கா சொன்ன மாதிரி தப்பை உணர்ந்துட்டல்ல அது போதும், நான் மன்னிச்சிட்டேன்” என்று துஷ்யந்த் கூறியதும், கையெடுத்து கும்பிட்டு நன்றியை தெரிவித்தாள்.

இருவரும் அதே நிலையில் நின்றப்படி அங்கிருந்து சென்ற சாருவை பார்த்தப்படி நின்றிருந்தனர்.

“பாவம் வெளிநாட்டு மோகம் தப்பு செய்ய தூண்டிடுச்சு, நல்லவேளை நீங்க அவளை மன்னிச்சிட்டீங்க, ஆமாம் சாரு உங்க ரிலேஷன் தான, உங்களுக்கு கல்யாணம் ஆகலன்னு அவளுக்கு தெரியாதா?”

“சாருவோட துரோகத்துக்குப் பிறகு, அம்மா சுத்தமா எல்லா உறவையும் விட்டு விலகிட்டாங்க.. பிஸ்னஸ்லையும் அவங்க எங்கக் கூட போட்டியிட முடியாத தூரத்துக்கு போயிட்டோம்.. அதான் எங்களைப்பத்தி யாருக்கும் எதுவும் தெரியல..”

“சரி.. சாரு என்னை உங்க மனைவியான்னு கேட்டப்போ, ஏன் மறுக்கல?”

“மறுக்க தோனல.. எப்படியோ ஒருநாள் அது நிஜமாக தான போகுது..’

“கண்டிப்பா அது நடக்காது..”

“நடக்கும்.. இப்போ சேர்ந்திருக்க நம்ம கை, எப்பவும் விலகாம சேர்ந்திருக்க காலமும் வரும்” என்று அவன் சொல்ல, அப்போது தான் அவன் தன் கையை பிடித்ததை அவள் கவனித்தாள்.

“என்னை தொட மாட்டேன்னு சத்தியம் செஞ்சு கொடுத்ததை மறந்துட்டீங்களா? ஏன் என் கையை பிடிச்சீங்க..?”

“நான் மட்டுமில்ல, நீயும் தான் என் கையை பிடிச்சிருக்க, அதுவும் இறுக்கமா’ என்று சொன்னதும், உடனே கையை அவன் கைகளிலிருந்து பிரித்தாள்.

“உன்னோட அனுமதி கிடைச்சிடுச்சே, அப்புறம் ஏன் கையை பிடிக்கக் கூடாது?” என்றதும், எப்போது நான் அனுமதி கொடுத்தேன் என்ற ரீதியில் அவள் பார்க்க,

“அதான் அன்னைக்கு காய்ச்சல் வந்ததே அப்ப, இன்னைக்கு கையை தான் பிடிச்சேன்.. அன்னைக்கு என்ன செய்தேன் தெரியுமா?” என்று அவன் கேட்டதும், மிரண்டு விழித்தாள்.

அவன் வந்ததே கனவு போல் தான் அவள் அறிந்திருந்தாள், இதில் அவன் என்ன செய்தான்? என்று அவள் தெரியாமல் விழித்தாள்.

அவளது அந்த பார்வையில் அவனுக்கு சிரிப்பு வந்தது.. உடனே கலகலவென சில நொடிகள் சிரிக்க, இதுவரை அவன் அப்படி சிரித்து பார்த்திராதவள், அதிசயமாக பார்த்தாள். இருந்தும் அதை உடனே மாற்றியவள்,

“அன்னைக்கு என்ன நடந்துச்சு..” என்று திக்கி திணறி கேட்டாள்.

“அன்னைக்கு உனக்கு காய்ச்சல், அதனால உன்னோட தலையை கோதினேன்.. கிளம்பும் போது நெற்றியில் ஒரு முத்தம்.. அவ்வளவு தான், நீ நினைச்சா மாதிரில்லாம் ஒன்னுமில்ல, இங்கப்பாரு நாம ஜோடி சேரனும்னு போன ஜென்மத்துலேயே முடிவானது போல, அதனால அது நடக்கறது உறுதி.. என்னோட முடிவு மாறாது.. நீயும் சீக்கிரமா மனசு மாறுவ..” என்று சொல்லிவிட்டு சென்றான்.

“இது இந்த ஜென்மத்து பந்தம் துஷ்யந்த்.. என்னோட கழுத்துல கட்டின தாலியில் ஸ்டாராங்கா முடிப் போட்டுடீங்க போல, அதான் நானா உங்களை விட்டு விலகனும்னு நினைச்சாலும் முடியல.. நீங்களாகவும் என்னை விட்டு விலகல.. இதுக்கு தீர்வு தான் என்ன? என்று சென்றவனை பார்த்து கேட்டாள்.

ப்ரண்ட்ஸ், செஞ்சு கொடுத்த சத்தியத்தை மீறி, கங்கா உங்ககிட்ட துஷ்யந்த் தான் அவளோட கணவன் என்ற உண்மையை சொல்லிட்டா, அதை சீக்கிரம் துஷ்யந்த் கிட்ட நீங்க தான் சொல்லனும், கங்காவின் கணவன் துஷ்யந்த்னு உங்களுக்கு தெரிஞ்சது போல, துஷ்யந்துக்கு தெரிய வரும்போது, நாம fb க்கு போகலாம்.. அது எப்போ என்று நீங்க கேட்பது காதில் விழுகிறது..  கண்டிப்பா 3,4 அத்தியாயத்துக்கு பிறகு fb வந்துடும்.. உங்க கருத்துக்களுக்காக ஆவலாக காத்திருக்கிறேன்.. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.. நன்றி.

 

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 28

Episode # 30

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.