(Reading time: 9 - 18 minutes)

தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 11 - வத்ஸலா

Kannathil muthamondru

ங்க பெரியம்மா, அண்ணன், அண்ணி இவங்க மூணு பேர் முகத்தையும் என் வாழ்கையிலே இனிமே எப்பவும் நான் பார்க்கவேகூடாது.’ சொல்லும் போது அவனது தந்தையின் குரலில் அத்தனை கடுமை தேங்கிக்கிடந்தது.

‘எனக்கு இந்த கல்யாணத்திலே ஒரே ஒரு கண்டிஷன்தான் இருக்கு. அவங்க மூணு பேரும் என்னைக்கும் இந்த வீட்டு வாசப்படி மிதிக்ககூடாது. உங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்கு கூட வரக்கூடாது. இதுக்கு உனக்கு சம்மதம்னா நாளைக்கே கூட கல்யாணத்தை முடிச்சிடலாம்.’ தீர்மானமாக சொன்னார் அவன் தந்தை.

விழிகளில் கொஞ்சம் பயம் பரவ அவரையே பார்த்திருந்தாள் அனுராதா. அந்த பார்வையே அவரை கொஞ்சம் தளர்த்தி இருக்குமோ என்னவோ?

‘உனக்கு அப்பா அம்மா இல்லை. அப்படிதானே மா?

‘ம்.’ மெல்ல தலையசைத்தாள் இவள்.

‘உன்னை இவ்வளவு தூரம் வளர்த்து படிக்க வெச்சது இவங்கதான். நான் மறுக்கலை. அவங்களை தூக்கி போடறது உனக்கு ரொம்ப கஷ்டம். ஆனா என்னாலே அந்த வகையிலேயும் அவங்களையும் அவங்க செஞ்ச அநியாயத்தையும் ஏத்துக்க முடியாது.’ குரலில் முதலில் இருந்த உறுதி கொஞ்சமும் மாறவில்லை.

சில நொடிகள் இடைவெளி விட்டு இவள் மனம் படித்தவராக சொன்னார் அவர். ‘உன் பெரியப்பா வந்து போகட்டும். அவர் மேலே எனக்கு பெருசா எந்த வருத்தமும் இல்லை. ஆனால் இந்த வீட்டுக்கு நீ மருமகளா வந்த பிறகு அவங்க மூணு பேரோட உனக்கு எந்த சம்மந்தமும் இருக்க கூடாது. புரியுதா?’

ஒரு ஆழமான மூச்செடுத்துக்கொண்டாள் அனுராதா.

‘நான் சொல்றதிலே எந்த தப்பும் இல்லைன்னு உனக்கே புரியும்னு நினைக்கிறேன். யோசிம்மா. டைம் எடுத்துக்கோ. ஆனா தெளிவா முடிவு எடு. இந்த விஷயத்திலே என்னாலே காம்பரமைஸ் பண்ணிக்க முடியாது.’

தலை அசைந்ததா இல்லையா என்று அவளுக்கே புரியாத மாதிரிதான் தலை அசைத்தாள் அவள். அவர் பேசிய தொனியிலிருந்தும், சொல்லியே விதத்திலுமே எந்த விதமான பொய்யோ தவறோ இருப்பதாக அவளுக்கு தோன்றவில்லைதான்.

‘ஹரிஷுக்கு ஷங்கர்தான் உங்க அண்ணன்னு இது வரைக்கும் தெரியாது இல்லையாமா?’

‘தெரியாது அங்கிள்’ என்றாள் அடிக்குரலில்.

‘தெரிஞ்சா அவனும் நான் சொல்றதைத்தான் சொல்வான். அவனும் சாதரண மனுஷன்தானேமா. அவனுக்கு இத்தனை அவமானத்தை கொடுத்தவங்களை மன்னிச்சு மச்சான் மாப்பிள்ளைனு உறவு கொண்டாடுற அளவுக்கு அவன் ஞானி எல்லாம் இல்லை.   அவன்கிட்டே நான் எதுவும் சொல்ல மாட்டேன்மா. அவன்கிட்டே இப்போ சொல்றதும், அப்புறமா கல்யாணம் முடிஞ்ச அப்புறம் பக்குவமா சொல்லிகறதும் எதுவா இருந்தாலும் உன் விருப்பம்தான். நீ ஹேண்டில் பண்ணிக்கோ ‘உன் ஹரி’ஷை சரியா? முடித்துவிட்டார் அவர். எல்லா பாரத்தையும் இவள் மீது தூக்கி போட்டுவிட்டு நிம்மதி ஆகிவிட்டார் அவர். ஆனால் இப்போது இவள் நிலை?

அவன் அப்பாவின் வார்த்தைகள் மறுபடி மறுபடி அவள் காதில் கேட்டுக்கொண்டே இருக்க அவள் அருகில் அவள் தோள் அணைத்தபடி ஹரிஷ் நின்றிருக்க, அவனையே பார்த்திருந்தாள் அனுராதா.

அவனிடம் எல்லாவற்றையும் கொட்டிவிட வேண்டுமென்றுதான் துடித்தது மனது. இன்னமும் சற்றே இறுகியது அவள் தோளில் படித்திருந்த அவனது கரம்.

‘என்ன அனும்மா?’ வாஞ்சை இதமாய் எழுந்தது அவன் தொனியில்..

அவனிடம் எல்லாவற்றையும் சொல்லி விடலாம்தான். சொல்லிவிட்டால் என்ன ஆகும்? தோள் சுற்றி இருக்கும் அவன் கரம் சட்டென விலகுமோ என ஒரு பயம். எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஏனோ அவனுக்குள் சுருண்டு கண்மூடிக்கொள்ள தோன்றியது.

‘மனசிலே இருக்கிறதை தைரியமா என்கிட்டே சொல்லு. என்ன பிரச்சனை?’

‘அதெல்லாம் ஒண்ணுமில்லை. நா... நாம... கொஞ்ச நேரம் இ...இப்படியே இருக்கலாமா...’ தயக்கத்தில் ஊறி மேலேறி வந்தது குரல்.

‘ஆஹான்.... அப்படியா? ‘சரி நீ அப்படியே இரு. உன் மனசிலே என்ன இருக்குனு நான் சொல்லட்டுமா? என அவன் ஏதோ சொல்ல முயல்வதற்குள் சடக்கென அவளை விட்டு விலகியது அவன் கரம்.

‘என்ன ஹரிஷ். கல்யாணம் வருது போலிருக்கே?’ ஒரு குரல் அவர்கள் இருவரையும் சற்றே விலகி நிற்க வைத்தது. பெரியப்பா வயதை ஒத்தவர் ஒருவர் நின்றிருந்தார் அவர். சற்றே பெரிய அந்தஸ்தில் இருப்பவர் என்று தோன்றியது

அழகாய் மலர்ந்து சிரித்தான் ஹரிஷ். ‘உங்களுக்கு யார் சொன்னாங்க அங்கிள்?’ என்றான் இவன் இயல்பாக.

‘யார் சொல்லணும். அதான் அப்போலிருந்து பார்த்திட்டே இருக்கேனே உங்க ரெண்டு பேரையும். நீங்க ரெண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர்’

‘ஓ... தேங்க் யூ அங்கிள்’ என்றவன் அவரை ஒரு நீதிபதி என அறிமுக படுத்தி வைத்தான் அவளுக்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.