(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - என் நிலவு தேவதை – 15 - தேவிஸ்ரீ

En nilavu devathai

காலை 6 மணி.. போர்வைக்குள் சுருண்டு தூங்கிகொண்டிருந்தாள் அம்மு.. அவளது கைப்பேசி மெல்ல சிணுங்கியது.. அதை கேட்டு அவளும் சிணுங்கி கொண்டு போர்வையை உதறி போனை எடுத்து ஆன் செய்து காதில் வைத்தாள்..

“ஹலோ......”

“ஹாப்பி பர்த்டே குட்டிம்மா...”

“அப்பா....”

“அப்பா தான் டா.. என்றும் மகிழ்ச்சியுடன், இனி வரும் வருடங்களிலும் நோய் நொடி இல்லா, நிம்மதியான அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன்...”

“நன்றி அப்பா”

“இருடா.. அம்மா பேசறா,..”

“ஹலோ ஆனந்தி..”

“பிறந்த நாள் வாழ்த்துக்கள் டா அம்மு...”

“i miss u all அம்மா..”

“நாங்க வரணும்னு தான் டா இருந்தோம்.. ஆனா வர முடியலடா.. SORRYமா...”

“பரவாயில்லமா.. SORRY எல்லாம் சொல்ல வேணாம்..”

“இல்லடா.. எப்பவும் உன் பர்த்டே அன்னிக்கு நீ இப்படி தனியா இல்லை. அதான் கஷ்டமா இருக்கு...”

நான் எங்க தனியா இருக்கேன்.. என் காதலன் தான் என் கூடவே இருக்காரே.. என மெல்ல முணுமுணுத்தவள் “அம்மா.. நன் எங்க தனியா இருக்கேன்.. என்கூட தாயம்மா, யம்மு, சங்கு, சங்குவோட அண்ணா எல்லோரும் இருக்காங்க.. சோ நீங்க கவலைப்பட அவசியமே இல்லை.. ஓகே வா?..”

“சரிடா செல்லம்... உனக்கு சர்ப்ரைஸ் கிப்ட் வரும்.. பார்த்துட்டு பிடிச்சிருக்கான்னு சொல்லு..”

“உண்மையாவா...”

“உன்னை பத்தி எனக்கு தெரியாதா. உலகத்திலே உன்னை மாதிரி கிப்ட் மேல பைத்தியமா யாரும் இருக்க மாட்டாங்க... போ.. இந்நேரம் வந்துருக்கும்...”

“போம்மா.. நான் அப்படிதான்.. சரி நான் போய் கிப்ட் பார்க்கறேன், ஓகே BYE...” என போனை கட் செய்தவள் எழுந்தாள்.. அப்போது தான் தன முன்னே உள்ள ரோஜா பூங்கொத்துக்களை கண்டாள்.. அவள் மனம் உவகை கொண்டது.. அவளுக்கு தெரியும், இது தன் ஸ்வீட் காதலனின் வேலை என, அவற்றை அள்ளி எடுத்து அணைத்து கொண்டாள்...

“பூங்கொத்துக்கு தான்  அந்த அணைப்பா?... அதை கொடுத்தவனுக்கு கிடையாதா...” என குரலை கேட்டவள் ஆர்வமாய் திரும்பினாள்...

“மாமா...” என்று அவள் அழைத்ததில் கடுப்பானவன்,

“மாமானு கூப்பிடாதடி.. ப்ளீஸ்..” என அவன் கூறியதை கேட்டு சிரித்தாள்...

“வேற எப்படி கூப்பிடறது..”

“விக்ரம்ன்னே கூப்பிடு”

“ஊகூம்...”

“ப்ளீஸ் டீ..”

“சரிங்க அத்தான்...”

“என்னடி அத்தான் பொத்தான்னு.. சரி பரவாயில்லை.. மாமாக்கு இது பெட்டர்.. சரி சீக்கிரம் போய் குளி.. இந்த டிரஸ் போட்டுக்கோ..”

“டிரஸ் ஆ.. எனக்கா....” என ஆவலாய் கேட்டவள் அதை திறந்து பார்க்க, அதில் வானவில்லின் அனைத்து நிறங்களையும் கொண்டு அமைந்திருந்த அந்த அழகிய DESIGNER சுடிதாரை கண்டு கண் விரித்தாள்... அதை மென்மையாய் தடவினாள்...

“என் வாழ்க்கையின் வானவில் 18  வருடங்களுக்கு முன்பு இதே நாளில் தான் பிறந்தாள்... அதுக்கு தான் இந்த பரிசு.. பிடிச்சிருக்கா..” என அவள் காதோரமாய் அவன் வினவ, மகிழ்ச்சியில் புன்னகைத்தவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்... அதை கண்டு சிரித்த விக்ரமை கண்டு,

“எதுக்கு சிரிக்கிறிங்க..”

“நான் சொல்ல மாட்டேன்..”

“ப்ளீஸ் சொல்லுங்க...”

“இல்ல, நீ கொடுத்த முத்தம் ஒரு குழந்தை முத்தம் தந்தது போல இருந்துச்சி, அதான்..” என கேலி செய்தவனை கண்டு முறைத்தாள் அம்மு..

“என்னையே கேலி பண்றிங்க இல்ல.. இனி நான் உங்களுக்கு முத்தமே தர போறது இல்ல...” என கோபத்தில் கத்தியவள் அவன் மேலும் சிரிப்பதை கண்டு மறுபடியும் என்னவென்று கேட்க,

“நான் உன் முத்தத்தில் இருந்து தப்பிச்சேன்னு சிரிச்சேன்...” என அவன் சிரித்து கொண்டே சொல்லவும் கடுப்பாகிய அம்மு, தலையணையை அவன் மீது தூக்கி எறிந்தவள், கோபத்துடன் குளிக்க சென்றாள்..

எனக்கு நீ இன்னும் குழந்தைதாண்டீ.. என நினைத்தவன் அங்கிருந்து சென்றான்..

அம்முவோ குளியலறையில் கோபத்தில் விக்ரமை திட்டிக்கொண்டு இருந்தாள்... நானா கொடுக்கவும் உனக்கு அது பெருசா தெரியல இல்ல, இனிமே உன்கிட்ட நான் ROMANCE பண்றதா இல்ல.. இதுக்காக உங்கள நான் கெஞ்ச வைக்கல நான் அம்மு இல்ல, என புலம்பி கொண்டே குளித்து வெளியே வந்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.