(Reading time: 11 - 21 minutes)

“அது யாருன்னு தெரியலையே சார்...”

“அப்படியா சரி... முருகேசு உங்களை ராமசாமி வீட்டுக்கு போக சொல்லி எப்போ தகவல் சொன்னார்...”

“அந்த வீட்டுக்கு போன அன்னைக்கு சாயங்காலம்தான் சொன்னார் சார்....”

“கனம் நீதிபதி அவர்களே... இவர்கள் கூறுவது அனைத்துமே உண்மைக்கு புறம்பான செய்திகள்... இவர்கள் சொல்லும் அன்று அவருடைய சர்க்கரையின் அதிகமாகி மயக்கம்  ஏற்பட்ட காரணத்தால் இவர்கள் சொல்லும் அதே நாள் அன்று அருகிலிருக்கும் மருத்துவமையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்... அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து மூன்று நாட்கள் கழித்துத்தான் சாதாரண பிரிவிற்கே மாற்றப்பட்டார்... அதற்கான மருத்துவ சான்றுகள்....”, என்று அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க நாராயணனும், தமிழ்ச்செல்வனும் தாங்கள் மாட்டிக்கொண்டோமோ என்று முழிக்க ஆரம்பித்தார்கள்....

அப்பொழுது அப்ஜெக்ஷன் மை லார்ட் என்றபடியே அம்பலவாணர் எழுந்து, “நீதிபதி அவர்களே, இந்த காலத்தில் பணம் என்ற ஒன்று பாதாளம் வரை பாய்கிறது.... அந்தப் பணத்தைக் கொடுத்தால் இதைப் போன்ற போலி சான்றிதழ்களை மிக எளிதாகப் பெற்றுவிடலாம்....”

“நீங்கள் எதிர்தரப்பில் இருப்பதால் அனைத்துத் துறையினரையும் குற்றவாளிகளாகப் பார்க்காதீர்கள் வக்கீல் அவர்களே... இருந்தாலும் இதன் நம்பகத்தன்மையும் சோதிக்கப்படும்....”

“குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும் நீதிபதி அவர்களே... திரு. முருகேசு அவர்கள், வியாபாரிகள் சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்... அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று அவரைப் பார்க்க ஆளும் கட்சியிலிருந்து முக்கிய மந்திரி ஒருவர் வந்திருந்தார்... அப்பொழுது எடுக்கப்பட்ட காணொளி லோக்கல் சானலில் ஒளிபரப்பாகியது... அதன் நகல் இதோ....”, தன் கட்சியை சேர்ந்தவரே தனக்கு ஆப்பாக அமைவார் என்று எதிர்பார்க்காத தமிழ்ச்செல்வன் அடுத்து என்ன செய்வது என்று யோசித்தான்...

“இது எல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல் உள்ளது இவர்கள் பத்தாண்டுகளுக்கு முன் செய்த இரட்டைக் கொலைகள்....”

“அப்ஜெக்ஷன் யுவர் ஹானர்.... ஒருவர் அகப்பட்டார் என்பதற்காக அவர் மீது எல்லாப்பழியையும் போடுவது நியாயம் இல்லை.....”

“திரு. அம்பலவாணர் அவர்களே... எதற்காக பதட்டப்படுகிறீர்கள்... இதுவரை அவர்கள் செய்த குற்றங்களை எப்படி நிரூபித்தோமோ அதேப் போல் இதையும் நிரூபிப்போம்....”, என்று கூற, இன்று நடந்த வழக்கில் பொய் சொல்லி கோர்ட்டை அவமதித்த குற்றத்திற்காகவும், வீட்டைக் கேட்டு ராமசாமியை மிரட்டிய குற்றத்திற்காகவும் நாராயணனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பதாகவும் கூறி இரட்டைக்கொலை வழக்கை அடுத்த திங்கள் அன்று எடுத்துக்கொள்வதாகவும் அதுவரை இருவரையும் சிறையில் அடைக்குமாறு கூறி உத்தரவிட்டார் நீதிபதி....

எங்கிருந்து இந்த இரட்டைக்கொலை வழக்கு வந்தது என்று இருவரும் தலையில் கை வைத்து அமர்ந்தார்கள்....

தொடரும்

Episode 26

Episode 28

{kunena_discuss:1100} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.