(Reading time: 18 - 35 minutes)

அதைப் புரிந்து கொண்டவள், அவன் கண்களை இன்னும் ஆழமாய் பார்த்தாள். அவன் இருக் கைகளையும் பற்றி அதை தன் கன்னத்தின் மீது வைத்து, “விஷ்ணு, ஐ லவ் யு” என்றாள் அனு.

அந்த நொடி உலகமே விஷ்ணுவின் கைகளுக்குள் அடங்கி நின்றது. அவள் கூறிய அந்த வார்த்தை அவன் காதில் மீண்டும் மீண்டும் ஒளித்துக் கொண்டே இருந்தது. இருந்தாளும் அவள் வாயால் மீண்டும் கேட்க வேண்டும் என்ற அசையில் “இன்னும் ஒரு முறை செல்லு அனு”. என்றான் விஷ்ணு.

 “நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்று அனு அழகிய தமிழில் கூறியது அவனை வேறு எங்கோ பறக்க செய்தது.

ப்ளீஸ் இன்னொரு முறை சொல்லு என்பது போல் அவளைப் பார்த்தான் விஷ்ணு.

அவளும் அதைப் புரிந்து கொண்டு “ ஐ லவ் யு, ஐ லவ் யு, லவ் யு சோ மச்” என்று கூறிவிட்டு அவனைக் கட்டி அனைத்துக் கொண்டாள்.

பின் இருவரும் நேரம் போவது கூடத் தெரியாமல் பேசிக் கொண்டிருந்தனர். என்ன பேசினார்கள் என்பதெல்லாம் இருவருக்கும் தெரியாது. அப்போது சிவ புஜையில் கரடி போல், அனுவின் கைப்பேசி ஒலித்தது. எடுப்பதற்கு முன்பே தெரியும் அது திவ்யா தான் என்று, அவள் நினைத்தது போல் திவ்யா தான்.

“சொல்லு டி” என்று கூறும் போதே அவளின் எரிச்சல் அதில் தெரிந்தது.

“எப்படி, மேடம் மார்னீங் மேரேஜ்க்கு வருவீங்களா, இல்ல மேரேஜ் எல்லாம் முடிஞ்சிடுச்சா” என்றாள் நக்கலாக.

“நீ ஃபர்ஸ்ட்டு பேச்ச குற. நாங்க கிளம்பிட்டோம்” என்றாள் அனு.

“ஹ்ம்ம்ம், சீக்கிரம் வந்து சேரு, இங்க எல்லாரும் பயந்து போய் இருக்காங்க. நான் போனை வைக்கிறேன்” என்று போனை கட் செய்ய போனாள் திவ்யா. “ஏய் ஒரு நிமிஷம்” என்ற அனுவின் கூறல் கேட்டு “என்ன” என்றாள்.

“அங்க வேற எதுவும் பிரச்சனை இல்லல” என்று ஒரு சிறு கவலையோடு கேட்டாள் அனு. அப்பா ஓகே சொன்னதும், வேறு எது பற்றியும் யோசிக்காமல் வந்துவிட்டாள், ஆனால் திபக் ஃபேமிளி மற்றும் உறவினர்களை அப்பா எப்படிச் சமாளித்தார் என்று இப்போதுதான் யோசிக்கிறாள்.

அனு எதை பற்றிக் கேட்கிறாள் என்று திவ்யாவால் உணர முடிந்தது. “அதெலாம் ஒரு பிரச்சனையும் இல்ல. அப்பா திபக் ஃபேமிளி கிட்ட பேசிட்டாறு. ஃப்ர்ஸ்ட் அவங்க கொஞ்சம் கோப பட்டாங்க, பட் திபக் ஸ் ஜெண்டில் மேன் டி, அவங்க ஃபேமிளிய கன்வின்ஸ் பண்ணிட்டாரு” என்று அங்கு நடந்ததை கூறினாள்.

“என்னால எவ்வளவு ப்ராப்ளம் எங்க அப்பாக்கு” என்று அனு கூறி முடிப்பதற்குள், “அம்மா தாயே நீங்க பீள் பண்ணதெல்லாம் போது, சீக்கிரம் கிளம்பி வா. கொஞ்ச நேரமாவது தூங்கினாதான் மார்னீங் ஃபெரெஷா இருக்கும்” என்று அனுவை பேசவிடாமல் கட் செய்தாள்.

பின் விஷ்ணுவும், அனுவும் கிளம்பி மண்டபத்திற்கு வர, ராஜ சேகர், பார்வதி திவ்யா என எல்லாம் அவர்களுக்காகக் காத்திருந்தனர். அங்கு இருக்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டான் விஷ்ணு. பின் ராஜ சேகரும், பார்வதியும் அவனை ஆசீர்வாதம் செய்தனர். 

திபக்கை தவிர, மற்ற அவன் குடும்பத்தினர் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். அனுவும், விஷ்ணுவும் மன்னிப்பும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

ற்போது.

“இதுதான் பாஸ் நடந்தது” என்று விஷ்ணு கூறிவிட்டு, திரும்பும் போது மன கோலத்தில் அனு அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.

அதுவரை பவ்யமாக அமர்ந்திருந்த சித்ர குப்தருக்கு அதற்கு மேல் சஸ்பன்ஸ் தாங்க முடியவில்லை. மெல்லமாக தன் கையை அசைத்தார், எமனைத் தவிர, ஒட்டு மெத்த உலகமும் அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்றது. கடிகாரத்தின் நெடி முள் 6ல் நின்றது. எரிந்து கொண்டிருந்த ஓம குண்டத்தில் தீ சுவாலைகள் அப்படியே நின்றன. மேடையில் இருந்து மண்டபம் வரை அனைவரும் சிலையாய் அப்படியே நின்றனர்.

“பிரபு, இதற்கு மேல் என்னால் தாங்க முடியாது. என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரிந்தே ஆக வேண்டும். நம் கண் முன் நின்ற இவன் இன்று மன மேடையில் இருக்கிறான். எப்படி இது எல்லாம்” என்று தன் குழப்பத்தைக் கேட்டே விட்டார்.

சிறு புன்னகையோடு “நம்முடன் செய்த சவாலில் அவன் ஜெய்த்துவிட்டான், அதன் பரிசாக இன்று இங்கு அமர்ந்து இருக்கிறான்” என்றார் எமன்.

“அது எப்படி பிரபு, குறிப்பிட்ட நேரத்திற்குள், அவள் அவனிடம் காதலை சொல்லவில்லையே, அதனால்தானே அவனை எம லோகம் அழைத்து வந்தேன்” என்றார் சித்ர குப்தர்.

“ஹ ஹ ஹ, குப்தரே, நாம கூறிய வாக்கை நாமே மீறக் கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்குள் அவளைக் காதல் சொல்ல வைக்க வேண்டும் என்று தானே கூறினோம். அந்த மெஸேஜ் வந்த நேரப் படி, 11:58 மணிக் கெல்லாம் அவள் அவளது காதலை கூறிவிட்டாள். அதனால் தான் நாம் கொடுத்த வாக்கு படி அவனைப் பூமிக்கு நான் மீண்டும் அனுப்பி விட்டேன்” என்று அதே சிரிப்புடன் கூறினார் எமன்.

“பிரபு, இப்போது புரிகிறது. இது அனைத்தும் உங்களுடைய திருவிளையாடலா” என்றார் சித்ர குப்தர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.