(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 12 - சகி

Uyiril kalantha urave

த்தனை ஆண்டுகளாய் தேடப்பட்ட வினாவிற்கான விடை இன்றோ அவன் கரத்தில்!!ஆனால், உண்மையின் உரத்த குரல்,அவனை தடுமாறவே வைத்தது. பேரதிர்ச்சிக்குள்ளாகியது!!

நடந்த உண்மையை முழுதுமாக உரைத்துவிட்டு அவர் சென்றுவிட்டார்.இவனோ தன் கடந்த காலத்தை எண்ணியும்,தன் தாயின் வேதனையை எண்ணியும் சோர்வுற்றிருந்தான்.எத்தனை வேதனை அடைந்துள்ளார்.ஏன் இதை என்னிடம் கூறவில்லை?குற்றவுணர்வில் நிலைகுலைவேன் என்ற அச்சமா??அதற்காக தான் என்னிடம் உண்மையை மறைத்தாரா?ஆனால் இன்று அந்த உண்மை கன்னத்தில் அறைகிறதே!!

சிவன்யாவிற்கோ அன்று அவன் கூறிய கூற்று நினைவு வந்தது.

"எனக்கு என் அப்பா யாருன்னு தெரியாது! என் அம்மா தான் என்னுடைய உலகம்!"எவ்வளவு குற்ற உணர்வில் தவித்திருப்பான்!!எந்த நிலையில் இவரை வளர்த்திருப்பார் அந்த அன்னை!கண்கள் பனித்தன அவளுக்கு!!

நீண்ட நேரமாக தலையை கைகளால் தாங்கியப்படி அமர்ந்திருந்தான் அசோக். மனம் வலித்தது இந்நிலையில் அவனை காண!!மெல்ல அடி எடுத்து அவனருகே சென்று மண்டியிட்டாள்.சிரத்தை தாங்கி இருந்த கரங்களைப் பற்றி விலக்கினாள்.மூடிய திரை விலக, கண்கள் பனித்திருப்பது தெரிந்தது. அவளது முகத்தை நோக்கவே தயங்கினான் அசோக்.

"ஏங்க..என்னை பாருங்க!"அவனோ சிரம் தாழ்ந்தப்படியே அமர்ந்திருந்தான்.

"என்னைப் பாருங்க!"அவனால் அதற்கு மேலும் முடியவில்லை, கதறி அழுதுவிட்டான். அவன் இன்றுவரை இப்படி உடைந்துப் போய் அவள் கண்டதில்லை.

"என்னங்க!ஏங்க?என்னாச்சு?" பதறிவிட்டாள் அவள்.

"நீ இங்கே இருந்து போயிடும்மா!நான் உனக்கு சரியானவன் இல்லை. நான் உனக்கு வேண்டாம்! போயிடும்மா!" கதறி அழுதான் அவன். 

"என்னங்க பேசுறீங்க நீங்க?என்னாச்சு உங்களுக்கு!"

"நான்...இல்லை...இது...!"தடுமாறினான் அவன்.

"என்னாச்சு?"

"நான் உனக்கு சரியா வர மாட்டேன் சிவன்யா!" அவளுக்கு உலகமே சுழல்வதாக இருந்தது.

"என்னை மன்னித்துவிடு சிவன்யா!எனக்கு இந்த உண்மை எல்லாம் தெரிந்திருந்தா, நான் உன் கூட பழகி இருக்க மாட்டேன். என்னால உனக்கு எந்த தலைகுனிவும் வர கூடாது! நீ போயிடு!" அவள் சிலையாய் நின்றிருந்தாள்,ஏதும் பேசவில்லை.

"என்கூட வா!" அவள் கரத்தைப் பற்றி எங்கோ அழைத்து சென்றான். அவளோ சிலையாகவே உடன் சென்றாள்.அவனிடம் எங்கு அழைத்து செல்கிறான்,எதற்கு அழைத்து செல்கிறான் எதையும் அவள் வினவவில்லை.

நேராக அவள் வீட்டினை நோக்கி காரை செலுத்தினான்.மாலை நேரத்தை நெருங்கிவிட்டிருந்ததை ஆதவ அஸ்தமனம் நிரூபித்தது. காரிலும் ஏதும் அவள் பேசவில்லை.வீட்டிற்கு வந்தப்பின்பும் அவள் ஏதும் பேசவில்லை. திடீரென ஏற்பட்ட திக் விஜயத்தால் உதயகுமார் மற்றும் அவரது திருமதி இருவரும் அரண்டு தான் போயினர்.முகத்தில் எந்த உணர்வு காட்டாத மகளின் நிலை இருவரையும் அச்சம் கொள்ளவே வைத்தது.

"என்னாச்சு மாப்ள?எதாவது பிரச்சனையா?" பதற்றமாக கேட்டார் உதயகுமார். சிவன்யாவின் முகத்தில் எச்சலனமும் இல்லை. எங்கோ வெறித்தப்படி நின்றிருந்தாள். 

உதயகுமாரின் வினாவிற்கு விடை அளிக்காமல் திணறினான் அசோக்.

"சார்! நான் உங்கக்கிட்ட முக்கியமான விஷயத்தை பேசணும்!"

"சொல்லுங்க!" பதறினார் அவர்.

தானும் தனது இல்லாளும் மறைத்த முழு விவரத்தையும், நவீன் குமாரின் வாக்குமூலத்தையும் ஒன்றுவிடாமல் கூறி முடித்தான் அசோக்.அவன் பேச பேச மீனாட்சியின் முகம் மாறியது!!

"நான் உங்கக்கிட்ட மறைக்கணும்னு நினைக்கலை!"

"போதும் நிறுத்துங்க!"அவன் முடிப்பதற்குள் மீனாட்சியின் குரல் அதிகாரமாய் ஒலித்தது. சிவன்யாவிடம் இப்போதும் எச்சலனமுமில்லை.

"என்னங்க?எவ்வளவு பெரிய விஷயத்தை மறைத்திருக்கீங்க?சாதாரண விஷயமா இது?" கொக்கரிக்க ஆரம்பித்தார் அவர்.

"மீனா அமைதியா இரு!"

"நீங்க அமைதியா இருங்க!இது என்ன சாதாரண விஷயமா?நம்ம பொண்ணுடைய வாழ்க்கை பிரச்சனை!நாளைக்கு யாருக்காவது இந்த விஷயம் தெரிய வந்தா என்னப் பண்றது?"சரமாரியாக கணைகளை தொடுத்தார் அவர்.

"இந்தக் கல்யாணம் நடக்காது!" ஒரே முடிவாய் கூறினார் அவர்.இப்போதும் சிவன்யாவிடம் சலனமில்லை.

"மீனா!"

"ம்!அமைதியா இருங்க!என் பொண்ணை இப்படிப்பட்ட பையனுக்கு நான் கல்யாணம் பண்ணி தர மாட்டேன்!" சிவன்யாவின் கூர்மையான விழிகள் இப்போது அவர் மேல் பதிந்தது. ஆனாலும் மௌனம் காத்தாள். விருட்டென மகள் அருகே வந்தவர்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.