(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 04 - ஸ்ரீ

Vizhi vazhi uyir kalanthavale

ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல (ஆ)

கண்ணு முழியில கண்ட அழகுல

ஆசைக் கூடுதே

 

உச்சந்தலையில உள்ள நரம்புல

பத்து விரலுல தொட்ட நொடியில

சூடு ஏறுதே

 

நெத்திப் பொட்டுத் தெரிக்குது

விட்டு விட்டு ரெக்கை முளைக்குது

நெஞ்சுக் குழி அடைக்குது மானே

அலையிர பேயா அவளது பார்வை

என்ன தாக்குது வந்து என்ன தாக்குது

பரவுர நோயா அவளது வாசம்

என்னை வாட்டுது நின்னு என்னை வாட்டுது

அவளது திரு மேனி வேறி கூட்டுது

அவளிடம் அடி வாங்க வழி காட்டுது

அவ என்ன பேசுவா அதை எண்ண தோணுது

அவ எங்க தூங்குவா அதை கண்ணு தேடுது

வெகு நேரமாய் தன் கடந்தகாலத்தில் உழன்றவள் அப்படியே உறங்கியும் போனாள்.காலை சீக்கிரமே எழுந்து வந்தவளை கையில் காபியோடு எதிர்கொண்டார் சிந்தாமணி அம்மா.அவரது முகத்தில் அப்படியாய் ஒரு ஆர்வம் அதன் அர்த்தம் புரிந்தாலும் அவள் ஒன்றும் கூறாமல் அமைதி காக்க அவரே பேச்சை ஆரம்பித்தார்.

“தம்பி நேத்து நிகழ்ச்சி புல்லா இருந்தானாம்மா?”

“ம்ம் ஆமா சிந்தாம்மா..”

“அவனே ட்ராப் பண்றேன்னு சொன்னானா எதுவும் பேசினானா?”

“சிந்தாம்மா உங்க ஆர்வம் புரியுது ஆனா அந்தளவு ஒண்ணும் நடக்கல..ஒரு வார்த்தைகூட நாங்க பேசிக்கல..இறங்கும் போதுதான் அவரே குட்நைட் சொல்லிட்டு போனாரு அதை நா எதிர்பார்க்கல அந்த ஆச்சரியம் தான் வேற ஒண்ணுமில்ல சரியா?”,என அவர் கன்னம் கிள்ளி தலையை இடவலமாய் ஆட்டினாள்.

“போ பாப்பா ரெண்டு பேரும் என்னை போட்டு ஒரு வழி ஆக்குறீங்க..நா கண்ணை மூடுறதுகுள்ள உங்க ரெண்டு பேரையும் சேர்த்து பார்க்கனும்னு ஆசை படுறேன்.ஆனா நீங்க…”

“சிந்தாம்மா என்ன பேச்சு இதெல்லாம்..நீங்களே பாக்குறீங்க தான நாங்க ஒருத்தரை ஒருத்தர் எவ்வளவு நேசிக்கிறோம்னு..பக்கத்துல இல்ல அவ்வளவுதான்.நடந்த சில கசப்பான விஷயங்களை மறக்குறதுக்கு தான் இந்த பிரிவு.எனக்கு தெரியும் இப்போ போய் நின்னா கூட என் திவா மறுபேச்சு பேசாம என்னை ஏத்துப்பாரு..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஆனா கணவன் மனைவி உறவுல எப்பவுமே ஒருத்தர் மட்டுமே விட்டு கொடுத்துட்டே இருக்க கூடாது சிந்தாம்மா.அது காதலே இல்லனு ஆய்டும்.இந்த பிரிவு எனக்கு நா கொடுக்குற தண்டனை இது முடிஞ்சு திரும்ப என் திவாகிட்ட போகும்போது நூறு வருஷம் எந்த ப்ரச்னையும் இல்லாம சந்தோஷம் மட்டுமே இருக்கப் போற வாழ்க்கையை வாழத்தான் போவேன்.

தயவுசெஞ்சு புரிஞ்சுகோங்க..இன்னொரு தடவை இப்படி பேசி என்ன கஷ்டப்படுத்தாதீங்க..ப்ளீஸ்.”,என்றவளின் கண்களில் நீர் கோர்த்திருக்க சிந்தாமணி பதறிவிட்டார்.

“ஐயோ கண்ணு என்ன சின்ன பிள்ளை மாதிரி அழுதுகிட்டு..நா ஏதோ பைத்தியகாரி உளறிட்டேன்.நீ கஷ்டபட்டுகாத கண்ணு..உனக்கு எப்போ தோணுதோ அப்போ தம்பி கூட போ..அதுவரை நா இருக்கேன் உனக்கு..”,என அவள் கண்ணீரை துடைத்து சமாதானப்படுத்தினார்.

அதன் பின்னான நாட்கள் சாதாரணமாகவே செல்ல திவ்யாந்தும் வேலை விஷயமாய் வெளிநாடு சென்றிருப்பதாகக் கூறினார் சிந்தாமணி.இருபது நாட்கள் கழித்து வந்த ஒரு வார இறுதியில் மனம் மிகவுமே சோர்வாய் இருப்பதாய் தோன்ற வெண்பா தன் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு எங்காவது சென்று வரலாமென கிளம்பினாள்.

ஏனோ வெகுதூரம் வண்டி ஓட்டும் மனநிலை இல்லாமல் போக அஷ்டலஷ்மி கோவிலுக்கு சென்றுவர முடிவு செய்தாள்.

கோவிலில் சிறிது நேரம் அமர்ந்திருந்தவள் அங்கிருந்து பீச்சை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தாள்.எப்போதுமே அவளுக்கு பிடித்தமான இடம் இந்த கடற்கரை.அதற்கு இன்னொரு முக்கிய காரணம் அவளின் திவா.

மணலில் அமர்ந்தவளுக்கு அவளவனோடான முதல் கடற்கரை சந்திப்பு நினைவிற்கு வந்தது.

அன்று அவளை இறக்கி விட்டுச் சென்றபின் அவனின் அந்த தமிழ் இரவு வணக்கம் மட்டுமே மனதை நிரப்பியிருந்தது.அதுவும் அவனது கணீர் குரலில் அதை கேட்க அப்படி ஒரு இனிமையும் குளுமையும் மனதில்.

அதன் பின்பு வழக்கம்போல் இருவரும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டாமல் போக ஒரு இளவேனிற் மாலை பொழுதில் கடற்கரைக்கு போக வேண்டுமென்று தோன்ற வகுப்பை முடித்துவிட்டு சென்றவள் தண்ணீரில் காலை நனைத்தவாறே இலக்கில்லாமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.