(Reading time: 13 - 26 minutes)

தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 17 - சகி

Uyiril kalantha urave

காதலில் புரிதலானது கையகப்பட்ட வரமே என்று கூறலாம்!அனைத்துச் சூழல் நிலைகளையும் உணரும் மனமானது காதலின் ஆணிவேரின் பசுமையை கொண்டிருப்பதாக இருக்கும். சில சமயம் உணர்வுகள் கட்டுப்பாட்டினை இழக்கும் சமயத்திலும், தன் துணையை ஆறுதல்படுத்தும் உக்தியை சீராக கையாண்டவர் காதலை தவிர வேறு யார் உள்ளார்???

எப்போதும் அவன் வரும்வரை திறந்திருக்கும் கதவானது அன்று மூடப்பட்டிருந்தது. எப்போதும் இதுபோல அவள் வைத்ததில்லை. வெளியே சென்றிருக்கிறாளா என்றாலும் இல்லை..கதவு இருப்புறமும் தாழிடப்படவில்லை.

"சிவா?" உள்ளே அரவமே இல்லை.

"சிவா?" என்றுமில்லாமல் நிர்மல அமைதி!! எப்போதும் கலகலவென ஒலித்துக் கொண்டு, ஓடிவந்து அவனை புன்னகையோடு வரவேற்கும் முகத்தினை காணவில்லை. வெறுமையாய் தோன்றியது அவனுக்கு!!சந்தேகத்துடன் அவளறைக்கு சென்று நோக்க, இருள் வசமிருந்தது அந்த அறை! விளக்கினை உயிர்ப்பித்தான். உடலில் உஷ்ணம் ஏற, அவள் சிணுங்குவது தெரிந்தது. நேரம் ஏழரை தான் ஆகி இருந்தது. என்னவாயிற்று இவளுக்கு??இரவு பதினொன்று ஆனப்பின்னும் தன்னை உறங்கவிடாமல் கதைப்பிடிப்பவள் எப்படி ஏழரை மணிக்கெல்லாம் மஞ்சம் சாய்ந்தாள் என்ற வினா அவனுக்குள்!!

"அம்மூ!என்னம்மா ஆச்சு?" அவளருகே அமர்ந்து நெற்றியை தொட்டுப் பார்த்தான். ஆரோக்கியத்தில் குறை ஏதும் இல்லை. எனினும் அவள் விழித் திறவவில்லை. அழுதிருக்கிறாள் என்பது தெளிவாகத் தெரிந்தது.

"என்னம்மா ஆச்சு?"அவள் கேசத்தை ஆறுதலாக கோதினான் அசோக். உடல் குறுகி அவள் உறங்கும் விதம் பல கதைகளைப் புகட்டியது அவனுக்கு!! ஏதோ வலியால் அவள் உடல் துடித்த விதமும் சில தகவல்களைப் புகட்டி இருக்கலாம். அவள் சிரத்தை தலையணை மீது பதித்து எழுந்து சமையலறைக்குச் சென்றான்.

"நான் ஒருத்தன் அவளுக்கு உதவிக்கு யாரையாவது ஒருத்தவங்களை அவ வந்தப்போதே சேர்த்திருக்கணும்!" முனுமுனுத்தப்படி தண்ணீரை சூடுப்படுத்தினான். இஞ்சியை எடுத்து, தோல் சீவி, சிறு உரலில் இட்டு நசுக்கி தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்தான். பின்னர் அதில் வெந்தயத்தையுமிட்டு கொதிக்கவிட்டு, வடிக்கட்டி தேன் சிறிது சேர்த்து கலக்கி, மாதாந்திர வலி நிவாரணி பானத்தை தயார் செய்தான்.

"கண்டிப்பா சாப்பிட்டு இருக்க மாட்டா!" புலம்பியப்படி அவள் அறைக்குச் சென்றான்.

"சிவா!ஏ...என்னைப் பாரு!" அவன் குரல் புத்தியில் உரைக்க மெல்ல கண்திறந்தாள் அவள்.

"வந்துட்டீங்களா?இருங்க..நான் போய்..."

"அதெல்லாம் வேணாம்! முதல்ல இதை குடி!" அந்தப் பானத்தை அவளிடம் நீட்டினான்.

"என்ன இது?"

"குடி! வலி குறையும்!" இவனுக்கு எப்படி தெரிந்தது என்பதாய் ஒரு வினா அவள் விழிகளுக்குள்! எழுந்து அமர சிரமப்பட்டவளை ஆறுதலாக நெஞ்சில் சாய்த்துக் கொண்டான் அவன்.

"குடிம்மா!" மெல்ல சிறிது சிறிதாக அவளுக்கு அந்தப் பானத்தை குடிப்பாட்டினான்.

"கொஞ்சம் கசக்கும் பொறுத்துக்கோ!" அந்தப் பானத்தின் வீரியத்தாலும், அவனது அக்கறையாலும் வலி சரளமாக குறைவதை உணர்ந்தாள் சிவன்யா.

"உங்களுக்கு எப்படி தெரியும்?"

"இதை கூட கண்டுப்பிடிக்காத அளவுக்கு விவரம் இல்லாதவன் இல்லை. அம்மா சொல்லிருக்காங்க!வலி எப்படி இருக்கு?" தலை கோதினான்.

"பரவாயில்லைங்க..குறைந்திருக்கு!"

"ஏம்மா! உனக்குத் தான் இப்படி இருக்கே! ஒரு போன் பண்ணிருந்தா சீக்கிரம் வந்திருப்பேன்ல! ஏம்மா இப்படி பண்ற? சாப்பிடலைன்னு தெரியும்! நான் சமைக்கிறேன் நீ ரெஸ்ட் எடு!"

"அதெல்லாம் வேணாம்! நான் சரியாகிட்டேன். நான் செய்யுறேன்!" எழ முயன்றவளைத் தடுத்தான் அவன்.

"வேணாம்!நான் நல்லாவே சமைப்பேன்! நீ ரெஸ்ட் எடு! இந்த டைம்ல வயிறு அதிகமா வலிக்குதுன்னா உடம்புல சத்து இல்லைன்னு அர்த்தம்! சீக்கிரமே பாட்டி ஆயிடுவ!நீ ரெஸ்ட் எடு! நான் அரைமணி நேரத்துல எழுப்புறேன்!" அவளை ஓய்வெடுக்க வைத்துவிட்டு எழுந்தவனை தடுத்து அவன் மடிமீது படுத்துக் கொண்டாள் சிவன்யா. முகத்தில் புன்முறுவல் பூத்தான் அசோக்!! ஆறுதலாக அவள் கேசம் கோதிவிட சில மணித்துளிகளுக்கெல்லாம் நன்றாக உறங்கிப் போனாள் சிவன்யா.

உடலில் இயற்கையாக ஏற்படும் மாறுதலை ஆணிடம் கூற ஏன் தயங்குகிறார்கள் இந்தப் பெண்கள்? அதிலும் இவளுக்கு நான் ஒன்றும் வேற்றானவன் இல்லையே! என்னிடம் கூற கூட என்னத்தயக்கமோ என்று எண்ணி நிம்மதியாக அவள் சிரத்தை தலையணை மீது சாய்த்து எழுந்துச் சென்றான் அசோக்.

ஒரு ஆணினது ஆண்மை அவன் யுத்தக்களத்தில் போர் புரிவதிலோ, போராடி பொருள் ஈட்டுவதிலோ, வம்சவிருத்தி புரிவதிலோ இல்லை. மாறாக, தன்னை நம்பி இருப்போரின் துயர் துடைத்துப் பேணி காப்பதில் உள்ளது. அத்தகு ஆண்மகனை வளர்க்கும் தாயே புனிதத்தின் மறு உருவமாக கருதப்படுகிறாள். அத்தகு அன்னையை வணங்க இறைவனும் கரம் குவித்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.