(Reading time: 6 - 12 minutes)
Idhu namma naadunga
Idhu namma naadunga

தொடர்கதை - இது நம்ம நாடுங்க! - 08 - ரவை

சென்ற பகுதியில் போலீஸ் அதிகாரி, இங்கர்சாலை அமைச்சர் நாத்திகன் வசிக்கும் தெருவுக்கு அழைத்துச் செல்கிறார், எனப் பார்த்தோம்

மைச்சர் வசிக்கும் தெருவை அடைந்ததும், வேன் நின்றது. அதிலிருந்து, இங்கர்சால் இறங்கிக்கொண்டதும், எங்கிருந்தோ ஓடிவந்த ஒரு பெண், அவர் காலில் விழுந்து, 'என்னை காப்பாத்துங்க, என்னை கொல்ல வராங்க!' என அலறினாள்.

 இந்த அலறல் கேட்டு, போலீஸ் அதிகாரி வேனிலிருந்து இறங்கி, அந்த அபலையை வேனில் ஏறிக்கொள்ளச் சொல்லிவிட்டு, இங்கர்சாலிடம் பேசினார்.

 "ஐயா! நீங்க கவலைப்படாதீங்க! இவங்களை நான் காப்பாத்தறேன்........."

 இங்கர்சாலுக்கு மனம் கேட்கவில்லை. அந்தப் பெண்ணின் அபயக்குரல் மனதைப் பிசைந்தது.

 " கொஞ்சம் இருங்க! நானும் வேனில் அமர்ந்து அந்தப் பெண் சொல்வதைக் கேட்டுவிட்டு அவளுக்கு ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லிவிட்டு கிளம்புகிறேன்"

 அந்தப் பெண் அலறியது பொய்யில்லை, உண்மைதான் என்பதை நிரூபிக்க நான்கு ரௌடிகள் கையில் அரிவாளுடன் அங்கு ஓடிவந்தனர்!

 வேனில் அமர்ந்திருந்த மூவரும் அவர்களை பார்த்தனர்.

 " டேய், போலீஸ்வேன்டா! இங்கிருந்து ஓடி தப்பிச்சுடுவோம்டா.....!" என குரல் கொடுக்க, அவர்கள் வந்த திசையில் திரும்பி ஓடினர்.

 " சொல்லும்மா! என்ன நடந்தது? அவங்க ஏன் உன்னை கொல்லவராங்க?"

 அவள் சொன்ன நீண்டகதையின் சுருக்கம் இதுதான்!

 அவள் பெயர், வடிவு! சிறுவயதிலேயே அவளை தவிக்கவிட்டு, பெற்றோர் ஒரு விபத்தில் இறந்ததும், அவளை வளர்த்து ஆளாக்கியது, அவளது தாய்வழி பாட்டி!

 ஒரு வருடம் முன்பு, முதுமையினால் அவள் இறந்ததும், வடிவு அனாதையானாள்!

 அப்போது, அவளுக்கு புகலிடம் தருவதாக கூறி, ஒருத்தி அழைத்துச் சென்றாள்.

 பிறகுதான் தெரிந்தது, அவள் விபசார விடுதி நடத்தி வருவது!

 நல்லவேளையாக, தன்னை அந்த தொழிலில் ஈடுபடுத்தாத வரையிலும், வடிவு கண்டும் காணாத மாதிரி இருந்தாள்.

 ஆனால், மற்ற அபலைப் பெண்களை, அந்த ராட்சசி கொடுமைப் படுத்துவதை தினமும் பார்த்து வேதனைப்பட்டாள்.

 ஒருநாள், அந்த கொடுமைக்காரிக்கு அவசரமாக தொழிலுக்கு ஒரு பெண் தேவைப்பட்டபோது, வடிவை கட்டாயப் படுத்தினாள். வடிவு மறுத்ததும், அவள் கையில் கத்தியால் கீறினாள்.

 ரத்தம் சொட்டச் சொட்ட, வடிவு அலறியதும், ரகசியமாக ஒரு டாக்டரை வரவழைத்து,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.