(Reading time: 25 - 50 minutes)

02. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

ஆட்டம் - 2

அவன் அவளை நோக்கி நடக்க அவளும் கோபத்துடன் எலுந்தரிக்க முயன்றாள். அவள் துப்பட்டா ஸ்கூட்டியில் சிக்கி இருந்ததை அவள் அறியவில்லை. அதை கவனித்த கார்த்திக் "ஹல்லோ" என அவளை  அழைத்து சைகையில் அதை உணர்த்த அவளும் அதை புரிந்து கொண்டவளாய்  "ஹ்ம்.. இந்த ஸ்டைலுக்கும் ஒன்னும் கொறச்சல் இல்ல.. இவன் சொல்லி நான் கேக்க வேண்டி இருக்கு .. எல்லாம் இந்த துப்பட்டா னால" என அவனை மனதில் திட்டி கொண்டே பூங்கொத்தை மறுகைக்கு மாற்றி, ஸ்கூட்டியின் வசமிருந்த இடது கையினால் துப்பட்டாவை கார்த்திக் தான் தன் கைகளில் சிக்கி கொண்டது போல எண்ணி  தன் முழு பலத்தை காட்டினாலோ இல்லையோ தன் முழு கோபத்தை அதன் மீது காட்டி இழுத்தாள்.

 

அவளின் கவனம் முழுவதும் இப்போது  இடது பக்கம் திரும்பியதால் வலது கையில்  பூங்கொத்தை லேசாக தான் பிடித்து இருந்தாள். அதற்குள் அவள் அருகில் வந்த கார்த்திக் அவள் வலது கையில் வைத்திருந்த பூங்கொத்தை  உருவி எடுத்து கொண்டு அவள் உள்ளங்கையில் அவனது ஐ போனை அவன் எடுத்த புகைப்படம் தெரியும்படி வைத்தான்.

 

அதை கவனித்த அவள் அவனை கேள்வியுடன் நோக்க அதற்கு அவன்

 

"நான் உங்க அனுமதி இல்லாம யோசிக்கமா கிளிக் பண்ணிட்டேன். உங்கள போகஸ் பண்ணனும்ட்டு எடுக்கல. நீங்க தலைய குனிந்த மாதிரி தான் இருக்கிங்க.  மார்னிங் லைட்டிங் எபக்ட்டல வைட் பாக்ரௌண்ட்ல இந்த பௌக்கெ, ரெட் ரோசெஸ் ...அதுக்கும் மேல இந்த பிக்ச்சர  பாருங்க. உங்களுக்கே தெரியும் -  இட் இச் டெல்லிங் எ பியுட்டிபுல் ஸ்டோரி"

என்றான் கார்த்திக்.

 

அவன் மேலும் "வேண்டான்னா நீங்களாவே  கூட டெலீட் பண்ணிக்கோங்க. இட் இஸ் அப் டு யு" என சொன்னான் கீழே விழுந்த மலர்களை அந்த பூங்கொத்தில் அடுக்கி கொண்டே.

 

அவனின் நடை, உடை, பாவனை அவன் ஒரு மேல்தட்டு  இளைஞன் என்பதை கோடிட்டு காட்ட அவனின் பேச்சில் தெரிந்த அமெரிக்க ஆங்கில வாடை அவளுக்கு அவனின் மீது இருந்த கோபத்தை மேலும் கூட்டியது.

 

" போனா போதுன்னு கண்ணுக்கு அழகா லட்சணமா இருக்கியேன்னு ஒரு பார்வை பாத்தா அதுக்கு இப்படியா பட்டுன்னு போட்டோ எடுப்ப நீ? அதுக்கு ஒரு சாரி கூட கேக்க மாட்டியா? என்ன கொழுப்பு! உன்னோட இம்போர்ட்டெட் ஹாலிஸ்ட்டெர் டிஷர்ட்டையும் , ஒக்லே சன் க்லாஸ்சையும் , ஐ போன்னையும்  பாத்து மயங்கிடுவாளா இந்த சந்தியா ?"  என அவனின் பணக்கார திமிரை மனதுக்குள் திட்டி தீர்த்தவள், அவன் அந்த புகைபடத்திற்கு கொடுத்த வர்ணனையை வேண்டா வெறுப்பாக கேட்டு கொண்டே சற்று சலிப்புடன் அதை பார்த்தாள்.

 

கார்த்திக் நிஜத்தை ஓவியம் போல் படம் பிடிப்பதில் வித்தகன் என்றால் சந்தியா ஓவியத்தை நிஜம் போல் படைப்பதில் வித்தகி. அவன் புகைபடத்தில் கற்பனையை கடை விரிப்பவன், இவளோ தூரிகையால் கற்பனைக்கு வர்ணம் கொடுப்பவள். அவனுக்கு அது பொழுது போக்கு. இவளுக்கோ இது நிதி திரட்டும் ஆதாரம்.

 

இவர்களின் நோக்கம் ஒன்றே - கண்களுக்கு கலை விருந்து படைப்பது. படைக்கும் விதம் தான் வேறு. இதை தெளிவாக விளக்கும் ஒரு ஆங்கில எடுத்து சொல்,

 

Photography is an immediate reaction, drawing is a meditation.

 

கார்த்திக் ஒரு நொடியில் பிடித்த காட்சியை, சந்தியா கண்கள் வழியாக மனதிருக்குள் தியானித்தாள். அவளுக்குள் விரிந்த கற்பனை சொன்னது,

 

வாழ்க்கைநம்கையில்கிடைத்த  பூங்கொத்து

விதியோசதியோ  அதைஉலுக்கலாம்

அன்றேமலர்ந்தஇன்பபூக்களைசிதறடித்து

துன்பமெனும்புழுதியில்திணறடிக்கலாம்

ஆனாலும்முடியாதுவாழ்க்கை - ஏனெனில்  

இன்னும்அதுநம்கையில்  - நம்பிக்கையில்!

 

வாழும்உலகில்  மாற்றங்கள்என்பதுநிரந்தரம்

இதில்நம்வாழ்க்கைஎம்மாத்திரம் ?

நம்பிஎதிர்கொள் - நம்பிக்கையேநம்தாரகமந்திரம் - அதுவே

துன்பதூசைதுடைக்கும்தந்திரம்

இன்பபூக்களைஅடையும்  சூத்திரம்!

 

இவ்வாறே ஆழ்ந்த கற்பனையில் அந்த படத்தை மனப்பாடம் செய்தவாறே அவள் இருக்க சில நிமிடத்தில் அசையாமல் மடங்கியிருந்த கால்கள் கடுக்க, தன் நினைவுக்கு வந்தவளாய், அப்போதும் முழுமையாக விடுபடாதவளாய், அந்த படத்தை தனக்கு மின்னஞ்சல் செய்யும் நோக்கத்துடன் அந்த புகைப்படைத்தை தொட்டாள். உடனே திரையில் தோன்றிய குறு உருவங்களில், முதலாவது மின்னஞ்சலுக்கும், கடைசியில் இருந்த குப்பை தொட்டி போன்ற உருவம் அந்த படத்தை அழிப்பதற்கும் அவளின் தொடுகைக்காக காத்து கொண்டிருந்தது.

 

அவள் அந்த படத்தை நோக்க இவனோ அவளை நோக்கி கொண்டிருந்தான். ஒப்பனை எதுவும் இல்லாத இயற்கை பொலிவுடனான தெளிவான முகம், மொழு மொழுவென கன்னங்கள், கூர்மையான விழிகள்,  ஆராயும் பார்வை, திருத்த படாத ஆனாலும் அழகாய் வளைந்து தோன்றும் புருவங்கள், பார்பி பொம்மை போன்று கண்ணிமைகளில் இருந்த நீண்ட அழகான ரோமங்கள், படர்ந்த நெற்றியில் வட்ட கருப்பு  பொட்டின் மீது  வெற்றிக்கொடி போல கருப்பு, சாம்பல், சிவப்பு, சந்தனம் என பல வர்ணங்களில் ஒன்றன் கீழ் ஒன்றாக நேர்த்தியாக இழுக்கப்பட்ட சிறு கோடுகள். அக்கோடுகள்  அவள் கோவிலுக்கு சென்று வந்ததன்அடையாள முத்திரை.  அவளின் எளிமையும் களையான முகமும் கார்த்திக்கை சுண்டி இழுத்தது.  அப்போது காற்றில் அலை பாய்ந்த அவளின் கேசத்தை பார்த்த அவனுக்கு அதை அழகாக கட்டினால்  இன்னும் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தோன்ற சட்டென்று தெளிந்தவனாய்  பெரிய குற்றம் செய்தது போல உணர்ந்து பார்வையை அவளிடம் இருந்து அகற்றி அந்த பூங்கொத்தை அழகாக அடுக்கினான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.