(Reading time: 19 - 37 minutes)

03. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

ஆட்டம் - 4

வன் என்னதான் நினைத்தாலும் அந்த இடத்தில் அவள் அகன்றதும் ஒரு வெறுமை படர்ந்ததை உணர்ந்தான். அவள் நினைவலைகள் மீண்டும் மீண்டும் அவன் மனதில் முட்டி மோதின. அவனோ அவன் மனதை பெரிய திண்டுக்கல் பூட்டு போட்டு வைத்திருக்க, அவளோ அவனுக்கு துளி கூட சந்தேகம் வராத வண்ணம் பூட்டிய வீட்டில் பகல் கொள்ளை அடித்து கொண்டிருந்தாள். கார்த்திக் அதை உணர்வானா? காலம் தான் பதில் சொல்லும்.

 

அவன் சற்று தள்ளி இருந்த மேல் தளம் செல்லும் படிக்கட்டுகளை நோக்கி நடந்து அதில் ஒன்றில் அமர்ந்தான். அவன் மனதை தளர்த்துவதற்காக பாட்டு கேட்கலாம் என போன் னில் அவன்முன்தினம் டவுன்லோட் செய்த ஹிந்தி பாடலை ப்ளே செய்தான். ஹான்ட்ஸ் ப்ரீ போட்டு அந்த பாட்டில் லயித்தான். அதையே ரீப்ளே எத்தனை முறை  செய்தான்  என அவனுக்கே தெரியாது. கார்த்திக்கிற்கு இசை ஞானம் அதிகம். அதுமட்டுமில்லாமல் நல்ல குரல் வளம்.  ஒரு கணத்தில் கண்களை மூடி அந்த இசையில் ஒன்றிய அவன் அந்த பாட்டை முழுவதுமாக பாடி முடித்தான்.

 

"ரெம்ப நல்லா பாடுனீங்க. உங்களுக்கு ஹிந்தி நல்லா தெரியுமா சார்?" என கேட்டார் அந்த அலுவலக பியூன் மணி. அவரை பார்த்தால் ஐம்பது வயது மதிக்கத்தக்க தோற்றம். "ஹ்ம்...தெரியும்" என கண்களில் தெரிந்த ஏமாற்றத்தை மறைக்க ஒரு புன்னகையுடன் தலையாட்டிய கார்த்திக்  "பௌக்கே வைக்க ஏதாவது  வேஸ் மாதிரி இருந்தா கொஞ்சம் எடுத்து வைக்கிறீங்களா? நான் இதோ வந்துடுறேன்" " என மணியிடம் சொல்லிக்கொண்டே படிக்கட்டிலிருந்து எழுந்தபடி கைகடிகாரத்தில் மணி பார்த்தான். அது 9 மணியை எட்ட இன்னும் 30 நிமிடங்கள் இருந்ததை காட்டியது. "இண்டர்வியூ 9:30 க்கு தானே சார்?" என கேட்ட மணியிடம் "ஆமாம்" என பதிலளித்துக்கொண்டே கார்த்திக் சந்தியா போன திசையில் நடக்க ஆரம்பித்தான்.

 

ந்த அலுவலகத்தின் மறு பக்கத்தில், சுவரில் சாய்ந்தும் சாயாமலும் வளைந்த அவள் முதுகு ஒரு பிறை நிலாவாகயும் பாதியாக நீட்டிய அவள் கால்கள் அந்த நிலவை உரசிகொண்டிருக்கும் ஒரு குன்றை போலவும் காட்சியளித்தது. அந்த நிலவையும் குன்றையும் இணைக்கும் பாலமாக அவள் முகம் அந்த குன்றின் உச்சிகொண்டையான முழங்கால்களின் நடுவில் அவள் கூந்தல் புடை சூழ புதைந்து  கிடக்க அவள் எதோ முனங்கி கொண்டிருந்தாள்.

அதை சற்று தொலைவில் இருந்து கவனித்த கார்த்திக், எதோ பிரச்சனை என யூகித்து  அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அந்த நிசப்தமான சூழ்நிலையில் அவனுடைய காலடி சத்தம் தெளிவாக அவளுக்கு கேட்டிருக்க தான் கூடும். அவளோ அதை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் கால்களில் புதைத்த முகத்தை நிமிர்த்தாமல் தன் கந்த சஷ்டி கவசத்தை தொடர்ந்தாள்.

"எப்போதும் எனை எதிர்வேல் காக்க

அடியேன் வசனம் அசைவுள்ள நேரம்

கடுகவே வந்து கனகவேல் காக்க

வரும் பகல் தன்னில் ..."

 

"சந்...தியா" என அவன் அவளருகில் வந்து மிக மென்மையாக அழைக்க "வச்சிரவேல் காக்க" என தேயிந்த குரலில் சொல்லியவாறே அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

சற்று முன் வெண்மேகமாய் பளிச்சென்ற அவள் முகம் இப்போது  மழையை இறக்க காத்திருக்கும் கருமேகமாய் கனத்த பாரத்துடன் இருந்தது. முகத்தில் சோகத்தின் அடையாளம் அப்பி கிடக்க, கண்கள் அவளின் துயரத்தை பறைசாற்றின. கார்த்திக்கிற்கோ அவளின் சோகம் படிந்த முகத்தை பார்க்க முடியவில்லை. சற்று முன் அவள் எந்த அளவிற்கு அவனின் கோபத்தை ரசித்தலோ அந்த அளவிற்கு அவன் இவளின் சோகத்தை வெறுத்தான்.

அவனை பார்த்தவுடன் சந்தியாவிற்கு அவள் வேண்டிய கந்தனே நேரில் வந்தது போல நினைத்து "கார்த்திக்" என அழைத்த பின், துக்கம் தொண்டையை அடைக்க அவளால் பேச முடியாமல் திணறினாள். அவளின் உணர்ச்சிகளை புரிந்து கொண்ட கார்த்திக்,

"சந்தியா ரிலாக்ஸ் ப்ஹர்ஸ்ட். டேக் டீப் ப்ரீத்" என அவளின் காதோரமாய் மென்மையாக வேண்டினான்.

அவனின் அருகாமை அந்த நேரத்தில் அவளுக்கு தெம்பூட்ட மகுடிக்கு ஆடும் பாம்பாய் அவன் சொன்னபடியே கண்களை மூடி மூச்சை நன்றாக உள்ளிழுத்து மெதுவாக வெளியேற்றினாள். அவளின் படபடப்பு சற்று அடங்கவே மீண்டும் ஒரு முறை அவ்வாறு செய்து முடித்த பின் கார்த்திக்கை நோக்கினாள்.

"சொல்லு சந்தியா. என்ன ப்ராப்ளம்?"

"கார்த்திக், அஜுக்கு கிரிக்கெட் விளாடுரப்போ கீழ விழுந்து  தலைல அடிபட்டு ரத்தம்..." சந்தியாவால் தொடர முடியவில்லை. உரிமையானவள் என்றாள் ஆரத்தழுவி ஆறுதல் படுத்தலாம், உரிமை இல்லாதவள் என்றால் காலத்திற்கே ஆறுதல் படுத்தும் பொறுப்பை கொடுத்து விலகி விடலாம்! அவனால் அந்த இரண்டுமே செய்ய முடியவில்லை. அவன் மனம் "ஏன் இவளுக்காக இப்படி துடிக்கிறோம் ?" என யோசிக்கவில்லை. அவன் அவளிடம்

 

"சந்தியா.. நீ தெளிவா சொன்ன தான் நாம எதாவது பண்ண முடியும். டோன்ட் கெட் எமொசினல்" கார்த்திக் அவர்களுக்கு இருந்த சின்ன இடைவெளியை இன்னும் சிறுத்து அவளை நெருங்கி அவள் மேலும் பேச மென்மையாக தூண்டினான்.

 

அவன் பேச்சு சந்தியாவை இதமாக்க அஜுவை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை ஒளிர்விட, துக்கம் கொண்ட அவள் மனது கார்த்திக்கின் நம்பிகையூட்டளுக்கு பிறகு புலம்பலுக்கு தாவியது.

சந்தியா, "ரத்தம் கொட்டி மயங்கி விழுந்திட்டான். அவனை தாத்தா பக்கத்தில் இருக்கிற செயின்ட் ஜோசப் ஹோச்பிடல் ல அட்மிட் பண்ண போயிருக்காங்கன்னு மனோ சொன்னாள். அஜு க்கு எதுவும் ஆகிடாதுல கார்த்திக்?"

 

கார்த்திக் "அதெல்லாம் ஒன்னும் ஆகாது. அஜு சின்ன  பையனா சந்தியா ? பொதுவா சின்ன பசங்க ஏன் சில பெரிய ஆளுங்களுக்கே கூட  ரத்தத்தை பாத்தவுடனே  மயக்கம் வந்திடும்"

 

சந்தியாவுடனே "அவன் டீன்ஏஜ்ஜர் கார்த்திக். 12 th போகப் போறான் . ரெம்ப போல்ட். அப்படி எல்லாம் பயப்பட மாட்டான். அவனுக்கு மூளைல எதுவும் பலமா அடிபட்டு இருக்குமோன்னு எனக்கு பயமா இருக்கு"

கார்த்திக்,  "நீயா எதாவது மனச போட்டு குழப்பாத. பாசிடிவ்வா  தின்க் பண்ணு சந்தியா"

 

சந்தியா "இல்ல கார்த்திக். அவனுக்கு எப்பவாவது ஷீஸர் (வலிப்பு நோய்) வரும். அதுக்கு மருந்தும் டையட்டும்  எடுத்துகிறதுனால கொஞ்சம் வருஷமா கண்ட்ரோல் ல இருக்கு. இந்த இஞ்சுரினால அவனுக்கு ஏதாவதுனா என்னால தாங்க முடியாது"

 

கார்த்திக் "தலைல எந்த எடத்துல அடிபட்டதுன்னு தெரியுமா? எனக்கு என்னமோ சும்மா கிரிக்கெட் விளாடுற சமயம் அடிப்பட்டது ஒரு பைக் கார் ஆக்சிடென்ட் அளவுக்கு மேஜர் இஞ்ச்ரி ஆகி இருக்காது ன்னு தோணுது சந்தியா" என சொன்ன கார்த்திகிற்கு அவன் கணிப்பு சரியானதே என அப்போது தெரியாது.

சந்தியா "பிரைன்ன அவ்ளோ ஈசியா எடுத்துக்க முடியாது கார்த்திக். இப்படி தான் ஒருத்தர் கிரிக்கெட் விளையாடுறப்போ ப்ரண்ட் அடிச்ச பால கேட்ச் பண்ணலாம்னு பிடிக்க போய் கீழ விழுந்து தலைல அடிபட்டு பிரைன்ல  மெடுல்லா ஆப்லங்கெட்டால அடிச்சிடுச்சு டெம்பரரி மெமரி லாஸ் ஆனது. எனக்கு அதான் படிக்கிற பையன்னச்சே..பயமா இருக்கு!" என்று புலம்பினாள்.

"நடுவில் கொஞ்சம் பக்கத்த காணோம்" என்ற திரைபடத்தின் கதை கருவும் அதுவே. சந்தியா அஜுவும்  கிரிக்கெட் விளையாடும் பொழுது தலையில் அடிபட்டு மயங்கியதால்அந்த படத்தை பார்த்த பாதிப்பால் இவ்வாறு யோசிக்கிறாள் என்று கார்த்திக்கிற்கு தெரியாதே!

அவள் சொன்னது அவனுக்கும் பயத்தை கொடுத்தது.

 

கார்த்திக் அவளை நோக்கி "சந்தியா, எங்க அண்ணா நியூரோ ஸ்பெஷ்லிஸ்ட் தான். US ல இருந்து வகேஷன்னுக்கு வந்து இருக்கான். உனக்கு ரெம்ப பயமா இருந்தா அவன்ட்ட ஒரு ஒபினியன் கேக்கலாம்." என்று கூறியவாறே அவனது போன்னை எடுத்து அவன் அண்ணனுக்கு அழைத்தான்.

 

"சூர்யா.." என்றான் கார்த்திக்.

 

"சொல்லுடா... என்ன விஷயம்" என்றான் சூர்யா.

 

"சந்தியா ன்னு ஒருத்தவங்க இண்டர்வியூக்கு வந்து இருக்காங்க. அவங்க தம்பிக்கு  தலைல அடிபட்டு மயங்கி விழுந்துட்டான் போல. ரெம்ப பயப்பிடுறாங்க. சரி உங்கிட்ட அதை பத்தி பேசலாம் ன்னு தான் கால் பண்ணேன் சூர்யா"

 

"ஓ.. சரி சொல்லு எப்படி ஆச்சு? ஆக்ஷிடெண்ட்டா?"

 

"இல்ல எதோ கிரிக்கெட் விளையாடும் போதுன்னு சொல்லறாங்க. நீயே  சந்தியா கிட்டே பேசு."

"ஹலோ டாக்டர்"

"சொல்லுங்க சந்தியா. உங்க தம்பிக்கு எப்படி அடிபட்டது"

 

"கிரிக்கெட் விளையாடுறப்ப தலையில் அடிபட்டு ....." வார்த்தைகள் வெளிவர போராடிய போது கார்த்திக்கை நோக்கினாள். அவன் கண் அசைவில் அவளுக்கு என்ன புரிந்ததோ ஒருவித தைரியம் வர மேலும் தொடர்ந்தாள். "... ரத்தம் கொட்டி மயங்கி விழுந்துட்டான்."

"ம்.. தலையில் எந்த இடத்தில் அடிபட்டது?" என்றான் சூர்யா.

"தெரியல. நான் மறுபடியும் போன் ட்ரை பண்ணேன். என்கேஜிடா இருந்தது. தெரிஞ்சிக்க முடியல" என்றாள்

 

"எந்த எடத்திலன்னு தெரிஞ்சா ஏதாவது சொல்லலாம்.  பட், நான் என்ன பீல் பண்றேன்னா அவனுக்கு சிவியரா எதுவும் இருக்காது. " என்றான் சூர்யா.

"அவனுக்கு ஸீசர்(வலிப்பு) வேற வரும்" என்றாள் சந்தியா.

 

"ஓ .. எபிலசி பேஷண்ட் ட்டா?" என கேட்டான் சூர்யா

 

"எஸ் டாக்டர். பட் அவன் இரண்டு வருஷமா கீட்டோஜினிக் டையட்ல இருக்கான். லாஸ்ட் இயர் அவனுக்கு ஸீசர் (வலிப்பு நோய்) சுத்தமா வரவே இல்ல. இந்த அக்ஸிடென்ட் மறுபடியும் அதை ட்ரிக்கர் பண்ணுமா?" என்றாள் சந்தியா.

 

"ம்.. அதை அவனை பாக்காம சொல்ல முடியாது. அவனோட இஞ்சுரி எந்த அளவுக்குன்னு தெரிஞ்சா தான் சொல்ல முடியும். "

 

"அப்போ நீங்க அவனை பாத்து சொல்றீங்களா? ப்ளீஸ்..டாக்டர்..  " என கெஞ்சினாள்.

 

"அது வந்து.... திடீர்னு எப்படி... நான் நேர்ல வந்தாலும் பெரிய யூஸ் இருக்குமான்னு தெரியல. ஏன்னா பெரிய பிரச்சனைன்னா ஸ்கேன் பாத்தா தான் சொல்ல முடியும். நீங்க வேணும்னா பேஷன்ட்ட  போய் பாத்துட்டு அங்க டாக்டர்ஸ் என்ன சொல்றாங்கன்னு கேட்டுட்டு எனக்கு கால் பண்ணுங்க" என்றான் சூர்யா.

அவன் சொன்ன பதிலில் முகம் வாட "அவன் எந்த நிலைமைல இருக்கானோ..மூளைல அடிபட்டு இருக்கே. எதாவது எமெர்ஜென்சி அப்படின்னா நீங்க ஸ்பெஷலிஸ்ட் ஆச்சேன்னு கேட்டேன். தட்ஸ் ஓகே. பட் தேங்க்ஸ்" அவள் உடைந்த குரலில் இருந்த சோர்வு ஒரு நொடி சூரியாவை லேசாக கரைத்தது. கார்த்திக், அவள் வாடிய முகத்தையே வெறுத்தவன், அந்த சோகக்குரலில் உருகி ஓடினான்.

 

சட்டென்று அந்த போன் ஐ அவளிடம் இருந்து வாங்கியவன்  "சூர்யா, எனக்கு இப்படி ஆகி இருந்தா நீ இதே மாதிரி தான் ரியாக்ட் பண்ணி இருப்பியா?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.