(Reading time: 19 - 38 minutes)

04. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

ஆட்டம் - 5

ந்தியா சற்று முன்னர்,

பரபரப்புடன் அந்த மருத்துவமனைக்குள் நுழைந்த சந்தியா, அர்ஜுனுக்கு வெட்டு காயம் தான்  என சற்று நிம்மதி அடைந்தாள். இருந்தாலும், அவள் கற்பனை செய்து வைத்திருந்த 'நடுவில் கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்படத்தில் வருவது போல எதாவது  உள்காயம் இருக்குமோ என்று தெளிவு படுத்த மருத்துவரிடம் ஓடினாள். அப்பொழுது அவள் பதிவு செய்யாத எண்ணில் இருந்து  போன்னுக்கு அழைப்பு வர அது கார்த்திக் என்று தெரியாமல் ஏதாவது விளம்பர அழைப்பாக இருக்கும் என மிகவும் பொறுப்பாக மருத்துவர் அறையை எட்டும் முன் 'சைலென்ட் மோட்'டில் வைத்து உள்ளே சென்றாள்.

 

அர்ஜுனின் மருத்துவர் சந்தியாவிற்கு நல்ல பழக்கம். அவர் சூடம் கொளுத்தி சத்தியம் செய்தாத குறை தான் - அந்த அளவிற்கு மீண்டும் மீண்டும் அர்ஜுனுக்கு மூளையில்.. அதுவும் அந்த 'மெடுலா ஆப்லன்கேட்டா 'வில்  பிரச்சனை எதுவும் இல்லை என்று தெளிவு படுத்திய பின்னரும் விடாமல் அவரை வற்புறுத்தி இல்லை..இல்லை..  துன்புறுத்தி, அவரிடம் அர்ஜுன்க்கு  ஒரு 'ஸ்கேன்' பார்ப்பதற்கு குறிப்புக் கடிதம் வாங்கி விட்டு வெளியேறும் போது தான் அவளுக்கு 'கார்த்திக்' என்னும் ஒரு ஜீவன் அவளுக்காக இவ்வளவு தூரம் வந்தது நினைவிற்கு வந்தது.

"அச்சச்சோ.. கார்த்திக்.. நீ ரெம்ப நல்லவன். ப்ச்...நான் கூட உன்னை காலை வார தான் ப்ரண்ட் ஆனேன். பட் யு ஆர் எ  'ட்ரூ ப்ரண்ட்'. கஷ்டம்ன உடனே உதவிக்கு ஓடி வந்தியே. எவ்ளோ பொறுமையா இருந்து ஹெல்ப் பண்ண. பஸ்லயே  அவன் அவன் பக்கத்தில ஒரு பொண்ணு இருந்தா என்ன என்ன சேட்டை பண்ணுவான்.நான் பைக்ல அப்படி ஓட்டியும் டீசன்ட்டா நடந்துகிட்ட. நான்  பண்ண படுத்தலுக்கும் பைக்க ஓட்டி வந்த வேகத்துக்கும் இப்போ இப்படி அம்போ ன்னு விட்டு வந்ததுக்கும் .. இந்த நேரம் வேறு யாராவது ஏன் நம்ம அப்பாவா இருந்தா கூட நாலு அறை விட்டு இருப்பாங்க.  உன்கிட்ட சாரி அண்ட் தேங்க்ஸ் சொல்லணும்" என்று நினைத்து கொண்டே அவனை தேடி வரவேற்பு பகுதியை அடைந்த போது தான் அந்த சம்பவம் நடந்தது.

கார்த்திக்கின் கை இடியென அவளது கன்னத்தில் இறங்கியது. சந்தியா அப்போது  சரியான வசத்தில் நிற்கவில்லை. அதனால் அவனின் இரண்டு விரல்கள்  மட்டும் தடம் விழும் அளவிற்கு மிக ஆழமாக அவளின் கன்னத்தில் பதிந்தது.  சந்தியா எதற்கும் கலங்கியது இல்லை. அர்ஜுனுக்கு அடிபட்டதை கேட்ட பொழுது கூட அவள் துக்கத்தோடு தான் பேசினாள். அழவில்லை. ஆனால், அவளின் அந்த வாடிய முகத்தை காட்டிலும்  அழுது விடுவதே மேல் என தோன்றும் அவளை அறிந்தவர்களுக்கு - எப்பொழுதும் சிரிப்புடனும் , துரு துருப்புடனும் பளிச்சென்ற அவள் முகத்தை தெரிந்தவர்களுக்கு. கார்த்திக்கிற்கும் அப்படி தான். முதல் பார்வையிலே அவள் முகத்தை மனதில் பதித்தானோ? அதனாலோ என்னவோ அந்த கவலை படிந்த முகத்தை பார்க்க முடியாமல்  இவ்வளவு தூரம்  முயன்றான்... முடிவில் கோபாபிஷேகத்தால்  தன் கரத்தாலே அவளை  புண்படுத்தி அவள் கண்களை நனைத்து விட்டானே!

 

லிபொறுக்க முடியாமல் கண்கள் குளமாக, கைகளை கன்னத்தில் வைத்தபடி சந்தியா தன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். கோபத்தில் கார்த்திக்கை போல் தன் வசம் இழப்பவள் இல்லை அவள். கண்களை மூடிய அவள் அவனின்  கோபத்தின் காரணம் அவனை சட்டை செய்யாமல் அவள்  உலகத்தில் இருந்தது என்பது  புரிந்தாலும் அதற்கு அவன் கொடுத்த தண்டனையை அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை

 

அவன் உதவ முன் வந்ததையும் மறக்கவில்லை, அவன் விட்ட அறையையும் மறக்கவில்லை. "கார்த்திக், உனக்கு அப்படி என்ன கோவம் வருது? கண்ணு மன்னு தெரியாம..நாலு பேருக்கு முன்னாடி நீ என்னை அடிச்சு இன்சல்ட் பண்ண  அதுக்கு நான் உன்னை அதே நாலு பேரு மூன்றாம் பிறை கமல் மாதிரி நினைக்க வைக்கிறேன். " என்று மனதிற்குள் திட்டம் தீட்ட துவங்கினாள்.

 

அப்போது சூர்யா அவள் அருகில் வந்து "நீங்க சந்தியாவா?" என்று கேட்டான். சட்டென்று நிமர்ந்த அவளிடம் "நான் சூர்யா. கார்த்திக்கின் பிரதர். ஐ ஆம்  சோ சாரி. கார்த்திக் கோபப்படுவான். ஆனா, எப்பவும் இப்படி பீகேவ் பண்ணதே கிடையாது. கன்னத்தை கொஞ்சம் காமிங்க. ஏதாவது ப்ரூஸ் இருக்கான்னு பாப்போம்" என்றான்.

 

சந்தியா கன்னத்தை காட்டினாள். சூர்யா அவள் கன்னத்தை ஆராய்ந்த படி  "இடியட்.. ஹண்ட் ப்ரிண்ட் தெரியுற அளவுக்கு அடிச்சிருக்கான். உங்களுக்கு ஐஸ் பாக் கொடுத்தா பெட்டரா இருக்கும். நான் அதுக்கு ஏற்பாடு பண்றேன் " என்று சொல்லிவிட்டு நகரும் முன் மறுபடியும் அவளிடம் "ஐ அம் சோ சாரி அபௌட் திஸ்..இப்படி பண்ணதுக்கு கார்த்திக் உங்க காலில் விழுந்து மன்னிப்பு கேட்டா கூட  தப்பில்ல" என்றான் கவலையுடன். அதற்கு சந்தியா "ஏன் அப்படி சொல்றீங்க டாக்டர் ? கார்த்திக்கால தான நீங்க இங்க வந்தீங்க. ஹி இஸ் எ ஜெம். என்ன... கண்ணு மண்ணு தெரியாம கோபம் வருது. சரி பண்ணிடலாம்.. கவலைப்படாதீங்க." என்றாள் சிரித்துக் கொண்டே.

 

சூர்யா ஆச்சர்யத்துடன் அவளை பார்த்து "உங்களுக்கு அவன் மேல கோபம் இல்லையா?"

அதற்கு அவள் "கோபம் இல்லாட்டி நான் மனுஷியே இல்லையே. அதை வேற மாதிரி டீல் பண்ணுவேன்." என்றாள் நிதானமாக.

 

சூர்யா அதற்கு "யு ஆர் சோ யூனிக். பட், என் தம்பிய  ரெம்ப டார்ச்சர் பண்ணிடாதீங்க" என்றான்.

 

சந்தியா, "டாக்டர், உங்க தங்க கம்பி அளவுக்கு எல்லாம் நான்  டார்ச்சர் பண்ண மாட்டேன். அப்புறம் ஐஸ் பாக் எல்லாம் நானே பாத்துக்கிறேன். நீங்க அர்ஜுனை பாத்தீங்களா? இஞ்சுரி அவனுக்கு பெரிசா இல்ல தான், இருந்தாலும் எதுக்கும் ஸ்கேன்னும் பாத்து  ரூல் அவுட் பண்ணா தான் எனக்கு நிம்மதி" என்றாள்.

 

சூர்யா, "நான் கேட்டவரைக்கும் அவனுக்கு ஒன்னுமே இல்ல. நீங்க தான் தேவ இல்லாம  வொர்ரி பண்றீங்க" என்றான் புன்னகையோடு.

 

சந்தியா, "நாம தான் அவனுக்கு எல்லாம், அவனை  நல்லா பாத்துக்கனும், அசால்ட்டா விட கூடாதேன்னுற பயம் தான். ம் ...இப்போ அமெரிக்கா டாக்டரே சொல்லியாச்சே! இனிமே  கவலைப்படமாட்டேன் " என்றாள் சிரித்தபடி.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.