(Reading time: 22 - 43 minutes)

05. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

ஆட்டம் - 6

"மது?" என்றாள் சந்தியா.

 

"எஸ். மதுமிதா கிருஷ்ணமூர்த்தி, சி.இ.ஓ. ஆப் என்விஷன் மேக்ஸ். ஆம் ஐ டாகிங் டு மிஸ். சந்தியா தன்ராஜ்?" என்றது அந்த பெண்ணின் குரல்.

 

"எஸ். திஸ் இஸ் சந்தியா தன்ராஜ். குட் மார்னிங் மதுமிதா" என்றாள் சந்தியா.

 

"மார்னிங், சந்தியா. ஐ வான்ட் டு மீட் யு ASAP" என்றாள் மதுமிதா அழுத்தமாக.

 

"சுயர். அல்ரடி ஐ அம் ஆன் மை வே. வில் பி தேர் இன் 15-20 மினிட்ஸ்." என்றாள் சந்தியா.

 

"ஓகே. சி யு தென்" என்று சொல்லிவிட்டு சந்தியாவின் பதிலை எதிர்பாராது அழைப்பை துண்டித்தாள் மது.

 

தே நேரம் சூர்யா பிள்ளைகளை சந்தியாவுடன் பின்னிருக்கையில் அமரவைத்து விட்டு,  காரில் ஏறியபடியே, ஓட்டுனரை பார்த்து "சந்தியாவை மது ஆபிஸ்ல இறக்கி விட்டுட்டு அப்படியே அந்த பக்கம் ஏதாவது நல்ல ரெஸ்டாரன்ட் இருந்தா நிப்பாடுங்க. கிளம்பிற அவசரத்தில் பிரேக்பாஸ்ட் மிஸ் பண்ணிட்டேன். இப்போ நல்லா பசி எடுக்குது" என்றான் சூர்யா.

 

அதை கவனித்த சந்தியா "இங்க இருந்து பைவ் மினிட்ஸ்ல ஒரு மெஸ் இருக்கு. சுடச்சுட பிரியாணி கிடைக்கும். சான்ஸ் லெஸ். செமயா இருக்கும். ட்ரை பண்றீங்களா?" என்றாள் சந்தியா.

 

அவள் சொன்ன விததில் பசியோடு இருந்த சூர்யாவிற்கே மனதிற்குள் லேசாக ஆசை வர, இருந்தாலும் அதை அடக்கியவனாய், "பிரியாணியா? பிடிக்கும். ஆனா காலேலவா? ஏதாவது லைட்டா போதும். உங்களை பர்ஸ்ட் ட்ராப் பண்ணிட்டு அப்புறம் பாத்துக்கிறேன்" என்றான் சூர்யா.

 

"என்ன சூர்யா இப்படி சொல்றீங்க? எங்களுக்கு அல்சர் வந்தா டாக்டர்ட்ட போவோம். டாக்டர்க்கே அல்சர் வந்தா? அதனால பர்ஸ்ட் உங்களுக்கு பிரியாணி, என்னோட  பர்த்டே ட்ரீட் " என்றாள் சந்தியா .

 

"அப்போ இண்டர்வியூ ?" என்றான் சூர்யா.

 

"தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்ன்ற பாரதியார் வார்த்தைக்கு கட்டுப்பட்டவ நான். மொதல்ல சாப்பாடு. இண்டர்வ்யூ எல்லாம் சப்ப மேட்டர் . நான் ஏதாவது படம் போட்டு சமாளிச்சிக்கிறேன். "


"ஒரு பிரியாணிக்காக பாரதியாரையே இழுத்து விடுறியே.. ட்ரைலர்லே கலக்குற!  உன் படம் சூப்பர் ஹிட்டாகும் சந்தியா! ஆனா மது என்ன ஆவா? அஸ் எ டாக்டரா சொல்லனும்னா இட் இஸ் லைக் ஆபரேஷன் சக்சஸ்; பேஷன்ட் டெட்" என்றான் சூர்யா.


சந்தியா சிரித்தவாறே "ஓ..மை காட்.  அவங்களுக்காக  ரெம்ப கவலை படுறீங்களே? கார்த்திக்கும் மது ரெம்ப வேண்டியவுங்கன்னு சொன்னாரு. அவுங்க  உங்களுக்கு ப்ரண்ட்டா இல்ல ஏதாவது ரிலேசனா? கார்த்திக்கும் இண்டர்வியூக்கு வந்தேன் சொன்னாரே?" என்று சரமாரியாக கேள்விகளை சூர்யாவிடம்  கேட்டாள் சந்தியா.


"மது எங்க கசின். கார்த்திக் மதுக்கு ஹெல்ப் பண்ண ஆபீஸ்க்கு வந்தான். அவ்ளோ தான். " என்றான் சூர்யா.


சந்தியா "அச்சசோ இண்டர்வ்யூக்கு  ஹெல்ப்னா கார்த்திக் சொன்ன மாதிரி அவன் ஒரிஜினல் MR அனலிஸ்ட் தானா .. என்னை இண்டர்வியூ பண்ண வந்தானா? " என்று மனதில் அவள் யோசனையோடு இருப்பதை கவனத்த சூர்யா, "என்ன சந்தியா பலத்த யோசனை? கார்த்திக் இந்த நேரம் அவன் ப்ரண்ட்ட பாக்க போயிருப்பான். நீ நிம்மதியா போகலாம். "

 

சந்தியா உடனே,  "ஓ! அப்போ பைக்? "

 

" அது அவன் அப்புறமா வீட்டுக்கு வரும் போது எடுத்துப்பான்" என்றான் சூர்யா.

 

ன்னும் யோசனையோடே  இருந்த அவள் முகத்தை கேள்வியுடன் பார்த்த சூர்யாவிடம் "இல்லை.. பைக் எடுக்க போறதுக்கு முன்னாடி கார்த்திக்கிட்ட  பேசணும் அதான். ஓகே. நான் பாத்துகிறேன்"  என்றவாறே, பின் ஓட்டுனரிடம் போகும் வழியை கூறி விட்டு குழந்தைகளிடம் "ப்ரண்ட்ஸ்" என அவர்கள் கைகளில் 'ப்ரண்ட்ஷிப் பேண்ட்' ஐ மாட்டி, அவளும் குழந்தையாக மாறி அவர்களுடன் விளையாடிய படியே வர, கார் சற்று நேரத்தில் ஒரு குடியிருப்பு பகுதியை அடைந்தது.  சூர்யா அவளைப்  பார்த்து "நீங்க தப்பான அட்ரஸ் சொல்லிருக்கீங்கன்னு நினைக்கிறேன். இது ரெசிடென்ஷியல் ஏரியா மாதிரி  இருக்கே" என்றான். சந்தியா ஓட்டுனரிடம் ஒரு வீட்டின் முன் நிறுத்துமாறு அடையாளம் காட்டி விட்டு , "ஆமாம் சூர்யா. இதுதான் நான் சொன்ன  அம்மா மெஸ்.." என்று சொல்லி சிரித்து விட்டு, "வெல்கம் டு மை ஸ்வீட் ஹோம்" என்று அவளது வீட்டிற்கு அழைத்தாள். "இவளையே இன்னைக்கு தான தெரியும். எப்படி சாப்பிடுறதுக்காக முன்ன பின்ன தெரியாத வீட்டுக்கு போக" என்று தயங்கிய சூர்யா , "என்ன சந்தியா எதோ மெஸ் ன்னு சொல்லிட்டு  உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்ட? நான் இன்னொரு நாள் வாரேனே.  ப்ளீஸ் டோன்ட் மைண்ட்" என்று பின் வாங்க,  சந்தியாவோ, "இன்னொரு நாளும் கண்டிப்பா வாங்க. ஆனா அப்பவும் பிரியாணி தான் கிடைக்கும்னு என்னால எந்த கேரன்ட்டியும் கொடுக்க முடியாது. என்னோட பர்த்டே ட்ரீட் நோன்னு சொல்லக்கூடாது." என்று வலுக்கட்டாயமாக அவனையும் குழந்தைகளையும் அழைத்துச் சென்றாள். அவள் மேலும் "டோன்ட் ஹெசிட்டேட். பீல் ப்ரீ சூர்யா. எங்க வீட்டு போலீஸ்கார் - மை டாடி  ஊர்ல இல்ல. மத்த படி வீட்டில எல்லோரும் ரெம்ப ப்ரண்ட்லி. வாங்க... பழகலாம்..." என அவள் அம்மாவிடமும், அக்காமார்களிடமும்  சூர்யாவை அறிமுகபடுத்தினாள். பின் அவர்களை சூர்யாவிடம் அறிமுகம் செய்ய ஆரம்பித்தாள்.

 

"இது எங்க அம்மா, லக்ஷ்மி டீச்சர். ட்வின் சிஸ்டர்ஸ்ல  பூமா கூட பிறந்த இவ ஸ்ரீமா - ரெண்டு பேரும் அச்சு அசல் ஒரே மாதிரி இருப்பாங்க.  ஸ்ரீ செம சின்சியர். பூமா  சரி சுட்டி. சின்ன பிள்ளைல  பூ எல்லார்க்கிட்டயும் வம்பிழுத்திட்டு எஸ்கேப் ஆகிடுவா. அதுக்கு ஸ்ரீ  மொத்து வாங்கிட்டு வருவா. இப்போ கொஞ்சம் பெட்டர். லெக்சர் எடுத்து பசங்கட்ட  திட்டு மட்டும் வாங்கிட்டு இருக்கா" என்றதற்கு ஸ்ரீ அவள் காதை திருகி "வந்ததும் வராததுமா ஆரம்பிச்சிட்டியா? இண்டர்வியூ என்ன ஆச்சுடி?" என கேட்க "மௌத் டாக், மௌத் டாக் நோ ஹேன்ட் டாக்.. ஸ்ரீ" என சந்தியா சொல்ல ஸ்ரீ  கையை எடுத்த படியே   "கன்னத்தில் என்னடி? யாராவது உன் தொல்லை தாங்காம அறைந்துட்டாங்களா? " என " ஆமாம். உன்னை மாதிரியே என்னால மனநிலை பாதிக்கப்பட்டவர் ஒருவர் கொடுத்த பர்த்டே கிப்ட். சரி..சரி.. இன்னும் ரோல் கால் முடியல. சூர்யாக்கு இன்ட்ரோ கொடுக்க இன்னும் ஒரு டிக்கெட் பாக்கி இருக்கு" என்றவாறே

 

"ஸ்ரீமா, பூமாக்கு டபுள் சைட் பார்டர் போட்ட மாதிரி இருப்போம் எங்க மூத்த அக்கா  விந்தியாவும், கடைக்குட்டி நானும்" என அதே ஊரில் அஞ்சலகத்தில் பணி புரியும் தனது மூத்த சகோதரியை அறிமுகம் செய்து வைத்தாள். அவளின் சகோதரிகள் கோடை கால விடுமுறையில்  பணி விடுப்பு போட்டு சில தினங்கள் அம்மா வீட்டில் இருந்து விட்டு செல்வது வழக்கம் .

 

சந்தியாவின் அம்மா லக்ஷ்மி "எங்க வீட்டில சந்தியாவும் பூமாவும் தான் ரெட்டை பிள்ளைங்க மாதிரி சேர்ந்தே இருப்பாங்க. இரண்டு பேருமே சேர்ந்து செய்யாத குறும்பே இல்ல. ஆனா பூமா கல்யாணமாகி  அமெரிக்காவுக்கும் ஸ்ரீ கல்யாணம முடிஞ்சு சென்னைக்கும் போக, அடுத்து சந்துவும்  படிக்க சென்னைக்கு போய்ட்டா. ரெண்டு வருஷமா வீடே வெறிச்சோடி போயிருந்தது. இவ திரும்பி வந்த பிறகு தான் களைகட்டுது" என்றார்.

 

பின் அர்ஜுனுக்கு அடிபட்டதையும் அதன் தொடர்ச்சியாக நடந்ததையும் ( கார்த்திக்-சந்தியா பைக் பயணம் மற்றும் அடிதடி காட்சிகளை கத்தரித்து விட்டு) லக்ஷ்மியிடம் சொன்னாள். அதை கேட்டவுடன் அவர் சந்தியாவை விட பல மடங்கு பதறினார்.

 

அவர் சூர்யாவிடம் "அர்ஜுன் என் பிள்ள மாதிரி. எனக்கு பையன் கிடையாது தம்பி. சந்துவோட இரட்டை பிள்ளையா ஒரு பையன் எனக்கு  இறந்து தான் பிறந்தது. எங்க மாமியாரு கிராமதுக்காரவுங்க. அவங்களும் எங்க சொந்தகாரவுங்களும் சேந்துகிட்டு  நாலாவதும் பொட்ட பிள்ளை. அதுவும் சித்திரை மாசத்தில ஆண் வாரிச கொன்னுட்டு பிறந்துட்டான்னு சொல்லி கல்லி பால ஊத்தி இவளை (சந்தியாவை காட்டி) கொல்ல பாத்தாங்க. "  என்று சொல்லிக்கொண்டிருந்த போது இடைமறித்த சந்தியா "திருமதி. தன்ராஜ்.... உணவு இடைவேளைக்கு பிறகு தொடரும்..." என்று விளம்பர பாணியில் சொல்லிவிட்டு லக்ஷ்மியைப் பார்த்து, "பாவம் மா... ப்ளீஸ் விட்டுருங்க. பசிக்குதுன்னு சொன்னாரு. அந்த பிரியாணியா கொஞ்சம் எங்க கண்ணுல காட்டிட்டு கண்டின்யு பண்ணுங்க. அதான் சஸ்பென்ஸ் வைச்சு உங்க சீரியல்லுக்கு பிரேக் போட்டிருக்கிறேன்" என்றாள். அதற்கு சூர்யா "எனக்கு ஒன்னும் அவசரம் இல்ல ஆன்டி. மொதல்ல அவளுக்கு சாப்பட்ட போட்டுருங்க. இல்லாட்டி உங்களை விட்டு வைக்க மாட்டா" என்றான் கிண்டலாக. "உன்னை பத்தி டாக்டர் நல்லா தெரிஞ்சு வைச்சிருக்காரு போ" என்ற படி விந்தியா அவர்களுக்கு உணவு பரிமாற ஆயத்தமானாள்.

 

விந்தியாவின் குழந்தைகள் மூன்றறை  வயது யாழினியும், இரண்டு வயது அரவிந்தும் சூர்யாவின் குழந்தைகளோடு ஐக்கியமாகி விளையாடி கொண்டிருக்க, அவர்களை ஒரு துள்ளலுடன் கத்தி, கைதட்டி அவர்களுக்கு இணையாக விளையாட துடித்து கொண்டிருந்தான் ஸ்ரீயின் எட்டு மாத குழந்தை தருண். குழந்தைகளை ஸ்ரீ கவனித்துக்கொண்டே அவ்வப் பொழுது உணவறையில் நடந்த பேச்சில் இணைந்தாள்.

 

சந்தியா உணவருந்தியவாறு, "அம்மா இப்போ உங்க சீரியல்ல ஸ்டார்ட் பண்ணுங்க" என்று சொல்ல "போ சந்து ...உங்கப்பா ஏன்டா  உங்க அப்பத்தா கூட சண்டை போட்டு உன்னை  காப்பதுனாருன்னு  இருக்கு" என்றார் லக்ஷ்மி. "மம்மி..ஒய் டிஸ் கொலவெறி? தன்ராஜ் இங்க இருந்தாருன்னா இப்படி சொன்னதுக்கு உங்களுக்கு செம டோஸ் விழுந்திருக்கும். அதோட அந்த தண்டட்டி பாட்டி பேச்சை பேசாதீங்க" என்றாள் சந்தியா. அதற்கு விந்தியா, "வாலு..அப்பாவ  பேரு சொல்லி கூப்பிடுற. அப்பா கேட்டா உனக்கு தான் டோஸ் விழுந்திருக்கும்"  என சொல்ல, "அப்பா போடுற மிலிட்டரி ரூல்ஸ்க்கு நீயும் ஸ்ரீயும் தான் லாயக்கு. நானும், பூ வும் ரூல் பிரேக்கர்ஸ் எங்களுக்கு  இதெல்லாம் சாதாரணமப்பா" என்றாள் சந்தியா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.