(Reading time: 20 - 39 minutes)

03. என் இனியவளே - பாலா 

En Iniyavale

       னியா காலையில் ஆறு மணிக்கு தான் விழித்தாள். எப்போதும் ஐந்து மணிக்கெல்லாம் விழித்து விடுவாள். நேற்று நேர்ந்த பிரச்சனையில் இரவு எப்போது உறங்கினாள் என்றே அவளுக்கு தெரியவில்லை. நேற்றைய நாள் தன் வாழ்வில் மிகவும் கெட்ட நாள் என்று எண்ணிக் கொண்டாள்.

 எழுந்து அம்மாவிடம் சென்று ஒரு குட் மார்னிங் சொல்லி விட்டு பிரஷ் செய்ய போனாள். பிரஷ் செய்து கொண்டே இனியா யோசித்தாள், அம்மாவும் இரவு உறங்க வெகு நேரமாகியிருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆனால் எப்படி அம்மா மட்டும் சீக்கிரம் விழித்து குளித்து முடித்து பூஜையும் முடித்திருக்கிறார் என வழக்கம் போல் இனியாவிற்கு தோன்றியது.

       பிரஷ் செய்து முடித்து இனியா ஜாக்கிங் கிளம்புவதற்கு முன் எழுந்து வந்த அபி இனியாவின் வழியை மறித்தாள்.

“என்னடா செல்லம்” என்று தூக்கினாள் இனியா.

“இன்னைக்கு உன்னை ஜாக்கிங் போக விட மாட்டேன்” என்றாள் அபி.

“ஏன்டா பட்டு?” என வினவிய இனியாவிற்கு,

“நேற்று முழுக்க என்னை தூக்கி கொஞ்சவே இல்லை. என் கூட விளையாடவே இல்லை. இப்பவும் வெளியே போய்ட்டு திரும்ப வந்து ஆஸ்பத்திரிக்கு போய்டுவ. அதனால தான்” என்று கூறினாள்.

        இனியா சிரித்து விட்டு, “சரிங்க அபி மேடம் வாங்க நாம தோட்டத்தை சுற்றி ஓடலாம். அப்படியே விளையாடலாம். நேற்று செய்யாததை இன்றைக்கு காம்பன்சேட் செஞ்சிடலாம் என்ன ஒகே வா” என கேட்டாள்.

       சிறித்த படியே தலையாட்டிய அபியும் அவளுடன் சென்றாள். இரண்டு பேரும் ஓட்டமும் விளையாட்டும் மாற்றி மாற்றி செய்து கொண்டிருந்தார்கள்.

இதை மாடியிலிருந்து பார்த்த பாலுவிற்கு இருவரில் ஒருவருக்கும் வித்தியாசம் இருப்பதாகவே தெரியவில்லை. பெரிய மருத்துவமனையில் சைக்காலஜிஸ்ட் ஆக வேலை செய்யும் மைத்துனி சிறு குழந்தைக்கு ஈடு கொடுத்து விளையாடுவதை பார்த்து அவளும் குழந்தை என்றே எண்ணினான்.

 நல்ல வட்ட வடிவ முகம், நிறம் மாநிறம், ஐந்தரை அடியில் வெகு களையான அழகான முகத்துடன் இருக்கும் மைத்துனியை பார்க்கையில் அவனுக்கு பெருமையாகவே இருந்தது. எல்லோரையும் அனுசரித்து போகும் குணம் தான் அவனுக்கு இவை எல்லாவற்றையும் விட பிடித்தது. ஆனால் திருமண விஷயத்தில் மட்டும் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறாளே என வருந்தினான்.  இதை பற்றி மனைவியிடம் நிறைய பேச வேண்டுமென எண்ணிக் கொண்டான்.

       இனியா அபியுடன் விளையாடி முடித்து அவளிடம் கெஞ்சிக் கேட்டு குளிக்க சென்றாள். குளித்து முடித்து செய்தி தாளை பார்க்க ஆரம்பித்தாள். சிறிது நேரத்திலேயே வந்து விட்ட அபி அவளை படிக்க விடாமல் படுத்தி எடுத்தாள். இனியா தான் கடைசியில் சிறித்துக் கொண்டே விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது. லட்சுமி மகளை உணவு உண்ண அழைத்தார்.

கூடவே வந்த அபி, “சித்தி ஊட்டி விட்டால் தான் சாப்பிடுவேன்” என அடம் பிடிக்க அவளுக்கு ஊட்டி விட்டு அதன் பின் தான் உண்டு ஒரு வழியாக மருத்துவமனைக்கு சென்றாள் இனியா.

       னியா மருத்துவமனையில் தன் அறைக்கு சென்று அவள் பேகை வைத்து விட்டு நேராக சந்தரின் அறைக்குள் சென்றாள். அங்கு சந்தர் மட்டும் தனியாக இருந்தான். என்ன அவன் அன்னை அவனை விட்டுவிட்டு எங்கு சென்று விட்டார் என யோசித்துக் கொண்டே அவனிடம் சென்று பேச ஆரம்பித்தாள்.

ஹாய் சந்தர் எப்படி உள்ளீர்கள்? என கேட்டாள்.

“இதற்கு முன்பு வரை கொஞ்சம் சோகமாக இருந்தேன். இப்போது 500 வாட்ஸ் பல்பு போட்டது போல் பிரகாசமாக உள்ளேன்” என பதிலளித்தான் சந்தர்.

இனியாவிற்கு தான் ஆச்சரியமாகி போனது. என்னடா நேற்று தான் தற்கொலைக்கு முயன்றவன் இவ்வளவு நன்றாக பேசுகிறான் என ஆச்சரியம். இவன் இவ்வளவு நன்றாக இருப்பதால் தான் ஆன்ட்டி இவனை தனியாக விட்டு சென்றார் போலும் என எண்ணினாள்.

       இனியா யோசித்துக் கொண்டே இருக்க சந்தர் தான் திரும்ப பேசினான். “என்ன மேடம் நேற்று வாயை மூடவே இல்லாமல் பேசி கொண்டிருந்தவர் இன்று பேச கூலி கேட்பீர்கள் போலும்” என்றான்.

இனியா சிரித்து விட்டு, “நேற்று ஊமை போல் பேசியவர் எனக்கு பேச இடையில் சிறிதும் இடம் கொடுக்காமல் பேசிக் கொண்டே போகவே நான் பேசா மடந்தையாகி போனேன்” என அவனை வாரினாள்.

இருவரும் சிரித்தார்கள்.

சிரித்து முடித்து விட்டு இனியா சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு, “சந்தர் நிஜமாலுமே நான் பேச காசு கேட்பேன் தெரியுமா ஏனெனில் என் வேலை அது தானே” என கூறினாள்.

சந்தர் புரிந்துக் கொண்டு, “ஓ அது தானே, ஓகே மேடம். பேச எவ்வளவு பணம் தர வேண்டும் என கூறி விடுங்கள் நான் தந்து விடுகிறேன் ஆனால் ஒன்று என்னை போலவே இன்னொருவரையும் பேச வைக்க வேண்டும்” என கூறினான்.

       இனியா, “அவ்வளவு தானே, நீங்கள் தான் பணம் தருவதாக கூறி விட்டீர்களே அதற்கு மேல் என்ன வேண்டும். பாருங்கள் யாராக இருந்தாலும் என்னை விட அதிகமாக பேச வைத்து விடுகிறேன். ஆனால் அப்புறம் அவர் வாயை மூடவே மாட்டுகிறார் என்று என்னிடம் புகார் கூற கூடாது சொல்லி விட்டேன்” என்றாள்.

சந்தர் மறுப்பாக தலையசைத்து விட்டு “இல்லை அவ்வாறு நடக்காது. நீங்கள் பேச வைத்து விட்டால் போதும்” என்றான்.

“சரி யாரென்று கூறுங்கள். அவர்களை இங்கு அழைத்து வருகிறீர்களா இல்லை வேறு எங்காவது சந்திக்கலாமா” என சீரியஸ் போலவே கேட்டாள்.

“இங்கேயே பார்க்கலாம். அவர் வேறு யாருமில்லை. என் அண்ணன் தான்” என கூறினான்.

 

       ரு நிமிடம் இனியா திகைத்து விட்டாள். இவன் ஏதோ விளையாட்டாக பேசுகிறான் என்று தான் இது வரை அவள் நினைத்திருந்தாள். அப்படி இல்லையெனினும் பரவாயில்லை. அதுவும் அவன் அண்ணணையா சொல்ல வேண்டும் என வெறுப்பாக இருந்தது அவளுக்கு.

       திகைத்தது இனியா மட்டுமல்ல. கதவின் அருகில் நின்று இவ்வளவு நேரமும் இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தவனும் தான். யாரது என்கிறீர்களா? அவன் இளவரசனே தான். இவ்வளவு நேரம் அவர்கள் விளையாட்டாய் பேசுவதை ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு தம்பி தன்னை இடையில் இழுத்ததும் திகைத்து விட்டான்.

                அவள் என்ன கூறுவாள் என ஆர்வம் தோன்ற அமைதி காத்தான். ஆனால் அவள் அந்த திகைப்பில் இருந்து வெளி வந்தால் தானே பேசுவதற்கு.

சந்தர் தான் இடையில் புகுந்து, “என்ன மேடம் என்னாயிற்று என் அண்ணணை மாற்ற கூறியதற்கு நீங்கள் இப்படி அவரை போல் மாறிவிட்டீர்களே” என கூறினான்.

அதற்கும் இனியா அமைதியாக யோசித்துக் கொண்டிருக்கவே இளவரசனே இடையில் புகுந்தான்.

       “எல்லாவற்றிலும் ஒரு விதி விலக்கு இருக்கும் சந்துரு. எல்லாவற்றையும் மாற்ற முடியும் என்பவர்களுக்கு மாற்ற முடியாமல் ஒரு விஷயமேனும் இருக்கும் அல்லவா. நான் அப்படி தான் போலும். விட்டு விடு” என்றான்.

அவனை பார்த்ததில் இனியா மேலும் திகைத்தாள். இவன் எப்போது வந்தான். எவ்வளவு நேரம் நாங்கள் பேசியதை கேட்டிருப்பான். அதையும் தாண்டி இனியாவிற்கு நேற்று இரவு கனவில் அவன் வந்தது அவனை பார்த்த மாத்திரத்தில் நினைவு வந்து அவளை பேச விடாமல் தடுத்தது. உள்ளே மனம் பேசிக் கொண்டிருக்க அவளால் வெளியில் பேச இயலவில்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.