(Reading time: 8 - 15 minutes)

01. கரை ஒதுங்கும் மீன்கள் - அருணா சுரேஷ் 

 Karai othungum meengal

ன்றைக்கு 6 மணிக்கு வரச் சொல்லியிருக்கிறான் தயானந்த். ஒருவிதமான ஈர்ப்பு அல்லது எதிர்பார்ப்பு இல்லாமல் போகத்தான் வேண்டுமா எனக் கேட்டுக் கொண்டேயிருந்தது தீபக்கின் மனம். இருந்தாலும் 10 வருடப் பழக்க தோஷத்துக்காகப் போய்த்தான் ஆகவேண்டும். தயாவை 6 வது படிக்கும் போதிருந்து தெரியும். யாருடனும் பேசி சிரிக்க மாட்டான்.கொஞ்சம் அறிவாளி போலக் காட்டிக் கொள்வான் ஆனால் அவ்வளவு ஒன்றும் புத்திசாலியில்லை. தீபக்கை மட்டும் எப்படிப் பிடித்துக் கொண்டானோ தீபக்குக்கே புரியாத விசித்திரம்.  யாராவது என்னடா உன் ஃப்ரெண்ட் தயா என்ன சொல்றான் என்று கிண்டலடிக்கும் போது தீபக்கே "அவன் ஒண்ணும் என் ஃப்ரெண்ட் இல்லை....அவனுக்கு நான் ஃப்ரெண்ட் "என்று கொஞ்சம் கூச்சத்துடனே விளக்கமளித்துக் கொள்வான்.

                  அவன் கூடப் பேசவோ பழகவோ யாரும் விரும்புவதில்லை. கொஞ்சம் வெடு வெடுன்னு உயரமா குச்சி குச்சியான கை கால்களும் முன் துருத்திய பற்களும் என்று உருவம் கொஞ்சம் பயமுறுத்தும்தான். ஆனா உருவம்தான் பிரச்னைன்னு பார்த்தா பேச்சுலே தூக்கியெறிவதில் மன்னன். அப்புறம் எப்பிடி நட்பு வட்டம் சதுரம் எல்லாம்?ஒருமாதிரியாப் பார்த்தால் வில்லன்தான் நம்ம கதைலே ஹீரோ...ஓ.கே தானே!

               தீபக்குக்கு இந்த ஃபேஸ் புக் அது இதுன்னெல்லாம் ஒரு ஆர்வமும் கிடையாது. கூட வேலை பார்ப்பவனின்  

"இன்னிக்கு பதினைஞ்சு வருஷ ஃப்ரெண்டை ஃபேஸ் புக்கில் கண்டு புடிச்சேண்டா....இன்னிக்கு பழைய காதலி சிக்கிட்டாடான்னு"           பண்ற அலைப்பறை தாங்காம அப்படி எப்பிடிரா பழைய ஆட்களையெல்லாம் கண்டு புடிக்கிறான்னு ஒரு ஆர்வத்துலே நேற்றுதான்  கணக்கு ஆரம்பிச்சான். ராவோட ராவா "டேய் உன்னை எவ்வ்ளோ நாளா தேடிக்கிட்டு இருக்கேன் இன்னிக்குத்தான் மாட்டுனே!" அப்படீன்னு ஒரு மெஸேஜ் தயாவிடமிருந்து. அடிக்கடி அவன் உபயோகப்படுத்தும் ஒரு வார்த்தை "மாட்டிக்கினியா" அப்புறம் சேட், செல் நம்பர் அப்படின்னு ஆரம்பிச்சு இன்னிக்கு ஒருவழியா நீ வந்தே ஆகணும் வீட்டுக்கு அப்படீன்னு அடம்.

                             பெங்களூருக்குள்ளேயே ரெண்டு பேரும் இருந்தும் நாலு வருஷமா ஒருத்தரையொருத்தர் பார்க்காமலேயே இருந்திருக்கிறார்கள். ஒதுக்குப் புறமான அவன் வீட்டிற்குப் போவதற்கு பேருந்தில் ஏறி சின்னப்பிள்ளை போல ஓடிப் போய் ஜன்னல் சீட்டில் அமர்ந்து கொண்டான் தீபக். பெங்களூர் மழையும் மும்பை மழையும் அனுபவிக்க வேண்டிய ஒன்று என்று நினைத்துக் கொண்டான். மெதுவாகத் தூறல் போட ஆரம்பித்திருந்தது. தயாவைப் பற்றி அவங்க அம்மாவுக்கு எப்பவும் ஒரு கவலையுண்டு. பெண்பிள்ளையைப் போல இவனை எப்படிக் கரையேற்றுவது என்று அடிக்கடி தீபக்கிடம் புலம்புவார்கள். ஒற்றைப் பையனாக வளர்ந்ததில் கொஞ்சம் அம்மாஞ்சியாக வளர்ந்திருப்பது போலத் தெரியும். ஆனால் பய ரொம்ப விவரமானவன்தான்.

                                "டிக்கெட் டிக்கெட்" என்ற சத்தத்துக்கு நினைவுலகத்துக்கு வந்தான் தீபக். நூறு ருபாயை எடுத்துக் கொடுக்க நினைத்தவன் கன்னடத்தில் திட்டு வாங்கவேண்டியிருக்கும் என்று பதறி சரியான சில்லறை கொடுத்து வாங்கிக் கொண்டான்.

                        யாவை நினைத்ததுமே அவனின் அஹங்காரமும் முன் வந்து நின்று ஐந்தாறு வருடங்கள் பின்னோக்கிச் சென்றது தீபக்கின் மனம். அமைதியாக எதையும் செய்யத் தெரியாது.செருப்பை உதறிக் கழற்றுவது, கழற்றும்போதே தூக்கி எறிவது, கதவை ஓங்கி அறைந்து தன் வருகையைப் பதிவு செய்வது, சோத்துத் தட்டை விசிறுவது இப்படி எதுவும் ஒரு அஹங்காரத்தோடுதான் இருக்கும். அவன் அம்மாவுக்கு அவனைக் கண்டால் பாசத்தைவிட பயம் அதிகம். இத்தனைக்கும் உனக்குப் பிடிக்குமேன்னு நுங்கு வாங்கிட்டு வந்தேம்மா என்றோ மாம்பழம் பார்த்தவுடன் உன் நினைப்புதாம்மா வந்துச்சுன்னு வாரத்துக்கு ரெண்டுமுறை உருகுபவன்தான்.

                சைக்கிளில் கலர் கலராய் ரிப்பன் பறக்க விட்டுப் பெயரையும் பெரியதாய் எழுதி வைத்து ஒரு வினோதமான ஹார்ன் அடித்துக் கொண்டு பறந்து வருவான்.எல்லாச் செய்கையும் என்னைப் பார் பார் என்று சொல்லிக் கொண்டிருக்கும். பேசும் போது ஒவ்வொரு வரிக்கும் இடையில் ஒற்றை விரலால் அடிக்கடி கண்ணாடியை மூக்குக்கு மேல் தூக்கி இட்டுக் கொள்வான். 

                    ஒரு தடவை கணக்கு வாத்தியார் டேவிட் சார் கார் டையரைப் பங்க்சர் ஆக்கியிருக்கிறான். சுசிலா டீச்சரின் பர்சில் இருந்து நூறு ரூபாய் நோட்டு ஒன்றை அசத்தியிருக்கிறான். அவன் ஏதாவது தப்பு செய்யும் போதெல்லாம் பாவமன்னிப்புக் கேட்பவன் போல தீபக்கிடம் வந்து கொட்டியிருக்கிறான். மாட்டிக் கொண்டு அடிவாங்கும் போதெல்லாம் தீபக்கிடம் வந்து அழுதிருக்கிறான். ஆனால் ஒன்று எவ்வ்ளோ அழுதாலும் அடுத்த பதினைந்தாவது நிமிடம் சரியாகி விடுவான்.

 ஃபோனில் பேசும் பொழுது கல்யாணமாகி விட்டது என்றான். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது பொண்ணுங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அவனுக்கு ஒரு கனவுலகம் கண்ணுக்குள் வந்து விடும்.

"டேய் தீபக் பொண்ணுன்னா தலைமுடி நீளமாக தழைய தழையப் பின்னிக்கிட்டு தலை நிறைய...

"மல்லிகையா?"

இல்லைடா முல்லைப்பூவ வச்சுக்கிட்டு பட்டுப் புடவை உடுத்திக்கிட்டு காதுலே குடை ஜிமிக்கி போட்டுக்கிட்டு  நான் சொல்றதையெல்லாம் கேட்டுக்கிட்டு என் பின்னாலேயே சுத்திக்கிட்டு வேற ஆண் நண்பர்களை நான் கூட்டிகிட்டு வீட்டுக்குப் போனா 'இவங்களையெல்லாம் வீட்டுக்குக் கூட்டிட்டு வராதீங்க எனக்குப் பிடிக்கலைங்கன்னு சிணுங்கிற பொண்ணா இருக்கணும்டா"

" ம்ம்ம் அப்புறம்"

"மொத்தத்திலே சுத்தமா இங்கிலீஷ் பேசத் தெரியவே கூடாதுடா"

"இங்கிலீஷ் என்னடா பாவம் பண்ணுச்சு?"

"இங்கிலீஷ் பேசத் தெரிஞ்ச பொண்ணுங்க ஆண்களை மதிக்கமாட்டாங்கடா "

"பார்ரா...இதை யாருடா சொன்னது உனக்கு?"

"நம்ம கிளாஸ்லயும்தான் இருக்குதுகளே ராங்கிக்காரிகள்... அத்தனையும் தாட் பூட்னு இங்க்லீஷ் பேசுதுங்க….ஒண்ணாவது நம்மளைப் பார்க்குதுங்களா?  டேய் இதுங்களுக்கெல்லாம் சேலை கட்டத் தெரியுமாடா?"

இதே டையலாகை ஒரு இருபது தடவையாவது தயா சொல்லிக் கேட்டிருக்கிறான் தீபக். அவனுக்குப் பிடித்தமான பொண்ணுதான் அமைஞ்சுருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் தயாவின் வீட்டுக் காலிங்க் பெல்லை அழுத்தினான் . மெல்லிய சங்கீதம் உள்ளே அலையலையாய் எழும்பியது. கதவைத் திறந்த அந்தப் பெண்ணைப் பார்த்ததும் ஒரு மெல்லிய அதிர்ச்சிக்குப் போனான் தீபக்.

          பாய் கட் , ப்ளாஸ்டிக் மணிகள் காதுகளில் , முழங்காலளவு ஜீன்ஸ் , "I KNOW KARATE " என்ற வாசகத்துடன் டி ஷர்ட் அணிந்து ஒரு பெண் கதவைத் திறந்து "எஸ்" என்றாள்.

                 தீபக் கொஞ்சமாக ஆங்கிலம் பேசுவானென்றாலும் எடுத்த எடுப்பில் அந்தப் பெண்ணைப் பார்த்ததும் நாக்கு குழறியது. 

"ஐம் தீபக் "

"ஓ " என்று செயற்கையான ஒரு புன்னகையுடன் 

"ஹனி யுர் ஃப்ரெண்ட் ஹாஸ் கம் " என என்னை உள்ளே வருமாறு சைகை செய்தாள்.

யாவைப் பார்க்கும் ஆவலோடு உள் அறையைப் பார்த்துக் கொண்டிருந்தான் தீபக். சட்டென வெளிப்பட்ட உருவத்தைப் பார்த்து மிரண்டு போனான் தீபக். ஒரு வாட்டசாட்டமான கொஞ்சமான தொப்பையோடு தெற்றியிருந்த பற்கள் உள்ளே போய் கண்களுக்கு போடும் அழகான ஒரு மெல்லிய ஃப்ரேம் போட்ட கண்ணாடியை ஸ்டைலாக முடிக்கு மேல் சொருகிக் கொண்டு 

         "ஹாய் டூட் மாட்டிக்கினியா " என்றவாறு வெளியே வந்தது தயா தானா என்று கொஞ்சம் சந்தேகத்தோடுதான் கை கொடுத்தான் தீபக்.

"அப்புறம்"

அப்புறம் என்னடா ....தீபக் என்னடா ஒரு மாற்றம் கூட இல்லை அப்பிடியே இருக்கே"

"அதுக்குதான் நீ தலைலேருந்து கால்வரை மாறியிருக்கியே"

 "ஆறு வருஷக் கதையிருக்குடா பேச"

“பேசலாம் பேசலாம்”

“எண்டா இப்பிடி என்னைக் கட் பண்ணி விட்டுட்டே? எப்பிடில்லாம் எங்ககேல்லாம் தேடினேன் தெரியுமாடா உனக்கு? உன்னைக் கண்டு பிடிச்ச அன்னிக்கு ராத்திரி தூங்கவே இல்லைடா, உடனே உன்கிட்டே ஒடி வரணும்னு இருந்துச்சு. நீதான் ஒருவாரம் உனக்கு வேலை ரொம்ப இருக்குன்னு சொன்னதுனாலே பொறுத்துக்கிட்டேன்.””

””நான் எங்கடா கட் பண்ணுனேன்? வேலை ,இடம் மாற்றம் அப்பிடின்னு ஓடிக்கிட்டே இருந்துட்டேன் ....அதுசரி அப்பிடி என்னடா பொறுக்கமுடியாத பாசம்....டேய் ஏதாவது தப்பு கிப்பு பண்ணிட்டியா?” “

அவன் குணம் தெரியும்கிறதுனாலே சிரித்துக் கொண்டே கேட்டான் தீபக்.

அந்த முழங்கால் ஜீன்ஸ் பொண்ணு வரவும்

“மை வைஃப் ஷைனி” என்று அறிமுகப் படுத்தி விட்டு

 “அப்புறம் தீபக் என்ன சாப்பிடறே “ என்றான்.

அவள் அந்தப் பக்கம் போனதும் கொஞ்சம் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு

“கொஞ்சம் காலாற நடக்கலாம்டா....மொட்டை மாடிக்குப் போலாம்டா “ என்றான்.

இவன் என்ன சொல்லக் காத்திருக்கிறானோ என்ற  பதற்றத்தில் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் தீபக்.

“டேய் நான் ஒரு பயங்கரமான சிக்கல்லே மாட்டிக்கிட்டிருக்கேண்டா!! நீதாண்டா எனக்கு ஹெல்ப் பண்ணனும்.....யாராவது உதவமாட்டங்களான்னு  நினைச்சுட்டு இருக்கும் போதுதாண்டா நீ கிடைச்சே”

ரொம்பப் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு

“ சிக்கலா ?? என்னடா?? யாரைப் பற்றியாவது  வம்பு பேசி மாட்டிக்கினியா?” என்ன்றான் தீபக்

“இல்லைடா கொஞ்சம் பெரிசா”

“ஹூம் டயர் பங்க்சராக்கினியா?”

“இல்லைடா இன்னும் பெரிசா”

“யார் பர்சிலிருந்தாவது ரூபா சுட்டுட்டியா?”

“இல்லைடா இன்னும் பெரிசா”

“இதைவிடப் பெரிசான்னா கொலையா?” என்று சிரித்தான் தீபக்.

“ஆமாண்டா” என்று திரு திருன்னு முழித்தவனைப் பார்த்து பயப்பட ஆரம்பித்தான் தீபக்

தென்ன புதுக் கதை.....அச்சச்சோ வந்திருக்கவே கூடாதோ ......தயா கிட்டே இதான் பிரச்னையே  ஏதாவது அச்சுப்பிச்சுன்னு பண்ண வேண்டியது அப்புறம் “நீதாண்டா என்னைக் காப்பாத்தணும்”னு  எல்லோரையும் இழுத்து விடுவது....இவங்கிட்டேயிருந்து எப்பிடித் தப்புவதென்று யோசிக்க ஆரம்பித்திருந்தான் தீபக். 

தொடரும்

Karai Othungum meengal -  02

 

{kunena_discuss:678}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.