(Reading time: 9 - 17 minutes)

02. நினைக்காத நாளில்லை ரதியே - ஸ்வேதா 

Ninaikkaatha Naalillai rathiye

ம்பனியில் தன்னை மறந்து அந்த பாய்லரின் டிசைன் சரி  பார்த்துக் கொண்டிருந்த மஹியிடம் அன்றைய வம்பை ஆரம்பித்தான் ப்ரதாப் 

"மச்சி சோகமா இருக்கு"-பிரதாப் 

"அதுக்கு?? "-மகேந்திரன் 

"ஏன் மச்சி ரெண்டு வார்த்தைக்கு மேல பேசுனா சம்பளுத்துல நூறு ரூவா கொறச்சிருவங்களா?"

பதிலுக்கு மகேந்திரன் பார்வை மட்டும் தான் பார்த்தான். அவன் பேச ஆரம்பிக்க விடாமல் பிரதாப் தொடர்ந்தான்.

அப்படி என்னதான் நடந்துச்சி மச்சான் இப்படி புத்த பிசு  ஆகிட்ட ” 

"பொறுப்பு வந்துருச்சி மச்சான்!! "

பழைய கிண்டல் தொனியில் மஹி பேசி முடித்தான்.மேலும் பேச்சும் பிரதாப்பின் ஆராய்ச்சியும் வளர்ப்பதில் மஹிக்கு நாட்டம் இல்லை.

ஏன்டா வீட்ல அண்ணனுக்கு கல்யாணம்.., நண்பனுக்கு ட்ரீட் கொடுக்கலாம் அப்படிங்கற பொறுப்பு இருக்கா??” ப்ரதாப் இழுத்துப்  பேச 

அன்னிக்கே மத்யானம் சாப்பாடு போட்டாங்களே மச்சான்" -மஹி 

"டேய்.." என்று ப்ரதாப் கர்ஜிக்க

"சரி சரி இந்த வீக் நடுவுல லீவ் வருதுல அன்னிக்கி பாத்துக்கலாம்"

ப்ரதாப் சந்தேகமாய் பார்க்க மஹி சத்தியம் செய்தான்.

அப்போ மச்சான் இப்போவே  சாம்பிள்க்கு காபி

காலேஜில் க்ளாஸ் முடிந்து கிளம்புகையில்  "காபி கப்க்கு போயிட்டு போகலாம் மீரா"-ஹரிணி 

காபி கப் ஒரு சின்ன  காபி ஷாப்.  அதை நடத்தும்  ரஜினியும், அங்கே துருதுருவென்று ஓடி விளையாடும் அவர்களது  நான்கு வயது குழந்தையும், ஸ்பீக்கர்ல  ஃப்ளுட் மியூசிக்  இதமா இருக்கும்.

வாழ்க்கை எல்லாருக்கும் நேரா சமமா இருக்கும் சொல்லவே முடியாது .ரஜினிக்கும் அப்படி தான்.கொஞ்சம் கரடு முரடா கொஞ்சம் கோணலா!  கடவுள் வாழ்கை துணையை பரித்தலும்  வாழ்கைக்கு அர்த்தமாய் ஒரு உயிரையும் துணைக்கு இரண்டு நல்ல உள்ளத்தையும் பரிசாக கொடுத்திருந்தார். இயற்கையாவே அழகான ரஜினி தன்னம்பிக்கையோடு இன்னும் அழகாய் தெரிய வாழ்க்கை மேல் பற்றும் தன்னம்பிக்கை வளர்வதுப்போல் மீராவிற்கு.

காபி கப்பில் ஹரிணியின் அரட்டை கச்சேரி கலைகட்ட தொடங்கியது  மீராவுடன் இன்னும் சில பெண்களின் கூட்டத்தில்.

ம்பனியின் வெளிவேலையை காரணம் காட்டி வெளியே வந்து காபி கப்பிற்கு பிரதாப்போடு வந்தவனுக்கு தான் பார்க்கும் காட்சியை நம்ப முடியவில்லை.

மீரா! அதுவும் அமைதியாக அடுத்தவர் பேச கேட்கும் மீரா!! அதே சமயத்தில் 

"மச்சி அந்த சீக்கா டப்பா பிகரு தானே அது " பிரதாப் சத்தமாய் கேட்க மீரா சத்தம் கேட்டு திரும்பும் முன் அவள் கண்ணில் படாதவாறு சட்டென ஒரு பக்கம் அமர்ந்தார்கள்.

"என்ன மச்சி பூச்சாண்டி வேலைலா காட்ற" பிரதாப்

"அமைதியா வேணும்ங்கறத வாங்கி சாப்பிடு " என்று எரிச்சலுடன் சொல்லி விட்டு மீராவை கவனிக்க தொடங்கினான் மகேந்திரன்.

ஆர்டர் ப்ளீஸ் சார் என்று சர்வர் கேட்க 

"அந்த ப்ளூ சுடிதார் வேணும் " என்று பிரதாப் மீராவை காட்ட 

"டேய்ய்ய்" - மஹி 

"எக்ஸ்கூயூஸ் மீ சார் "

"பஜ்ஜி போண்டா!!!"

"சார் ??!!"

"இல்லியா சரி ரெண்டு காப்புசினோ "

"ஓகே சார் "-சர்வர் 

"மச்சான் கூட வந்திருக்கிற பிகர் சூப்பர் "

"அது என் அண்ணி " மிரட்டும் தொனியில் மஹி 

வனித்தவரையில் மீராவிடம் எப்போதும் தோன்றும் அதே ஆச்சரியம் தான் மகேந்திரனுக்கு இப்போதும்.மனதினுள் "மீராவிற்கு வாய் பேச தொடங்கினால் கை,கண் என்று எல்லாமே சேர்ந்து பேசுமே, காது ஜிமிக்கி ஆட,தீவிரமாய் ஏதாவது சல்பி விஷயத்த அறுக்குற மீரா எங்க போனா என்று கேட்டு கொண்டே இன்னொரு பக்கம் அந்த நாட்களை அசை போட்டுகொண்டிருந்தான்.

அங்கேயே இருந்து அவர்கள் சென்றபின் வேலைகளை முடித்து கம்பனி காரிலேயே  வீட்டிற்கு வந்தவனுக்கு வாசலிலேயே அண்ணன்  நரேன் வாசலில் நின்று மொபைலில் பேசிக்கொண்டிருந்தான். அவன் நிற்கும் தோரணை, முகம், நேரம் எல்லாமே சொல்லாமல் சொல்லியது அந்தப் பக்கம் யாரென. குறும்பாய் சிரித்துக் கொண்டே வரும் தம்பியை பார்த்ததுமே 

"தம்பி வரான்  அப்பறம் பேசறேன்" என்று பொறுப்போடு முடித்த அண்ணனை பார்த்து 

என்ன அண்ணா, ஒரே தீயற வாசனை அம்மா ஏதாவது அடுப்பில அப்படியே விட்டுடங்களா "

கிட்டே வந்த பின் தான் நரேன் வேலை விட்டு வந்து  வீட்டுக்குள் போகாமல் வாசலிலேயே நின்று பேசிக்கொண்டிருக்கிறான் என்று தெரிந்தது.

இளயவனும் வந்ததை உணர்ந்த அன்னை சிவகாமி 

"தம்பி வாசல்ல நெறைய கொசு தொல்ல சீக்கரம் உள்ள வந்தரு " என்று பெரியவனை கலாய்க்க அங்கே சிரிப்பும் சீண்டலும் எழுந்து அடங்கியது.

சிவகாமி முன்னே செல்ல 

"என்ன அண்ணா எந்த லெவல்ல இருக்கு"

"இன்ட்ரோ லெவல்!!!!" என்று எரிச்சலும் மலர்ச்சியுமாக நரேன் கூற 

"சோ பிட்டி "

"டேய்,அவளுக்கு மீரா பஜன பாடறதுக்கே நேரம் போதல" என்றான் நரேன் எரிச்சலுடன் மீண்டும் 

மஹி அதிர்ச்சியாக பார்க்க சிவகாமி "அட என் மருமகளுக்கு பாட வருமா?!"

"ம்ம்ம் நல்லாவே வரும்" என்று தொடர்ந்து அவள் அன்றைக்கு பாட்டு பாட மீரா கிட்டார் வாசிக்க எல்லாரும் பாராட்ட மீராவால் அது நடந்தது என்று அவள் சொன்னது என்று எல்லாம் சொல்லி முடித்தான்.

என் மீரா எப்பவுமே பெஸ்ட் தான் என்று நினைத்துக்கொண்டே உறங்க சென்றவனுக்கு நரேன்னின் கேள்வி சப்த நாடிகளையும் நிமிடத்தில் நிறுத்தியது போல் 

"நிச்சயதன்னிக்கு அப்படி என்ன வேலை இருந்தது பார்க்ல மஹி"-நரேந்திரன் 

அண்ணன் கண்டுக்கொண்டான் என்று அறிந்தும் சின்ன அதிர்ச்சியை தவிர மகேந்திரன் பேசவேயில்லை.

நரேன் தம்பியிடம் தனக்குள் இருக்கும் யூகத்தை சொல்லி மீராவை புகழ்ந்து பேசவும்.மஹிக்குள் நம்பிக்கை வேர் மீண்டும் துளிர்ந்தது. அவன் காதலை ஏற்பதுப்போல் அவன் மிகவும் மதிக்கும் அண்ணனே பேசியது வென்றுவிட்டது போல் இருக்க..

மகேந்திரனுக்குள் அந்த நாளை நினைக்க துடிக்க மூளை வேண்டாமென எச்சரிக்க இதயம் ஜெயித்தது 

ன்று நல்ல நேரத்திற்கு மண்டபத்தில் இருக்க வேண்டுமென வீட்டில் எல்லோரும் கிளம்ப சுந்தரம் மகேந்திரனிடம் வீட்டை பூட்டிக்கொண்டு மதிய சாப்பாட்டுக்கு ஹோடேலில் ஆர்டர் பற்றி விசாரித்து வரும்படி சொல்லிவிட்டு மற்றவருடன் வேனுக்கு சென்றுவிட்டார். வேலையெல்லாம் முடித்து தாமதமாய் மோதிரம் மாற்றும் சமயத்திற்கு  மண்டபத்திற்குள்  வந்த மகேந்திரனுக்கு மேடையில் நிற்கும் அண்ணனையும் அண்ணியாக போகும் ஹரிணியும் ஹரிணியின் பின் நிற்பரவர்களை பார்த்து அதிர்ச்சியும் வேதனையும் கலந்து இதயம் வேலை நிறுத்தம் செய்தது.அதற்க்கு பின் இரண்டே நிமிடங்களில் தந்தையை பிடித்து வேலை முடிந்தது என சொல்லிவிட்டு அருகே இருக்கும் பார்க்கிற்கு வந்து விட்டான்.

       மலர்ந்த முகமாய் அண்ணனும்  அண்ணியும், பின் பழைய பொலிவு இல்லையென்றாலும் அழகோவியமாய் மீராவும் மேடையில் பார்த்த அந்த நிமிடம் ஏதோ வலியுடன் கண்ணுக்குள். மீராவுடன் கவிதா கீர்த்தனாவும் இருந்தனர். கவியுடன் மீரா இருக்கிறாள் என்பதே ஆருதலாக இருந்தது. நாளு வருட கிளாஸ் மேட் தானே அவர்கள் நட்பை அவனும் அறிந்தவன் தான்.

ப்ளூ சாரீயில்  அதே நீள் பின்னலும்,கண்ணில் மையும்,சின்ன கோன் பொட்டு,மூக்குத்தி,ஆனா கொஞ்சம் சிரிப்பு தான் மிஸ்ஸிங் என மனம் மீராவையும் அந்த நாளையும் அசை போட்டு கொண்டே இருந்தது.

மீராவின் மாற்றத்திற்கு காரணம் எல்லா வகையிலும் தானாக தான் இருக்க வேண்டும் என்று மனம் வலித்தது. நேராய் போய் மன்னிப்பு கேட்க மனம் துடித்தாலும்.மன்னித்து ஏற்கும் நிலையில் மீரா இருப்பாளா!!! சந்தேகம் தான். அவளின் எல்லா செயலிலும் தனக்கு விதி விலக்கு உண்டு  என்று தெரிந்தவனும் தான். இப்போது அது எப்படி என்று தான் குழப்பம். குழம்பி அவளை முகத்திற்கு நேராய் பார்த்து பேசமுடியாது தன்னால் என்று உணர்ந்தவனாய், முடிவுக்கு வந்தவனாய் அண்ணனின் திருமணம் வரையில் அவள் கண்ணில் படாமல் இருக்க முடிவு செய்தான்.

அடுத்த வந்த நாட்களும் அவன் முடிவிற்கேற்ப சென்றுக் கொண்டிருக்க,ஹரிணி நரேன் திருமண வேலை அழகாய் ஆரம்பித்தது. மூன்று மாதங்கள் கழித்து திருமணம் என்று தேதி குறிக்க பட்டது.  

  ஹரிணிக்குள் இனி  தான் இல்லாமல்  இருக்கபோகும் அப்பாவை பற்றிய கவலை,அம்மா இல்லாத ஏக்கம், சுதந்திரம் பறிபோகுமோ என்ற பயம், நரேனின் கோபம், திருமண கனவுகள் ,நரேன்ப்போல் பெண் குழந்தை, தன்னைப்போல் ஒரு ஆண் குழந்தை என்று கனவுகளுடனும் கலவரத்துடனும் நாட்கள் ஆரம்பித்தது.

ஹரிணிக்கு  தாய் இறப்பும் பின் தந்தை உழைத்த விதம்,அதனால் சேர்ந்த இந்த பணம்,  பொருள், பெருமை, எப்போதும் வீட்டில் இருக்கும் கூட்டம் என்று வெறுத்து   வீட்டை விட்டு போவதில் முதலில் இருந்த ஆர்வம் பறந்து இது நான் ஆசையாய் வாங்கின பூஜாடி, நான் செலக்ட் பண்ண கார் கலர்என்று பார்க்கும் பொருளிடமெல்லாம் பாசம் பொங்க தொடங்கியது. தான் இருக்கும்  போதே கண்டுக்காமல் இருக்கும் அப்பா இல்லை என்றால் மறந்தே விடுவார் என்று நினைத்தவளுக்கு மகளுக்கு திருமணம் என்று பூரித்தாலும் ஜெகநாதனின்  அடி மனதின்  வலியை உணர முடிந்தது. இந்த வருத்தங்களுக்கும் குழப்பங்களுக்கும்  வடிகாலாக மனம் மீராவை நாடியது.

அடுத்த இருபது நிமிடங்களில் மீரா அவள் தோழிகளுடன் இருக்கும் பிளாட்டில் இருந்தாள்  ஹரிணி.உள்ளே சென்றவளுக்கு கவி லேப்டாப்பில் வேலை செய்துக்கொண்டிருக்க கீர்த்தனா காதலுடன் ராதா கிருஷ்ணா உஞ்சலில் இருபதுப்போல் இருக்கும் ச்டென்சில் வைத்து சார்ட்டில் வரைந்துக்கொண்டிருக்க மீரா அழுக்கு பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தாள்.

"என்ன வீட்டு வேலைக்கு ஆள் இன்னுமா தேடிட்டு இருக்கீங்க" ஹரிணி பேச்சை ஆரம்பிக்க  

"நாங்க தேடவே இல்லையே"-கவி 

ஹரிணி அதிர்ச்சியுடன் பார்க்க கவி தொடர்ந்தாள் 

"எங்க வேலையை நாங்களே பார்த்து தான் பழக்கம்" சொல்லிக்கொண்டே கவி அவளின் அழுக்கு துணிகளையும் சேர்த்து துவைக்கும் படி சொல்ல,அதை மீராவும் ஒப்புக்கொள்ள ஹரிணிக்கு அவள் ரசித்து பிரமிக்கும் ஆருயிர் தோழியை இவர்கள் கொடுமை படுத்துவதுபோல் தோன்றியது.

அவள் பேசவே விடாது மீராவிற்கு அன்றைய வேலைகள் அடுக்காய் இருக்க, எரிச்சலுடன்  திரும்பிவிட்டாள் ஹரிணி. மனமெல்லாம் மீரா இரண்டு நாட்களாய் முகம் கருத்து இருப்பது இப்படி இவர்கள் வேலை வாங்குவதால் தான் இருக்கும் என்று கீர்த்தனாவையும் கவிதாவையும் கொம்பு வைத்த ராட்சசிகள் போல் சித்தரித்துக்கொண்டாள்.

காதல் சொல்லுக்குள் அர்தம் போல அது புரிஞ்சிக்கிறவங்க பொருத்து  மாறும். நேசம் பாசம் உறவு எல்லாமே அளவுகளை கடந்தது காலத்தை கடந்தது, அன்பு வார்த்தையில் கூட  புரியாது போகலாம் செய்யும் செயலில் காட்டும் கோபத்தில் எடுத்துக்கொள்ளும் அக்கறையில் அழகாய் வெளிப்படும். மனது திறந்திருந்தால் உள்ளே நுழையும் திறக்காமலிருந்தால் காத்திருக்கும். 

தொடரும்

Go to Ninaikkatha naal illai rathiye 01

Go to Ninaikkatha naal illai rathiye 03

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.