(Reading time: 24 - 47 minutes)

08. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

Yeppa pei mathiri irukka

ந்தியாவின் ஸ்கூட்டி இந்த முறை ஒரே உதையிலே இயங்க, தனது தோழி சக்தியின் வீட்டை வந்தடைந்தாள். சந்தியாவின் மிக நெருக்கமான தோழி சக்தி. பள்ளி பருவத்தில் இருந்து கடைசியாக படித்த MBA வரை ஒன்றாக படித்தவர்கள். சக்தியிற்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது. அவளின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் மற்றும் சிடியை ஒன்றாக பார்க்க சந்தியாவும் அவர்களின் மற்ற தோழிகளும் சக்தி வீட்டிற்கு வந்து விட்டு பின் மதிய உணவுக்கு சந்தியா வீட்டிற்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

 

கார்த்திக் காரை ஓட்டிய படியே மதுவிடம் "என் மேல என்ன  சந்தேகம் மது?"

மது அதற்கு "உண்மையிலே உனக்கும் சந்தியாவுக்கும் நடுவுல ப்ரண்ட்ஷிப் தானா?.ஆபிஸ்ல அவள பாத்த உடனே மெல்ட் ஆகிட்ட......பல நாள் பழகின மாதிரி பிரன்ட்லியா தான பேசிக்கிட்டு இருந்தீங்க... ..அப்புறம் ஏன் கிளம்புறப்ப திடீர்னு டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி சண்டை போட்டீங்க??..... எனக்கு ஒன்னுமே புரியல காதி. வாட் இஸ் கோயிங் ஆன் வித் யு டூ?"

கார்த்திக் அதற்கு "நீ சொன்னதுலே பதிலும் இருக்கு மது. டாம் அண்ட் ஜெர்ரி கைண்ட் ஆப் ரிலேஷன்ஷிப் தான்... வேற ஒன்னும் இல்ல.. போனா போதுன்னு ஹெல்ப் பண்ண போனா கடைசில என்ன ஏமாந்த பூனையாக்கிட்டா... இப்போ ஹாஸ்பிடல்ல எனக்கு ஏதோ குழிய தோண்டி வைச்சிருக்கா....அதெல்லாம் கூட சமாளிச்சிடுவேன். ஆனா ஹாஸ்பிட்டல் விஷயம் அம்மாவுக்கு தெரிஞ்சிருச்சுன்னு நினைக்கிறேன். அதை பத்தி லஞ்ச் டைம்ல பேசணும்னு என்கிட்ட போன்ல சொன்னாங்க... ப்ப்ச்ச்... எல்லாம் என் நேரம்... இந்த பேயால...."

மது, "அத்தைக்கு தெரிஞ்சிடுச்சா...ரெம்ப திட்டுவாங்களே?....... எவ்ரி சண்டே லன்ச் நம்ம பாமிலி கெட்டுகெதர் வேற. அது போதாதுன்னு மீராக்கா வீட்டில் இருந்து கெஸ்ட் . அத்தைக்கு கோபம் வந்தா எல்லார் முன்னாடியும் வச்சு வேற உன்னை உண்டு இல்லன்னு ஆக்கிடுவாங்களே .......... பாவம் காதி நீ, தேவ இல்லாம வம்பை விலை கொடுத்து வாங்கி வச்சிருக்க"

கார்த்திக் "வம்பை இல்ல அந்த பேய்ய"

மது "அது தான் ஏன்? எனக்கு புரியல?... அவளை கழட்டி விட்டிருக்க வேண்டியது தான"

கார்த்திக் "நான் அப்போ உன்கிட்ட சொன்னது தான் மது..... நம்ம சொந்த விஷயத்தை பிஸ்னஸ்ல நுழைக்க கூடாது"

மதுவும் அவனை மாதிரியே  "நானும்  உன்கிட்ட அப்போ சொன்னது  தான் காதி....நம்ம பிஸ்னஸ்க்கு தேவையான குவாலிட்டிஸ் அவகிட்ட இல்ல....."

கார்த்திக்கும் விடாமல் அதே தொனியில், "அப்படீனா ....சந்தியாவும்  அப்போ உன்கிட்ட சொன்னது  தான் உண்மை மது..... "

மது "என்ன உண்மைய சொல்லிட்டா?" என்றாள் எரிச்சலுடன்.

கார்த்திக் "உனக்கு என் மேல நம்பிக்கை இல்லன்னு" என்றான் உணர்ச்சியற்ற குரலில்.

மது "ஸ்டாப் இட் கார்த்திக். நான் உன் மேல உள்ள அக்கறைல சொன்னா ... என்னையே  தப்பா நினைக்குற. அப்படி நீ நினச்சா எனக்கு இந்த பிஸ்னஸே வேண்டாம். நானா கேட்டேன்... நீ தான போர்ஸ் பண்ண..... நான் எங்கயாவது வேலைக்கு போறேன். நிம்மதியா இருப்பேன்" கோபத்தில் ஆரம்பித்த அவள் குரல்... வேதனை அதிகமாக குமறலாகி.....தாரை தாரையாய் கண்ணீருடன் ஒரு வழியாக சொல்ல வந்ததை சொல்லி முடித்தாள்.

வளை பார்த்து வருந்திய கார்த்திக் காரை ஒரு ஓரமாக நிறுத்தி, "மது, ப்ளீஸ்.. அழாத...... நீ என்னை புரிஞ்சிக்கணும். அதுக்கு தான் அப்படி சொன்னேன். உனக்கு பிடிக்காத விஷயத்தை போர்ஸ் பண்ண மாட்டேன். நான் எப்பவாது தப்பான முடிவு எடுத்திருக்கேனா?  அப்படி நீ நினச்சேன்னா நீ அழு.. எவ்வளோ நேரம் வேண்டுமானாலும் அழு. நான் வெயிட் பண்றேன்" என்றான் நிதானமாக.

க்தி வீட்டில், சந்தியா “ஹாய் பட்டு மாமி...  எப்படி இருக்கிறீங்க? புது பொண்ண எங்க?” என்றாள் சக்தியின் தாயாரிடம். அதற்கு அவர் “சக்தி போன்ல இருக்காடியம்மா... மொட்டை மாடில தான் இருக்கா. போய் பாரு. பர்த்டே பேபிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். ” என வாழ்த்த,  சந்தியா அதற்கு “மிக்க நன்றி் மாமி, உங்காத்து கும்பகோணம் டிகிரி காபியோட வாழ்த்துக்களை கொடுத்தேள்ன்னா பேஷ் பேஷா நன்னா இருக்கும்“ என நன்றியோடு காபிக்கு அடியை போட்டு விட்டு சக்தியை காண மாடிக்கு விரைந்தாள். அங்கு இருந்த சிறிய கூரைக்குள், பாய் மர கட்டிலில் உட்கார்ந்து கொண்டு அருகிலிருந்த டேபிள் பானில் காற்று வாங்கிய படியே,  சக்தி போனில் பேசி கொண்டிருந்ததை பார்த்து “என்னடி இன்னும் முடியலையா... “  என்றவாறே அதை அவளிடம் இருந்து வாங்கி “ போலீஸ்கார்....போலீஸ்கார்.......சக்திக்கு சண்டேவாவது லீவ் கொடுங்க போலீஸ்கார்” என ஆரம்பித்து சில நொடி சக்தியின் வருங்கால கணவனோடு பேசிவிட்டு வைத்தாள். சக்தி, சந்தியாவிடம் “ஏன்டி போன்ஐ வைத்த? அவர்கிட்ட ஒன்னு கேட்க வேண்டியது இருந்தது. அதுக்குள்ள கட் பண்ணிவுட்ட” என்றாள் போலியான கோபத்துடன். சந்தியா அதற்கு “நீ தான் தியரில வீக் ஆச்சே. டவுட் வரத்தான் செய்யும். அதெல்லாம் உங்க ஆளு  ப்ராக்டிக்கல்ஸ் அப்போ கிளியர் பண்ணிடுவாருடி” என சந்தியா கண்ணடித்த படி சொல்ல வெட்கத்தில் கன்னம் சிவந்த சக்தி, “சரியான ஜந்து..எப்போ பாரு DMK (டபுள் மீனிங்கில் கலாய்த்தல்). யானைக்கு ஒரு காலம்னா பூனைக்கும் ஒரு காலம் வரும்டி. அப்போ பாத்துக்கிறேன்.” என்றாள் சக்தி.

பூனைன்னு சொன்னவுடனே ஏனோ கார்த்திக் ஞாபகம் சந்தியாவிற்கு  வர,“ஏய் சக்கு, இன்னைக்கு என் பர்த்டேவை முன்னிட்டு நம்ம ப்ர்ண்ட்ஸ்க்கு மட்டும் ஸ்பெஷலா டாம் அண்ட் ஜெர்ரியின் கிளைமாக்ஸ் காட்சிகளை அதுவும்....லைவ்வா கொடுக்க போகிறேன்...இந்த மாதிரி ஒரு ரியாலிட்டி ஷோவை பாத்திருக்கவே மாட்டீங்க.. இன்னைக்கு சரியா இரண்டு மணிக்கு..“  என்றாள் சந்தியா. “உன்கிட்ட மாட்டின அந்த அப்பாவி பூனை யாரு ஜந்து ?” என்றாள் சக்தி. “அவன் அப்பாவியா? எப்பாடி... ஹார்வர்ட்ல படிச்ச சரியான திருட்டு பூனை. . “ என்றாள் சந்தியா.  

சக்தி “என்கிட்ட உள்ள  சென்சஸ் கணக்கு படி அப்படி ஒரு பிகர் நம்ம மாநகர எல்லையிலே இல்லையேடி” என்றாள் கேள்வியுடன். சந்தியா அதற்கு “ம்.... உனக்கு கல்யாணமாக போகுதுன்னு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம, ஒழுங்கா அப்டேட் எதுவும் பண்ணாம, அந்த புள்ளி விவரத்துக்கே புள்ளி வைச்சிட்டியே! அப்புறும் எப்படி தெரியும்?”  என்றாள். சக்தி அவளிடம் “ப்ச்......அதை விடு. சொல்லு....யாருடி அந்த பிகரு?”  என கேட்க “ஹ்ம்....நீ பண்ண வேளைக்கு உனக்கு சொல்லிருக்க மாட்டேன் தான். ஆனா இப்படி ஒரு பையனை பத்தி நீ சென்சஸ்ல ஏத்தாட்டி....... வரும் எதிர்காலம் உன் மீது பழி போடும் பெண்ணே அதற்காக தான் வாடினேன்....”  என (பம்பாய் படத்தில் உயிரே பாடலின் ஒரு வரி) பாடினாள் சந்தியா.

“அய்யோ...சும்மா பாடி கொல்லாதடி. எனக்கு சஸ்பென்ஸ் தாங்காது ஜந்து. யாருடி அவன்?” என்றாள் சக்தி ஆர்வமாக. “ம்..... கார்த்திக் ….தி பாஸ்....இல்ல....மை பாஸ்” என்றாள் சந்தியா.

 “வாவ்...உன் பாஸா.... கார்த்திக் நைஸ் நேம். ஆளு எப்படி? விண்ணை தாண்டி வருவாயா கார்த்திக்கா? இல்லை அலைபாயுதே கார்த்திக்கா? “

என்ற சக்தியை இடைமறித்த சந்தியா,

“ம்.. மௌன ராகம் கார்த்திக். அவன் எப்படி இருந்தா உனக்கு என்ன? அதான் உன் ரூட் ஜெக ஜோதியா ரெண்டு பக்கமும் லைட் போட்ட ஹைவே மாதிரி கிளியரா இருக்கு.. ஆன்டி ஆக போற காலத்தில எதுக்குடி  இந்த வீண் ஆசை?” என,

சக்தி உடனே, “சைய்...உனக்கு என் எம்.எஸ்ஸே பெட்டெர். அவர்கிட்டே பேசிக்கிறேன்... ” என்று சொல்லி தனது போன்ஐ எடுக்க,

“சக்கு...உன் கால்ஷீட் இவ்ளோ பிசியா இருக்கும்ன்னு தெரியாம ஓட்டிட்டேன்டி...உன்கிட்ட சொல்லாமலா... நாமெல்லாம் அப்படியா பழகியிருக்கோம்???....அந்த ஹன்ட்சம்  கார்த்திக் பத்தி சொல்றேன்டி”,

என காலையில் இருந்து நடந்தவற்றை ஒன்று விடாமல் ஒப்புவித்தாள். அவள் கடைசியாக அந்த ஒப்பந்த பத்திரத்தில் ஒரு இலட்சம் அமெரிக்க டாலர்களுக்கு தன்னையறியாமல்  உத்திரவாதம் அளித்ததை   கேட்டவுடன் அதிர்ந்த சக்தியிடம், “சந்தியா யோசிக்காம பிரண்ட் ஆக மாட்டா...பிரண்ட் ஆகி விட்டு யோசிக்க மாட்டா. நான் கஷ்டபட்ட போது எனக்கு ஹெல்ப் பண்ணான். அவன் சகுனியாவே இருந்தாலும் என்  பிரண்ட் தான சக்கு?” என்று சொல்லியவாறே அவள் விரல்களால் கார்த்திக்கிற்கு ஒரு குறுஞ்செய்தியை போனில் தட்டிக் கொண்டிருந்தாள்.

“ஜந்து, அப்படி என்ன அவன் ஹெல்ப் பண்ணிட்டான்னு நீ இந்த ரிஸ்க்கை  எடுத்திருக்க?” என்று சந்தியாவிடம் வினவினாள் சக்தி.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.