(Reading time: 19 - 37 minutes)

06. என் இனியவளே - பாலா 

En Iniyavale

ளவரசன் வீட்டிலிருந்து வெளியே வந்த இனியா ஸ்வேதாவை அவள் வீட்டில் விட்டு விட்டு கிளம்ப எத்தனித்தாள். வழியில் இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை.

“அக்கா வீட்டுக்குள்ள வந்துட்டு போங்கக்கா” என்றாள் ஸ்வேதா.

“இல்லை. நான் இன்னொரு நாள் வரேன்.”

“அட்லீஸ்ட் நான் சொல்றதயாவது கொஞ்சம் கேட்டுட்டு போங்கக்கா.”

“இல்ல ஸ்வேதா. இப்ப ஏதும் பேச வேண்டாம். நான் உன் கிட்ட அப்புறம் பேசறேன்.” என்று கூறி விட்டு இனியா அங்கிருந்து கிளம்பினாள்.

னியாவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இளவரசன் பேசியதிலிருந்தே ஸ்வேதா தான் சந்தரின் காதலி என்பது அவளுக்கு விளங்கியது. ஸ்வேதா சின்ன பெண். அவள் என்ன செய்திருப்பாள். இவளை ஏன் இளவரசன் நச்சுப் பாம்பு என்றெல்லாம் சொல்ல வேண்டும் என யோசித்து அவளுக்கு தலை வலி தான் வந்தது.

வீட்டிற்கு இதற்குள் போனால் என்னவென்று கேட்பார்கள். அவர்களிடம் என்ன சொல்வது. அதை விட சிறிது நேரம் கழித்து போகலாம் என எண்ணி வழியில் இருந்த கோவிலுக்கு சென்றாள் இனியா. அவளுக்கு அந்த தனிமை தேவைப்பட்டது. சிறிது யோசிக்க வேண்டி இருந்தது.

அந்த முருகன் கோவிலுக்குள் சென்ற இனியா கடவுள் சந்நிதானத்தில் நின்று “கடவுளே இந்த விசயத்தில் என்ன செய்யணும்னு எனக்கு தெரியல. எனக்கு ஒண்ணுமே புரியல. எதாவது ஒரு வழி காட்டு கடவுளே” என வேண்டிக் கொண்டு வந்து குளக்கரையில் வந்து அமர்ந்தாள்.

இனியாவிற்கு யோசித்து யோசித்து தலை வலி தான் அதிகமானதே தவிர அவளால் ஒரு முடிவிற்கு மட்டும் வர இயலவில்லை.

இந்த ஸ்வேதா இன்று ஏன் வீட்டிற்கு வர வேண்டும். நான் ஏன் அவளை அழைத்துக் கொண்டு இளா வீட்டிற்கு போக வேண்டும் என எண்ணினாள்.

இது என்ன. நான் இன்னும் அவனை இளா என்று அழைக்கிறேன். அவன் என்னென்ன பேசினான். ஒரு பெண்ணை எந்த அளவுக்கு அவமதித்தான். அவனை போய் இன்னும் இளா என்று குறிப்பிடுவதை எண்ணி மானசீகமாக அவளே அவளுக்கு ஒரு குட்டு வைத்துக் கொண்டாள்.

ஸ்வேதா இன்னைக்கு என்று பார்த்தா அவ வண்டியை எடுத்துட்டு வராம போகணும். இவ வண்டியை எடுத்துட்டு வராம போனாலே நம்ம வீட்டுல அன்னைக்கு பிரச்சனை தான்.

சந்தருக்கு வேறு இப்ப எப்படி இருக்குனு தெரில. இளவரசன் ரொம்ப எமெர்ஜென்சினு சொன்னதுக்கு அப்புறமும் ஸ்வேதாவை கூட கூட்டிட்டு போனது என் தப்பு தான். அவளை மாமாவே கொண்டு போய் விட்டிருப்பார்.

இல்ல. மாமா கூட்டிட்டு போய் இருந்தா வீட்டுல இன்னைக்கு ஒரு பிரளயம் தான் வந்திருக்கும். இந்த அக்கா ஏன் இவ்வளோ பொசசிவா இருக்காளோ. மாமா வேற பொண்ணுங்கள பைக்ல கூட்டிட்டு போன இந்த அளவுக்கு கோப படுறா. ஆனா என்ன மாமா கூட்டிட்டு போன ஒன்னும் சொல்றதில்லையே. அது ஏன்? நான் அவ தங்கச்சி தானேன்னு ஒன்னும் சொல்றதில்லையா இல்ல ஸ்வேதாவை தான் அக்காக்கு பிடிக்கலையா.

இந்த அக்கா மட்டும் ஒன்னும் சொல்லாத மாதிரி இருந்தா நான் ஸ்வேதாவை கூட்டிட்டே போய் இருக்க மாட்டேன். இந்த அக்காவை தான் சொல்லணும் என்று நினைத்துக் கொண்டே போனவள் என்ன இது ஏதோ பிரச்சனைக்கு நான் என் அக்காவை எல்லாம் குத்தம் சொல்றேன்.

அக்கா மேல எந்த தப்பும் இல்ல. ஸ்வேதா வந்ததோ, அவளை நான் கூட்டிட்டு போனதும் தப்பு இல்லை. எல்லாம் இளவரசன் மேல தான் தப்பு.  சந்தர் ஒரு மாதிரி இருக்கான். உடனே வர முடியுமான்னு எல்லாம் சொல்லிட்டு வீட்டுக்குள்ள கூட விடல. அவன் மேல தான் எல்லா தப்பும். நான் ஏன் இதுக்கு என் பேமிலி மெம்பெர்ஸ குறை சொல்லணும்.

சந்தர் ஏதோ பேஸன்ட்டா வந்தான். அவன் மூலமா அவன் வீட்டுல இருக்கறவங்க பழக்கமானாங்க. ஏதோ நல்லவங்கனு நானும் நினச்சேன். இப்ப அப்படி இல்லைன்னு தெரிஞ்ச உடனே அவங்க பழக்கம் வேண்டாம்னு விடணுமே தவிர நம்ம வீட்டுல இருக்கறவங்கள குறை சொல்லக் கூடாது என்று முடிவு செய்து கொண்டு வீட்டிருக்கு கிளம்பினாள் இனியா.

இப்போதைக்கு வீட்டில் ஏதும் சொல்லக் கூடாது என்று முடிவு செய்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் இனியா.

னியா எப்போதுமே அவள் தாயிடம் ஓரளவு எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வாள். இன்று எதையும் சொல்லக் கூடாது என்று முடிவு செய்ததால் அவளால் அவர்களை பார்த்து நார்மலாக பேச இயலவில்லை.

இனியா வீட்டிற்குள் நுழைந்ததுமே “வா இனியா வந்து சாப்பிடு. சப்பாத்தி தான் செஞ்சிருக்கேன். வா” என்று அழைத்தார் லட்சுமி.

“இல்லம்மா. எனக்கு பசியே இல்லை. எனக்கு வேண்டாம்மா.”

“உனக்கு பிடிச்ச சப்பாத்தி தானே டா செஞ்சிருக்கேன். ஒரு ரெண்டு சப்பாத்தி சாப்பிடு டா” என கெஞ்சினார் லட்சுமி.

“இல்லம்மா. எனக்கு சுத்தமா பசி இல்லை.”

“சரி விடு. நான் கொஞ்சம் பால் மட்டுமாச்சும் எடுத்துட்டு வரேன். அதாவது குடி. ரொம்ப வீம்புடி உனக்கு. சொன்னா சொன்னது தான். சொல்ற எங்களுக்காகவாவது கொஞ்சம் சாப்பிடனும்னு எல்லாம் கிடையாது என்று சொல்லிக் கொண்டே சமையலறைக்குள் சென்றார்.

இனியா மாடியில் அவள் அறைக்குள் சென்று முகம் கழுவிக் கொண்டு இருந்தாள். அதற்குள் லட்சுமி இனியாவை அழைத்தார்.

“என்னம்மா என்றுக் கேட்டுக் கொண்டே இனியா கீழே விரைந்தாள்.”

“சீக்கிரம் வாடி. உனக்கு தான் போன். நான் வேற பால் கேஸ்ல வச்சிட்டு வந்திருக்கேன்” என்று சொல்லிக்கொண்டே இனியாவிடம் போனைக் கொடுத்துவிட்டு சமையலறைக்கு விரைந்தார்.

“ஹலோ” என்றாள் இனியா.

மறுமுனையில் யாரும் பேசவில்லை.

“ஹலோ”

“ஹலோ”

சிறிது நேரத்திற்கு பிறகு “வீட்டுக்கு பத்திரமா போய்டியானு தெரிஞ்சிக்கறதுக்காக தான் போன் பண்ணேன்” என்று இளவரசனின் குரல் கேட்டு இனியாவால் பேச முடியவில்லை.

பின்பு சமாளித்துக் கொண்டு “வீட்டிற்குள்ளே விடாமல் வெளியே துரத்தியவர்களுக்கு இப்ப புதிதாக என்ன அக்கறை வந்து விட்டது” எனக் கேட்டாள்.

“இனியா இப்படி பேசாதே. நான் உன்னை வெளிய துரத்தனும்னு எல்லாம் நினைக்கல”

“ஆமா. நீங்க அப்படி எல்லாம் நினைக்கல. பட் அப்படி செயல்ல செஞ்சி காண்பித்து விட்டீர்கள்.”

“ப்ளீஸ் இனியா. நாம அத பத்தி பேச வேண்டாம்.”

“ஓகே. நாம எத பத்தியும் பேச வேண்டாம். இப்ப எதுக்கு தேவ இல்லாம போன் பண்ணீங்க.”

“எதுக்குன்னு உனக்கே தெரியும்.”

“ஓ. உங்க தம்பிய எங்க ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருந்தீங்க. அதுக்கு மேலவும் என் ஹெல்ப் வேணும்னு கேட்டீங்க. இப்ப நீங்களே அது வேண்டாம்னு சொல்லிடீங்க. அதுக்கு அப்புறம் என் கிட்ட பேச உங்களுக்கு ஒன்னும் இல்லயே மிஸ்டர்”

“அப்படியா.”

“ஆமா அப்படி தான்.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.