(Reading time: 13 - 26 minutes)

05. நினைக்காத நாளில்லை ரதியே - ஸ்வேதா 

Ninaikkaatha Naalillai rathiye

"காப்பர் பெயிண்ட் வாங்கிட்டு வந்திரு மீரா, அப்போ தான் கல்யாணதுக்கு முன் இந்த போட்டோ பிரேம் முடிக்க முடியும்" காலேஜ் கிளம்பும் மீராவிடம் சொன்னாள் கீர்த்தனா .

 

வாகனம் செலுதிக்கொண்டே  மனம் தானாக  “சீக்கிரம் அதை முடித்து திருமணத்தன்று பரிசாக கொடுத்து அசத்த வேண்டும்."என்று குதுகளித்தது. கூடவே அங்கே மகேந்திரனை பார்க்க நேருமே என்று மனம் நெருடியது . ஆனாலும் நாளை சாப்பிட போகும் இனிப்பை இன்று எண்ணி எதிர்பார்க்கும் சிறுபிள்ளை போல் மனம் துடித்தது.

 

அந்த போட்டோ பிரேம்  ராதை கிருஷ்ணா காதலுடன் ஊஞ்சலில் அமர்ந்து இருக்க பின்னால் ஒரு மரம் அதில் இதய  வடிவில் கொஞ்சம் இடம் அங்கே புகைப்படம் வைத்து கொள்ளலாம்.அது  முழுக்க முழுக்க கவியும் மீராவும் செராமிக் பௌடர், பெவிகால், பேப்பர் வொர்க்   கலந்து செய்தது. 

 

வண்டியை செலுத்தி கொண்டே தன் கைவினை பொருளை பற்றி யோசித்தவளுக்கு எதிரே தவறான வழியில் வரும் லாரி நெருங்கி வந்த பின்தான் உணர்ந்தாள். உணர்ந்த நிமிடம் பெரிதாய் விபத்தை தவிர்க்கும் பேர்வழி என்று ரோட்டில் இருந்து மண்தரையில் விட. வண்டியின் வேகம் கட்டுபடுத்த முடியாமல் போக.சரிந்து கால் மடித்து விழுந்து மயங்கினாள். பின் என்ன நடந்தது யோசிக்க முடியவில்லை ஹாஸ்பிடலில் படுத்திருந்த மீராவிற்கு. முழித்து பார்த்த போது ஹரிணி தான் கூட இருந்தாள். கால் கனமாய் இருந்தது அசைக்க முடியவில்லை.

 

போட பட்டிருந்த பைன் கில்லெர் மாத்திரையால் திரும்பவும் தூங்கி போனாள். அரை மயக்கத்தில் மனம் மகேந்திரன் தான் காப்பாற்றினான் என்று உறுதியாக சொல்ல.கண்விழித்த நேரத்தில் ஹரிணி மட்டும் இருந்ததில் குழம்பி போனது.

 

விழுந்ததும் வேகமாய் மீ..ரா  என்று மஹி ஓடி வந்து தூக்கி நிறுத்தினான். நிற்க முடியவில்லை என்று அவள் அழவும் கால் கட்டை விரல் வீங்கி விட்டதை பார்த்த உடன் அவளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஹாஸ்பிடலில் சேர்த்தான். கட்டை விரலில் தசை நார் கிழிந்து இருக்கிறது என்று அதற்க்கு டாக்டர் சிகிச்சை பார்த்தார்.வலி பொறுக்காத மீராவிற்கு டாக்டர் மயங்க இன்ஜெக்சன் போட, மஹியால் வலியில் துடிக்கும் மீராவை பார்க்க முடியவில்லை. பாதி மயக்கத்திலும் மீரா “முடியல கவி”,”வலிக்குது கவி” என்று வலி பொறுக்காமல் அவன் கையை பிடித்து கொள்ள மஹிக்குள் இதயம் கனத்தது.கவிதாவை அவள் மனம் தேடுகிறது என்று அவனுக்கு புரிந்தது. சராய்ப்பு இருக்கும் இடெமெல்லாம் நர்ஸ் டெட்டொல் இட்டு சுத்தம் செய்ய மகேந்திரன் உதவி செய்தான்.விழுந்த மீரா முகத்தை கீழே கொடுத்தால் கன்னமெல்லாம் சராய்ப்பு இருந்தது.

மீராவை தன் மேல் சாய்த்துக்கொண்டு முகத்தில் கழுத்தில் உள்ள காயங்களை சுத்தம் செய்ய உதவினவனுக்கு மீராவின் கழுத்தில் உள்ள மெல்லிய சங்கலியில் அந்த இதயம் பெண்டெண்ட் பார்த்ததும் மகழ்ச்சி தாளவில்லை.

 

து அவன் காலேஜ்  கடைசி வருடம் ஐ.ஐ டி யில் இன்ஜினியரிங் டிசைன் போட்டியில் வென்ற கேஷ் ப்ரைசில் வாங்கிய தங்க முலாம் பூசிய வெள்ளி பெண்டெண்ட். மீராவின் பிறந்த நாள் பரிசு என்று பெயர் சொல்லி அவன் கொடுத்தது.

 

கண் முழித்து மீரா வேறு மாதிரி பேசினால் தாங்க முடியாது.தெளிவான பின் அவன் ஒருவன் இருப்பது போலவே காட்டி கொள்ளாமல் தன் வேலையில் மூழ்கும் மீராவை அவனால் சகித்துக் கொள்ள முடியாது. வீட்டிற்க்கு வந்த அந்த இரவு அவள் அப்படி அவன் இருப்பது போலவே காட்டிக்காமல் நரேனிடமே வம்பு இழுத்தது இன்று பூதாகராமாக தெரிந்தது. அலட்சியம் கொடுமையான தண்டனை.அதுவும் நேசிக்கும் உயிரின் அலட்சியம் மிகவும் கொடியது.அதை விட சிறந்த தண்டனை உலகில் வேறு எதுவுமே இருக்க முடியாது. மீராவிற்கு அபாயம் என்று எதவும் இல்லை உறுதிப் படுத்திக் கொண்டு ஹரிணிக்கு போன் செய்தான்.

 

"அண்ணி உங்க ப்ரெண்ட் மீராக்கு ஆக்சிடென்ட் ஆயிற்கு"

 

"அய்யோ!!!" உடைந்த குரலில் ஹரிணி 

 

மஹி "கவலை பட ஒன்றும் இல்லை, சின்ன காயம் தான், சீக்கிரம் வாங்க எனக்கு கம்பனியில் வேலை இருக்கு " என்று அவசரம் போல் காட்டி பேசினான்.

 

"இதோ கிளம்பிட்டேன் என்று ஹரிணி பதற"

 

மஹி "கவி கவி என்று முனங்கிட்டே இருகாங்க அவங்களையும் கூட்டிட்டு வந்திடுங்க என்று சொல்லி போன் கட் செய்தான்.

 

வி எதுவானாலும் பதற மாட்டாள்.பொறுமையாய்  பிரச்சனையை பற்றியே கவலை படாமல்  அதற்க்கு தீர்வை தேடுபவள்.  பிறர் நலனில் அக்கறை கொண்டவள்.  அதவும் ஹாஸ்பிடல் என்றாலே கிலோமீட்டர் கணக்கில் ஓடும் மீராவை கவிதாவால் மட்டும் தான் அடக்க முடியும்.

 

பின் தூங்கிக் கொண்டிருந்த மீராவின் அருகில் சென்று அவள் தலையை கொஞ்ச நேரம் வருடிகொண்டிருந்தான். செதுகிய சிற்பம் போல் குழந்தை தனம் மறையாத முகம், வெளிர் நிறம், அடிபட்டிருப்பதால் செவந்து போயிருந்தது, எடுப்பான மூக்கு,அதற்க்கு அழகு சேர்க்க மூக்குத்தி."இது உனக்கு நல்லாவே இல்லை என்றால் ஆஆங்… என்று கழுத்தை மேல் நோக்கி பார்த்து யோசித்து  என் அப்பாவிற்கு பிடிக்குமே என்று சொல்லுவாள்.” அகலமான நெற்றி, வில் போல் வளைந்த புருவம், ஒப்பனையே தேவையில்லாத முகம். கடிகாரம் ஹரிணி வரும் நேரம் என்று எச்சரிக்கை காட்ட  வலிக்காமல் இதமாக நெற்றியில் இதழ் பதித்து  கனமான மனதுடன் ஹாஸ்பிடலிருந்து வெளியேறினான். 

 

மீராவை வீட்டில் சந்தித்ததிலிருந்து பார்க்காமல் இருக்க முடியவில்லை மஹிக்கு, அதனால் அவள் காலேஜ் போகும் வழியில் சந்தேகம் வராதவாறு நின்று பார்த்து விட்டு தான் செல்வான். சில நேரம் பின் தொடர்ந்தும் செல்வான். அதனால் தான் அவள் விழுந்ததும் காப்பற்றினான்.

 

"நதிங் ப்ரொப்லெம்” என்று மருத்துவர் சொல்லியதால் அடுத்த நாள் மாலையே மீரா பிளாட்ற்க்கு வந்தாயிற்று. நடந்த சம்பவம் கேட்ட உடன் அங்கே வாசுதேவனும் சந்திரமதியும் வந்து சேர்ந்தனர்,மகளின் பாராமுகம் தாயை வதைக்க,அன்பான கணவன் தன் பெண்ணுக்கு ஆபத்து என்று ஏதும் இல்லை என்று உறுதி செய்துக்கொண்டு தன்னால் முடிந்தவரை பெண்ணுக்கு அறிவுரை சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். கனத்த மனதுடன் கிளம்பிய தாயை பார்க்க மீராக்குள் "இப்படி உன்னையும் கஷ்டபடுத்திக் கொண்டு மற்றவர்களையும் கஷ்டபடுத்துகிறாயே மீரா" என்று மனம் நொந்தது.

மீராவுக்குள் பல கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. பல வர்ணங்களில் கொடுக்க பட்டிருந்த மாத்திரைகள் அவளை யோசிக்கவே விடாது தூங்க வைப்பதிலே இருந்தது. கவியும் கீர்த்தனாவும் மாற்றி மாற்றி  நேரம் பார்த்து பார்த்து மாத்திரை என்றும் உணவுஎன்றும்  வேலைக்கு விடுபெடுத்து விட்டு  உபசரித்தனர்.

ஓய்வே இல்லாது இரவு தூக்கம் வர வேண்டும் என்று ஓடி ஓடி வேலை செய்த மீராவிற்கு சும்மா ஓர் இடத்தில் அமர்ந்து இருக்க முடியவில்லை. பாதியில் விட பட்டிருந்த அந்த போட்டோ பிரேமை 

அழகாய் செய்து முடித்தாள். உட்கார்ந்தப்படியே செய்ய கூடிய வேலையெல்லாம் செய்தாள். இன்னும் பல கை வினை பொருட்கள் செய்தாள். இணையத்தில் அவள் செய்யும் ஆராய்ச்சிக்கு தேவையான விவரங்களை சேகரித்தாள்.அவள் ஆராய்ச்சிக்கு ஒரு என்.ஜி.ஓ (NGO) உதவி புரிவதாக முன்னும் வந்தது,அதை ஏற்றாள்.

 

உப்பு மற்றும்  தாது நிறைந்தது கடல் நீர். அதை குடி நீராக மற்ற வழிகள் இருக்கின்றன.அதை ஏற்கனவே அமெரிக்காவில் ஆராய்சியாளர்கள் கண்டும் பிடித்துள்ளனர்.ஆனால் அதை செயல்படுத்த செலவுஅதிகம். அதை இந்தியாவில் நடைமுறை படுத்த வேண்டும் என்றால் இந்தியாவின் தற்போதைய கடன் இன்னும் மூன்று மடங்காய் பெருகும். குறைந்த செலவில் தண்ணீராய் மாற்றும் வழியை தான் மீரா ஆராய்ச்சி செய்துக்கொண்டு இருக்கிறாள்.  பதினாறு வயதில் விழுந்த விதை இந்த ஆராய்ச்சி. அதனால் தான் இன்ஜினியரிங் படிப்பிலும் கெமிக்கல் இன்ஜினியரிங் எடுத்து படித்தாள்.இப்போது அதே துறையில் முதுகளை படித்து க்கொண்டு இருக்கிறாள்.

 

இந்த ஆக்சிடேன்ட் மீராவிற்கு ஒரு விதத்தில் உதவி செய்தது.ஹரிணி திருமண  பர்ச்சேஸ் கூட வந்தே ஆகனும் என்று அடம் பிடிக்கவில்லை. போயிருந்தால் இரு வீட்டாரும் சேர்ந்து சென்று வாங்கும் இடத்தில் மூன்றாம் மனுஷியாக இவள் இருந்திருப்பாள்.சங்கடத்தில் நெளிந்து இருக்க வேண்டும்.மகேந்திரனும் வந்தான் என்றால் அவ்வளவு தான்.சும்மாவே அவனை பார்த்தால் இதயம் இருமடங்காய் துடிக்கிறது. சுயகெளரவம் வாட்டி வதைக்கிறது. அவன் பார்வையில் ஏளனம் தெரிகிறது.நாய் குட்டிப் போல் என் பின்னால் சுற்றுபவள் தானே நீ என்று கேட்பது போல் இருக்கிறது.இதிலிருந்து தப்பிக்க தான் இது நடந்ததோ என்று இருந்தது மீராவிற்கு.

 

ஹாஸ்பிடலில் ஏன் அப்படி செய்தோம். முத்தம் தப்பல்ல தான்.ஆனால் சுயநினைவே இல்லாத பெண்ணிற்கு அவள் அனுமதி இல்லாமல் கொடுத்தது தப்போ??? என்றிருந்தது மகேந்திரனுக்குள். 

 

தோழனாய் தட்டி கொடுத்திருக்கிறான்,ஊசி போட்டுக்க மாட்டேன் என்றவளை தோள் அழுத்தி பிடித்து அரவணைத்து இருக்கிறான், அழுபவளை கண்ணங்களில் வழியும் கண்ணீரை துடைதிருக்கிறான்.அங்கே தோழமை மட்டும் தான் இருந்தது. மீறி சொல்ல தெரியாத உணர்வு இருந்த போதும் அது இப்படி தப்பாய் செய்ய தூண்டியதில்லை. மற்றவர் கிண்டல் அவனை பாதித்ததும் இல்லை. அதை அலட்சியம் செய்ததாலா  காதலில் இப்படியும் ஒரு உணர்ச்சி உண்டு என்று அவனுக்கு தெரியாமல் போனதா.!!  “நான் சொன்னால் கேட்பாள் மீரா என்ற அந்த உணர்வு தான் இருந்தது.” மீராவிற்கு ஏன் அடிப்பட்டது என்றிருந்தது மஹிக்குள். வலிக்கிறது என்று அவள் அவன் மீது சாய்ந்து வலியால் அவன் சட்டையை கசக்க நொறுங்கியது இதயம்.

 

நினைக்க நினைக்க இந்த நிமிடமே மீரா இங்கு வேண்டும் என்று இருந்தது மஹிக்குள்.அவள் எப்படி இருக்கிறாள் என்று கூட  தெரிந்துகொள்ள முடியாமல் தவித்தான் மஹி.மாத்திரை வாசனை நல்லா இல்லை,கசப்பா இருக்கு என்று தட்டி கழிப்பாலே இப்போ கவியை என்ன பாடு படுத்துகிறாளோ என்று எந்நேரமும் மீராவையே சுற்றிக்கொண்டிருந்தது எண்ணம்.

 

அவன் போராட்டங்களை திசை மாற்ற என்று சூரியாவிற்கு பிரசவ வலி எடுத்து மருத்துவமனையில் சேர்க்க ப்பட்டாள். மீராவை அவன் சேர்த்த அதே மருத்துவமனையில்.!! சூரியா வலியில் துடிக்க அவள் கணவன் நரேஷ் அவள் கையை பிடித்துக்கொண்டு தேற்றும் விதமாக பேசிகொண்டிருப்பதை பார்க்க மஹியால் அங்கே மீராவை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.