(Reading time: 17 - 33 minutes)

09. என் இனியவளே - பாலா 

En Iniyavale

னக்கு பதில் சொல்லாமல் நீ இங்கிருந்து செல்ல முடியாது இனியா” என்ற இளவரசனின் வார்த்தைகளே இனியாவின் காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அதற்கு பதில் தான் சொல்ல இயலவில்லை.

இதை பற்றி அவள் எண்ணிப் பார்க்கவில்லை என்றும் சொல்ல இயலாது. ஆனால் இப்போதே அவசரப்பட்டு அவள் ஏதும் சொல்லவும் விரும்பவில்லை. அவளுக்கு நிஜமாகவே யோசிக்க வேண்டி இருந்தது.

“கையை விடுங்கள் இளா”

“நீ எனக்கு பதில் சொல்லாமல் விடபோவதில்லை இனியா” என்றான் சிரித்துக் கொண்டே,

“என்ன நீங்கள், இப்படி செய்கிறீர்கள். ஒரு பெண்ணிடம் இவ்வாறு நடந்துக் கொள்வது தவறு என்று உங்களுக்கு தெரியாதா” என்று கொஞ்சம் கோபமாகவே கேட்டாள்.

இளவரசன் ஒரு நிமிடம் திகைத்தான், பின்பு அதை சமாளித்துக் கொண்டு “அது நீ சொல்வது போல் வேறு யாரோவாக இருந்தால் பரவாயில்லை. இங்கு நீ ஒன்றும் யாரோ அல்லவே” என்றான்.

“நாம் இன்னும் எதையும் சரியாக பேசிக் கொல்லாத நிலையில் நீங்கள் இப்படி செய்வது எனக்கு தவறாக தான் தோன்றுகிறது.”

இனியாவின் கையை அவன் விட்டு விட்டான்.

நிஜமாகவே இளவரசனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இனியாவிற்கு தன் மேல் விருப்பம் என்பது அவனுக்கு தெரிந்து தான் இருந்தது. அதுவும் அவள் அவனுக்காக இன்று வந்ததே அதற்கு சாட்சியாக இருக்கிறது. ஆனால் அவள் ஏன் இப்படி பேசுகிறாள்.

“என்ன இனியா ஏன் இப்படி பேசுகிறாய்”

“பின் எப்படி பேச வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்”

“ஏன் இனியா உன் கையை பிடிப்பதற்கு எனக்கு உரிமை இல்லையா”

“அந்த உரிமையை நான் உங்களுக்கு கொடுக்கவில்லை என்பது தான் இங்கு முக்கியமான விஷயம்”

“அதை பற்றி பேசலாம் என்று தான் நான் இப்போது உன்னிடம் கூறிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீ தான் அதற்கும் வழி விடாமல் ஏதேதோ தேவை இல்லாமல் தர்க்கம் செய்துக் கொண்டிருக்கிறாள்.”

“ஓ” என்று இனியா பெரு மூச்சை விட்டாள்.

“ஓகே. இனியா. நான் நேரடியாக விசயத்திற்கு வருகிறேன். நான் உன்னை விரும்புகிறேன், நீ என் வாழ்க்கை துணையாக வர வேண்டும் என விரும்புகிறேன், இப்போது எனக்கு பதில் சொல்” என்றான்.

“இதை பற்றி பேசுவதற்க்கு முன்பு நான் யோசிக்க வேண்டும் என்று தான் சொல்கிறேன்”

“இதில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது இனியா. எனக்கு தெரியும் உனக்கு என் மேல் விருப்பம் தான் என்று. அது நீ என் மேல் எடுத்துக் கொள்ளும் அக்கரையில் இருந்தே தெரிகிறது. பின்பு இதற்கு பின்பும் நீ யோசிப்பதற்கு என்ன இருக்கிறது.”

“இதில் உங்களுக்கு யோசிப்பதற்கு ஒன்றும் இல்லாமல் போகலாம். ஆனால் எனக்கு யோசிப்பதற்கு நிறையவே இருக்கிறது. இது சரியா, இது ஒத்து வருமான்னு எல்லாம் நான் யோசிக்கணும்” என்றாள்.

இளவரசனுக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை. “என்ன சொன்னாய், இது சரியா, இது ஒத்து வருமா என்று யோசிக்க வேண்டுமா” என்று கிட்டத்தட்ட அவன் குரல் கர்ஜித்தது.

“நான் உன்னை விரும்பிகிறேன், உனக்கும் என் மேல் விருப்பம் என்று எனக்கு தெரியும். நம் விருப்பத்தை பற்றி பேசி முடிவெடுக்கலாம் என்று கூறினால் இது ஒத்து வருமா என்று யோசிக்க வேண்டும் என்று கூறுகிறாயே, இதை நீ யோசித்து தான் சொல்கிறாயா”

“ஆம் நான் யோசித்து தான் சொல்கிறேன். எதையும் யோசிக்காமல் ஓகே. என்று சொல்லிவிட்டு பின்பு ஒத்து வரவில்லை என்று பிரிந்து விடும் டீன் ஏஜில் நான் இல்லை. எனக்கு எல்லாவற்றையும் யோசித்து தான் செய்ய வேண்டும்.”

“என்ன சொன்னாய். ஒத்து வரவில்லை என்றால் பின்பு பிரிந்து விடும் எண்ணம் எல்லாம் இருக்கிறதா? இன்னும் ஓகே. என்று கூட சொல்ல கூடவில்லை. அதற்குள் என்ன எல்லாம் பேசுகிறாய்.” என்று பொரிந்தான்.

“நான் சொல்வதை முதலில் புரிந்துக் கொள்ளுங்கள். நான் அப்படி சொல்லவில்லை. எனக்கு கொஞ்சம் யோசிக்க வேண்டும் என்று தான் சொன்னேன் இளா”

“இளா இளா இதற்கு மட்டும் ஒன்னும் குறைச்சலில்லை. நான் என் விருப்பத்தை சொன்ன பிறகு அதை ஏற்று கொள்ளவில்லை. அதை பற்றி யோசிக்க வேண்டும் என்கிறாய். பிறகு என் பெயரை சுருக்கி இந்த இளா மட்டும் எதற்கு, எந்த உரிமையில் என் பெயரை இளா இளா என்கிறாய்.”

“இது வரை என் பின்பு எத்தனை பேர் சுற்றி வந்திருப்பார்கள் தெரியுமா? நான் யார் பின்பும் சென்றதில்லை. இந்த இருபத்தி ஏழு வயதில் எந்த பெண்ணையும் நான் திரும்பி பார்த்ததில்லை. அப்படி பட்ட நான் உன்னிடம் நானாக வந்து பேசவும் உனக்கு என் காதலின் மதிப்பு தெரியவில்லை என்று நினைக்கிறேன்.”

“எனக்கு இதற்கு ஒன்றுக்கு மட்டும் பதில் சொல். என் மேல் அப்படி விருப்பம் இல்லாதவள் எதற்கு எனக்கு தினமும் மெசேஜ் செய்ய வேண்டும், நான் கூப்பிட்டவுடன் இங்கு ஏன் வர வேண்டும். அதை வைத்து தானே உனக்கு என் மேல் விருப்பம் என்று எண்ணி நான் என் மனதை உனக்கு சொன்னேன். என்ன நினைவில் இங்கு வந்தாய். இதை வைத்து நான் உன்னை என்னவென்று எண்ணுவது”

“இல்லையேல் சில பெண்கள் சும்மா பார்ப்பதற்கும் பேசுவதற்கும் மட்டும் கம்பெனி கொடுத்து விட்டு இந்த கமிட்மென்ட் என்று வந்தால் பின் வாங்குவார்களே நீயும் அப்படி பட்டவளோ என்னவோ, நான் தான் எதுவும் தெரியாமல்” என்று அவன் பேசி முடிப்பதற்குள் இனியா இடைமறித்தாள்.

“போதும் நிறுத்துங்கள். இதற்கு மேல் எதுவும் பேசாதீர்கள். எதுவும் பேசாதீர்கள்” என்று சொல்லும் போதே அவள் கண்ணில் தண்ணீர் அருவியாய் கொட்டியது.

“வாய் இருக்கிறது என்று எது வேண்டுமானாலும் பேசாதீர்கள். உங்களுக்கு இப்படி பேச என்ன தைரியம். ஏதோ நான் உங்களை காதலித்து ஏமாற்றியதை போல் என்னிடம் கோபமாக பேசுகிறீர்களே. எந்த உரிமையில் என்னை இவ்வளவு கீழ்த்தரமாக பேசுகிறீர்கள்.”

“ஒரு பிரண்ட்ஷிப்ல கூட நான் உங்க கிட்ட பழகி இருக்கலாம்.  உங்களுக்கு மெசேஜ் பண்ணது, நீங்க இங்க கூப்பிட்டதுக்கு வந்தது, இதெல்லாம் வச்சி எப்படி சார் நீங்க என் கேரக்டர் பத்தி தப்பா பேசலாம். உங்களுக்கு யார் அந்த உரிமையை தந்தது. அதெல்லாம் உங்கள பிரண்டா நினைச்சி நான் செய்ய கூடாதா.”

“உங்க வீட்டுக்கே வந்து உங்க தம்பிக்கு கவுன்செல்லிங் கொடுத்த போது கூட நான் உங்ககிட்ட இருந்து விலகி தானே போனேன். நீங்க தானே என் கிட்ட வந்து வந்து பேசனீங்க. இப்ப என்னை இப்படி பேசறதுக்கு உங்களுக்கு வெட்கமாயில்லை.”

“அப்படி என்ன சார் நான் தப்பா சொல்லிட்டேன். ஓகே. நான் ஒத்துக்கறேன். நான் வெறும் பிரண்டா நினைச்சி உங்க கிட்ட பேசல. அதுக்கும் மேல ஏதோ ஒன்னு நமக்குள்ள இருக்கறதா நானும் பீல் பண்ணேன். அதுக்குன்னு நீங்க என்ன லவ் பண்றேன்னு சொன்னவுடனே நானும் விரும்பறேனு சொல்லிடனுமா. ஏன் எனக்கு யோசிக்கறதுக்கு எதுவுமே இருக்காதா. ஒரு பொண்ணுன்னா அவளுக்கு எவ்வளவு ரெஸ்பான்சிபிலிட்டி இருக்கும்னு தெரியுமா.”

“உங்களுக்கு கூட பிறந்த அக்கா தங்கச்சி யாரும் இல்லை. அதான் உங்களுக்கு ஒரு பொண்ணுக் கிட்ட எப்படி பேசனும்னு தெரியலை. உங்க தங்கச்சி கிட்ட யாருனா இப்படி பேசினா சும்மா இருப்பீங்களா. உங்களுக்கு என்ன பத்தி என்ன தெரியும்னு இப்படி பேசனீங்க.”

“பராயில்லை. எல்லாம் நல்லதுக்கு தான். உங்களை பத்தி தெரிஞ்சிக்கறதுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு தான். நீங்க எவ்வளவு பெரிய பணக்காரரா இருக்கலாம், உங்க பின்னாடி ஆயிரம் பொண்ணுங்க சுத்தி வந்திருக்கலாம். அதுக்காக எல்லாம் நான் நீங்க சொன்ன உடனே ஓகே.ன்னு சொல்லிடனுமா. உங்க பணம், படிப்பு, அழகு இதை எல்லாம் தாண்டி குணம் ரொம்ப முக்கியமாச்சே.” 

“நான் யோசிச்சி சொல்றேன்னு தான் சொன்னேன். ஆனா இப்பவே எனக்கு எல்லாம் நல்லா புரிஞ்சிடுச்சி. இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க. உங்க கிட்ட அந்த குணங்கறது சுத்தமா சரி இல்லை. இப்படி குணம் சரி இல்லாத நீங்க எனக்கு தேவை இல்லை.”

“போறதுக்கு முன்னாடி ஒன்னே ஒன்னு சொல்லிட்டு போறேன். உங்க முன்னாடி இருக்கறவங்களுக்கு மனசுன்னு ஒன்னு இருக்கும். அந்த மனசால நீங்க பேசறத எல்லாம் கேட்டு தாங்கிக்க முடியாது. மனுஷன்னா எதிருல இருக்கறவங்களை கஷ்ட படுத்தாம இருக்கணும். அவன் தான் மனுஷன். நான் என்ன சார் சொல்லிட்டேன். அப்புறம் யோசிச்சி சொல்றேன்னு சொன்னேன். அது ஒரு தப்பா. எனிவே இப்படி தான் உங்க குணம்ன்னு இப்பவே தெரிஞ்சதுக்கு நான் தான் கடவுள் கிட்ட நன்றி சொல்லணும். நான் வரேன். இல்ல இல்ல சாரி போறேன். இனி உங்களை என் லைப்ல மீட் பண்ணக்கூடாதுன்னு நினைக்கிறேன்” என்று சொல்லி விடுவிடுவென்று கிளம்பி சென்று விட்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.