(Reading time: 8 - 16 minutes)

01. நினைத்தாலே  இனிக்கும்... - Prishan

ninaithale Inikkum

காலை சூரியன் தன் வேலையை தொடங்கிய நேரம்...
சென்னை,பெசன்ட் நகரில் அமைந்த ஆடம்பரமான அந்த பங்களா...இல்லை இல்லை மாளிகை பரபரப்பாக இருந்தது...

நுனுக்கமான வேலைபாடமைந்த மரகத நிற படிகளில் மிடுக்காக  இறங்கி வந்தார் ஞாணபிரகாஷ் , சென்னையின் மிகச்சிறந்த அறுவை சிகிச்சை நிபுனர்  மற்றும் பிரகாஷ் என்டர்பிரைசஸின் எம்.டி..

அவர் கீழே வந்த பொழுது டைனிங் ஹால் வெரிச்சோடி இருந்தது. கிச்சனில் பேச்சு சத்தம் கேட்டது, அங்கு சென்று பார்த்த போது, தன் ஒரே மகன் சந்திரபிரகாஷ்  கிச்சன் மேடையில் கால் ஆட்டிக் கொண்டே அம்மா நளினி தந்த தோசைகளை கபளீகரம் பண்ணிக்கொண்டிருந்தான்...எப்பொழுதும் போல் பார்வை தன் மகனின் கம்பீரமான தோற்றத்தை வருடியது, சிரிக்கும் போது மின்னிய கண்களின் வசீகரத்தில்  பெருமிதம் கொண்டது..ஆனால் எல்லாவற்றையும் நிமிடத்தில் மறைத்து,கடுகடுவென்று அவன் முன் வந்தார்

" எத்தன தடவ உங்கிட்ட சொல்றது...டைனிங் ஹால்ல தான் சாப்பிடனும்னு., வீட்ல இத்தன ஸர்வன்ட்ஸ் எதுக்கு இருக்காங்க...எதுக்கு அம்மாவை கஷ்டப்படுத்துர...யு ஆர் ரிடிகுலஸ்..." இறைந்து விட்டு மறைந்தார்..

ஒருகனம் இறுகிய அவன் முகம்.. தன் தாயின் கண்களில் சஞ்சலம் தெரியவும்,  இளகி கண்களில் குறும்புடன்
"அம்மு( தன் அம்மாவை செல்லமாக இப்படித்தான் அழைப்பான்) எப்படி நீ இந்த ஹிட்லர சகிச்சிக்கிற?..

"டேய், அடி வாங்கப் போற ,உங்கப்பா இயல்பிலே நல்லவர்டா...ஆனா?.."

" ஆனா..என்ன சொல்லப்போற..ஏன் இப்படி நடந்துகிறார்னு தெரியலடா...அதான?..போம்மா எப்டி தான் இவர் சர்ஜன் ஆனாரோ தெரியல...இவர பார்த்தாலே கடுப்பா வருது.."என்றான்

நளினி தன் மன வருத்ததை மறைத்து " நீ  சீக்கிரமே அவர பத்தி சரியா புரிஞ்சுப்ப" என்று கூறி புன்னகைத்தார்..

சந்துரு தன் அம்மாவையே ஒரு  நிமிடம் பார்த்தான்.பின்பு தலையை உலுக்கிக் கொண்டு, பழைய புன்சிரிப்புடன் " பாரு அம்மு இப்டி உன்கிட்ட பேசிட்டே சாப்ட்டா எப்டி இருக்கு...அத விட்டுட்டு ஸர்வன்ட் கையால சாப்பட சொல்ரார்...என்னதான் சொல்லு உன் கைப்பக்குவம் யார்க்கும் வராது...ஆஹா பேஷ் பேஷ் ரொம்ப நல்லார்க்கு..."என்றான்

அவனை தோசை கரண்டியாலே செல்லமாக ஒரு அடி போட்டு "பாப்போம்டா... இன்னும் எத்தனை நாளைக்குனு ..உனக்குனு ஒருத்தி வருவால்ல அப்பவும் இதையே சொல்ரியான்னு பாப்போம்.. "என்றார் நக்கலுடன்.

"அவளை கிச்சன் பக்கம் விட்டாதான,அவள என்கூடவே வச்சுப்பேன் ?.."சந்துரு

" டேய்...!!"

"அச்சோ அம்மா நீ ரொம்ப மோசம்... அவளுக்கு இதோ இந்த பக்கத்து சீட்டு ரிசர்வ்டு..அப்பவும் நீ தான் செஃப்...வேணுனா அவள மத்த எல்லா வேலையும் செய்ய  சொல்லலாம்...எப்டி " என்று கேட்க அதற்கு அவர்

" எல்லாம் நேரம்டா...நீ.சொல்ர வேலைய பாக்க நம்ம முத்தம்மா போதும்டா பிரபு .. "என்றார்

"அப்படியா சொல்ர..ok அப்போ நீயே பேசி, முத்தம்மாவை கரக்ட் பண்ணி கொடு.." என்று கூறி வம்பிலுத்தான்.அவரும் சளைக்காமல்

" அதுசரி.,அவங்க வீட்டுகாரர்ட்ட பெர்மிசன் கேட்டியா?," என்றார்

"ஓ..அப்படி ஒன்னு இருக்கில்ல..எதுக்கு வம்பு,நீயே உன்னமாதிரியே இருக்க ஒரு பொண்ணா பாப்பியாம்..ஐயா ஜாலியா கட்டிப்பேனாம்" என்றான்.

அவன் என்னவோ விளையாட்டாகத்தான் கூறினான்..ஆனால் இதை கேட்ட அவன் தாயின் கண்கள் மின்னியது.( காரணம்.அப்பறம் சொல்றேன் )..அதை கண்டும் காணாதது போல,அம்மாவின் கன்னத்தில் இதழ் பதித்து "பாய்ம்மு" எனறு கூறி கூலர்ஸ்,ஹெல்மெட் சகிதம் தன் ராயல் என்ஃபீல்டில் பறந்தான்,சென்னையின் பிரபலமான பல் மருத்துவ கல்லூரியில் ஃபைனல் இயர் படிக்கும் பிரபு என்று தன் தாயால் செல்லமாக அழைக்கப்படும் சந்துரு என்கிற சந்திரபிகாஷ்.

அவன் கண்ணைவிட்டு மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தவர்..இவன் எல்லோரிடமும் இப்படி இயல்பாக பேசி சிரித்தால் எவ்வளவு நன்றாக  இருக்கும் என்று நினைத்து பெருமூச்சு விட்டபடி திரும்பினால், அவர் கணவர் அவரையே பார்த்தப்படி
" எதுக்கு பெருமூச்சு, பாரு எத்தனை கார் இருக்கு..எல்லாத்தையும் விட்டுட்டு பைக்ல போறான் .." என்று சலித்துக்கொண்டார்..
அவரை தீர்க்கமான ஒரு பார்வை பார்த்தார் நளினி .கணவர் உடனே சரண்டர் ஆகி " ஓ.கே நான் ஹாஸ்பிடல் போறேன்,ஒரு சர்ஜரி கேஸ் இருக்கு.." என்று நளினியின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு சென்றார்..இவருக்கும் ஒரு பெருமூச்சை விட்டு தன் வேலையை பார்க்கச் சென்றார் நளினி.

துரை அருகே.,திருமங்கலம்...

பாரம்பரியமிக்க பெரிய வீடு..பழமை மாறாமல் பாதுகாத்து வருகிறார் பாஸ்கரன்..பல சுற்றுக்களைக்கொண்ட அந்த வீட்டில் ,ஒரு காலத்தில் ( எதுக்கு வீட்டுக்கெல்லாம் flashbackனு தான கேக்குறீங்க, சொல்றேன்..இந்த வீடு தான்  ஹீரோவையும்,ஹீரோயினயும் பிரிக்கும் நம்பியார்,அதான்பா வில்லன் ) கலகல வென பேச்சும் சிரிப்பும் கேட்டுக்கொண்டே இருக்கும்..அவர்கள் பெரியதனக்காரர்கள் ஆதலால் எப்போதும் சமையலும் பந்தியும் நடந்துகொண்டே இருக்கும்..ஆனால் இப்பொழுது அங்கு இருப்பது இரண்டே ஜீவன்கள் தான்..பாஸ்கரன் மற்றும் அவரது உயிரான ஒரே மகள் 'நந்திதா' ...இதோ அவளும் தன் தந்தையை விட்டு சென்னை செல்லப்போகிறாள்.

" நந்து கண்ணு...எல்லாத்தையும் மறக்காம எடுத்து எடுத்து வச்சிட்டியாடா?"

"ம்...வச்சிட்டேன்ப்பா..இல்லாட்டியும் என்ன அங்கதான் கேம்பஸ்க்குள்ளயே supermarket இருக்கு எல்லாமே கிடைக்கும்னு சொன்னீங்களே.." பேசிக்கொண்டே தன் அப்பாவை பார்த்தவள்,அவர் தன் பேக்கையே வெறித்து பார்பதை கண்டு..

"அப்பா இப்பவும் ஒண்ணும் ஆகலை..நான் இங்கயே.. "மேலே பேசப் போனவளை தடுத்தவர்

" இல்ல கண்ணு, இதில எந்த மாத்தமும் இல்ல.. "என்றார்

"அதுக்குனு சென்...னைக்கு போனுமா..மதுரைலயே டென்டல் காலேஜ் இருக்கேப்பா.."நந்து

"நந்துமா நீ என்கூடயே எவ்ளோ நாளைக்கு இருக்கமுடியும்...தூரமா போனா தான உலக நடப்பு எல்லாம் தெரியும்..நாம படிக்கிறது அறிவை வளர்கிறதுக்கு மட்டுமில்லடா,தன்னம்பிக்கையை வளர்கிறதுக்கும் தான்..தைரியமா எல்லா சூழ்நிலையையும் சமாளிக்கனும் கண்ணு" என்று கூறியவர் தன் மகள் இன்னும் தெளியாததை கண்டு
"அப்பா எப்போமே உன் நல்லதிற்கு தான செய்வேன் கண்ணு?"என அழுத்தமாக கேட்டார்.

" ஏன் இந்த கேள்விப்பா" என்றவள் தன் தந்தையை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.பாஸ்கரனும் அவள் தலையை தடவிக்கொடுத்தார்.என்னதான் மகளை சமாதானப்படுத்தினாலும்,அவளை பிரியப்போகும் ஏக்கத்தில் கண்கள் கலங்கியது.

ஆயிற்று, எல்லா லக்கேஜையும் டாக்சியில் ஏற்றி நந்துவும் அவள் அப்பாவும், அதிகாலையிலயே மதுரையை தான்டியாயிற்று. தன் அப்பாவை திரும்பி பார்த்தவள்,அவர் தீவீர யோசனையில் இருப்பதை கண்டு,அதை கலைக்காமல் தன் போக்கில் எண்ணத்தை ஓட்டினாள்..பத்து வயதில் தன் தாய் ஒரு விபத்தினால் மறைந்தது நிழல் போல ஞாபகம் வந்தது..அதிலிருந்து அவளுக்கு எல்லாமே அவள் தந்தைதான்.அவளின் சுகம் தவிர வேறெதும் யோசிக்கத் தெரியாதவர். அவரைவிட்டு பிரிவது இதுதான் முதல் முறை..நினைக்கும் போதே சோகம் பந்தாய் தொண்டையை அடைத்தது..கஷ்டப்பட்டு கண்ணீரை உள்ளிழுத்து..எண்ணத்தின் போக்கை மாற்ற காலேஜ் பற்றி யோசிக்க ஆரம்பித்தாள். ஒரு
பக்கம் பயமாகவும் ஒரு பக்கம் ஆர்வமாகவும் இருந்தது. எப்படி புது இடத்தில் பொருந்தப்
போகிறோம் என்று கலங்கினாள்( ம்க்கும்...நீ இன்னும் என்ட்டரே ஆகலியே..இருட்டுனாலே பயப்படும் நீ..அங்க கெடாவர்(deadbody) பார்த்து எப்படி டர்....ஆக போறியோ..)

டாக்சியைவிட எண்ணங்கள் வேகமாய் பயணித்தாலும்,அவர்கள் மாலை 6மணி அளவில்
காலேஜ் கேம்பஸிர்க்குள் நுழைந்து., 1km அளவில் உள்ளே சென்றவுடன் இடது ஓரத்தில்  ஹாஸ்டல் இருந்தது. போகிற வழியில் எல்லாம்  பச்சை பசேல் என்ற புல்வெளியும், அழகாக பராமரிக்கப்பட்ட கார்டனும் கண்களை நிறைத்தது. நந்திதாவிற்கு அந்த இடம் மிகவும் பிடித்தது.பார்க்கும் போதே அவள் மனதின் சஞ்சலம் குறைந்தது.

கேட்டில் security காரை நிறுத்தி விசாரித்தார். நந்திதா ஃபஸ்ட் இயர் பி.டி.எஸ் எனவும், இன்டர்காமில் வார்டனிடம்  பேசிவிட்டு அவர்களிடம் வந்தார்.
"சார் இது முதல் தடவை என்பதால் நீங்க உள்ள போலாம்..ஆனா வராண்டாவுடன் நின்னுடனும்..லக்கேஜை இறக்கிட்டு 7.30குள்ள திரும்பிடனும்"

கார் ஹாஸ்டலின் முன்னே சென்று நின்றது..நந்து ஹாஸ்டல் பில்டிங்கைப் பார்த்து மலைத்து நின்றாள்..பின்னே..நான்கு அடுக்குகளை கொண்ட அந்த பில்டிங் ஸ்டார் ஹோட்டலை போல் இருந்தது. முன்னாடி சதுரமாக பெரிய வராண்டா ,அதில் நிறைய டேபில்,சேர் அதில் சிலர் கையில் கப்புடன் பேசிக்கொண்டிருந்தனர்.ஒரு பெரிய டி.வியும் இருந்தது.

"நந்துமா ஹாஸ்டல் புடிச்சிருக்காடா?" அப்பாவின் கேள்வியில் நிகழ்வுக்கு வந்தவள்.."ம்.." என்று
தலையாட்டினாள்..

" நீதான் நந்திதாவா?" கரகர குரல் ஒன்று கேட்டது.
"ஆமா" எனவும் " வணக்கம் சார், நா இந்த ஹாஸ்டல் இன்சார்ஜ். நந்திதா உனக்கு 46ஆம் நம்பர் ரூம் அலாட் ஆயிருக்கு..உன் லக்கேஜை வச்சிட்டு வாம்மா..சார் நீங்க போககூடாது..'ஆயாம்மா...' என்று குரல் கொடுத்தார் ஆஜானுபாகுவான வார்டன். ஆயாம்மா வரவும் "நீங்க இதெல்லாம் எடுத்துட்டு போய் 46ஆம் ரூம்ல வச்சிட்டு வாங்க" என்றார். பின் நந்துவிடம் " நீயும் போய் பார்த்திட்டு வாம்மா" என்றபடியே உள்ளே சென்றார்.

சிறிது நேரம் கழித்து கீழே வந்த நந்து "ரூம் நல்லார்க்குப்பா...ஆனா ரூம்மேட் யாருன்னு தெரியலை.."

7மணி ஆகியதும்.,நந்துவிடம் சிறு பதற்றம் தோன்றவே அவள் கைகளை ஆதரவுடன் பற்றிக்கொண்டர் பாஸ்கரன். அங்கு நடந்ததை எல்லாம் இரு ஜோடி விழிகள் கவனித்தது . அவள் தந்தையும் கலங்குவதைக் கண்டு ,கண்களுக்கு உரிய இரண்டு பேரும் அவர்களை நெருங்கி

"ஹலோ ப்பா.. நான் அனு, இது ஆரு..நாங்களும் ஃபஸ்ட் இயர் தான்..உங்க நந்துமாவைப்பற்றி
கவலையே படாதீங்க..நாங்க பாத்துக்கறோம். உங்க வண்டி நம்பரை பாத்தா மதுரைபக்கம் மாதிரி தெரியிதே..?"

"ஆமா கண்ணு திருமங்கலம்"

" நாங்களும் மதுரைதான்ப்பா, அப்றம் என்ன கவலையை விடுங்க சந்தோஷமா போய்ட்டு வாங்க...உங்க நந்து இனி எங்க பொறுப்பு.." என்று விடாமல் பேசி அவரை புன்னகைக்க வைத்தாள் அனு(வாய் மூடாம பேசறதுன்னா அனுக்கு அல்வா சாப்பிடர மாதிரி).. ஆரு புன்னகையுடன் நந்துவின் கைகளை பிடித்துக்கொண்டாள்.

அனுவின் பேச்சில் பாஸ்கருக்கு கொஞ்சம் கவலை அகன்றது..மகள் சந்தோஷமாக இருப்பாள் என்ற நம்பிக்கை வந்தது..மேலிம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு..,நந்துவின் அருகே வந்து உச்சி முகர்ந்து,அவள் கண்கள் கலங்குவதைக் காண முடியாமல் சட்டென்று விடைபெற்றார்.

கண்களில் கண்ணீரோடு, கார் தன் கண்ணைவிட்டு மறையும் மட்டும் கையாட்டியபடி இருந்த நந்துவிடம் திரும்பிய அனு கண்களை உருட்டியபடி " ஏய்...பட்டிக்காடு, வசமா மாட்டிக்கிட்டியா..உன்ன என்ன பண்ணலாம்?..எதிலர்ந்து ஸ்டார்ட் பண்ணலாம்?"..ஒற்றை விரலை நெற்றியில் தட்டி யோசிக்க...நந்து பார்வையில் பயம் மின்னியது...

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 02

நினைவுகள் தொடரும்...  

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.