(Reading time: 27 - 53 minutes)

14. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

Yeppa pei mathiri irukka

லி பொறுக்காமல் அவனை அழைத்தாள். “கார்த்திக், ஐ ஆம் சாரி...” என்று தன் நிலையை விவரிக்க வந்தவளை, “ஹே...பழச பத்தி பேசாம சியர் அப் அண்ட் பி ஹப்பி வள்ளிக்கண்ணு...நிம்மதியா தூங்கனும் சரியா?” என்றான் மென்மையாக.

“ம்...ஆனா....” என தயக்கத்துடன் சொல்ல வந்தவளை  “என்னை நம்ப மாட்டியா” என ஏக்கக் குரலில்  கார்த்திக் கேட்ட, “ம்.....சகுனிய எப்படி நம்புறது?” என பொய்யாக அலுத்துக் கொண்டாள்.

“ஹ..ஹா” என சிரித்தவன், “வள்ளிக்கண்ணு, உனக்கு பில்லோ ஹக் லாஜிக் தெரியுமா?” என கேட்க,

“தெரியாது. அப்படின்னா?” என சந்தியா பதில் கேள்வி கேட்க,

“நான் சொல்ற படி செய். உன் லேப்டாப், லைட் எல்லாம் ஆப் பண்ணிட்டு பெட்க்கு போய் தலைகாணியை உனக்கு பிடிச்சவங்களை நினச்சு கட்டி பிடிச்சுக்கோ “ என கட்டளையிட்டான்  கார்த்திக்.

“..இதுல என்ன லாஜிக் இருக்கு?” என கிண்டலாக கேட்டு  முடிக்கும் முன்  அவன் சொன்னதை செய்து முடித்திருந்தாள்.

“என்ன லாஜிக்ன்னா ஒரு சாப்ட் டச்சோட மேலோடியசா ஏதாவது கேட்டுகிட்டே தூங்குனா மைன்ட் ரிலாக்ஸ் ஆகி நல்லா தூக்கம் வரும்” என்று விவரித்தான் கார்த்திக்.

“அது சரி...ஆனா எதுக்கு யாரையாவது மனசுல நினைக்க சொன்னேங்க” என சந்தியா கேட்க,

“நீ யாரை நினைச்சேன்னு சொல்லு...நான் ஏதுக்கு சொன்னேன்னு சொல்றேன் “ என்றான் கார்த்திக்.

“நான் குண்டக்கான்னா நீங்க மண்டக்கான்னு சொல்றதே வேலையாகி போச்சு பாஸ் உங்களுக்கு” என்றாள் .

“ஏய் பேச்சை மாத்தாத...யாரை நினச்ச?”- கார்த்திக்.

“நான் தான் முதல்ல கேள்வி கேட்டேன். நீங்க  பதில்  சொல்லுங்க நான் சொல்றேன்” - சந்தியா.

“சும்மாவே புளியங் கொம்பை விட்டு இறங்க மாட்ட. இப்போ பீக் டைம் வேற கேட்கவா வேணும்?? அதுனால உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம் ...இந்த விஷயத்தை அப்படியே விட்டுட்டு அடுத்த ஸ்டெப்பை பாப்போம். பில்லோ ஹக்கோட இப்போ லைவ்வா ஒரு மேலோடி கேட்டுட்டு பிடிச்சிருக்கான்னு சொல்லு” என்று சொல்லி விட்டு தொண்டையை செருமி விட்டு “வெண்ணிலவே  வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா” என பாட ஆரம்பித்தான்.

இது இருள் அல்ல அது ஒளியல்ல

இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்.....

தலை சாயாதே விழி மூடாதே

சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும் ….

பெண்ணே........ பெண்ணே......

பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே....

புல்லோடு பூமீதும்  ஓசை கேட்க்கும் பெண்ணே.....

நாம் இரவின் மடியில் பிள்ளைகளாவோம்.....”

“பாலூட்ட நிலவுண்டு.....”, என இனிமையாக பாடியவன், ஒரு நொடி  இளைப்பாறி விட்டு ,

“பிடிச்சிருக்கா?” என கேட்க,

அவளோ, “” - பின் மெய்மறந்து போனாளே.... மின்சார கனவில் மூழ்கித்தான் போனாள்...

கார்த்திக், “ஹே சந்தியா... தூங்கிட்டியா” என அவளிடம் இருந்து பதில் வராததால் சந்தேகத்தில் கேட்க, இப்போது தான் மயக்கத்தில் இருந்து விடுபட்டவளாய் “ம்....என்ன....ம்....ஆ....ம்ம்...மா ” என உளறினாள்.

அவனோ சந்தியா நிஜமாகவே தூங்கி விட்டாள் என, “ஹும்...இம்ப்ரஸ் பண்ண கஷ்டப்பட்டு பாட்டு பாடுனா...இப்படி கும்பகர்ணியாட்டம் தூங்கிகிட்டு இருக்க “ அலுத்துக்கொண்டான்.

இப்போது தெளிந்து விட்ட சந்தியாவிற்கு அவன் நொந்து கொள்வதை அறிந்து சிரிப்பு வர, “பாஸ், நீங்க அரவிந்த்சாமி லுக்ல இருந்தாலும், மின்சாரக் கனவு பிரபுதேவா மாதிரி பாடி சூப்பரா  ட்ரை பண்ணீங்க... இந்த பாட்டை கேட்டு மயங்க நான் அந்த பாட்டில வர்ற கஜோல் இல்ல பாஸ்....ஆனா உங்க வாய்ஸ் ரெம்ப ரெம்ப நல்லாயிருந்தது. இப்படியே நீங்க தினமும் நைட் எனக்கு பாடினா நல்லா தூக்கம் வரும்..” என கிண்டலடிக்க, “வரும்...வரும்...ஏன் சொல்ல மாட்ட...நல்லா தூங்கிகிட்டு இருந்தவனை எழுப்பிவிட்டு நீ இதுவும் சொல்லுவ, இன்னமும் சொல்லுவ. ஹும்...... இனி பாடுனா வொர்க் அவுட் ஆகாதுன்னு நினைக்கிறேன்...ரூட்டை மாத்த வேண்டியது தான் ” என்றான் கார்த்திக்.

சந்தியா “பாஸ் ...இந்த ரூட் போடுற விசயத்தில முன்அனுபவம் இல்லாம முன்னேற முடியாது...இதுக்கு ஒரு பார்முலா இருக்கு - சி 4 செலக்ட் 3 லவ் 2 மேரி 1 ன்னு.....நீங்க பழுத்த பழனியப்பா. உங்களுக்கு ஒத்து வராது. மைக் மோகன் மாதிரி பாட்டே பாடுங்க ... அனுதாப அலையாவது வீச சான்ஸ் இருக்கு “

“அப்போ பாடினா அனுதாபப்பட்டு எனக்கு ஓகே சொல்லிடுவ?...எப்படின்னா என்ன? ..எனக்கு, என் பேய் இறங்கி வந்தா போதும். வில் ட்ரை மை பெஸ்ட் ஸ்ஸாண்டி சுகர்” என்றான் அவளை மடக்க வழி கண்டு கொண்டது போல...

“என்ன சுகர், பிபீ ன்னு சொல்றீங்க? எனக்கு எந்த நோயும் கிடையாது..” என்றாள் சந்தியா சிலிர்த்துக் கொண்டு.

“ஹா...ஹா..” என சிரித்தவன், “ஹனின்னு  சொல்ல மாட்டேன்னு  உனக்கு வாக்கு குடுத்துட்டேனே...அதான் சுகர்ன்னு மாத்திட்டேன்...ஸ்ஸாண்டி சுகர்...கேச்சியா  இருக்குல்ல?...”, என்றான் கார்த்திக்

“கேவலமா இருக்கு. எனக்கு தூக்கம் வருது... உங்க மிட்நைட் மசாலாவை வேற யார்கிட்டயாவது அரைங்க... குட் நைட்”, சந்தியா.

“வள்ளிக்கண்ணு, உனக்கு சுகர், பிபீ இல்லாட்டினாலும், கொலஸ்ட்ரால் மட்டும் எக்கச்சக்கம்மா இருக்கு.  மிட்நைட் மசாலாவை நீ ஆரம்பிச்சு வச்சுட்டு என்னை சொல்லுறியா? நாளைக்கு நைட் இப்படி  போன் பண்ணு அப்புறம் இருக்கு உனக்கு கச்சேரி.....குட் நைட் “ என சவால் விட்ட படி விடை பெற்றான்.

அடுத்த நாள் காலை, ஆலிவ் பச்சை நிறை சுடிதாரை தேர்ந்தெடுத்தவளின்   சந்தன நிற மேனிக்கு அது நன்றாக பொருந்தி இருந்தது. அவளுடைய ஸ்கூட்டி முந்தைய நாளே சரி பார்க்கப்பட்டு வீட்டிற்க்கு வந்து விட்டதால், யோகா வகுப்பிற்கு அன்று தனது ஸ்கூட்டியையே எடுத்துச் சென்றாள்.  யோகா வகுப்பின் முன் வண்டியை நிறுத்தியவுடன் கார்த்திக்கின் அழைப்பு வர எடுத்தவுடன்,

கண் மூடி திறக்கும் போது கடவுள் ஏதிரே வந்தது போல

அடடா என் முன்னாலே அவளே வந்து நின்றாளே

குடையில்லா நேரம் பார்த்து கொட்டி போகும் மழையை போல

அழகாலே என்னை நனைத்து இது தான் காதல் என்றாலே  “

என்று கார்த்திக் போனில் பாட அதை கேட்டு அவள் ரகசியமாய் சிரிக்க, “வள்ளிக்கண்ணு, செம ப்ரைட்டா இருக்க...சூர்ய நமஸ்காரம் உன் முகத்தை பாத்தே பண்ணிடலாம் போல..” அவன் பேச்சு அவள் அருகிலும் கேட்க, போனை அணைத்து  விட்டு திரும்பியவள் “அய்யோ...இவன் நம்மை பாத்துட்டானா” என பயந்தவளாய், “சிட்டுவேசன் சாங் நல்லா சூஸ் பண்றீங்க பாஸ்” என்று சமாளித்தாள். பதிலேதும் பேசாமல் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான். “சூர்யனை  ரெம்ப நேரம் பாத்த கண்ணுக்கு நல்லதில்ல..வழி விடுங்க”  என்ற நேரத்தில் சக்தி வர, “இன்னக்கு பாருங்க கார்த்திக், உங்க சங்கத்து ஆளை என்ன வழி பண்றேன்னு” என பேச்சை திசை திருப்பினாள்.

அவள் சொல்வதை கேட்ட சக்தி “யாரடி அந்த புண்ணியவான்...அந்த காமெடியன் சிவாவா?...சூப்பர் ஜந்து” என உற்சாகத்தோடு சொன்னாள்  சக்தி, சிக்கப்போவது அவள் தான் என்று அறியாமல்.  

“உன்னை தாண்டி சொல்றேன் சக்கு மக்கு. காமெடியனை கூட மன்னிச்சிடுவேன்...கூட இருந்தே குழி பறிக்கிற உன்னை மாதிரி ஆளுங்களை மன்னிக்கவே மாட்டேன்டி. இன்னைக்கு என் படுத்தல நீ அனுபவிச்சே ஆகணும். “ என சந்தியா மிரட்ட, சக்தி கலவரத்தோடு “ஏய் ஜந்து...நேத்து பசி மயக்கத்தில ஏதோ உளறிட்டேன்...வேணும்னே சொல்லலை. எல்லாத்தையும் போட்டு வாங்கிட்டாருடி உங்க பாஸ்....நீ சொன்ன மாதிரி சகுனியே தான்டி” என்றாள் கார்த்திக்கை முறைத்த படி. “என்ன சக்தி, இதுக்கு போய் பயப்படுறீங்க...இவ ஏதாவது செஞ்சா என்கிட்ட சொல்லுங்க. நான் பாத்துக்கிறேன்” என கார்த்திக் சக்திக்கு வக்காலத்து வாங்க, சந்தியா சக்தியை முறைக்க, சக்தியோ மிரண்டவளாய் ,

“ஜந்து..என்னை முறைக்காதடி. எனக்கும் இப்போ கார்த்திக் சொன்ன ஸ்டேட்மென்ட்க்கும் எந்த சம்மந்தமும் இல்ல. “ என்றவள், கார்த்திக்கை பார்த்து,

“நான் இப்போ உங்கள்ட்ட ஹெல்ப் கேட்டேன்னா...இல்ல கேட்டேன்னான்னு கேக்குறேன். ஏற்கனவே சிக்க வைச்சது பத்தாதுன்னு இப்போ எனக்கு கொடி வேற தூக்கி சிக்கலை இன்னும் சிக்கலாக்குறீங்க. நான் பாவம்.... அழுதுடுவேன்“ என அழுது விடுவது போல அவனை கையெடுத்து கும்பிட்டாள்.

கார்த்திக் மிகுந்த அக்கறையுடன் சக்தியிடம், “ஹம்.....இப்படியே இருந்தா எல்லாரும் உங்களை மக்கு மக்குன்னு மண்டைல கொட்ட தான் செய்வாங்க. சொல்றதை சொல்லிட்டேன். இன்னைக்கு மட்டும் இல்ல என்னைக்கு நாளும் நீங்க வும்ன்னு ஒரு வார்த்தை சொன்னா...ஓடி வந்து நிப்பான் இந்த கார்த்திக். இன்னும் உங்ககிட்ட நிறைய பேச வேண்டியிருக்கு. அடுத்து நாம எப்போ மீட் பண்ணலாம்ன்னு சொன்னீங்கன்னா என்னோட காலேண்டர்ல நோட் பண்ணி வச்சுக்குவேன்” அவன் சொல்ல சொல்ல சந்தியா கோபத்தில் கொதிக்க, சக்தி பயத்தில் நடுங்கி கொண்டிருந்தாள்.

“எனக்கு தேதி குறிக்கிறதுல என்...ன.....அக்கறை.....என்...ன.....அக்கறை அதுவரைக்கு நான் இருந்தா பாக்கலாம். இப்போ நீங்க போறீங்களா ப்ளீஸ்” என்று அவனின் காலில் விழாத குறையாக சக்தி கெஞ்சினாள்...

அரைமனதாக தலையாட்டி கிளம்பிய கார்த்திக், மறுபடியும் சக்தியிடம் திரும்பி “அப்புறம்..” என ஆரம்பிக்க, “அப்புறம் சப்பரம் தான் …” என சக்தி அவனை அங்கிருத்து அப்புறப்படுத்துவதில் குறியாக இருக்க,

சந்தியாவிடம் திரும்பிய கார்த்திக், “கல்யாண பொண்ணு...ரெம்ப படுத்தாம விட்டுடு...சரியா..வள்ளிக்கண்ணு” என்று சக்திக்கு பரிந்துரை செய்து  விட்டு சக்தியிடம்,

 “கவலைப்படாதீங்க. நான் சொல்லிட்டேன்” என அவளை தேற்றினான்.

“ஹும்....அது தான் என் கவலையே...சொல்லாதீங்கன்னா விடவா போறீங்க...” என்றாள் சக்தி நொந்து போய்.

“போலீஸ் மேன்னோட பியான்சி இதுக்கு எல்லாம்  பயப்படலாமா???...” என்று தைரியம் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பியவன், மறுபடியும் சக்தியிடம் திரும்பினான்.

“அய்யோ...போய்யா இங்க இருந்து..இவன் படுத்தலுக்கு அவ படுத்தல் தேவல போலயே ...இன்னும் எத்தனை தடவை திரும்பி திரும்பி எரிமலை எப்போது வெடிக்கும்ன்னு  பீதிய கிளப்ப போறானோ” என மானசீகமாக கார்த்திக்கை திட்டிக் கொண்டே அவனிடம்

“இப்போ என்ன?” என  நொந்து போய் சக்தி கேட்க,

“ பூமாக்கா பர்ஸ்ட் நைட்ல சந்தியா பண்ண குறும்பை எனக்கு கண்டிப்பா சொல்லணும்..இப்போ கிளாஸ்க்கு லேட் ஆச்சு, போயிட்டு வந்து சொல்லுங்க. “ என  சொல்லிவிட்டு விடை பெற்றான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.