(Reading time: 7 - 13 minutes)

08. கரை ஒதுங்கும் மீன்கள் - அருணா சுரேஷ் 

 Karai othungum meengal

ன்னடா சொல்றே?...........நீயெல்லாம் ஒரு….தூ போடா....உன்னை ஃப்ரெண்ட்னு சொல்லவே எரிச்சலாயிருக்கு தயா……..இந்த மாதிரியெல்லாம் உனக்கு ஹெல்ப் பண்ணுவேன்னு நினைக்காதே…”

“இப்போ என்னடா புதுசாக் கேட்டுட்டேன்?........ஷைனிக்கு ஃபேஸ் புக் ஃப்ரெண்ட் ரெஃக்வெஸ்ட் அனுப்பி அவ கூடப் பழகி அவ என்னைப் பத்தி என்ன நினைக்கிறான்னு  கண்டு புடின்னு சொன்னேன்……இதிலென்னடா இவ்வ்ளோ பெரிய தப்புக் கண்டு புடிச்சுட்டே?”

“நீ அவ கூடவே வாழ்றேடா…… அப்பிடியிருந்தும் அவள் உன்னைப் பத்தி என்ன நினைக்கிறான்னு தெரிலைன்னா அதென்னடா வாழ்க்கை?”

“அப்பிடிதாண்டா நாங்க ரெண்டு பேரும் வாழ்றோம்………எங்ககிட்டேயிருந்த அந்த அன்யோன்யம் எங்கே போச்சுன்னு எனக்கே தெரிலை….வீட்லெயிருக்குறே நேரமெல்லாம் சண்டைதான்……”

“சண்டை அடிக்கடி எதுனாலே யாராலே ஆரம்பிக்கும்?”

தயா அமைதியாக இருந்தான்.

“உனக்கே சண்டைக்கு நீதான் காரணம்னு தெரிஞ்சதுனாலேதானே அமைதியாயிருக்கே?...............சொல்லு என்ன விஷயத்துக்காக சண்டை வரும்?”

“ நான் அளவுக்கு அதிகமா அவமேல அன்பு வச்சுருக்கேண்டா…….அதை அவ புரிஞ்சுக்க மாட்டேங்குறா….அவளைப் பொக்கிஷமா வச்சுக்கணும்னு நினைக்கிறேன்………..அவ அதைப் புரிஞ்சுக்காம ………….என்னை வெறுக்கிறா…”

“அட லூசு தயா…….இவ்வ்ளோ அன்பை வச்சுக்கிட்டு ….எப்படிடா அவமேலக் கோபப்பட முடியுது உன்னாலே?.....அவ மேல சோத்துத் தட்டை எப்பிடி விட்டெறிய முடியுது உன்னாலே……..”

“ஆமாடா …நான் லூசுதான்……அவகிட்டே காட்டமுடியாமல் கொட்டிக் கிடக்கிற அன்பையெல்லாம் இப்போ  ஆக்ரோஷமா  கோபப்பட்டு  எரிச்சல்பட்டு …அவ பேரைச் சொன்னாலே முகம் சுளிக்கிற அளவுக்கு அவ மேல எனக்கு வெறுப்பா இருக்குடா…….” என்று சொன்னவனின் முகம் பார்த்த தீபக்குக்குப் பயமாக இருந்தது அவனைப் பார்க்க.

“சரி   அன்பு வச்சுருக்கே…. ஆனா அதை எப்படி வெளிக்காட்டுறே?......... சோத்துத் தட்டைத் தூக்கியெறிஞ்சா?”

“நீ அதையே சொல்லாதடா தீபக்……அவ என்ன செய்தாலும் என் கிட்டே  கேட்டுச் செய்…அல்லது சொல்லிட்டாவது செய்னு சொல்றேன் ….வேறென்ன?”

“அந்த என்ன செய்தாலும்கிற லிஸ்ட்லே எதுவெல்லாம் இருக்கு?”

“எல்லாமேதான்…..”

தீபக் இதற்கு என்ன சொல்வதென்று அமைதியாக இருந்தான். தயா ஒரு எதிர்பார்ப்புடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

என்னடா ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறே?.............என்னைத்தானே   தப்பு  சொல்லப்  போறே?.......சொல்லு….சொல்லு…..” என்றன் தயா.

“அதில்லைடா…..” என்று இழுத்தான் தீபக்.

“என்னை யாரும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்கங்கறதுதாண்டா  என் கவலையே…….அவளும் சரி….நீயும் சரி…..அம்மாவும்தான்……அந்தத் தாடி  மாமாவும் சரி…………….யாரும் என்னை புரிய மாட்டேங்கிறீங்க…..”  என்றவன் புறங்கையால்  கண்ணைத் துடைத்துக் கொண்டு மூக்கை உறிந்தான்.   நிஜம்மாகவே  கண்கள்  நிரம்பியிருந்தது.

‘அவ்வ்ளோதான்  அழ ஆரம்பிச்சான்னா இன்னிக்கு முழுசும் அழுவானே…என்று பதறிய தீபக் அவனைச் சமாதானப் படுத்தும் விதமாக…….

“நான் புரிஞ்சுக்கிறேண்டா….. நீ எதுக்கு இப்போ அழுதுக்கிட்டு…..விடு…………சரி உன் கிட்டே பேசி உன் பக்கத்தைக் கேட்டாச்சி…….உன் வைஃப் கிட்டேயும் பேசி அவங்க பக்கத்தையும் கேட்டுக்கிறேன்…..அப்புறம் என்ன ஏதுன்னு பேசி உங்களைச் சேர்த்து வைக்க நானாச்சி ஓகேவாடா….?” என்றான்.

“அப்போ நீ என்னை நம்பலை …அப்பிடித்தானே ……அவகிட்டே   பேசிட்டு  அப்புறம்தான்   நான் சொல்றது உண்மைன்னு நம்புவே அப்பிடித்தானே…..ஓகேடா….. உன்னை நம்புனது என் தப்புத்தான்….” என்றவாறு  சடக்கென்று எழுந்து கொண்டான்…..வேகமாகக் கையை நீட்டி தீபக்கின் கையைக் குலுக்கி " பார்க்கலாம்டா.........பை.........." என்றவாறு   விடு விடுவென்று  வாசலை நோக்கி நடந்தான்.

தீபக் ரெண்டு தடவை “தயா  நில்லுடா…” என்று கூப்பிட்டும்  அவன் போகவே ‘போகட்டும் ‘  என்று  விட்டு  விட்டான். பில்லுக்குப் பணம் கொடுத்து விட்டு  வெளியே வந்து மணி பார்த்தவன் ‘ இப்போ போனாக்கூட  ஹாஃப் டே தான் கவுன்ட் ஆகும் என நினைத்துக் கொண்டே ஆஃபீஸுக்குக் கிளம்பினான்.

ழை விட்டு விட்டு சாரலாகப் பெய்து கொண்டிருந்தது. ஈர மணலில் கால் புதையப் புதைய  நடந்து கொண்டிருந்தார்கள் கீர்த்தியும்  கீர்த்தியின் அம்மாவும். கீர்த்தி வீட்டில் கீர்த்தியும் அம்மாவும் மட்டும்தான். கீர்த்தி அப்பா  ரெண்டு வருடம் முன்புதான்  திடீரென்று  ஹார்ட் அட்டாக்கில் இறந்து போய் விட்டார். கீர்த்தி ரொம்ப தைரியசாலி அம்மாவை  அப்பாவின் இழப்பு தெரியாமல்  கவனித்துக் கொள்வாள்.

வேலை முடிந்து  வரும் போது அம்மா சோகமாக இருந்தால் போதும் எவ்வளவு அசதியாக இருந்தாலும்  பக்கத்திலேயிருக்கும் அஷ்டலக்ஷ்மி கோவிலுக்குக் கூட்டி வந்து அதையொட்டியிருக்கும் பீச்சுக்குக் கூட்டி வருவது வழக்கம்.  கீர்த்தி அம்மாவிடம் ஷைனியைப் பற்றி எல்லா விஷயத்தையும் சொல்லியிருந்ததால்  அன்று  ஷைனி அழுததையும்  முந்தைய தினம் நடந்ததையும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“அந்தப் பொண்ணு பாவம்தான்……இப்பிடிக் கஷ்டப் படுகிறதே……நீ ஆறுதலாயிரும்மா கீர்த்தி……ஷைனி வீட்டுக்கு வந்து ரொம்ப நாளாகிறதே………வரச் சொல்லும்மா…மனசுக்கு ஆறுதலாயிருக்கும்…….”

“நானும் கூப்பிட்டுக்கிட்டேதாம்மாயிருக்கேன்………அவர்கிட்டே பெர்மிஷன் வாங்குறதுக்குள்ளே போதும் போதும்னு ஆகிரும்னு சொல்றாம்மா…..”

“இந்தக் காலத்துப் புள்ளைங்க நல்லது கெட்டது தெரியாம இப்பிடிப் போய் விழுந்து….இப்போ பாரு பெத்தவங்களுக்கும் கஷ்டம்…..அதுங்களும் நிம்மதியாயில்லாம மத்தவங்களையும் கஷ்டப் படுத்துதுங்க………….”

“எல்லாப் புள்ளைகளையும் சொல்லாதீங்கம்மா……”

அதுசரி….நல்ல புள்ளைங்களும் இருக்கத்தான் செய்யுது……..உன்னை மாதிரி……….ஏன் கீர்த்தி  நீ யாரையும் அப்பிடி இப்படி விரும்பலையே.?.....” என ஏதேச்சையாகக் கேட்டார்கள்

“நல்லவேளைம்மா…நீங்க இப்போவாவது கேட்டீங்களே………நானும் ஒருத்தரை உயிருக்குயிரா விரும்பறேன்…..” என்றவாறு ஓரக்கண்ணால் அம்மாவைப் பார்த்தாள் கீர்த்தி.

அம்மா எதுவும் பேசாமல் மௌனமாக  கடமையே கண்ணாக மணலை எடுத்துச் செல்வதும் திரும்பிக் கொண்டு வந்து போடுவதிலும் கவனமாக இருக்கும் அலைகளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அம்மாவின்  வேர்த்த  முகம்  பார்த்த கீர்த்தி பதறியபடி……”நான் அப்பிடிச் செய்வேனாம்மா……..சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்மா……அதுக்குள்ளே இப்பிடியாகிட்டீங்களே….என்னை நம்புங்கம்மா…..நான் உங்க பிள்ளைம்மா……ஒருநாளும் அப்பிடி ஒரு வலையில் விழ மாட்டேன்…போதுமா….?”’

அம்மா ஆனாலும் பதற்றத்துடனே கீர்த்தியின் கைவிரல்களை இறுகப்  பற்றிக் கொண்டார்கள். கொஞ்ச நேரம் இருவருமே பேசிக் கொள்ளவில்லை.

“சரி …நேரமாகுதேம்மா ….வீட்டுக்குப் போவோமாம்மா…” என்றவாறு எழுந்துகொண்டாள்  கீர்த்தி.

அம்மா அமைதியாகவே வந்தார்கள். கீர்த்தியும் அம்மாவிடம் இந்த விஷயத்தில் விளையாடியிருக்கக் கூடாது என்று  நினைத்தாள்.

அம்மா திடீரென்று கீர்த்தியின் தோளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ….முகம் வேர்த்துக் கொட்ட  உடல் பதற…” கீர்த்தி அம்மாவுக்கு ரொம்ப நெஞ்சு வலிக்குதும்மா…….என்னாலே நடக்கமுடியவில்லை……கீர்த்தி"      என்றவாறு  கீழே மயக்கமுற்று விழுந்து விட்டார்கள்.

கீர்த்திக்கு ஒரு நிமிடம் எதுவும் புரியவில்லை. அம்மாவை இறுகப் பிடித்துக் கொண்டாள்….”அம்மா….அம்மா …”என்று உலுக்க ஆரம்பித்தாள். கைப்பையிலிருந்து தண்ணீர் பாட்டிலைத் திறந்து தண்ணீரை  முகத்தில் தெளித்தாள். அடுத்து என்ன செய்ய என்று நினைப்பதற்குள் கூட்டம் வேறு கூடிவிட்டது.

அம்மாவை எழுப்ப நினைத்து முடியாமல் தூக்க முயன்று முடியாமல் திணறிக் கொண்டிருக்க……..கூட்டம் ஆளாளுக்கு ஒன்று சொல்லிக் கொண்டிருந்தது உதவ முன்வராமல்.  திடீரன அந்த இளைஞன் முன்னால் வந்தான் . அப்படியே  இரு கைகளாலும் அம்மாவை ஏந்திக் கொண்டு  ஒரு ஆட்டோவை அழைத்து அதில் ஏற்றி விட்டு கீர்த்தையயும் அதில் ஏறச் சொல்லி விட்டு லைஃப் ஓகே ஹாஸ்பிடலுக்குப் போகச் சொல்லி விட்டு “ நீங்க அம்மா கூடப் போங்க………..நான் பின்னாலே வர்றேன்…….”  என்றவாறு பைக்கைக் கிளப்பினான்.

அந்த இளைஞன் வேறு யாருமில்லை  தீபக்தான்…  

தொடரும்

Karai othungum meengal - 07

Karai othungum meengal - 09

{kunena_discuss:678}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.