(Reading time: 11 - 22 minutes)

02. நினைத்தாலே  இனிக்கும்... - Prishan

ninaithale Inikkum

னுவை பயத்துடன் பார்த்த நந்து " நீங்க  ஃபஸ்ட் இயர் இல்லையா ?, சீனீயரா ?"  என்றாள்.

   "ஆமா " என்று அனுவும், "இல்லை" என்று ஆருவும் ஒரே நேரத்தில் சொன்னார்கள். நந்து குழப்பமாக பார்க்கவும்,

"நாங்களும் ஃபஸ்ட் இயர் தான் நந்து, அனு உன்ன சும்மா பயமுறுத்துறா.." என்று ஆரு கூறும் பொழுதே,

" இல்ல, நான் நிஜமாவேதான்..."என்று சொல்லவந்த அனுவை, ஆரு ஒரு பார்வை பார்க்க 
" ஓ.கே ஒ.கே..." என்று  உதட்டை சுழித்து  பேச்சை நிறுத்தினாள்.

" டிராவல் பண்ணது டயர்டா இருக்கா நந்து?..ரூம்க்கு போய் பேசலாமா?" என்று ஆரு கேட்க, அப்பொழுதுதான் தன்னை சுற்றிலும் நடப்பதைப் பார்த்தாள் நந்து, அந்த ஹாலில் அமர்ந்திருந்த அனைவரும் புதுவரவான தன்னையே சுவாரஸ்யமாக பார்ப்பதைக் கண்டு,

" ரூம்க்கு போலாம்" என்றாள்.

றைக்கதவை திறந்ததுமே ,வெளியே இருந்த மகிழ மரத்தின் வாசனை நாசியை நிறைத்தது.ஆருவும் , நந்துவும் ஆழ மூச்செடுத்து அதை ரசித்தனர்.அதைப் பார்த்த அனு " போச்சு, இதுவும் அதே கேசா " என்று தலையிலடித்துக் கொண்டாள். ஆருவும், நந்துவும் ஒருவரைப் பார்த்து ஒருவர் புன்னகைத்துக் கொண்டனர். 
அந்த அறை இரண்டு பேர்களுக்கு ஆனதால் , பெட்,டேபில், சேர்,கப்போர்ட், ஷெல்ப், எல்லாமே இரண்டிரண்டாக நல்ல வசதியுடன் இருந்தது. மூவரும் பேசிய படியே நந்துவின் பொருட்களை அதற்குரிய இடத்தில் அடுக்கியதால் ,வேலை சீக்கிரமே முடிந்தது.

நந்துவிற்கு நெருக்கமான தோழிகள் என்று யாரும் இல்லை , பள்ளியில் பழகிய சிலரும் அவ்வளவு நெருக்கம் இல்லை, இங்கு ஆருவும் ,அனுவும் உரிமையுடன் பழகியதும், நந்து அவர்களுடன் ஒட்டிக்கொண்டாள், மேலும் அவர்களும் மதுரை எனவும் அவளுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. .

எல்லா பொருட்களை அடுக்கியதும் சாவகாசமாய் பெட்டின் மேல் அமர்ந்து பேச தொடங்கினர்.

நந்து ஆருவிடம் “ நீங்க ரெண்டு பேரும் எப்போ ஹாஸ்டளுக்கு வந்தீங்க ?” என்று கேட்க , அதற்கு ஆரு பதில் சொல்வதற்குள் “இரு, இரு” என்ற அனு, 

ஓடிபோய் நந்துவின் snacks bagஐ குடைந்து ,சிப்ஸ் பாக்கெட் ஒன்றை எடுத்து பிரித்து சுவைத்தபடி ," popcorn-னா  இன்னும் நல்லார்க்கும்....., its ok இப்போ start music ....." என்றாள். நந்து சிரிக்க ,

ஆரு முறைத்துக்கொண்டே " நாங்க நேத்து காலைலேயே ஹாஸ்டலுக்கு வந்துட்டோம்..." என்று நந்துவுக்கு பதில் சொன்னாள்.

" என்னோட ரூமேட் யாருனு தெரியுமா ?" நந்து கேட்க,

"ஓ..... 'தீப்தீ'யாம் ... அவள் சென்னைதானாம்... அவ தொல்லை தாங்காம ஹாஸ்டலுக்கு  தள்ளி விட்டிருப்பாங்க..." chips நொறுக்கிக் கொண்டே பதில் சொன்னாள் அனு. 

ந்துவிற்கு அனுவையும், ஆருவையும் மிகவும் பிடித்திருந்தது . பார்ப்பதற்கு இரண்டு பேரும் ஒன்றாய் தோன்றினாலும், பேசிய சிறிது நேரத்திலேயே  அவர்களின் குணங்களின் வேறுபாடு தெரிந்தது. அவர்கள் இருவரையும் நந்துவின் பார்வை அளந்தது. இருவருமே நல்ல நிறம் ( சுவை, திடம் ,மானே, பொன்மானே எல்லாம் நீங்களே போட்டுக்கோங்க மக்களே), பளிச்சென பிஸ்தா க்ரீன் கலர் nightdressல் அழகாக இருந்த அனுவிடம் சிறு மிடுக்கும், கண்களில் குறும்பும் நிறைந்திருந்தது. ஆரூவோ, மென்மையான லாவண்டர் நிற சுடியில், அமைதியும் ,பெண்மையும் கலந்த அழகுடன் மிளிர்ந்தாள்.

" என்ன மேடம், பசங்கள விட பயங்கரமா சைட் அடிக்கற....எவ்ளோ மார்க் தேறுவோம் , நான் பாசா, ஃபெயிலா ?" என்று அனு குறும்புடன்  கேட்க ,

" நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கீங்க ... அதான் பார்த்தேன்... நீங்க twinsஸா?"நந்து

"கிட்டதட்ட.... " ஆரு கூறவும் , நந்து குழப்பமாக பார்க்கவும்,

"அதுவா ...என்னோட அம்மாவும், அவளோட அம்மாவும் twins....ஆனா நாங்க twins இல்ல....ஆனா ரெண்டு பேர்க்கும் , அதாவது ஆருத்ராவுக்கும், அனுக்ரகாவுக்கும் ,அதான் நா ..எனக்கும்  ஒரே நாள் தான் birthday..." தெளிவாக குழப்பிவிட்டு " புரிஞ்சுதா  நந்து ...?"  என்று வேற கேட்டாள்.

நந்து திருதிரு வென்று முழித்துக் கொண்டே "கிட்டதட்ட..." என்று சொல்லவும் ,ஆருவும்,அனியும் கலகலவென நகைத்தனர்.
நந்துவும் சேர்ந்து புன்னகைத்துக் கொண்டிருந்தவள்,திடீரென அனு முன்பு கூரியது ஞாபகம் வரவும்,
"அனு, அப்பவே ஏன் அப்டி சொன்ன?" என கேட்டாள்.

" எப்போ..?,எப்டி..?" என கேட்டு அனியும்,ஆருவும் நந்துவைப் பார்க்க,

"கீழே இருக்கும் போது சொன்னியே, நான்  ஏதோ மாறனும்னு...",ஆருவின் வேண்டாம் என்ற கண் ஜாடையை கவனிக்காமல்,நந்து அப்பாவியாய் கேட்க...

"ஆமால்ல, நானே மறந்துட்டேன் பாரு.,nice girl" எனவும் பெருமையுடன் புன்னகைத்த நந்துவைப்பார்த்து ,தலையிலடித்தக்கொண்டாள் ஆரு ( மனசிற்குள்தான், நேரில் செய்தால் அனுவிடம் யாரு வசைப்பாட்டு வாங்குவது).

அதற்குள் அனு நந்துவிடம் " பார் நந்து நீ ரொம்ப அழகா இருக்க, நல்லா ஃபேரா , அழகான பெரிய கண்கள், அது அப்டியே உன்னோட இன்னொஸன்ஸ காட்டுது..அளவான மூக்கு, பின்க் லிப்ஸ், healthy hair, எல்லாத்துக்கும் plusஆ சிரிச்சா ஒரு பக்கம் விழற கண்ணத்துக் குழி..மொத்ததுல நீ.ஒரு' சூப்பர் ஃபிகர் ' ...ஆனா உன் dress..?"என்று இழுக்கவும்..அது வரை அனுவின் வர்ணனையில் சங்கடமாய் உணர்ந்த நந்து கேள்வியாய் நோக்கினாள்.

"உன் dress ரொம்ப காமெடியா இருக்கு..." என்று அனு சொன்னதுதான் தாமதம், நந்துவிற்கு கோபம் வந்துவிட்டது,
"இது எங்கப்பா வாங்கித்தந்தது..நல்லாதான் இருக்கும்" என்றாள் ரோஷத்துடன்.

"cool cool டார்லிங், உங்க அப்பா செலக்ஷனை ஒன்னும் சொல்லல , உங்க tailor இருக்காரே அவர் ஏன் dressஐ உனக்கு தைக்காம உங்க வீட்டு pillowக்கு தச்சிருக்காருன்னுதான் கேக்கிறேன்?" என்றாள் அனு கண்களில் குறும்புடன்.

"அப்போ இது pillow cover மாதிரி இருக்கா...?" என்று தன் dressஐ காட்டி நந்து கோபம் குறையாமல் கேட்க,

" obsolutely.." அனு cool ஆக சொல்ல, நந்துவின் முகத்தில் எல்லும், கொல்லும் வெடித்து. இதற்கு மேல் அமைதியாக இருந்தால் அடிதடியாகிவிடும் என்று ஆரு குறுக்கே வந்து நந்துவிடம்
"பார் நந்து , இது ஒரு பெரிய issueவே இல்ல...உனக்கு இது தான் comfortable னா, ஒன்னும் பிரச்சனை இல்ல நீ இப்டியே இருக்கலாம்.." குறுக்கே பேச வந்த அனுவை வழக்கம்போல் பார்வையால் அடக்கி தொடர்ந்தாள் "ஆனா இதே ட்ரெஸை ஆல்டர் பண்ணா இன்னும் அழகா இருக்கும்..டிரைப்பண்ணிதான் பாரேன் நந்து" என்றாள்.
தன்னை விட தன் அப்பா வாங்கித் தந்த dress-ஐ யாரும் குறை சொல்லிவிட கூடாது என்பதற்காய் நந்து " சரி" என்றாள்.

"அப்பாடி...ஓ.கே சொல்லிட்டா, ம்..ஒரு மூனு செட் குடு, இப்பவே ஹாஸ்டல் tailor அக்காகிட்ட குடுத்து ஆல்டர் பண்ணிர்றேன்...என்னோட அளவே கொடுக்கிறேன்.." என்று விடாப்படியாய் நந்துவிடம் இருந்து dressஐ வாங்கி சென்றாள்.

அவளையே மலைப்புடன் பார்த்துக்கொண்டிருந்த நந்துவைப் பார்த்து " அனு எப்பவும் இப்படித்தான் நந்து, நமக்காகத்தான் செய்வா..ஆனா அதை செய்றதுக்குள்ள  நம்மள ஒரு வழி பண்ணிருவா" என்றாள் ஆரு."ஆமா ஆரு எனக்கும் இப்போ புரியுது" நந்து.

சொன்னபடியே ஒரு மணி நேரம்  கழித்து உள்ளே வந்த அனு " மூனு செட் ரெடி நந்து...இந்த weakஅ  அட்ஜஸ்ட் பண்ணிக்கோ...இந்த weekend  மீதியெல்லாம்  ஆல்ட்டர் பண்ணிர்லாம்.."என்றாள்.

( எப்படி வந்த ஒரு நாளிலே அனுவால் tailor-ஐ கண்டுபிடித்து இந்த வேலையை செய்ய முடிந்தது...லாஜிக் இடிக்குதே...னு நீங்க கேக்கறது புரியுது..ஆனா அனுக்ரகானா சும்மாவா... வந்த முதல் நாளே ஹாஸ்டல் ஃபுல்லா explore பண்ணி,ஆருவின் சீனியர்-ராகிங்க் warning எல்லாத்தையும் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு .... யார் எங்கே இருக்காங்க...யாரிடம் எப்படி பேசினால் காரியமாகும் என எல்லாத்தையும் விசாரிச்சு....வார்டனிலிருந்து ரூம் க்லீன் பண்ணும் ஆயா வரை ஃபிரெண்ட் ஆக்கி வைதிருந்தாள்.. அதில் இந்த டெய்லர் அக்காவும் அடக்கம்...).

"Thanks அனு" என்ற நந்துவிடம், 

"o.k நந்து " என்று அவளைப் போலவே  கூறினாள்.

dress-ஐ போட்டு பார்த்து, மடித்து வைத்துவிட்டு , பேசிக்கொண்டிருந்த நந்துவையும், ஆருவையும் பார்த்து 

" உங்க ரெண்டு பேரையும் எதுல செஞ்சாங்க ...." என அனு சீரியஸாக கேக்க, ஆரு சந்தேகத்துடன் 

" ஏன் கேக்கற?" என்றாள்

" பின்னே, உங்களுக்கு பசிக்கவே பசிக்காத ...ஒரு குழந்தை இங்க பசில துடிக்குதே, உங்க கண்ணுக்கு தேறியுதா..சே..எப்ப பாரு பேச்சு,பேச்சு..." என்று சலித்துக்கொள்ள..நந்துவினாள் சிரிப்பை அடக்க முடியவில்லை..

ஆரு முறைத்துக்கொண்டே " எல்லாம் நேரம் தான்" என்றவள், அனுவின் கண்களில் நிஜமாகவே பசி தெரியவும் , வேளியே பால்க்கனியில் இருந்து மெஸ்ஸை எட்டிப்பார்த்தாள், பிறகு உள்ளே வந்து " போகலாம்" என்றாள். 

அவளையே பார்த்துக் கொண்டிருந்த நந்து "என்ன பார்த்த ஆரு" என்றாள்,

"சீனியர்ஸ் இருக்காங்களான்னு பார்த்தேன்"ஆரு

"ஏன் அவங்க இருந்தா என்ன?" என நந்து கேட்டதும் அனுவும் ஆருவும் அவளை ஒரு மாதிரி பார்த்தார்கள்.

அனு "கவலைப்படாத செல்லம்,அது நாளைக்கு காலைல காலேஜ் போவொம்ல, அப்ப தெருஞ்சுரும்.." என்றாள்.

பேசியபடியே கீழே இறங்கி மெஸ்ஸிற்க்குள் சென்றார்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.