(Reading time: 20 - 40 minutes)

15. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

Yeppa pei mathiri irukka

ன்ராஜ் ஐ பார்த்ததும் ஒரு நொடி அதிர்ச்சிக்குப்  பின் சுதாரித்த கார்த்திக், “ஹலோ அங்கிள், ஐ அம் கார்த்திக். சந்தியா அப்பா தான நீங்க? நேத்தே  உங்களை பாத்து சாரி கேட்கணும்ன்னு நினச்சேன். அதுக்குள்ள நீங்க கிளம்பிட்டீங்க. நேத்து ஆக்ஸிடென்ட்ல அலைஞ்சதுல  நிறைய வேலை பெண்டிங்கா இருந்தது. அதான் சந்தியா கொஞ்ச நேரம் இருந்து முடிச்கிக்குடுக்க வேண்டியதா போயிடுச்சு...அவங்க ட்ரைன் ஆகுற வரைக்கும் கொஞ்சம் முன்ன பின்ன கிளம்புற மாதிரி தான் இருக்கும். ஆனா உங்களுக்கு அதுல இஷ்டம் இல்லன்னா அவ வீட்டில இருந்து கூட வேலை பாக்கலாம். நேத்து லேட் ஆனதுக்கு ஐ அம் சாரி....வாங்க உள்ள போய் பேசலாம் “ என பணிவாக சொல்லிவிட்டு வீட்டிற்க்குள் அழைத்துச் சென்றான்.

தன்ராஜ் அவனின் பணிவை மனதிற்குள் மெச்சிய படியே, “ சாரி எல்லாம் எதுக்கு தம்பி. ஆனா நீங்க என்னமோ சந்தியாவை பிடிக்கலைன்னு பேசிகிட்டு இருந்த மாதிரி இருந்ததே. “ என மறுபடியும் கேட்டார்.

“சந்தியா  பைக் ரேசரா? இந்த போட்டில எல்லாம் கலந்துகிட்டு பைக் வேகமா  ஓட்டுவாங்களே அந்த மாதிரி?”, கார்த்திக்.

“இல்லயே . ஏன் அப்படி கேக்குறீங்க”, புரியாமல் கேட்டார் தன்ராஜ்.

“அங்கிள் சந்தியா வர்ற யோகா க்ளாஸ் இங்க தான் இருக்கு. ரெண்டு நாளா வாக்கிங் போறப்போ நானும் கவனிச்சிட்டு இருக்கேன். ஸ்கூட்டியை ரெம்ப ஸ்பீட்டா பைக் ரேஸ்சர் மாதிரி எல்லாம் ஓட்டிட்டு போறா. அது ரெம்ப ரிஸ்க்ன்னு  அட்வைஸ் பண்ணா நான் பாஸ்ட்டா ஓட்டினாலும் ராஷ்ஷா  ஓட்ட மாட்டேன்னு சொல்றா. அதை தான் அண்ணிக்கிட்ட அவ செய்றது பிடிக்கலைன்னு  சொல்லிட்டு இருந்தேன். தப்பா இருந்தா மறுபடியும் சாரி அங்கிள்” என்று தன்ராஜுடன் வீட்டிற்க்குள் நுழைந்த படியே சொன்னான் கார்த்திக்.

“அப்படியா...முந்தி இப்படி ஓட்டிறான்னு கேள்வி பட்டு 2 வருஷம் வண்டியே கொடுக்காம வச்சிருந்தேன். இப்ப தான் கொஞ்ச நாளா மறுபடியும் ஓட்டிகிட்டு இருக்கா. இன்னைக்கு கீழ விழுந்துட்டான்னு கேள்வி பட்டவுடனே வேகமா ஓட்டி தான் விழுந்துட்டான்னு மொதல்ல நினச்சேன். இதுக்கு தான் இவ கைல வண்டிய  கொடுக்கவே பயமா இருக்கு. ” என்று  புலம்பினார்.  அவர்களை பின் தொடர்ந்த மீரா  அவர்களுக்கு காபி போட்டு எடுத்துட்டு வருவதாக சொல்லி விட்டு சென்றாள். அந்த நேரம் சதாசிவம் அங்கே வர, தன்ரஜை  அவருக்கு அறிமுகப் படுத்தினான் கார்த்திக்.

 

 சந்தியாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற விவரம் கூறிய அவர்,

“சௌபர்ணிகாவிற்கு சந்தியான்னா ரெம்ப பிடிக்கும். அதான் அவ வலிக்குதுன்ன உடனே உங்களுக்கு கூட காத்திருக்காம ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போயிட்டா. சந்தியாவை ரெம்ப நல்லா வளர்த்திருக்கிறீங்க. தங்கமான பொண்ணு. நேத்து எத்தனை பிள்ளைக உயிரை காப்பாத்தி இருக்கா. எங்க வீட்டு பிள்ளைகளையும்  அவங்களுக்கு உதவி  செய்ய வைச்சிட்டா. ” என சான்றிதழ் கொடுத்தார் சதாசிவம்.  

ஊரே மெச்சும் மனிதர் தன் மகளை புகழ்கிறார் என்று தன்ராஜிக்கு ஒரே சந்தோஷம். “ரெம்ப சந்தோஷங்க. அவள் எப்போதும் இப்படி தான்.  இப்போ கூட அன்பு இல்லம் பிள்ளைங்களை படிக்க வைக்கணும்ன்னு கல்யாணம் முடிக்க ஒரு வருசம் டைம் கேட்டிருக்கா. இவளுக்கு நேர மூத்தவ பிரசவத்துக்கு அமேரிக்கா போக வேண்டி வரும் போல. வயசு பிள்ளைய  எப்படி தனியா விட்டுட்டு போக முடியும்? காலாகாலத்துல கல்யாணத்தை முடிச்சிருந்தா  இந்த சிக்கல் இருந்திருக்காது. அவ எப்பவுமே மத்தவங்களுக்காகவே தான் யோசிப்பா...நமக்கு தான் சில சமயம் இக்கட்டா இருக்கு.” என்றார் தன்ராஜ்.

“அப்ப இப்போ சந்தியாவுக்கு வரன் பாக்குறீங்களா? இல்ல அவ கேட்ட மாதிரி அடுத்த வருஷம் பாக்கப் போறீங்களா” என கேட்டார் சதாசிவம்.

“அவளுக்கு  தான் சொந்தத்திலே மாப்பிள்ளை இருக்கே! வரன் தேட அவசியமே இல்ல” என பெருமையாக சொன்னார் தன்ராஜ். சதாசிவம் கார்த்திக்கை பார்க்க அவனோ பெரிதாக  ஒன்றும் காட்டிக்கொள்ளாமல்  தன்ராஜிடம் காபியை கொடுக்க வந்த மீராவிடம் “அண்ணி எனக்கும் ஒரு காபி ப்ளீஸ்” என்றான்.

கார்த்திக் எப்போதும் அவன் வேலைகளை அவனே பார்த்துக் கொள்வான் காபி போடுவது முதற்கொண்டு. என்றும் இல்லா திருநாளாய் அவன் கேட்டது மீராவிற்கும் சதாசிவத்திற்கும் ஒரே ஆச்சர்யம்!

அவனே பின், தன்ராஜிடம்  “அங்கிள் சந்தியாவை அம்மாவே வீட்டில ட்ராப் பண்ணிடுறேன் சொன்னாங்க. அவளோட  லேப்டாப்பை மறந்து ஆபிஸ்லே  வச்சுட்டா. நீங்க அவகிட்ட கொடுத்துடுங்க..நான் எடுத்துட்டு வந்துடுறேன்” என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு நகன்றான். அவனுக்கு தன்ராஜின் பேச்சு எரிச்சலை தந்தது.  அதில் இருந்து தப்பித்துக் கொள்ளவே தோன்றிய நெஞ்சம் ஏன் அவ்வாறு நினைக்கிறோம் என்று எண்ணவில்லை.

கார்த்திக்கின் உத்தியோகம், அவனிடம் ஆலோசனைக்கு அணுகும் பெரிய பன்னாட்டு நிறுவனங்களின்  புள்ளி விவரங்களை விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ந்து அவர்கள் வாடிக்கையாளர்களையும், வியாபரத்தையும், ஏன்  நோயாளிகளை கூட (ஆமாம், மருத்துவ துறை சார்ந்த  நிறுவனங்கள் வியாபாரமயமாக்க பட்டுத் தானே  இயங்குகின்றன)  பெருக்கும் வழிகளை சிபாரிசு செய்வது.   உலகத்திலே புகழ் பெற்ற வல்லுனர்களில் ஒருவன். அப்படி இருந்தும்  தனது மனதை ஆராய முடியவில்லை...ஆராய்ந்தாலும் கண்டு கொள்ள முடியுமா காதலை???!!!

கார்த்திக் சென்ற பின், சதாசிவம் தன்ராஜிடம் பொதுவா பேசி விட்டு அவரை   ஒரு நாள் குடும்பத்துடன் வீட்டிற்கு விருந்துக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தார்.  பின், தன்ராஜ் சிறிது நேரம் அங்கிருந்து பேசி விட்டு புறப்பட்டார்.

தியம் மணி ஒன்று.

கார்த்திக்கிற்கு அடுத்தடுத்து இருந்த தொலைபேசி கலந்தாய்வு  அழைப்புகள் அத்தனையும் முடித்து விட்டு, அதன் பின்  முந்தைய நாள் வேலை நிலுவையில் நிறைய இருந்ததால்,  வேலைப் பளுவில் பசியை கூட உணராமல் கலந்தாய்வு அறையில் இருந்தவாறே, கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

சதாசிவத்தின் உடல்நிலை காரணமாக இந்தியா வந்த பின், மதுவின் மனம் சீராக அவளுக்காகவே  இந்த என்விஷன் மேக்ஸ்  நிறுவனத்தை உருவாக்கினான். அதில்  BPO வை மது நிர்வாகிக்கிறாள். அவளுக்கு உறுதுணையாக இருந்து கொண்டே கார்த்திக் அமெரிக்காவில் பார்த்துக் கொண்டிருந்த தனது ஆலோசனை வழங்கும் தொழிலையும் கவனிக்கிறான். இதனோடே தனது கனவு மென்பொருளை நிரஞ்சனுடன் இணைந்து   தயாரிக்கிறான். அதில் தான் சந்தியாவையும் தற்போது   ஈடுபடுத்தியுள்ளான்.

அந்த அறையின் கண்ணாடி கதவை தட்டிய மது, “இன்னும் கால்ல இருக்கியா”  வெளியிலிருந்தே சைகையில் கேட்க, அவன்  அவளை உள்ளே அழைத்தான். உள்ளே வந்த மது “காதி, லஞ்ச் டைம்ல இங்க உட்கார்ந்து என்ன பண்ற? வா சாப்பிடலாம்” என அழைக்க, சரியென தலையாட்டி கிளம்பிய கார்த்திக்கிடம், “காதி, சந்தியா உன்னை ரெம்ப தேடுனா..உன்கிட்ட தான் பேசணும்ன்னு சொன்னா...நீ கால்ல இருக்க, முடிஞ்சவுடனே கால் பண்ண சொல்றேன்னு  சொன்னேன்.” எனவும், “ஓ செல்லை வேற சைலன்ட் மோட்ல போட்டேன். அவ எப்படி இருக்கா, என்னன்னு கேட்டியா?”  என கேட்டுக் கொண்டே அவனது ஊமையான போனை தன்னிலைக்கு கொண்டு வந்தான். அதில் சந்தியா இருபத்தெட்டு முறை அழைத்திருந்தாள். “பேய் எத்தனை வாட்டி கால் பண்ணி வைச்சிருக்கா” என எண்ணிக் கொண்டிருக்கும் போதே, மது அவன் கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தாள்.

“ பெயின் கில்லர் போட்டு வலி ரெம்ப தெரியலன்னு சொன்னா காதி. பாவம் ஒரு நாலைந்து நாளைக்கு காலை அசைக்க கூடாதுன்னு சொல்லியிருக்காங்களே.  அவ ஆபிஸ்க்கு இந்த வாரம் முழுக்க வர முடியாது”  என்றாள்  மது வருத்ததுடன்.

“ரெம்ப பீலிங்ஸ்ஸோ? ஒரே நாள்ல கவுந்துட்டியே மா.. வாங்க போங்கன்னு உன்னை சொல்லிக்கிட்டு இருந்தவ, வா போன்னு உன்னை கூப்பிடிற அளவுக்கு ப்ரண்ட்ஸ் ஆகிட்டீங்களா?” என கார்த்திக் கேட்க,

“ஆமா காதி, நேத்து அவ கூட அன்பு இல்லத்தில சூப்பரா என்ஜாய் பண்ணேன். அவ இன்டர்வியூல ஒரு லிஸ்ட் ஆப் கேம்ஸ் சொன்னாளே!!!.....ப்ளைண்ட் போல்ட் (கண்ணாமூச்சி), கல்லா மண்ணா, இந்த பெப்பில்ஸ் வச்சு விளாடுறது அது பேர்...ம்.....” என யோசிப்பது போல்  பாவித்து பின் அதற்கு விடை கண்டுபிடித்தது போல ஆர்வமாய் “எஸ்....தட்டாங்கல்  இந்த மாதிரி அந்த காலத்து கேம்ஸ் எல்லாம் விளையாண்டோம்..இட் வாஸ் பன்.....அவ சரியான சேட்டர் பாக்ஸ்.. அந்த இல்லத்தை நடத்திற தாத்தாவை கூட விட்டு வைக்கல. அவரும் அந்த வயசுலயும் செமயா ஜோக் அடிக்கிறார். ரெம்ப வித்தியாசமா எக்ஸ்பீரியன்ஸ் ஆக இருந்தது காதி. பட், ரொம்ப  நல்லா இருந்தது” என்றாள் கண்கள் பிரகாசிக்க.

கார்த்திக் அவளின் மலர்ச்சியை பார்த்து உள்ளம் மகிழ்ந்தவனாய் “குழந்தையாவே இருக்கிற உன்னை வளர வைக்க போராடிக்கிட்டு இருக்கோம். அவ என்னடான்னா உன்னை இன்னும் பச்ச குழந்தையாக்கிடுவா போல...” என  கிண்டலடித்தான்.

அந்த நேரம் பார்த்து சந்தியா அழைக்க, அந்த அழைப்பை  எடுத்தவனிடம், “ஹே...சகுனி என்னை அப்பாகிட்ட போட்டு கொடுத்துட்டு எங்க ஓடி ஒளியுறீங்க.... ஆயிரத்தெட்டு வாட்டி கால் பண்ணியும் உங்களை பிடிக்க முடியல...” என அழுத்துக் கொண்டாள். “ஸ்டேட்டிஸ்டிக்ஸ்ல புலி இப்படி நம்பர்ல தப்பு விடக் கூடாது. நீ இருபத்தியெட்டு தடவை தான் கால் பண்ணியிருக்க. சோ, நீ சொன்ன மாதிரி 1008  தடவை மிஸ்ட் கால் குடுத்து முடி. அப்புறம் பேசுறேன்" என இணைப்பை துண்டித்தான்.

பின் மதுயுடன் உணவருந்த கிளம்ப அவனது போனில் மறுபடியும் அழைப்பு. இது ஸ்ரீமாவின் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. “சகுனி சயின்டிஸ்ட் ...உங்களால அப்பா என்னை நல்லா டோஸ் விட்டு, இனி ஸ்கூட்டியே ஓட்ட கூடாதுன்னு சொல்லிட்டாரு தெரியுமா?” என்றாள் சந்தியா வருத்ததுடன்.

அதைக் கேட்ட கார்த்திக்  வெற்றி சிரிப்புடன் “ஹா...ஹா... பரிசும் பாராட்டும்! என் உயிரை பணயம் வச்ச பைக் ரேஸ்ஸரின் மெய்டன் அட்டெம்ட் (முதல் முயற்சி)க்கு அப்படி ஒரு காம்பிளிமென்ட் கண்டிப்பா தேவை..தப்பு பண்ணிட்டுயே வள்ளிக்கண்ணு. அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல என் பைக்கை பஞ்ச்சர்  ஆக்குனியே...அதுக்கு என்னோட  பதில் இது தான்” என்றான் வில்லத்தனமாக.  

சந்தியாவோ கொஞ்சம் கூட அசாராமல் “ரெம்ப சிரிக்காதீங்க. இப்படி தான் ரெண்டு வருஷமா வண்டி எடுக்க,  அப்பா நோ சொல்லியிருந்தாங்க. அப்படி இப்படி தாஜா பண்ணி டெய்லி பெர்மிஷன் வாங்கி ஓட்டிவேன். எங்க அப்பா, யாரு என்ன ஓதுனாலும் கடைசில என் பேச்சை தான் கேட்ப்பாங்க...ஆனா அன்னைக்கு நடந்தது, இப்போ வரைக்கும் நினைச்சு பழி வாங்குறீங்களே...சரியான சகுனி” என்று அவனை வசை பாடினாள்.

“யே வாயாடி வள்ளியம்மா! லேசா ஸ்லிப் ஆனதுக்கே ஸ்ப்ரைன்னாகி  கஷ்டப்படுற. வேகமா ஓட்டி, ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சுன்னா எவ்வளோ சிரமம். சும்மா வாயாடாம உங்க அப்பா பேச்சை கேளு.” அதட்டலாக சொன்னான்.

“எங்க அம்மா டையலாக்கை நீங்க பேசுறீங்க. இப்படி செண்டிமெண்ட் பேசுனா ஒன்னும் நான் உருக மாட்டேன்” என்று விட்டு  உள்ளுக்குள் உருகி கரைந்தாள் சந்தியா.

“சரி ...உன் இஷ்டம்” என்றான் குரலில் லேசான சலிப்புடன்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.