(Reading time: 19 - 37 minutes)

11. என் இனியவளே - பாலா 

En Iniyavale

து கனவா நினைவா”

“இது கனவா நினைவா”

இளவரசன் இப்படி நினைத்துக் கொண்டிருக்கையிலே படம் இடைவேளை வந்துவிட்டது.

தியேட்டரில் விளக்குகள் எல்லாம் போட்ட பிறகு தான் இளவரசன் அங்கிருந்த எல்லோரையும் பார்த்தான். அங்கு இனியா மட்டுமல்ல. அவள் அக்கா, அம்மா, என்று அவள் குடும்பம் அனைத்துமே இருந்தது.

இளவரசனுக்கு ஒன்று தான் புரியவில்லை. இனியா அவன் மேல் கோபத்தில் இருக்கிறாள். இப்போது எப்படி அவள் அவளின் குடும்பத்தோடு வந்தாள். அதுவும் இளவரசனின் தாய் இவ்வாறு சினிமாவிற்கு எல்லாம் வந்து வெகு நாட்கள் ஆகின்றது. அப்படியே அவனோ சந்துருவோ அழைத்தாலும் கூட அவர்கள் எல்லோரும் முன்பு அவன் தந்தையோடு சென்றது நியாபகம் வரும் என்று கூறி மறுத்து விடுவார். ஆனால் இப்போது இவர்கள் எல்லோரும் எப்படி ஒன்றாக என்பது தான் அவனுக்கு புரியவில்லை.

இவன் இப்படி எண்ணிக் கொண்டிருக்கையிலே அங்கு எல்லோரும் சந்துருவிடம் அவரவர்க்கு என்ன வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். இளவரசன் அவன் எண்ணத்தை சற்று ஒதுக்கி வைத்து விட்டு அவனும் சந்துருவிடம் சேர்ந்துக் கொண்டான்.

அதற்குள் பாலுவும் எழுந்து நானும் உங்க கூட வரேன் என்றார்.

சந்துரு “இருக்கட்டும் அண்ணா. நானும் அண்ணனும் வாங்கிட்டு வரோம். ஏற்கனவே அண்ணி நீங்க இப்படி எல்லாம் டைம் ஸ்பென்ட் பண்றதில்லைன்னு பீல் பண்ணிட்டு இருந்தாங்க. அதனால உங்களோட பிரீசியஸ் டைம நீங்க எங்க அண்ணி கூடவே ஸ்பென்ட் பண்ணுங்க” என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.

முதலில் மறுத்துக் கூற எண்ணிய பாலுவும் அவன் கேலியால் ஒன்றும் கூற இயலாமல் சரியென்று சிரித்துக்கொண்டே அமர்ந்து விட்டான்.

“ஓகே. எல்லாருக்கும் என்ன வேணும்னு நான் இப்ப திரும்ப சொல்றேன் கரெக்டான்னு பாத்துக்கோங்க. அப்புறம் என்ன திட்டக் கூடாது என்று கூறி பாலு அண்ணனுக்கும் ஜோதி அண்ணிக்கும் 7up, அம்மாக்கும் ஆன்டிக்கும் பாப் கார்ன், அபிக் குட்டிக்கும் இனியாக்கும் ஐஸ் கிரீம், கரெக்ட்டா” என்று அவன் கேட்கும் போதே இளவரசன் இடையிட்டு

“இனியாவுக்கு இப்ப தானே உடம்பு சரி இல்லாம போச்சி. அதுக்குள்ளே ஐஸ் கிரீம் எல்லாம் வேண்டாம்” என்றான்.

இனியாவின் தாயும் “நானும் அத தான் சொல்ல வந்தேன். இனியா ஐஸ் கிரீம் எல்லாம் வேண்டாம்” என்றார்.

சந்துரு இனியாவிடம் “வேற என்ன வேண்டும்” என்றான்.

இனியா இளவரசனை முறைத்தவாரே “எனக்கு ஒன்னும் வேண்டாம்” என்றாள்.

அதற்குள் அபி இடையிட்டு “என்ன சித்தி, இப்படி பண்ற, உனக்கு உடம்பு சரி இல்லைன்னு தானே ஐஸ் கிரீம் வேண்டாம்னு சொல்றாங்க. நீ என்ன சின்ன குழந்தை மாதிரி பண்ற” என்று பெரிய மனுசியை போல் பேசினாள்.

அங்கிருந்த அனைவருக்கும் அபியின் பேச்சை கேட்டு ஒரே சிரிப்பு.

அவள் அம்மா இனியாவிடம் “ பார்த்தியா டீ. என் பேத்தி எவ்வளோ அழகா சொல்றா. நீ என்னவோ சின்ன புள்ள மாதிரி அடம் பண்ணிக்கிட்டு” என்றார்.

சந்துரு “நீங்க எல்லாரும் இப்படியே பேசிட்டே இருந்தா பிரேக் முடிஞ்சே போய்டும்” என்றான்.

இப்போது எல்லோரின் பார்வையும் இனியாவின் மேல் இருக்க வேண்டா வெறுப்பாக “எனக்கு ஒரு ப்ரூட்டி” என்றாள்.

சரி என்று திரும்பிய சந்துரு மறுபடியும் திரும்பி “சாரி மாமா. உங்களை மறந்துட்டேன். உங்களுக்கு என்ன வேண்டும்” என்று இனியாவின் தந்தையிடம் கேட்டான்.

“அப்பா. பரவால்ல. நீயாச்சும் என்ன கேட்டியே. நான் இருக்கறதையே எல்லாரும் மறந்துட்டாங்கன்னு நினைச்சிட்டேன்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

“எனக்கும் ஒரு பாப் கார்ன் வாங்கிட்டு வாப்பா. நான் என் பொண்டாட்டி என்ன சாப்பிடறாளோ அதை தான் சாப்பிடுவேன்” என்றார்.

இப்போது அங்கு எல்லோரும் சிரித்தனர்.

அவரின் மனைவி “போங்க. ஏங்க இப்படி சின்ன புள்ளைங்க எதுருல இப்படி என் மானத்தை வாங்கறீங்க” என்று அழகாக வெட்கப்பட்டார்.

இனியா மன நிறைவுடன் தன் தாய் தந்தையை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு காலத்தில் எப்படி இருந்தவர் இப்போது இப்படி தாயின் மேல் அன்பை பொழிகிறார் என்று நினைத்துக் கொண்டாள்.

எப்படியோ ஒரு வழியாக சந்துருவும் இளவரசனும் கிளம்பி சென்றனர்.

வெளியே சென்ற இளவரசனுக்கு பொறுமையே போய் விட்டது.

“சந்துரு. என்ன இது. இங்க என்ன தான் நடக்குது. அம்மா இப்படி கொஞ்ச நாள் பழகனவங்க கூட எல்லாம் வெளியிலே வர மாட்டங்களே. அதுவும் சினிமாவுக்கு எல்லாம் சான்சே இல்லையே. அதுவும் இனியா வீட்டுலயும் எல்லாரும் வந்திருக்காங்க. என்ன டா இதெல்லாம். தயவு செஞ்சு என்ன நடக்குதுன்னு சொல்றியா” என்று கேட்டான்.

“சந்துரு சிரித்துக் கொண்டே, அண்ணா எல்லாம் உனக்கு நல்லது தான் நடக்குது.” என்றான்.

“என்ன டா சொல்ற”

“அண்ணா இனியாவோட அப்பா வேற யாரும் இல்லை. நம்மளோட மாமா தான். அதாவது அம்மாவோட அண்ணன்” என்றான்.

அதற்குள் இளவரசனின் முகம் கோபத்தில் சிவந்து விட்டது.

அவனின் கோபத்தை புரிந்துக் கொண்ட சந்துரு “வெயிட் அண்ணா வெயிட். அம்மாவோட அண்ணன்னு தான் சொன்னேன். நீ நினைக்கற அந்த மாமாங்க இல்லை. இவரு அம்மாவோட பெரியப்பா பையன். இவருக்கு அம்மா மேல ரொம்ப பாசம். ரொம்ப வருஷம் அம்மாவை தேடி இருக்காரு. இப்ப எப்படியோ அந்த கடவுளோட அருளால நம்ம எல்லாம் ஒன்னு சேர்ந்துட்டோம்.”

“அண்ணா அம்மா இப்ப ரொம்ப சந்தோசமா இருக்காங்க. அவரை அம்மா பார்த்த உடனே எவ்வளவு சந்தோஷ பட்டாங்க தெரியுமா. அவரும் அதே மாதிரி தான். அந்த ஆன்ட்டியும் அங்கிளும் என்ன நடுவுல உட்கார வச்சிக்கிட்டு கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு இருக்காங்க. அதுலயே அவங்க சந்தோசம் தெரியுது. அதனால இப்ப நீ ஏதும் பேசி யாரோட சந்தோசத்தையும் கெடுக்க கூடாது. ஐ ஹோப் நீ எதுவும் பண்ண மாட்ட” என்று சிரிப்புடன் முடித்து விட்டான்.

இளவரசனுக்கு இனியாவின் அப்பா அவனின் சொந்த மாமா இல்லை என்பதே பெரிய ஆறுதலாக இருந்தது. அதுவும் அம்மா எப்போதோ இந்த மாமாவை பற்றி பாசமாக பேசிய நினைவுகள் அவனுக்கு இருந்தது.

“டேய் சந்துரு. இதெல்லாம் ஓகே. இவங்க நம்ம ரிலேஸன்னு எப்படி தெரிஞ்சிது”

“அண்ணா அதெல்லாம் அப்புறம் சொல்றேன். இப்ப எல்லாம் வாங்கிட்டு சீக்கிரம் போலாம் வாங்க. இல்லன்னா அபி இங்கயே ஓடி வந்துடுவா” என்றான்.

இளவரசனும் சரி என்று தலை ஆட்டியவாறே சந்துருவுடன் சென்று எல்லாவற்றையும் வாங்கினான்.

இனியாவின் பக்கத்தில் அமர்ந்திருந்த ராஜலக்ஷ்மி இனியாவிடம் எதை எதையோ பேசிக் கொண்டிருந்தார்.

இனியாவும் அவருக்கு பதில் கூறியவாரே திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள்.

இளவரசன் உள்ளே நுழையும் போதே இனியா திரும்பி திரும்பி பார்ப்பதை கவனித்து விட்டான். ஆனால் அவளுக்கு தான் கூட்டத்தில் அவர்கள் தெரியவில்லை.

இளவரசன் ஒரு சிறு முறுவலுடன் அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.