(Reading time: 12 - 23 minutes)

01. காதல் பயணம்... - Preethi

Kaathal payanam

5th A என்று பலகைப் பதிக்கபட்டிருக்கும் வகுப்பில் அமர்ந்து தோழியோடு தன் மான் விழிகள் விரிய பேசிக்கொண்டிருந்தாள் அனன்யா... மாநிறத்தில், நீண்ட கூந்தலும், அந்த வயதிற்கேற்ப விளையாட்டுத்தனமும் கொண்டு இருந்தாள். விளையாட்டுத்தனம் இருப்பினும் வகுப்பில் முதல் மாணவியாகவே திகழ்தாள்.

“ஹே, அனன்யா இந்த ரயிட்டிங் பேட்(எழுத்துபலகை) சீக்ரம் தோடே” என்று கூவியவாறு அவசரமாக ஓடி வந்தாள் ரம்யா, அவளை தொடர்ந்து தன் வகுப்பு தோழர்கள் இருவர் வருவதையும் புரியாமல் பார்த்தாள் அனன்யா.

எதற்கு தொட சொல்கிறாள் என்பது புரியாமல் அனன்யா விழிக்க...“இவ வேற அவசரம் புரியாம முழிப்பா சீகரம் தொடு டி...” என்று கெஞ்சியவாறு பின்புறம் திரும்பிப்பார்தவாறே ரயிட்டிங் பேடை(எழுத்துபலகையை) நீட்டினால் ரம்யா. ஏதோ அவசரம் என்று எண்ணி தொட்டு தலை நிமிரும் போது தான் அங்கு அவசரமாக அஷ்வத் வருவதை கண்டாள்...

அவள் தொடுவதை பார்த்த அஸ்வதோ அழுதுக்கொண்டு தலையில் அடித்துக்கொண்டான். அனன்யாவிற்கு அனைத்தும் விளங்கிற்று அவசரமாக கையை விலக்கி கொண்டாள்.

அஷ்வத்...மாநிறத்தில்,உயிரமாக,அந்த வயதிற்கான விறுவிறுப்புடன் இருந்தான். யார் வம்பிற்கும் போகாமல் அமைதியாகவே இருப்பான், நன்றாக படித்து வகுப்பு ஆசிரியர்களிடம் நன்மதிப்புப் பெற்றவன்.

“ஏன்டா இப்புடி பண்றிங்க ஹ்ம்ம்” என்று தன் நண்பர்களை அலுத்துக் கொண்டு ரம்யாவிடம் திரும்பி “உன்ன யாரு என்னோட ரயிட்டிங் பேட (எழுதுபலகை) எடுத்துட்டு வர சொன்னது?” என்று சற்று கோவமாகவே வினவினான்.

கொஞ்சமும் சலனமற்று அஸ்வதிடம் பதில் அளித்தாள் ரம்யா “பின்ன ஓவரா சீன் போட்டா அப்படி தா, எப்படி உன்னோட ரயிட்டிங் பேட அவள தொட வச்சேனா!!!”என்று பெருமையாய் முகத்தை வைத்து கொண்டாள் ரம்யா.

****நம்ம ரம்யாவ பத்தி சொல்லனும்னா செல்லமா கூப்பிடுற பேரு ரம், அனன்யாவோட உயிர்த் தோழி (உயிரை வாங்கும் தோழி) ரம்யாக்கு ரிஸ்க் எடுக்குரதுலாம் அல்வா சாப்புடுற மாதிரி அவ்ளோ புடிக்கும்(மத்தவங்க விஷயத்துல மட்டும்), அதுனால தா இப்பயும் ஒரு கலஹத்த கெளப்பிட்டு வந்து சூப்பர் வுமென் ரியாக்ஷன் குடுக்குறா****

“மண்ணாங்கட்டி யாரு என்ன சொன்னாலு அப்படியே செஞ்சுட வேண்டியது சுயமா யோசிக்குற அறிவே இல்ல சே” மறைமுகமாக அனன்யாவை பார்த்தவாறே ரம்யாவிடம் கூறினான் அஸ்வத்... அவனது பேச்சில் துணுக்குற்றவளாக, “நான் ஒன்னும் வேணுனு செய்யல தேவை இல்லாம பேச வேணான்னு சொல்லு ரம்யா, இவனோடதுன்னு தெரிஞ்சு இருந்தா நான் அத தொட்டுருக்கவே மாட்டே” பதிலுக்கு சீறினாள் அனன்யா.

குப்பில் நடக்கும் பிரச்னையை கவனித்துக் கொண்டிருந்த மாணவர்கள் சிலர் தங்களுக்குள் கிசுகிசுத்து கொண்டனர், சிலரோ என்றும் நடப்பது தானே என்று தங்கள் வேலையில் ஈடுப்பட்டனர்... சிலரோ ஒவ்வரு நாளும் ஒவ்வரு கதை என்று சுவாரசியமாக பார்த்துக்கொண்டிருந்தனர்...

இந்த பிரச்சனையின் தலைக் கதாப்பாத்திரங்களோ ஒருவர் மீது மற்றவருக்கு இருந்த கோவத்தில் வெவ்வேறு திசைகளில் சென்றனர்...

னன்யா... ஹே அனன்யா எந்திரி மணி 6.30 ஆச்சு பாரு ஸ்பெஷல் கிளாஸ் இருக்குல எந்திரி...” தாயின் அழைப்பில் கண் விழித்து பார்த்த அனன்யாவிற்கோ “ச கனவா...” என்று இருந்தது. கனவு களைந்து எழுந்து எதுவும் பேசாமல் அமர்ந்து இருந்தாள் அனன்யா...

****அனன்யா பத்தி என்னங்க சொல்றது யூஷுவல் வெளில இன்னொசென்ட் வீட்ல அராத்து ஹீரோயின்ங்க போக போக நீங்களே கதைல பாத்துகோங்க****  

“என்னடி எந்துருச்சதும் திருதிருன்னு முளிக்குற, என்ன படிக்க சொன்னது எதுவும் படிக்கலையா? இப்பதா நியாபகம் வருதா? போ போ நல்லா திட்டு வாங்கு” என்று நக்கலடித்தவாறு தன் காலை வேலைகளை செய்துக் கொண்டிருந்தார் ஹேமா...

அவரது நக்கல் பேச்சில் தன் நினைவிற்கு வந்தவளாய் ஹேமாவை முறைத்தாள்... “என்ன டீச்சர் அம்மா கொழுப்பா? நாலா கிளாஸ் first தெரியும்ல... நா படிக்குறேனு எப்பதா நம்ப போறிங்களோ ஹ்ம்ம்” என்று அலுத்துக் கொண்டாள்...

“எப்டிடி நம்புறது நைட் என்னோடவே சேந்து படுத்துடுற காலைல நான்தா எழுப்புறே எப்ப படிக்குரனே தெரியல அப்பறம் எப்புடி நம்புறது எனக்கு என்னமோ டெஸ்ட்ல பிட் அடிக்கிரியோனு தோணுது” என்று பதிலுக்கு காலை வாரினார் ஹேமா.

“நாங்களா நின்ன எடத்துல இருந்தே 6 அடிக்குற ரகம் எப்போ படிக்கிறோம் எப்படி படிக்கிறோம்னே தெரியாது ஆனா வாங்க வேண்டிய மார்க்க கரெக்டா வாங்குவோம்” என்று கூறி இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொண்டாள்.

“என்ன முட்ட மார்க்கா?” என்று அதற்கும் சளைத்துக் கொள்ளாமல் பதில் கொடுத்தார் ஹேமா.

ம்ம்ம் ஹ்ம்ம் இதுக்குள்ளா டீச்செரம்மா சளைக்க மாட்டாங்க என்று எண்ணிக்கொண்டு “அம்ம்ம்ம்ம்மா புலிக்கு பொறந்தது பூனையாகுமா சொல்லுங்க அம்மா சொல்லுங்க” என்று பெரிய வசனம் பேசிய தினுசில் போஸ் குடுக்க... ஹேமா சிரித்து விட்டார் “போடி போ போய் கெளம்பு” என்றார்...

காலையில் வந்த கனவு மனதோடு இருப்பினும் ஹேமாவோடு பேசியதில் கனவை மறந்து குளிக்க சென்றாள். ஹேமா அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்... விவேக் தன்னை தானே ஸ்ட்ரிக்ட் என்று சொல்லி கொள்வதுப் போல் ஸ்ட்ரிக்டான டீச்சர். அது போல் தான் வீட்டிலும் ஸ்ட்ரிக்டாக விஷயத்தை ஆரம்பித்து காமெடியாக முடிப்பார். ஸ்ட்ரிக்டான ரோல் ஹேமாவிற்கு பொருந்தாததால் அனன்யாவிடம் தோழியாகவே பழகுவார். இவருக்கு கோவம் தரும் ஒரே விஷயம் எல்லா செயல்களிலும் பெர்பெக்டாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார் ஆனால் அது பெரும்பாலும் அனன்யவால் நிறைவேற்ற முடிவதில்லை அதுவே காலை சுப்ரபாதத்திற்கு வழி வகுக்கும்.

மணி 8 என்று பார்த்து பள்ளிக்கு போக அவசர அவசரமாக வெளியே வந்தாள் அனன்யா. “ஹே சாப்டுட்டு போடி” என்று கத்தியவாறு சமையல் அறையில் இருந்து வெளியே வந்தார் ஹேமா. “இல்லாமா டைம் ஆச்சு நா கெளம்புரே” என்று கூறி அவசரமாக சென்றாள் அனன்யா... “ஹ்ம்ம் அர்ஜுன் படுச்சதே எனக்கு தெரியல அவன்பாட்டுக்கு அமைதியா படுச்சா ஸ்கூல் போனதும் தெரியல இப்ப final இயர் வந்ததும் தெரியல, இவ இப்பதா 12th  படிக்குறா அதுக்குள்ள தலையே சுத்துது” என்று பொருமியவாறு தன் வேலையை தொடர்ந்தார் ஹேமா.

மனைவியின் புலம்பலை கேட்டு பூஜை அறையில் இருந்து வெளியே வந்தார் வெங்கட், அவருக்கு இந்த புலம்பல் பழகியதால் புன்முருவளுடனே மனைவியிடம் சென்றார். “என்ன ஹேமா காலைலேயே புலம்ப ஆரம்பிச்சுட்ட உனக்கு டைம் ஆகலையா?” என்று வினவியவாறு மனைவிக்கு சமையலில் உதவி செய்ய வந்தார்.

“பின்ன என்னங்க காலைல ஸ்பெஷல் கிளாஸ்க்கு போனா சாயந்தரம் வரவும் ரொம்ப நேரம் ஆகுமேன்னு சாப்பிட சொன்னா உங்க பொண்ணு பி.டி.உஷா க்கு தங்கச்சி மாதிரி ஓடி போறா இது காலைல சீக்ரம் எந்திரிகுரதுல காட்டனும் நல்லா கும்பகர்னி மாதிரி தூங்க வேண்டியது இல்ல ஒருமணி நேரம் குளிக்க வேண்டியது அப்பறம் சாப்புடாம ஓட வேண்டியது ஹ்ம்ம்” என்று பொருமிய மனைவியை கண்டு வெங்கட்டிற்கு சிரிப்பாக இருந்தது.

“அட விடு ஹேமா ஒரு நாள் பசி எடுத்தா அடுத்த நாள் உன்கிட்ட அடம்பிடுச்சு கேட்டு சாப்பாடு எடுத்துட்டு போவா பாரு” என்று சமாதானம் செய்தார்.

“யாரு உங்க பொண்ணா? பசி எடுத்துட்டாலும் க்கும்ம்ம்ம் 12 th  படிக்குற மாதிரியா தெரிரா தொடப்ப குச்சிக்கு தங்கச்சி மாதிரி இருக்கா...” என்று மனதில் இருக்கும் வேதனையை கூறினார் ஹேமா.

“ஆமா ஆமா அப்படியே உன் மகன் தேசிங்கு ராஜா மாதிரி இருக்குறதா நினைப்பா?” என்று அவர் கேக்க

“பின்ன இல்லையா, என் மகனுக்கு என்ன கொறச்சல் ராஜாவே தா, நல்லா படுச்சு தன்னோட முயற்சிலேயே கேம்பஸ் இன்டர்வியூல செலக்ட் ஆகிருக்கானாக்கும்” என்று தன் மகனின் பெருமை பேசினார் ஹேமா.

“என் மகளுக்கு மட்டும் என்னடி கொறச்சல்? பட்டத்து இளவரசி டி அவ உன் பையனவிட அழகா இருப்பா” என்று பெருமை பேசிக்கொண்டார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.