(Reading time: 16 - 31 minutes)

04. நினைத்தாலே  இனிக்கும்... - Prishan

ninaithale Inikkum

நாசீயில் குபீரென ammonia-த்தின் வீரியமிக்க வாசனை தாக்கவும், நந்துவின் நினைவு படீரென விழித்தது. அதன் பலனாக கண்களை மெதுவாக பிரித்து, வெளிச்சத்தை உள்வாங்கி அருகில் இருந்தவர்களைப் பார்த்தாள் நந்து.

கையில் spirit தோய்த்த பஞ்சுடன் அருகில் மண்டியிட்டு அமர்ந்திருந்தாள் அனு. நந்து கண்விழித்ததைப் பார்த்து புன்னகைத்தாள். எங்கிருந்தோ வந்த ஆரு, தண்ணீரில் நனைத்த காட்டனைக் கொண்டு அவளின் முகத்தை துடைத்து விட்டாள். இதனால் பெரிதும் தன்னிலை அடைந்த நந்து, அதுவரை ஜெனியின் மடியில் படுத்து இருந்தவள் எழுந்து அமர்ந்தாள்.

அப்பொழுதுதான் மொத்த class அவளையே திரும்பி பார்ப்பதைக் கண்டு உதட்டை கடித்தபடி, தலை குனிந்தாள்.

கவினின் “கெக்கே பிக்கே” சிரிப்பு சத்தம் மட்டும் தனியாக கேட்டது

“அவளா… நீயீ! இருட்டுன்னா பயமா உனக்கு, குட்டிப் பாப்பா..?” என்று கேட்க

(நேரம் காலமே தெரியரதில்லை கவின் உனக்கு………)

மூன்று பெண்களும் கோபத்துடன் பேசவர அதுவரை கைகளை கட்டி கதவில் சாய்ந்தபடி அவர்களை ஏவிக் கொண்டிருந்த Prof. Dr.Ismail, Asst. Prof Anatomy

“Show off … எல்லோரும் அவங்கவங்க Placeக்கு போங்க இதுமாதிரி எப்படியும் daily ஒரு case வரும். அப்ப பாத்துக்கலாம்” என்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மாணவர்களைப் பார்த்து கூறிவிட்டு, இவர்களிடம் திரும்பி

“உங்கள்ள யாராவது ஒருத்தர் இந்த பொண்ண கான்டீன் கூட்டிட்டு போய் sugarated drink ஏதாவது வாங்கிக் குடுங்க… இன்னிக்கு கிளாஸ்க்கு வரவேண்டாம். அதோட நாளைக்கு க்ளாஸ்க்கு கொஞ்சம் தேத்தி கூட்டிட்டு வாங்க…” என்றார்.

“இவ்வளோ நல்ல professor-அ என் வாழ்க்கையில் நான் பார்த்ததே இல்லை….” என்று கவின் மனதிற்குள் அவரை உயர தூக்கி வைத்த வேளை, அவனிடம் திரும்பிய professor

“அப்புறம்… ராஜா, |அவளா… நீனு| கேட்டல்ல, நீதான் இன்னிக்கு fullஅ dissect பண்ண போற. பண்ணி முடிச்சதுக்கு அப்புறம், அத திருப்பி formalin boxக்குள்ள dispose பண்ணி, lab எல்லாம் பூட்டிட்டு Keys எடுத்துட்டு போயிறு… ஏனா...நாளைக்கு நீதான் சீக்கிரம் வந்து வெளியே எடுத்து ரெடியா வைக்கனும் என்ன….?”

என்றபடி அவன் தோள்மேல் கை போட்டு, கவினை கிட்டதட்ட இழுத்துச் சென்றார் professor dr.Ismail

“அ………வ்” என்று வடிவேலு பாணியில் முகத்தை வைத்துக் கொண்டு

“நம்ம நாக்குல சனி பகவான் டபுள் காட் போட்டு செட்டிலாகிட்டாரு போல இருக்கே… இவரு நம்மல விட வில்லங்கம் பிடிச்சவரா இருக்காரு… Acting அ போட வேண்டியது தான்…” என்று மனதில் நினைத்தபடி பவ்யமாக அவருடன் நடந்தான்.

அவர்கள் போவதைப் பார்த்த நந்து “எனக்கு ஒன்னுமில்லை… நான் தனியா கேண்டின்....” என்று சொல்ல வந்தவள் மிடரு விழுங்கி

“class முடியுர வரைக்கும் இங்கயே வெளிய wait பன்றேன்… நீங்க போய் class attend பண்ணுங்க ”

“இல்லை நந்து… அனுவும், ஜெனியும் class போகட்டும்…. உனக்கு இந்த formation smell எ பிடிக்கலை…. கொஞ்சம் fresh air கிடைச்சா நல்லாயிருக்கும்….நாம கொஞ்ச நேரம் வெளில போகலாம்……நீங்க போங்க, சார் வெயிட் பண்றார் பாரு…” என்றபடி அவர்களை அனுப்பிவிட்டு, நந்துவின் கையை பிடித்தவாரே நடந்து hostelகு கூட்டிச் சென்றாள் ஆரு.

“hostelக்கா போறோம் ஆரு..” என நந்து கேட்கவும்

“ஆமா”

“இந்த நேரம் போனா warden ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?”

“ஒன்னும் சொல்ல மாட்டங்கடா… அப்படியே கேட்டா faint ஆயிட்டனு சொல்லலாம்….” என்றபடி hostelக்கு சென்றனர்.

Hostelல அடைந்து, மெஸ்ஸிக்குள்ளயே இருக்கும் கேன்டினில் ஆரு, ஒரு கூல்டிரிங்ஸ் வாங்கி, இருவரும் அதை அருந்தியபடி நந்துவின் ரூமில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

“சாரி ஆரு, என்னால உன்னோட first class கட் ஆகிருச்சு” என்று வருத்தத்தோடு சொல்ல,

“அதெல்லாம் ஒன்னுமில்லை எப்படியும் அனு வந்து என்ன நடந்தது என்று ஒன்றுவிடாமல் சொல்லிவிடுவாள். உன்ன படுக்கவச்சு dissect பண்ணி கூட காட்டுவாள். நீ ஒன்னும் feel பண்ணாத…..” என்றாள் ஆரு இலகுவாக.

ஆரு கூறியவுடன் நந்துவிற்கு தான் அறைகுறையாக பார்த்த கெடாவர் கண் முன்னாடி வந்து போனது, நந்துவிற்கு உடல் சிலிர்த்தது. தலையை குலுக்கி அந்த நினைவை நிறுத்தினாள்.

அவளையே யோசனையுடன் பார்த்த ஆரு

“நந்து, நீ சின்ன வயசில் இருந்தே இதுமாதிரி பயப்படுவியா?” என்று கேட்டாள்.

“ம்…” என்று யோசித்தவள்

“ஆமான்னுதான் நினைக்கிறேன் ஆரு … நான் 1st, 2nd படிக்கறப்போ லீவுக்கெல்லாம் ஊருக்கு…. காரைக்குடிக்கு போவோம். அங்க நிறைய பசங்க இருப்பாங்க அதுலையும் ‘பிரபு’ன்னு ஒருத்தன் இருப்பான். முகமெல்லாம் ஞாபகம் இல்லை… ஆனால் பெயர் நல்லா ஞாபகம் இருக்கு, அவன் எப்பவும் என்னை பயமுறுத்திட்டே இருப்பான்…. ஒது தடவ ஏதோ இருட்டு ரூமில் போட்டு பூட்டிட்டு போய்ட்டான்…. ரூமுக்குள்ள ஒரே அகோரமான சத்தம் கேட்டது… நான் அழுதுதழுது மயங்கிப் போய்ட்டேன். அப்புறம் என்ன நடந்துச்சுன்னு ஞாபகமில்லை. ஆனா அதிலிருந்து இருட்டு அமானுஷயம்னா பயமா இருக்கு ….” என்றாள்.

 “அப்புறம் ஏன்டா, இந்த fieldஅ choose பண்ணின?..”

“இதெல்லாம் இருக்கும்னு தெரியாது ஆரு”

அப்பாவியாய் சொன்னவளை அனுதாபத்துடன் பார்த்தாள் உடனே முக பாவனையை மாற்ற, கறாராக

“இப்படியே விட முடியாது நந்து எப்படியும் இத நீ deal பண்ணிதான் ஆகனும்… பயத்துட்டே இருந்தா எப்படி படிக்கறது? அதையும் ஒரு book மாதிரி பொருளா நினைச்சுக்கோடா…” என்றாள்.

அவளும் அதையே யோசித்திருப்பவள் போல

“ஆமாம் ஆரு … இப்படி எல்லார் முன்னாடியும் மயங்கி விழறதை விட, பயத்த மறச்சுட்டு போய் நின்னுடலாம்… கொஞ்சம் அவமானமா இருக்கு” என்றாள்.

அவமானம் என்றவுடன் மற்றது (காலையில் நடந்தது) எல்லாம் நினைவுவர முகம் கடினமாக

“இந்த மனுசங்கள விட அந்த கெடாவர் எவ்வளவோ மேல் ஆரு. இவங்களையே சமாளிச்சுத்தான் ஆகனும்கிறப்போ இது பெரிய விஷயம் இல்ல போல அனு…” என்றாள் தீர்க்கமாக

நந்துவையே ஆச்சர்யத்துடன் பார்த்தாள் ஆரு , சற்றுமுன் அப்பாவியாய் விழிவிரித்து பேசியவளா இவள்!!!; பரவாயில்லை, மனதில் திடமாகத்தான் இருக்கிறாள். நாம் நினைத்த அளவிற்கு மோசமில்லை… ஒரு அனுபவத்திலேயே நன்றாக திடமாகிவிட்டாள் என்று மனதிற்குள் மெச்சியபடியே

“That’s the spirit” என்றாள் ஆரு, அவள் கைகளை பிடித்தபடியே.

சிறிது நேரம் இப்படியே பேசியபடியே கழிய, Lunch time வந்தது. (இரண்டு girls சேர்ந்தா பேசறதுக்கு matterஆ இல்ல…)

Lunch breakகிற்கு உள்ளே வந்த அனு படு உற்சாகமாக இருந்தாள்.

“ஆரு, Ismail sir பயங்கற ஜோவியல் தெரியுமா, எப்படி காமெடியா பேசறார்… அவர் இன்னிக்கு கவினை படுத்தின பாடு இருக்கே…ஐயையையோ… நான் என்னைக்கும் மறக்கவே மாட்டேன்…” சொல்லும் போதே அவளுக்கு சிரிப்பு பீறிட்டது.

“சிரிச்சது போதும் அனு… என்ன நடந்ததுன்னு சொல்லு” என்றாள் ஆரு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.