(Reading time: 14 - 27 minutes)

11. நினைக்காத நாளில்லை ரதியே - ஸ்வேதா

Ninaikkaatha Naalillai rathiye

கிருஷ்ணா வர போகிறான் இன்னும் இரண்டு நாட்களில் என்று குதுகலமுடன் வீட்டினுள் நுழைந்த கவிக்கு மீராவின் இப்படி சத்தமான அழுகை எதெற்கென என்றே தெரியவில்லை. இருகின முகத்தோடு இருந்தவள், பின் தனம்பிக்கையுடன் மிளிறினாள் ஏன் இப்படி அழுகிறாள்.

கவி வந்ததும் "ஐயோ கவி அவன் சொன்னது தான் உண்மை என்று காட்ட இப்படி செய்துட்டானே, நான் அப்படியில்லை கவி" இதற்க்கு மேல் பேசாமல் அழுதுக்கொண்டே இருந்தாள்.

ஆபத்பாண்டவன் ராம்க்கு மெசேஜ் அனுப்பி விட்டு அருகிலேயே அனுசரனையாக உட்கார்ந்திருந்தாள். கவி தயாராக வந்தாள். எப்போதும் போல் ஆரம்பித்தாள்

"மீரா ஏன் இப்படி அழுற, நாளை காலை எல்லாருமே வந்திருவாங்க, ஆன்டி அங்கிள், அம்மா, அப்பா என்று. எதுவானாலும் அழுதுட்டே இருந்தா சரியாகுமா என்ன....

புதுசாக பார்த்து வைத்த மெனுக்கு எல்லாம் ரெடி பண்ண வேண்டாமா எழுந்திரி"

"வேண்டாம் எதுவுமே வேண்டாம், எனக்கு யார் முகமும் பார்க்கவே பிடிக்கலை கீர்த்தனா"

ழும் குரலில் அவள் விக்கி விக்கி பேசி சிறிது நேரத்தில் ராம் வந்தான். அவள் அவன் முகத்தை பார்க்கவே இல்லை. ஆண்டி டிப்ரெசண் இன்ஜெக்சன் போட்டு அவளிடம் சிறிது நேரம் பேசி பார்த்தான். அவள் அழுதாளே தவிர பேசவேயில்லை.

அவள் பேசியதை வைத்து ஊகித்தான் மஹி தான் காரணமாக இருக்க முடியும். கீர்த்தனா சொல்லி அறிமுகமான நாள் முதல் அவன் அதை பலமாக நம்பினான். மீராவின் மாற்றத்திற்கு மஹி மட்டும் தான் காரணியாக இருக்க முடியும். இறுகிய முகத்துடனே இருந்தாலும் மஹி பெயரோ இல்லை அந்த கல்லூரியின் நினைவுகளை கிளறினால் அவள் கண்கள் ஒளிப்பெற்று மங்கும்.

அவன் சீனியர் டாக்டர் ஒருவரிடம் டிஸ்கஸ் செய்த போது பெண் மனம் எதை வேண்டும் ஆனாலும் தாங்கும், அவளை பிறர் தப்பாக பேசுவதை தாங்காது. அதில் ஆரம்பிக்கும் அவள் பலம் இழக்கும் தன்மை என்று சொல்லி அவளை தேற்றும் விதம் பற்றி சொல்லியும் கொடுத்தார். அதன் படி தான் இவ்வளவு நாள் அவளுக்கு வார்த்தைகளிலே சிகிச்சை கொடுத்து கொண்டிருந்தான்.

அவளாக வாய் விட்டு மனபாரம் சொல்லட்டும் என்று பொறுமை காத்தனர். அவள் அறையில் அமர்ந்து யோசித்து முடிவிற்கு வந்தவனாக எழுந்து வெளியே வந்தான்.

கீர்த்தனா அவன் கையை பிடித்து "தேங்க்ஸ் ராம், மீராவிற்கு எதுவும் ஆகாது இல்லை என்றதும்"

"டாம்ன் இட், இதெல்லாம் மட்டும் தான் உன் கண்களுக்கு தெரியும், நானோ நம்ம குடும்பம் எதுவும் தெரியாது.??" சத்தமாக கத்தி கேட்டான்.

அதற்க்கு கீர்த்தனா " ராம் கொஞ்ச நாள் ராம், மீரா சரியானதும்... என்று பேசிக்கொண்டே இருக்கும் போதே அவன் கதவை அறைந்து சாற்றி விட்டு சென்று விட்டான்.

கீர்த்தனா அழுதப்படியே உறங்கி விட்டாள். கவிக்கு உறக்கம் வரவில்லை.எப்படி வரும் ஆசை நாயகன் வரப்போகும் குதுகலம் ஒரு புறம் நடந்த சம்பவங்கள் கொடுத்த அதிர்ச்சி ஒரு புறம்.

அப்போது அவளுக்கு ராமிடம் இருந்து டெக்ஸ்ட் மெசேஜ் வந்தது "பயபடாதே, இது நடந்தது ஒரு பெரிய மாற்றத்திற்கு தான்.," கீர்த்தனா மொபைளுக்கும் மெசேஜ் டோன் கேட்டது. என்னவாக இருக்கும் இவளுக்கு சொன்னதையே காதலுடன் சற்றும் விரிவாக அனுப்பியிருப்பான்.

ட்கார்ந்த படியே உறங்கி விட்டாள். காலை ஆறு மணிக்கு கிட்சனில் சத்தம் கேட்டது. மீரா பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தாள். தலைக்கு குளித்து முடித்து இருந்தாள்.

"குட் மார்னிங்…, கவி காபி குடிக்கிறாயா"

"ரெடி பண்ணு மீரா, பிருஷ் செய்துட்டு வரேன்.."

பாத்ரூம்குள் போனவளுக்கு குதிக்க வேண்டும் என்றிருந்தது. ராம் சொன்ன மாற்றம் இது தானா என்றிருந்தது. குளித்து முடித்து வந்தவள் எதிரில் மொபலை பார்த்தப்படி கீர்த்தனா நின்றிருந்தாள்.

ஓடி சென்று தோழியை கட்டிக்கொண்டாள். இருவரும் உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் வெளியே சோகமாக இருப்பதுப்போல் காட்டிக்கொண்டனர்.

கிருஷ்ணா இந்தியா வந்ததும் செய்தது மீராவின் கையில் ஒரு ஐபோன் திணித்து தான். அவள் மனசு ஒடிந்து போய் மாறியிருப்பது போலவே கட்டிக்கொள்ளாமல் அவன் எப்போதும் போல வளவளத்துக்கொண்டே இருக்க மீராக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

நாட்கள் நகர மஹி எதிர் பார்த்த அந்த டிசைன் கல்லூரியில் ப்ரெசென்ட் செய்யும் நாள் வந்தது. மூன்றாம் மனிதரிடம் கூட சிரித்து பேசியிருப்பளோ மீரா. மறந்தும் கூட அவனை தெரிந்தவன் போல் காட்டிக்கொள்ளவில்லை.

"திட்டி பேசு, அசிங்கமான வார்தையில் அவமான படுத்து, " து" என்று உமிழ், ஆனால் இப்படி கொள்ளாதே மீரா.. கெஞ்சிக்கொண்டிருந்தது எதற்கும் தயாராக வைத்திருந்த இதயம் என்று நினைத்துகொண்டிருந்த மஹியின் உள்ளம்.

முடிந்தது!!! அந்த நாளோடு முதுகலை படிப்பும் முடிந்தது. இனி தேர்வு முடிவு வந்த பின் தான் அடுத்த வேலை. ஆசிரியர்கள் மீராக்கு வாழ்த்துக்குள் சொல்ல, அடுத்து பி.எச்.டி அதற்க்கு பின் இந்தியாவிலே இருக்க கூடாது. அவள் மூளை சொல்ல.

இதயம் மட்டும் "எங்கே எதற்கு ஓடனும் மீரா??? ஓடனும் ஆன பின் எதற்கு தள்ளி போடுகிறாய் இப்போதே செய்யேன்," என்றது.மீராவின் குழம்பிய நெஞ்சம் அமைதி தேடியது. வண்டி எடுத்துக்கொண்டு அதன் போக்கில் செலுத்தினாள்.

போதும் போல தோன்ற அந்த கடல் பக்கமிருக்கும் கிராம திண்ணை வீட்டின் திண்ணையில் அமர்ந்து விட்டாள். உள்ளே யாரோ குர்ஆன் ஓதும் சத்தம் கேட்டது. அமைதியாக அமர்ந்து விட்டாள்.

அது பாம்பு கடிக்கு வைத்தியம் பார்க்கும் ஒரு வைத்தியர் வீடு. அவர் இஸ்லாமியர். முகத்தில் அமைதியும் நேர்மறை ஆற்றலும் தாண்டவம் ஆடியது.

"பொண்ணே,உனக்கு எங்கே பாம்பு கடி??" அவர் அக்கறையாக கிண்டலான தொனியில் கேட்டார்.

மீரா பேசவே இல்லை, அவர் அவள் முகத்தையே பார்த்து விட்டு.

"உலகத்துள்ள எல்லா விஷத்துக்கும் முறிவு இருக்குதம்மா. கழுத இந்த குழப்பத்துக்கும், சஞ்சலதுக்கும் மட்டும் தான் முறிவு இல்லை போல...சத்த இரு வரேன்" என்று சொல்லி உள்ளே சென்று கையில் பானை முழுக்க தண்ணீரும் கையில் வெள்ளை மாத்திரை போல் நிறைய எடுத்து வந்தார்.

"இந்தா இந்த தண்ணியை முடியற அளவுக்கு குடி" என்றார்

மீரா முழிக்க

"அட என்ன புள்ள தண்ணியை உலகளாவிய கரைபாணி சொல்றாங்க உன் பிரச்சனைய கரைக்காதா என்ன?? உன் கிட்டயே தண்ணியை பத்தி சொல்லுதேன் பாரேன்" என்று தலையில் அடித்துக்கொண்டார்.

மனதில் விசித்திரமாக பட்டது, மீரா தண்ணீரை குடித்தாள்.பின் அவர் கொடுத்த பெரிய வெள்ளை பெப்பர்மின்ட் போல இருந்த மாத்திரையை கொடுத்து சாப்பிட சொன்னார். பின்

"என்னை கேட்டன்னா உன் பிரச்சன்னைக்கு தீர்வு உன் கிட்டதா புள்ள இருக்கு, உன் உள்மனசு சொல்றதை செய் புள்ள, அவன் ஆணை அப்படி தான் சொல்லுது, ஆமாம் " என்று மேலே கை காட்டி எல்லாம் தெரிந்தவர் போல் சொன்னார்.

"போ வீட்டுக்கு போய் வயிறு நிறைய சாப்பிட்டு நிம்மதியா தூங்கு, உன்னை பிக்கும் பிரச்சனையெல்லாம் இனி தெளிவாகும் பாரு, நல்லதே நினைக்கறவங்களுக்கு நல்லது மட்டும் தான் நடக்கும் " என்று விடைகொடுத்து வழி அனுப்பினார்.

மீராவிற்கு ஆச்சரியம்.அவர்க்கு என்ன தெரியும் என் பிரச்சனை பற்றி.எனக்கே என் மனசு என்ன நினைக்கிறது புரியல.இவருக்கு எப்படி புரிந்தது என்றிருந்தது. ஆனாலும் விடுதலை உணர்வு கிடைத்திருந்தது வந்த வழியே திரும்பி வீட்டிற்க்கு செல்லுகையில்.

கரை புரண்டு ஓடியது நாட்கள். கிருஷ்ணா அவன் தந்தையின் தொழிலை இனி அவன் “பார்க்கிறேன்” என்று ஒப்புக்கொண்டுஅதற்கான முழு வீச்சில் இறங்கினான். கீர்த்தனா ராம் திருமணம் கோவையில் என்று தேதியுடன் முடிவானது. மீரா மனம் எதையோ தேடியது.தேடல் எதைப்பற்றி என்று தான் தெரியவில்லை.

அடுத்தது என்பதுப்போல் கவி வாடி உட்கார்ந்திருந்தாள். கேட்டதற்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்களாம். அவள் அக்காவின் கணவனின் ஒன்று விட்ட தம்பியாம்.

ந்த வார இறுதியில் கிருஷ்ணாவும் மீராவும் கவியுடன் சென்று அவள் அப்பாவிடம் பேசவது என்று முடிவானது. கவியின் மன மாறுதலுக்காக என்று ரெஸ்டரண்ட் சென்றார்கள்.

சுவாரஸ்யமான பேச்சு, கிண்டல் என்று போக நடுவில் வந்து சேர்ந்தான் மஹி. மீராவிற்கு பேச்சு வரவில்லை. அவன் அவளை கண்டுக்கொள்ளாமல் மற்றவரிடம் மட்டுமே பேசுவது எரிச்சலாக இருந்தது. "நானும் இருக்கேன் " என்று கத்த வேண்டும் போலிருந்தது.

ரெஸ்டாரன்ட் வாசலில் பிரிகையில் மட்டும் ஒருமுறை திரும்பி பார்த்து சென்றான். மீராவிற்கு திருப்தியாக இருந்தது. கவி மதுரைக்கு இவர்களுடன் அவனும் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது கூட கோபம் வரவில்லை.

அந்த வெள்ளி இரவு மதுரையை நோக்கி பயணத்தில் இருந்தார்கள் நால்வரும். கிருஷ்ணா காரை செலுத்த பக்கத்தில் மகேந்திரன். பின் சீட்டில் பெண்கள் இருவரும்.

கிருஷ்ணாவும் மகேந்திரனும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே வந்தனர். எப்போதும் கவி செய்யும் வேலை இந்த முறை மீரா செய்துக்கொண்டிருந்தாள். அவள் கையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் ஆறுதல் சொல்லும் விதமாக.

"இன்னும் மூன்று மாசம் தான் மச்சி இந்த ஊர்லே இருப்பேன்" மஹி

கேட்டதும் மீராவின் செவிகள் கூர்மை ஆகின

"எனக்கு எம்பிஏ படிக்க ஐஐஎம் அஹமெதாபாத்தில் இடம் கிடைக்க போகும்"

"டேய் ஐஐஎம் பெங்களூர் சேரலாம் தானே, நீ இருக்கிற தைரியம் தான் நான் பிஸ்னெஸ்ஸில் குதிச்சிருக்கேன் மச்சி.."

"கவலைப்படதே பிரதாபிர்க்கும் கமலேஷ் தங்கைக்கும் கூடிய சீக்கிரம் திருமணம், அதனால் இந்த கம்பனி மொத்தமும் அவனுக்கு கிடைக்கிறது"

"இந்த பிஸ்னெஸ் பார்த்துக்கிட்டே தான் எம்பிஏ படிக்க போகிறேன், உனக்கும் உதவி செய்கிறேன் " மஹி

பின் அவர்கள் பேச்சு பணம் செய்யும் விதத்தை பற்றியே தான். சுற்றி இருப்போர் எல்லாம் இணைகிறார்கள் என்ற செய்தி கசப்பு இனிப்பு கலந்து கொடுத்தது மீராக்குள்.

கவியின் அப்பா உட்கார்ந்து அமைதியாக கேட்கும் விதமாக பார்த்தார்

மீரா பேச தொடங்கினாள் "அங்கிள், கிருஷ்ணா கவிக்கு எல்லா வகையிலும் பொருந்துவான் அங்கிள்"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.