(Reading time: 33 - 65 minutes)

17. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

Yeppa pei mathiri irukka

க்ஷ்மி பூமாவிற்கு அமெரிக்காவிற்கு அனுப்பி விடுவதற்கு பொடி வகைகள், பலகாரங்கள் என வேலையாக இருக்க,  ஸ்ரீயும், விந்தியாவும் அவருக்கு உதவுவதற்கு பிள்ளைகளை சந்தியாவிடம் விட்டுச் சென்றனர்.

சந்தியா கால் வலி குறைந்து முந்தைய நாள் போல் படுத்தே இல்லாமல், சற்று எழுந்து உட்கார, ஓரிரு எட்டுக்கள் லக்ஷ்மியின் துணை இல்லாமல் குளியலறைக்கு சென்று வர முடிந்தது.

அன்று சாயங்காலம் மது, நித்தி, நிக்கியுடன் வந்தாள். அவள் வந்த சற்று நேரத்தில் பட்டு மாமியும், சக்தியும் வருகை தர, சந்தியாவை பார்த்த சக்தி,“சாரி ஜந்து ..உனக்கு நிஜமாவே கால் உடைஞ்சு போச்சுன்னு தெரியாம, நேத்து கிண்டல் பண்ணிட்டேன்.” என கெஞ்சலாக ஆரம்பித்தாள். “சும்மா ட்ரை பண்ணாதடி. உனக்கு என்கிட்ட சென்டிமென்ட்டா பேச வராதுல்ல...சக்கு மக்கு“ என்றாள் சந்தியா நமுட்டி சிரிப்புடன் அவளை கிள்ளிய படி. “கண்டிப்பிடிச்சிட்டியா பிசாசு. சதையே கிழிக்கிற மாதிரி கிள்ளுற.  எம்.எஸ் கிட்ட சொல்லி உன் மேல பொய் கேஸ் போட்டுடுவேன்” என அவளை கிள்ளிக் கொண்டிருந்த  சந்தியாவின் கை மேல் சத்தென ஒரு அடி வைத்து மிரட்டினாள்  சக்தி. “50 கேஜி தாஜ்மகால்...நினைவிருக்கட்டும். நேத்து நேச்ச்ரோபதி டாக்டரை பாத்தியா? யோகா க்ளாஸ் போனியா ?” என அவளை பதிலுக்கு மிரட்டி விட்டு, அவள் எடை குறைக்கும் முயற்சிகளை விசாரித்தாள். பேச்சு வாக்கில் பட்டு மதுவை யாரென்று விசாரித்தார். அப்பொழுது தான் நினைவு வந்தவளாய், மதுவை சக்திக்கும், பட்டுக்கும் அறிமுகம் செய்து வைத்தாள் சந்தியா.

“மது, பட்டு மாமி சின்ன வயசுல சித்தி கொடுமை. இத்தனைக்கும் அவங்களை வளத்தது அம்மாவோட தங்கச்சி தான். ஆனா, கல்யாணத்துக்கு பிறகு அவங்க மகாராணி, அப்படி ஒரு சூப்பர் ஆத்துக்காரர், எங்க மாமா. மாமி  சின்ன வயசுல ரொம்ப கஷ்டப்பட்டாங்க, அதுனால எங்களை  இந்த வயசுல பெத்தவங்களை சங்கடபடுத்தாம எவ்வளோ அனுபவிக்கணுமோ அவ்வளோ என்ஜாய் பண்ணுங்க, இந்த வயசு திரும்ப வராதுன்னு அடிக்கடி சொல்லுவாங்க. சோ ட்ரூ இல்ல?” என கேட்டாள் மதுவிடம். புரிந்ததோ புரியலையோ “ஆமாம்" என தலையாட்டினாள் மது.  

யாழினி தலைமையில் நித்தி, நிக்கி, அர்விந்த் எல்லாரும் சேர்ந்து அதே அறையில் விளையாடிக்  கொண்டிருந்தனர். பட்டு லக்ஷ்மியிடம் பேச சமயலறைக்கு சென்று விட்டார்.

மதுவின் தாயாரின்   நட்பு வட்டம் சரியாக அமையாததால் தன் மகள் வாழ்க்கை பாழாகி விட்டது என அது போல் பேத்தி வாழ்க்கையும் அமைந்து விடக் கூடாது என மதுவை தோழிகளுடன் அவ்வளவாக பழக விடமால் வளர்த்திருந்தார் மதுவின் பாட்டி. மது அவள் வயது ஒத்த பெண்களிடம் அதிகம் பழகவில்லை என்பது  சக்திக்கும், சந்தியாவிற்கும் அவளுடைய பேச்சிலே புரிந்து கொண்டனர்.

சந்தியா அவளிடம் “நீ புக்ஸ் படிப்பியா?” என கேட்க, அவள் ஒரு சில ஆன்மீக புத்தகங்களை சொன்னாள். “உங்க வீட்டில எல்லாருமே பழமா? சரி அதை விடு. வேற என்ன பண்ணுவ?“ என கேட்க, “ஸ்வெட்டர் பின்னுவேன்.” என்றாள் மது.

“அய்யோ...70, 80கள் வர்ற ஹீரோயின்களாட்டம் உன்னை வளத்து வைச்சிருக்காங்களே உங்க பாட்டி” என சக்தி அலுத்துக் கொள்ள,

“கடைசியா காதல் கோட்டைல தேவயானி ஸ்வெட்டர்  பின்னுவாங்கடி. அதுனால 90s ஹீரோயின் வரைக்கும் அந்த கலாச்சாரம் இருக்கு என திருத்திக் கொள். வரலாற்று பிழை.”, என்று விட்டு “வரும் எதிர்காலம் உன் மீது பழி போடும் பெண்ணே அதற்காக தான் வாடினேன்” எனப் பாடினாள்   சந்தியா. “தெய்வமே! விட்டுடுடி” என சக்தி கெஞ்சினாள்.

மது பக்கம் திரும்பிய சந்தியா, “வேற என்ன உருப்படியா செய்திருக்க உங்க பாட்டி கூட?” என கேட்டாள்.

மது, “பாட்டி கூட பஜனைக்கு போவேனே…” என்றாள் பெருமையாக.

சந்தியா அதற்கு “பாட்டி கூட பஜனைக்கு போய்,  நல்லா சிங்கி அடிக்க கத்துகிட்டியா?” என கிண்டலடித்தாள் சந்தியா. அவள்  கிண்டல் செய்வது தெய்வாதீனமாக மதுவிற்கு புரிந்து விட்டது.

“என்னை டீஸ் பண்ற தான?” என மதுவின் குரலில் உள்ள மாற்றம் அவள் எண்ணத்தைக் காட்டிக் கொடுத்தது.

“உங்க பாட்டியை தான சொன்னேன். உன்னை யாரு சொன்னா.” என்றாள் சந்தியா அவள் எண்ண ஓட்டத்தை உணர்ந்தவளாய்.

“இரண்டும்  ஒன்னு தான்” என்றாள் மது முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு.

“ஹய்யோ...இது தொட்டா சிணுங்கி. சந்தியா கவனம் தேவை” என அவள் மனது எச்சரிக்க,

“சும்மா கிண்டலுக்கு சொன்னதுக்கு எதுக்கு சீரியஸ்ஸா எடுத்துக்கிற. சரி, வேணா என் பாட்டியை நீ நூறு தடவை திட்டிக்கோ. இந்த டீலிங் பிடிச்சிருக்கா ” கேட்டாள்  சந்தியா.

“அவங்களை நான் திட்டினா  பீல் பண்ண மாட்டியா?” என மது கேட்க,

“அவுங்களே பீல் பண்ண முடியாத அளவுக்கு அவங்களுக்கு ரெண்டு ஸ்பீக்கரும்  அல்ரடி அவுட். அதான் தைரியமா திட்ட சொன்னேன். அவங்களுக்கு மட்டும் காது வொர்கிங் கண்டிஷன்ல இருந்தது, அவ்வளவு தான்….இப்படி நான் சொன்னதுக்கு அவங்க வாயில இருந்து…..விவேக் ஸ்டைல்ல சொல்லணும்னா கூவம்  ஆறே ஓடி வரும்” என சந்தியா சொல்ல சிரித்தாள் மது.

ந்த நேரம் பிள்ளைகளுக்கு உணவூட்ட வந்த விந்தியா அவர்கள் உரையாடலில் கலந்தாள். “காது கேக்குதோ இல்லையோ, தண்டட்டி பாட்டி எந்த நேரமும் சந்தியாவை வசை பாடிக்கிட்டே இருக்கும்...உன் வாயை பூட்ட ஒருத்தன் பிறக்காமலா போவான்? அவன்கிட்ட ஊமச்சியா  அடங்கித் தான் போகப் போறன்னு மிரட்டும்” என, சந்தியாவிற்கு முந்தைய நாள் கார்த்திக் ‘லிப்லாக்’ பற்றி சொன்னது நினைவு வர, அவள் முகத்தில்  வெட்கம் குடிக் கொண்டது.

சக்தி அவள் முக மாற்றத்தை  துல்லியமாக கவனித்தவளாய் “காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை” என முணுமுணுத்தாள். சிறிய வயதிலிருந்து சந்தியாவை பார்க்கிறாள். அவளின்  மனதை தெரியாதவளா சக்தி. கார்த்திக் மேல் சந்தியாவிற்கு ஈர்ப்பு இருப்பதை அவள் சொல்லாவிட்டாலும் அவள் செயல்களின் மூலமே  அறிந்து கொண்டாளே!

சக்தியை முறைத்து விட்டு, பேச்சை மாற்றும் விதமாக மதுவிடம், “மது, உனக்கு இந்த ஸ்வட்டர் பின்ற மாதிரி இன்னும் கைவசம் வேற ஏதாவது திறமை இருக்கா? நம்ம அன்பு இல்லம் பசங்களுக்கு ப்ரீயா சொல்லி கொடுக்க முடியமா? சனி இல்லை ஞாயிறு கொஞ்ச நேரம் வந்து சொல்லிக் கொடுத்தாப் போதும்” என கேட்டாள்.

“ஓ….எஸ். தாராளமா சொல்லித் தாறேன். வேற திறமைன்னா பரதநாட்டியம் எட்டு வயசுல இருந்து ஆடிக்கிட்டு இருக்கேன். அதை சொல்லிக் கொடுக்கிற கான்பிடன்ஸ் எனக்கு இருக்கு.” என்றாள் மது.

“சூப்பர் மது. இப்போ இல்லத்தில பெண் குழந்தைங்க  அதிகமாகிட்டாங்க. பசங்க எல்லாம் கிரிக்கெட் இந்த மாதிரி விளையாடி என்கேஜ் ஆகிக்கிறாங்க. டான்ஸ்ன்னா கேர்ள்ஸ்க்கு பிடிக்கிற விஷயம். அதுவும் பரத நாட்டியம் படிக்கிற வாய்ப்பு அவங்களுக்கு கிடைச்சா நல்லா தான் இருக்கும். நான்  இன்னும் ரெண்டு நாள்ல நல்லா நடக்க ஆரம்பிச்சிடுவேன். உனக்கு ஓகேன்னா இந்த வீக்கென்ட்டே உன்னை கூட்டிகிட்டு போறேன்” என்றவளிடம் சரியென தலையாட்டினாள் மது.

பேச்சு மறுபடியும் புத்தகங்கள் பக்கம் திரும்ப,  சக்தி மதுவிடம் “உங்க பாட்டி ஆன்மீகத்துக்கும் மட்டும்  தான் ஓகே சொல்லி இருக்காங்களா ?” என கேட்க,

“ஆன்மீகத்துக்கும் மட்டும் இல்ல ஆர்னிதாலாஜிக்கும் ஓகே சொல்லியிருக்காங்களே “ என்றாள் மது.

சந்தியா “ஆர்னிதாலாஜி??? எங்கயோ கேள்வி பட்ட மாறி இருக்கே” என சொல்ல, சக்தி “உனக்கு தெரியாட்டினாலும் இந்த பில்ட் அப்புக்கு ஒன்னும் குறச்சல் இல்ல” என கிண்டலடிக்க, “சும்மா இருடி சக்கு மக்கு! மது ஸ்டார்ட் ம்யூசிக்” என்றாள் சந்தியா.

மது,  “ஆர்னிதாலாஜி ம்யூசிக் பத்தி இல்ல  பறவைகளை பத்தி படிக்கிறது.” என்றாள்.

“ஹூம் …..உங்க வீட்டில இருக்கிற ஆங்கிரி பர்ட்டை பத்தி படிக்கவே எத்தனை ஜென்மம் வேணுமோ…”,  சலித்துக் கொண்டாள் சந்தியா.

மது சற்று அரண்டவளாய் “உங்க சண்டைக்கே நான் வரலை. ஆளை விடு.” என்று விட்டு, “பெதர் கலெக்ஷன் என்னோட முக்கியமான ஹாபி. அதை பத்தி நிறைய தெரிஞ்சிக்கணும்கிற ஆர்வத்துல  ஆர்னிதாலஜி சம்மந்தமான   புக்ஸ் படிப்பேன்” என்றாள் மது.

சக்தியும் சந்தியாவும் அவளை வியப்பாய் பார்த்தனர். தபால் தலை, நாணயம் இந்த மாதிரி சேகரிப்பவர்களை பற்றி கேள்வி பட்டிருக்கிறார்கள். இறகுகளை சேகரிப்பதை பொழுது போக்காக வைத்திருப்பது ஆச்சர்யம் அளித்தது.

“என்ன அப்படி பாக்குறீங்க?” என கேட்டாள் மது.

“வித்தியாசமான ஹாபியா இருக்கே? எப்படி இதுல இன்ட்ரஸ்ட் வந்துச்சு?” என கேட்டாள் சந்தியா.

“ஐ டோன்ட் நோ…” என அதில் ஆர்வம் எப்படி வந்தது என்பதை அறுதியிட்டு கூற முடியாது என்றவள், “ஆனா இந்த அளவுக்கு என்னோட பெதர் கலக்ஷனுக்கு ஹெல்ப் பண்றது  நிரு..நிரஞ்சன். உனக்கு தெரியுமா? காதி பிரண்ட்..நீ வொர்க் பண்ற ப்ராடக்ட்ல காதியோட பார்ட்னர்.” என நிரஞ்ஜனை பற்றி சொல்ல,

“ம்… தெரியும். நேத்து தான் கார்த்திக் சொல்லிக்கிட்டு இருந்தார். நிரு கிட்ட தான் வெள்ளிக்கிழமை என்னோட வொர்க்கை  டெமோ காமிக்க போறேன். சோ, அவரும் உன்னை மாதிரி பெதர் கலக்ட்டரா? ” என கேட்டாள் சந்தியா.

“இல்ல. நிரு அம்மா ஒரு பாப்புலர் ஆர்னிதாலஜிஸ்ட், அதாவது  பறவைகளை பத்தி ஆராய்ச்சி செய்றவங்க. அதுனால அவங்க அம்மா அடிக்கடி அவனை “பர்ட் வாட்ச்” க்கு கூட்டிகிட்டு போய் பழக்கியிருக்காங்க. நிரு ஒரு அடிக்கடி பர்ட் வாட்ச்க்கு போவான். அப்போ கலெக்ட் பண்ற பெதர்ஸ் எனக்கு அனுப்பி விடுவான். ஒவ்வொரு வாரமும் நாங்க இதை பத்தி நிறைய டிஸ்கஸ் பண்ணுவோம். இன்பாக்ட் நிருகிட்ட இருந்து நிறைய கத்துகிடலாம். உனக்கு ஒன்னு தெரியுமா? என்னால இறகை பார்த்தே அது என்ன பறவைன்னு ஓரளவிற்கு சொல்ல முடியும். நிருவே என் டேலன்ட் பாத்து அசந்து போயிடுவான்” என விழி அகல  சொன்னாள் மது.

“அடப் பாவி...நிரஞ்சனா..அவன் அவன் சிக்கன் பிரியாணி வாங்கி கொடுத்து பிகரை மடக்குவான்.. அந்த மாதிரி வாங்கி கொடுக்கட்டினாலும் பரவாயில்லை. ஆனா எட்டு வருஷமா கிளியை பிடிக்காம, இறகை பொறுக்கி குடுத்துகிட்டு இருக்கியே. உங்க ரெண்டு பேருக்கும் பீலிங்ஸ் வற வைச்சு, லவ், ரொமான்ஸ், கல்யாணம், குடும்பம், குழந்தை அய்யோ தலை சுத்துதே..” என்று நினைத்துக் கொண்டே “முருகா” என சற்று சத்தமாக அலறியே விட்டாள். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்  மதுவும், சக்தியும். மது அவளிடம்,

“என்ன ஆச்சு சந்தியா? நேத்து மாதிரி காலு பிசகிடுச்சா?”

“இல்ல மது..கொஞ்சம் மூளை பிசகிடுச்சு. இந்த சக்தி ஒரு ரெண்டா கிளாஸ், நீ ஒரு ப்ரீ கேஜி...எம் பெருமான் முருகனிடம் உங்க கூட கும்மியடிக்கும் தெம்பை கொடு என முறையிட்டு கொண்டிருந்தேன்” என்று சமாளித்தாள் சந்தியா. இருவரும் அவளை முறைக்க “சரி, நீங்க பிக் கர்ல்ஸ் ஒத்துக்கிறேன். மது, நீ ஆன்மீக சம்மந்தம்மா படிக்கிறது தப்பு இல்ல. ஆனா இந்த வயசுல ரொமான்ஸ் நாவல் படிக்கிற சுகமே தனி தான். படிச்சு பாக்கிறியா? ” என கேட்டாள்.

மது “பாட்டி அதெல்லாம் படிக்க கூடாதுன்னு சொல்லியிருக்காங்க சந்தியா” என மறுத்தாள்.

சந்தியா, “மீரா சொன்னா படிப்பியா? அவங்ககிட்ட நான் பேசுறேன்” என கேட்க, அவள் சரியென என யோசனையோடே தலையாட்ட,  சந்தியா சக்தியின் உதவியோடு மாடியில் அவள் வைத்து இருந்த சில ரமணி சந்திரன் நாவல்களை படிக்க கொடுத்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.