(Reading time: 15 - 30 minutes)

02. காதல் பயணம்... - Preethi

Kaathal payanam

மாலை மயங்கிய நேரம், வான வீதியில் செந்நிற பூக்கள் தூவி, தான் செல்வதற்குள் நிலவு மங்கையின் தரிசனம் கிடைக்காதா என்ற தவிப்புடன் மேகங்களின் இடையே நின்று ரகசியமாக எட்டிப் பார்த்தவாறு காத்திருந்தான் கதிரவன்.  

அந்த அழகான மாலை பொழுதினை இன்னும் இனிமையாக்க மெல்லிசையை தொலைக்காட்சியில் ஓடவிட்டு ஹேமா செய்து தந்த பஜ்ஜியை ருசித்து சாப்பிட்டவாறு பொழுதினை ரசித்து நகர்த்திக்கொண்டிருந்தாள் அனு.

“”சில்லென... ஒரு மழை துளி என்னை நினைக்குதே பெண்ணே...

சிறகுகள்... யார் கொடுத்தது நெஞ்சம் பறக்குதே முன்னே...””

இவ்வாறு பொழுதினை கழித்துக்கொண்டிருந்த அனுவை பார்த்த ஹேமா “வாழ்க்கைய நல்லா சந்தோஷமா கடத்துரடி”” என்று பொருமினார்.

“கண்ணு வைக்காதிங்க டீச்சர் அதுக்கு எல்லாம் குடுத்து வச்சுருக்கணும்”” என்று ஆயாசமாக பதில் அளித்தாள்.

“கொழுப்புடி எல்லாம் கொழுப்பு கொஞ்சமாவது அம்மாக்கு வேலைல உதவி செய்வோம்னு தோணுதா”” என்று பதிலுக்கு ஹேமா திட்ட துவங்க...அவரது  செல் அடித்தது, “அனு யாருன்னு பாரு வேலையா இருக்கேன்ல”” என்று அவர் மாவை அரைத்துக்கொண்டே கூறினார்.

”ப்ச் பாத்தீங்களா இப்பதான் கண்ணு வச்சிங்க அதுக்குள்ள கெடுக்க ஆள் வந்துருச்சு ஹ்ம்ம்”” என்று கூறிக்கொண்டே அழைப்பை எடுத்தாள் அனன்யா.

”பேச்சுக்கொன்னும் குறைச்சல் இல்லை, படிக்கனும்னா மட்டும் வலிக்கும்” “ என்று பொறுப்பான அம்மாவாக கடிந்துக்கொண்டார். (strictama...)

”அதை ஏம்மா அடிக்கடி நியாபகம் படுத்திறிங்க படிக்குறேன் படிக்குறேன்”” என்று தொலைபேசியை காதில் வைத்துக்கொண்டே ஹேமாவிடம் வாதாடினாள்..

”என்னது அனு படிக்கிறீயா?!?! என்ன தனிமரம் ஆக்கிடாதடி...”” என்று அழைப்பின் மறுபுறம்  அதிர்ச்சியான குரல் கேட்டது. 

”ஹே நூடள்ஸ் நீயா, என்னை போய் தப்பா நினைச்சிட்டியே, நான் என்னைக்குடி டெஸ்ட்க்கு முன்னாடியே படுச்சிருக்கேன்? அது அம்மாக்காக சொன்னேன்டி”” என்று தேஜுவின் பீதியை நீக்கினாள்.

”ஓஹோ ஒகே ஒகே... சரி விஷயத்துக்கு வரேன் வர வியாழக்கிழமை அம்மா அப்பாக்கு 25வது அன்னிவேர்சரி, சாய்ந்தரம் வீட்ல ஃபங்ஷன்(விழா) இருக்கு, சோ மறக்காம அங்கிள் ஆன்ட்டிகிட்டையும் சொல்லிடு கண்டிப்பா எல்லாரும் வந்துடுங்க”” என்று கேட்டுகொண்டாள்.

”அப்பா திருச்சி போயிருக்காங்க நூடுள்ஸ் சோ, உங்க அங்கிளை கணக்குல சேர்க்காத”” என்று சாப்பிட்டு கொண்டே பதில் தந்தாள் அனு.

“ஹே என்னடி மொச்சு மொச்சுன்னு சாப்பிட்டுகிட்டே பேசுற அதை முதல்ல நிறுத்துடி தீனிகோழி”” என்று அவள் அதட்டல் போட

“ஆஹா சொல்லுறது யாரு பாரேன் போடி பம்புளிமாஸ்”” என்று பதிலுக்கு கிண்டல் செய்தாள்..

“ரைட்டு விடு ரைட்டு விடு damage பண்ணாத”” என்று சமாதானத்துக்கு வந்தவள் தொடர்ந்து  “சரி அங்கிளை விடு நீ மறக்காமல் ஆன்ட்டிகிட்ட சொல்லிடு, மறந்துடாதடி மறந்தாங்கோழி”” என்று அவள் மரியாதையாக கூறினாள்.

“ஓவரா பேசாத நூடுள்ஸ், என்னை நம்பினோர் கைவிடப்படார்”” என்று அருள் வாக்கு சொல்வது போல் கூறி இணைப்பை துண்டித்தாள்.

“அம்மா தேஜு தான் ஃபோன் செய்தா வர வியாழக்கிழமை அவங்க அம்மா அப்பாக்கு 25வது அன்னிவேர்சரியாம், அன்னைக்கு சாய்ந்தரம் ஃபங்ஷன் இருக்காம் அதுனால நம்மளை கண்டிப்பா வர சொன்னாம்மா”” என்று பொறுப்பாக செய்தி பரிமாற்றம் செய்தாள் அனு.

“வியாழக்கிழமையா?! அச்சோ நான் ஸ்பெஷல் கிளாஸ் வச்சுருக்கேனே பசங்களுக்கு அன்னைக்கு”” என்று சிறு வருத்ததுடனே கூறினார் ஹேமா.

“அச்சோ பாவம்ம்ம்”” என்று பரிதாபப்பட்டாள் அனு.

“ம்ம்ம் பாரு அம்மா ரொம்ப பாவம்ல..”” என்று அவரும் பரிதாபமாக கேட்டார்..

“உங்களுக்கு யாரு பாவம்னு சொன்னா அந்த பசங்க பாவம், காலைல இருந்து நொச்சுப் பண்ணது பத்தாதுன்னு சாய்ந்தரம் வேற கிளாஸ் பாவம்மா பசங்க”” என்று வருத்ததோடு கூறினாள்.

“போடி வாலு, ஒழுங்கா படுச்சா நான் ஏன் ஸ்பெஷல் கிளாஸ் வைக்குறேன், சரி நான் வர அன்னைக்கு லேட் ஆகும் நான் வந்ததுக்கு அப்புறம் போகலாம்”” என்று பொறுப்பாக ஹேமா கூற...

“அதல்லாம் சரி பட்டு வராது டீச்சரம்மா நான் முன்னாடி போறேன் நீங்க பொறுமையா வாங்க””.

“ஹ்ம்ம் என் பையனுக்கும் தான் ஃப்ரண்ட்ஸ் இருந்தாங்க அவன் ஒன்னும் இப்படி எல்லாம் வெளியே போகலை”” என்று ஹேமா அலுத்துக்கொண்டார்.

“அய்யோ தாங்க முடியலைடா சாமி, எப்ப பார்த்தாலும் அர்ஜுன் புராணம்தான்”” என்று அனன்யா சலிப்போடு சொல்லிக்கொண்டு இருக்க அர்ஜுனிடம் இருந்து அழைப்பு வந்தது.

“உங்க பையனுக்கு 100 வயசு போங்க””, என்று கூறி அழைப்பை எடுத்தாள் “ஹலோ அண்ணா எப்படி இருக்கீங்க?””

**** நம்ம அர்ஜுனை பத்தி சொல்லனும்னா ஹேமா சொல்றதை பார்த்தாலே தெரியலையாங்க அப்படியே அனன்யாவுக்கு நேரெதிர் ரொம்ப அடக்கமானவரு, வீடுவிட்டா காலேஜ் காலேஜ்விட்டா வீடு, நம்ம சம்திங் சம்திங் பட பிரபு மாதிரி தங்கச்சிமேல பாச மழையை பொழியவில்லை என்றாலும் தேவையான இடத்தில் விட்டு கொடுக்காமல் இருக்கிற பாசமலர் தான் நம்ம அர்ஜுன், இவரை பத்தியும் போக போக பார்ப்போம் ****

“நான் நல்லா இருக்கேன் வாலு நீ எப்படி இருக்க? அம்மா என்ன பண்றாங்க?”” என்று உற்சாகமாக பேசினான் அர்ஜுன்.

“அம் அல்வேஸ் பைன்(am always fine) அண்ணா, அம்மாவா என்ன திட்டிகிட்டு இருக்காங்க”” என்று ஹேமாவை ஓரக்கண்ணால் பார்த்தவாறே அர்ஜுனிடம் மாட்டிவிட்டாள்.

“அடிபாவி நான் எங்கேடி உன்னை திட்டினேன்”” என்று ஹேமா குறைப்போல் கூறினார்.

“அது ஒன்னும் இல்லை அண்ணா உங்க புராணம் தான், நான் வெளிய போக பெர்மிஷன் கேட்டதுக்கு என் பையன் ஃப்ரண்ட்ஸ் வீட்டுக்கு போனதே இல்லை, எங்கேயுமே போனது இல்லைனு ஒரே அர்ஜுன் புராணம்.”” என்று போலியாக அலுத்துக்கொண்டாள்.  

“ஹாஹாஹா உனக்கு தேவைதான் வாலு சரி இப்போ எங்கே போக பிளான்?”” என்று பொறுப்பாக கேட்டான்.

“என் ஃப்ரண்ட்டொட அம்மா அப்பாக்கு அன்னிவேர்சரி அதுக்கு போகணும் அண்ணா, உங்களை யாரு இவ்வளவு நல்ல பையனா இருக்க சொன்னது ?!  ஊர்ல நாலு அஞ்சு அண்ணா வச்சுருக்கவங்க எல்லாம் நிம்மதியா இருக்காளுங்க ஒன்னே ஒன்னு வச்சுக்கிட்டு நான் படுற கஷ்டம் இருக்கே அய்யய்யய்யோ”” என்று அலுத்துக்கொண்டாள்.

“ரொம்ப சீன் போடாத வாலு உன்னை பத்தி எனக்கு தெரியும் எப்படியும் போகதான் போற சரி சரி அம்மா கிட்ட ஃபோனன கொடு”” என்று அர்ஜுன் கிண்டல் செய்ய போன் ஹேமாவின் கைக்கு மாறியது.

“என்னம்மா அவளை திட்டுனீங்களா?”” என்று பொறுப்பாக வினவினான் அர்ஜுன்.

“யாரு அந்த வாயாடி சொல்லுச்சா? அவள் கிட்ட யாரு பேசி ஜெயிக்கிறது அர்ஜுன், போக வேண்டாம்ன்னு சொல்லவே இல்லைடா அதுக்கே இப்படி பேசுறா...”” என்று பொய் கோவத்துடன் கூறினார் ஹேமா.

“சரி விடுங்கம்மா, அந்த வாலை பத்தி தெரிஞ்சது தானே, வேற என்னம்மா விஷயம்?”” என்று சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

“ஏய் அராத்து, நான் என்ன சொன்னேன், அர்ஜுன்கிட்ட நீ என்ன சொல்லி இருக்க? சரி நீ தேஜு வீட்டிலேயே இரு நான் வந்ததும் சேர்ந்து வந்துடலாம் சரியா?”” என்று வியாழகிழமைக்கு பிளான் செய்தனர்.

“ஓகே டீல், சரி நான் போய் படிக்கிறேன் என்னை டிஸ்ட்ர்பு(disturb) பண்ணாதிங்க”” என்று கூறி அனன்யா செல்வதற்கு எத்தனித்தாள்.

“அனு வெளிய மழை பெய்யுதா என்ன?”” என்று ஹேமா ஆர்வமாக கேட்டார்.

“பாருடா கிண்டல் பண்றாங்களாம்,எங்களுகேவா?! இதை எல்லாம் நாங்க lkg படிக்கும் போதே  சொன்ன டயலாக், போங்க டீச்சரம்மா போங்க நீங்க இன்னும் நிறையயய கத்துக்கணும்”” என்று ஹேமாவின் தோளில் தட்டியவாறு அறிவுரை கூறினாள்.

“போடி வாயாடி சரி என்னைக்கும் இல்லாத திருநாளாய் இன்னைக்கு ஏன் படிக்கிற?”” (ரொம்ப நல்ல அம்மால...)

“நாளைக்கு சயின்ஸ் எக்ஸ்ஹிபிஷன்மா(science exhibition) சொன்னேன்ல, அதான் இல்லாட்டி யாரு படிப்பா...”” என்று அலட்சியமாக கூறி சென்றாள் அனன்யா. 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.