(Reading time: 19 - 37 minutes)

16. என் இனியவளே - பாலா 

En Iniyavale

ரு சில நிமிடங்கள் இருவரும் அணைத்த நிலையிலே இருந்தனர்.

முதலில் இனியா தான் சுயநினைவுக்கு வந்து இளவரசனை விட்டு தள்ளி நின்றாள்.

இளவரசன் புன்னகைத்தவாறே “இதை எல்லாம் என்னால நம்பவே முடியலை” என்றான்.

இனியா தலையை குனிந்தவாறே அமைதியாக இருந்தாள்.

இளவரசன் திரும்ப இனியாவிடம் வந்து அவள் கையை பிடித்து “என்ன மேடம் விட்டா ரெஸ்ட் எடுக்காம பேசுவீங்க, ஐ மீன் திட்டுவீங்க. இப்ப என்ன பேசவே மாட்றீங்க” என்று அவனின் மந்தகாச புன்னகையை வெளியிட்டான்.

இனியாவால் அவன் முகத்தை பார்த்து பேசவே இயலவில்லை.  ஆனால் இளவரசன் விடாமல் இனியாவின் முகத்தை நிமிர்த்தி அவனை பார்க்க வைத்தான்.

“விடுங்க இளா. ஏன் இப்படி பண்றீங்க” என்று சிணுங்கினாள்.

“ம்ம்ம். முதல்ல நாம இந்த பிரச்சனையை பார்ப்போம். அதென்ன உனக்கு நல்ல மூட் இருக்கும் போது மட்டும் இளா அப்படி இல்லன்னா நான் மிஸ்டர் இளவரசன் ஆகிடறேன். ம்ம். இதுக்கு பதில் சொல்லு”

“அது அது ம்ம்ம் அது அப்படி தான்”

“என்ன அது அப்படி தான். முதல்ல என் முகத்தை பேசுங்க மேடம்”

“முடியாது போங்க.”

“ஏய் ஏய் இனியா. இன்னைக்கு என்ன மாதிரி ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கு. இப்ப போய் என் முகத்தை பார்த்து பேச மாட்டேங்கிற”

“என்ன, என்ன நடந்திருக்கு இன்னைக்கு”

“மறுபடியும் பஞ்சாயத்தை கூட்டுராளே, ஹேய் என்னடி இன்னைக்கு என்ன நடந்திருக்குன்னு உனக்கு தெரியாதா”

“என்ன டீ போட்டு பேசறீங்க.”

“அந்த பஞ்சாயத்து அப்புறம். முதல்ல சொல்லு. இன்னைக்கு என்ன இம்பார்டன்ட்ன்னு உனக்கு தெரியாதா. ம்ம்ம். சொல்லு”

“என்ன இம்பார்டன்ட். எனக்கு ஏதும் தெரியாதே” என்றாள் கண் சிமிட்டி.

“ஓ. தெரியாதவங்களுக்கு எப்படி தெரிய வைக்கறதுன்னு எனக்கு தெரியும்” என்று கூறியவாறே இனியாவின் அருகில் வந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

இனியா திகைத்து போய் நின்றாள். சிறிது நேரம் ஏதும் பேசாமல் பின்பு “என்ன இப்படி பண்றீங்க” என்றாள்.

“பின்ன என்ன. தெரியாதவங்களுக்கு தெரியற மாதிரி தானே புரிய வைக்க முடியும்”

“ம்ஹூம். இது சரியில்ல. நீங்க முதல்ல வெளிய போங்க. உங்க ரூம்க்கு போங்க.”

“ஹேய் என்ன நீ இப்படி துறத்தற”

“பின்ன என்ன. நீங்க அப்படி எல்லாம் பண்ணா நான் இப்படி தான் பண்ணுவேன்”

“சரி. ஓகே ஓகே. நான் ஏதும் பண்ணலை. பட் உன் கூட கொஞ்ச நேரம் பேசிட்டு போறேன். ப்ளீஸ் நான் இன்னைக்கு எவ்வளவு ஹாப்பியா இருக்கேன் தெரியுமா.”

“ம்ம்ம். ஓகே. பெர்மிஷன் கிரான்டட்”

“எல்லாம் என் நேரம். நான் எல்லாரையும் ரொம்ப ஓட்டுவேன், அப்ப என் பிரண்ட் சொல்லுவான்  நீ இப்ப பண்றதுக்கு எல்லாம் உனக்கு ஒரு மேலிடம் வந்து அங்க உனக்கு இதுக்கான தண்டனை கிடைக்கும்ன்னு. பாரு நான் இப்ப அனுபவிக்கறேன்”

“என்ன இப்பவே அனுபவிக்கறேன் அப்படி இப்படின்னு சொல்றீங்க. அதுவும் முதல் நாளே” என்றாள் கோபமாக.

“ஓஹோ மேடம் கோபமாகிட்டாங்க. அப்ப சரண்டர் தான். ஹேய் அனுபவிக்கறேன்னு தானே சொன்னேன். ஆனா கஷ்டத்தை அனுபவிக்கறேன்னா சொன்னேன். நான் இன்பத்தை அனுபவிக்கறேன்ம்மா”

“ம்ம்ம் நீங்க தேறிடுவீங்க”

மெதுவாக இனியா என்று அழைத்தவன் அவள் கைககளை ஏந்தி “ஐ லவ் யூ டா, உன் கூட என் லைப் புல்லா ஸ்பென்ட் பண்ண போறேன்னு நினைச்சா எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா” என்றான்.

இனியா புன்னகையை தவழவிட்டு நின்றாள்.

“ஹேய் என்ன நீ பார்மலா ரிப்ளை பண்ண மாட்ற.”

“என்ன பார்மலா ரிப்ளை பண்ணணும்”

“ம்ம் ஐ லவ் யூ ன்னு சொன்னா என்ன ரிப்ளை பண்ணனும்ன்னு உனக்கு தெரியாதா”

“ப்ளீஸ் இளா எனக்கு அப்படி எல்லாம் சொல்ல வரலை”

“ஹேய் என்னம்மா இப்படி சொல்ற. நீ என் மூட் ஸ்பாயில் பண்ற” என்றான் வருத்தத்துடன்.

“ஐயோ எனக்கு உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கறதுன்னு எல்லாம் தெரியலை. எனக்கு உங்களை பிடிச்சிருக்கு. உங்களை மட்டும் தான் என்னால மேரேஜ் பண்ணிக்க முடியும். நீங்க சொன்ன மாதிரி அன்னைக்கு அத்தை வந்தப்ப தான் நான் இதை ரியலைஸ் பண்ணேன். பட் இப்ப நீங்க சொல்றீங்கன்னு ஐ லவ் யூ ன்னு சொன்னா அது ஏதோ கடமைக்கு சொல்ற மாதிரி இருக்கும். நான் அதை உள்ளேருந்து பீல் பண்ணி சொல்ல வேண்டாமா இளா”

“எனக்கு இதுவே போதும் இனியா. ஐ’ம் சோ ஹாப்பி. உனக்கு எப்ப சொல்ல தோணுதோ அப்ப சொல்லு. எனக்கு ஜஸ்ட் அந்த வார்த்தை முக்கியம் இல்லை. நீ இப்ப சொன்னதே எனக்கு அதோட அர்த்தத்தை தருது”

இப்படியே இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“இளா டைம் என்ன ஆகுது பாருங்க. முதல்ல இங்கிருந்து கிளம்புங்க.”

“என்ன அப்படி டைம் ஆச்சு. ஜஸ்ட் ட்வெல் டா.”

“என்னது ஜஸ்ட் ட்வெல்லா. இது சரி வராது. நீங்க கிளம்புங்க”

“என்னம்மா இது. இன்னைக்கு தான் நம்ம சண்டை எல்லாம் இல்லாம கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கோம். அதுக்குள்ளே என்ன போக சொல்ற”

“இனியா இப்போது தான் முதலிலிருந்து எதற்கு இவனுடன் சண்டை வந்தது என்று யோசித்தாள். முதலில் தன்னை பற்றி தெரியாமல் பேசியது, அப்புறம் அவன் தன்னை திட்டியது இதை எல்லாம் கூட மறந்து விடலாம். ஆனால் நான் எப்படி ஸ்வேதாவையும் சந்துருவையும் பற்றி எண்ணாமல் போனேன். ஏற்கனவே இதை பற்றியே தங்களுக்குள் நிறைய சண்டை வந்துள்ளது  தான். இருந்தாலும் இப்போது இருவரும் இந்த அளவுக்கு நெருங்கி விட்ட பிறகு இதை பற்றி எப்படி பேசாமல் இருப்பது. ஆனால் அவன் அதை ஏற்பானா.” என்று எண்ணி குழம்பிக் கொண்டிருந்தாள்.

இனியாவையே பார்த்துக் கொண்டிருந்த இளவரசன் இனியா ஏதோ பேச முற்படுகையில் அவளை தடுத்து “இல்ல டா. ஒரு நிமிஷம். நீ எதை பேச வரேன்னு எனக்கு புரியுது.” என்றான்.

அவளோ கேள்வியாக நோக்க,

“சந்துருவை பற்றி தானே” என்றான்.

அவள் ஆச்சரியத்துடன் ஆமாம் என்று தலையசைக்க, இளவரசன் தொடர்ந்தான்.

“உனக்கு சந்துரு மேல இருக்கற அக்கறையை விட எனக்கு அதிகமாவே இருக்கும்ன்றதை நீ ஒத்துக்கறியா இல்லையா”

“ம்ம்ம்”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.