(Reading time: 21 - 42 minutes)

17. என் இனியவளே - பாலா 

En Iniyavale

னியா மற்றும் இளவரசனின் சீண்டல்களை மாடியில் இருந்து பார்த்த ராஜலக்ஷ்மி அதிர்ந்தார்.

முதலில் அண்ணனை சந்தித்த பிறகு அண்ணனுக்கு இரு மகள்கள் இருப்பது தெரிந்தவுடன் ஜோதிக்கும் திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் தன் இரு மகன்களுக்கும் திருமணம் செய்து வைத்திருக்கலாம் என்று கூட அவர் எண்ணினார். ஆனால் அதை பற்றி வெளியில் கூற இயலவில்லை.

தான் காதல் திருமணம் செய்ததால் தன் கூட பிறந்தவர்களே தன்னை சேர்க்காத போது ராஜா அண்ணா தன்னிடம் இவ்வளவு பாசமாக இருப்பதே அவருக்கு பெரிய விசயமாக இருந்தது. அதையும் தன் விருப்பத்தை சொல்லி கெடுத்து கொள்ள கூடாது என்று எண்ணியே அவர் அந்த எண்ணத்தை விட்டு விட்டார். அண்ணன் அந்த மாதிரி இல்லை என்று அவருக்கு தெரியும் தான். ஆனால் ஏதோ ஒன்று அவரை தடுத்தது. அதுவும் இன்றி ஏற்கனவே அண்ணன் தன் மகளுக்கு ஏதோ பையனை பேசி வைத்துள்ளதாக வேறு கூறவே அதை அப்படியே விட்டு விட்டார்.

அவருக்கும் தன் மகன் இனியாவை திருமணம் செய்தால் சந்தோஷம் தான். ஆனால் அண்ணனின் சொந்த தங்கச்சி தன் மகனுக்கு இனியாவை  கேட்டு கொடுக்காத போது தன் மகனுக்கு இனியாவை மணமுடித்தால் அது பெரிய பிரச்சனையில் தான் முடியும். அந்த நிலையை மட்டும் அண்ணனுக்கு ஏற்பட விட கூடாது என்று தீர்மானமாக முடிவெடுத்தார்.

னியாவும் இளவரசனும் வடபழனி முருகன் கோவிலுக்கு சென்றனர்.

இருவரும் மனமுருக முருகனை வேண்டிக் கொண்டனர்.

இளவரசன் என்னென்னவோ செய்து வேண்டுமென்றே கோவிலில் இருந்து கிளம்ப லேட் செய்தான்.

“சாமி தரிசனம் நல்லா இருந்திச்சி இல்ல இனியா”

“ஆமா நல்லா தான் இருந்துச்சி. வாங்க கிளம்பலாம். லேட் ஆச்சி. நான் டூ அவர்ஸ் தான் பெர்மிஷன் போட்டிருக்கேன்.”

“இருமா. ஏன் இப்படி அவசர படர. கோவிலுக்கு வந்தா போகும் போது உட்கார்ந்திட்டு தான் போகணும். உனக்கு தெரியாதா”

“இளா. நீங்க ஏன் இப்படி பண்றீங்க. ஒவ்வொரு சாமியையும் வேணும்னே ஆற அமர தரிசிக்கறேன்ன்னு லேட் பண்ணீங்க. இப்ப இப்படியா என்று சிரித்துக் கொண்டே அமர்ந்து விட்டாள்.”

“என்ன இப்படி சொல்ற. அத்தை இதெல்லாம் உனக்கு சொல்லி தரலியா”

“இல்லையே”

“ம்ம்ம். இது மட்டும் தான் சொல்லி தரலியா. இல்ல எதுவுமே சொல்லி தரலியா”

“எதுவுமேன்னா... வேறென்ன”

“ம்ம். சமையல் தான்”

“ஏன் உங்களுக்கு சமைக்க தெரியாதா”

“அடிபாவி. உன்ன சமைக்க தெரியுமான்னு கேட்டா என்னை ஏண்டி கேட்கற. உனக்கு சமைக்க தெரியுமா தெரியாதா”

“அதெல்லாம் தெரியாதுப்பா. உங்களுக்கு”

“தெரியாது டீ. உனக்கே தெரியலை. என்ன கேட்டா நான் என்ன பண்ணுவேன்”

“அதென்ன உனக்கே தெரியலைன்னு என்னை சொல்றீங்க. சமையல் என்ன பொண்ணுங்களுக்குன்னு எழுதி வச்சதா என்ன. ம்ம்ம்” என்று கூறி முறைத்தாள்.

“அதுக்கு ஏண்டி வரிஞ்சு கட்டிட்டு என் கிட்ட சண்டைக்கு வர”

“பின்ன என்னவாம். எல்லாரும் பொண்ணுங்க தான் சமைக்கணும் அப்படின்னு ஏன் எங்க தலைலையே கட்டறீங்க. நீங்க எல்லாம் செஞ்சா குறைஞ்சா போய்டுவீங்க”

“அது சரி. நம்ம மேரேஜ்க்கு அப்புறம் நம்ம லைப் ஜெகஜோதியா போகும் போல”

“என்ன”

“பின்ன நீ இப்படி சரவெடியா வெடிச்சா ஜெகஜோதியா தான் போகும்” என அவன் கூற இனியாவோ முறைத்தாள்.

“அது சரி. பேச்சை மாத்தாதீங்க. பொண்ணுங்க தான் சமைக்கணும்ன்னு இருக்கா என்ன. முன்னாடி ஆம்பளைங்க வேலைக்கு போவாங்க. வொய்ப் சமைச்சி போடுவாங்க. இப்ப தான் நாங்களும் போறோம்ல. அப்பவும் உங்களையே கூட நாங்க செய்ய சொல்லலை. பட் நீங்க சமையல்ன்றதே ஏதோ பொண்ணுங்களோடதுன்ற மாதிரி சொல்றது தான் பிடிக்கலை. அட்லீஸ்ட் எங்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் கூட பண்றதில்லை. பாய்ஸ் ஆர் வொர்ஸ்ட்”

“ஹேய் ஹேய் நிறுத்து. இப்ப ஏன் இப்படி ஒரே அடியா எங்க இனத்தையே போட்டு தாக்கற. ஐ டோன்ட் லைக் இட். நீ சொல்ற மாதிரி எல்லாரும் கிடையாது. பட் நீ சொல்ற மாதிரியும் இருக்காங்கன்னு நான் ஒத்துக்கறேன். எல்லாரும் ஓவர் நைட்ல மாறிட மாட்டாங்கம்மா. இட் நீட்ஸ் டைம். காலம் சேன்ஜ் ஆகிட்டே தான் இருக்கு. எவ்வளோ பொண்ணுங்க டாமினேட்டா இருக்காங்க தெரியுமா. நாங்க எல்லாம் இப்படி சொல்லிட்டா இருக்கோம்.”

“அதெல்லாம் ஒத்துக்க முடியாது. நீங்க என்ன சொன்னாலும் பொண்ணுங்க தான் பாவம். நீங்க எல்லாம் எப்பவுமே டாமினேட்டா இருக்கீங்க. இப்ப லேடீஸ் சேன்ஜ் ஆகறதை உங்களால எல்லாம் தாங்க முடியலை. அதான்”

“அம்மா தாயே. போதும். இந்த டாபிக்காக எல்லாம் நமக்குள்ளே சண்டை வர வேண்டாம். நீ சொன்னதை எல்லாம் நான் ஓரளவுக்கு நான் அக்ரீ பண்ணிக்கறேன். பட் நான் சொன்ன மாதிரி எல்லாத்துக்கும் டைம் எடுக்கும். ஆனா எப்படிடீ இன்னும் அத்தை உனக்கு சமைக்க சொல்லி தராம இருக்காங்க. அந்த விஷயத்தை முதல்ல சொல்லு.”

“பேச்சை மாத்தறீங்க. இருக்கட்டும். எனக்கு சமைக்கணும்ன்னு இன்னும் தோணலை. தோணும் போது சமைக்க கத்துப்பேன்.”

“ம்ம்ம். என் நிலைமை ப்யூடர்ல என்னவோ தெரியலைம்மா”

“ரொம்ப தான். ஆனா என் பிரண்ட் ஒன்னு சொன்னா. ஆனா அது நடக்கவே இல்லை. முதல்ல அவளுக்கு போன் பண்ணி திட்டனும்”

“உன் பிரண்ட் என்ன சொன்னா. எதுக்கு அவளை திட்டனும்”

“இல்லை. நான் ஒன் இயர் காலேஜ் படிக்கும் போது ஹாஸ்டல்ல ஸ்டே பண்ணி இருந்தேன். அப்ப சமைக்க தெரியலையேன்னு நாங்க சொன்னோம்னா என் பிரண்ட் கவி சொல்லுவா, நாம எல்லாம் ஹாஸ்டல்ல இருக்கோம். நமக்கு சமைக்கறதுக்கு ஆப்பர்சுனிட்டியே இல்லை. ஆனா பசங்க எல்லாம் விவரம். அவங்க எல்லாம் ரூம் எடுத்து ஸ்டே பண்றாங்க. சோ அவங்க சமைக்க எல்லாம் தெரிஞ்சி வச்சிருக்காங்க. சோ நீங்க எல்லாம் பீல் பண்ணாதீங்க. உங்க ஹஸ்பன்ட் எல்லாம் சமைக்க தெரிஞ்சி வச்சிருப்பாங்கன்னு, பாருங்க. உங்களுக்கு சமைக்கவே தெரியலை.”

“அடி பாவி. நீங்க இப்படி எல்லாம் யோசிப்பீங்களா. ஓ மை காட். எப்படிடீ இப்படி எல்லாம்”

“ஹிஹிஹி”

“ஏய் இப்படி எல்லாமா டீ யோசிப்பீங்க.”

“என்ன இதெல்லாம் ஒரு மேட்டரா. பொண்ணுங்க எல்லாருக்கும் இப்படி ஆசை இருக்கும். அதுக்காக ஹஸ்பன்டே சமைக்கணும்ன்னு எல்லாம் இல்ல. சண்டே மட்டுமாச்சும் சும்மா எங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம். இல்லேன்னா நீங்களே கூட சமைக்கலாம். எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை” என்று கூறி கண்ணடித்தாள்.

இளவரசன் தன் ஆள்காட்டி விரலை தன்னை நோக்கி காட்டி “டேய் உன் ப்யூடர் ரொம்ப பிரகாசமா இருக்கு டா” என்றான்.

இனியா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.