(Reading time: 19 - 37 minutes)

05. காதல் பயணம்... - Preethi

Kaathal payanam

ல்லூரி ஆரம்பித்து முதல் லேப் அது, அனைவரும் அவரவர் தோழிகள் தோழர்களுடன் சேர்ந்து அமர்ந்துக்கொண்டனர். சிஸ்டம்(system) முன் அமர்ந்துக்கொண்டு கதை பேசிக்கொண்டு இருந்தவர்கள், லேகா லெக்சர் வரவும் அமைதியானனர். தன் கைகளில் இருப்பவையை இருப்பிடத்தில் வைத்துவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தவர், “என்னப்பா என்ன பண்ணிட்டு இருக்கீங்க? நல்லா கதை பேசி முடுச்சுட்டிங்களா? அப்படியே எந்துருச்சு attendance ஆர்டர்படி உட்காருங்க பார்ப்போம்” என்று மேஜை மீது சாய்ந்துக்கொண்டு கூறினார். attendance ஆர்டர் என்று கூறியதும் fuse போன பல்பு மாதிரி சுருங்கிப்போனது மாணவர்களின் முகம், கடனே என்று வருசையாக அமர்ந்தனர்.

அனன்யா,அருண்,அஸ்வத் வருசையாக அமர்ந்தனர்... அருணிற்கு இப்போதும் ஜாலியாக இருந்தது அவனுக்குதான் அஸ்வத் கிடைத்தானே பேசுவதற்கு.. சிறிது நேரம் கஷ்டப்பட்டு அமைதியாக இருந்தவன் தன் வாலை நீட்டிவிட்டான். லேகா சிறு சிறு குரூப்பாக அழைத்து சொல்லிக் கொடுத்து கொண்டிருக்க, பின்பக்கம் பேச்சு குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. திரும்பி பார்த்தவர் “அருண்... கொஞ்சம் அமைதியா இருக்கலாமே” என்று கூறவும் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். மீண்டும் லேகா தன் வேலையை தொடர அருணும் பேச துவங்கினான்.

“”டேய் அமைதியா இருடா மேடம் பாக்குறாங்க”” என்று ரகசிய குரலில் அஸ்வத் குறிப்பு தந்தும் அவன் கண்டுக்கொள்ளவில்லை.

“”அருண்...இங்கவா”” என்று கொஞ்சம் கடுமையாக குரல் வரவும், சட்டென அமைதியானவன் போல் முகத்தை மாற்றிக்கொண்டு லேகாவிடம் சென்றான்.    

“”நீ என்ன சொன்னாலும் கேட்க மாட்ட இங்க என் பக்கத்துலையே உட்காரு”” என்று தன் அருகில் உள்ள சிஸ்டமை கைகாட்டினார்.

அய்யய்யோ இவங்க பக்கத்துலையா? என்று குழம்பிப்போனவன் பாவம் போல் நிற்க, அவனை போல் மொக்கை போட்டுக்கொண்டு இருந்த நித்திஷ், அருணை பார்த்து சிரித்தான், அவன் சிரிப்பில் கடுப்பானவன் லேகாவிடம் திரும்பி “என்னை மட்டும் சொல்றிங்களே மேடம் இதோ நித்திஷ் கூட பேசிக்கிட்டு தான் இருக்கான் அவனை எதுவும் சொல்லவே இல்லை” என்று மாட்டிவிட்டான்.

அட கடன்காரா நீ மாட்டினது மட்டும் போதாதுன்னு என்னையும் மாட்டிவிடுரானே என்று மனதில் அருணை திட்டிக்கொண்டு முறைத்தான் நித்திஷ். இவை அனைத்தையும் கவனித்த லேகா, “நீ ரொம்ப நல்லவன் அருண்” என்று புன்முறுவலுடன் கூறி “கவலைப்படாத எல்லாத்துக்கும் ஒரு வழி வச்சிருக்கேன்” என்று கூறி வகுப்பிற்கு ஒரு அறிவிப்பு தந்தார்.

“சரி நீங்க attendance படி உட்கார வேண்டாம், நான் சொல்லுற மாதிரி உட்காருங்க” என்று கூறி ஒரு ஆண் ஒரு பெண் என்று மாற்றி மாற்றி அமரவைத்தார். முதலாம் ஆண்டு என்பதால் பையன்களும் பெண்களிடம் பேச தயங்கி இருந்த காலம் அது... இவ்வாறு அமர வைத்ததில் அஸ்வதிற்கு அருகில் அனன்யா அமரும்படி ஆனது. ஐயோ இவன் பக்கத்துலையா? ஐயோ இவள் பக்கத்துலையா என்று மனதில் புலம்பிக்கொண்டிருக்க அருண் தான் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து அஸ்வத்தை நோக்கி கை ஆட்டி கட்டை விரலை காட்டினான். அருணோ கடலை போட ஆள் கிடைத்த சந்தோஷத்தில் பற்கள் அனைத்தையும் காட்டி சிரிக்க அஸ்வதிற்கு கடுப்பாக இருந்தது.

ஒரே நேரத்தில் ஒன்று போல் அஸ்வத்தும் அனன்யாவும் அருணை முறைத்தனர். அய்யய்ய இவன் என்ன பொண்ணு பக்கத்துல ஒக்காருரதுக்கு இப்படி முறைக்குறான் சரி இல்லையே... தன் போக்கில் நினைத்துக்கொண்டு தனக்கு அருகில் அமர்ந்து இருந்த ஆர்த்தியிடம் கடலைபோட திரும்பினான்.

சிறிது நேரம் ஒவ்வருதருக்கும் சொல்லிக்கொடுத்து முடித்தவர், “சரி ஸ்டுடென்ட்ஸ், நான் இப்போ problem statement தருவேன் நீங்க இரண்டு இரண்டு பேரா சேர்ந்து ப்ரோக்ராம்ஸ்  போடுங்க” என்று கூற அஸ்வத் இடது புறம் திரும்ப அந்த பெண்ணோ முன்பே அவள் அருகில் உள்ள தோழனுடன் செட் சேர்ந்தாள், வேறு வழியின்றி அஸ்வத்தும் அனன்யாவும் செட் சேர்ந்தனர்.

இன்னும் எவ்வளவு நேரம் இவள் இப்படி முகத்தை வேறுபக்கம் திருப்பிட்டு ஒக்காந்திருக்க போறாள் என்று தோன்ற அஸ்வத் அனன்யாவை பார்த்தான், அவளோ அஸ்வத் தன்னிடம் பேச முயற்சிக்கிறான் என்று தெரிந்தும் அப்படியே அமர்ந்து இருந்தாள். இவளுக்கு என்ன கொழுப்பா? இவள் இப்படி திரும்பி ஒக்காந்திருந்தா நான் கெஞ்சி கூப்பிடுவேன்னு நினைப்பா என்று கோவமாக வந்தது.

அஸ்வத் முகத்தை திருப்பிக்கொண்டு ப்ரோக்ராமை போட துவங்கினான். அவன் தன் போக்கில் செய்வதை கண்டு கோவம்வர தன் பேனாவை கொண்டு மேசையை தட்டினாள், அஸ்வத்தும் திரும்பி பார்க்க பேனாவின் மூலம் தன் புத்தகத்தில் ஏதோ எழுதினாள், அவள் எழுதும் வரை காத்திருந்த அஸ்வத்திடம் புத்தகத்தை தள்ளினாள். அதில், நீயே ப்ரோக்ராம் போட்டு நல்ல பையன்னு காட்டிக்கிரியா? எனக்கும் போட தெரியும் என்று கோவத்தில் அனன்யா எழுதி இருக்க, அஸ்வத்திற்கு மேலும் கோவம் வந்தது “ஏன் உனக்கு பேச வராதா நேர்ல பேசினால் கரைந்து போயிடுவியா? வேணும்னா நீயே போட்டுக்கோ யாரு வேண்டாம்னு சொன்னது?” என்று கூறி கிபோர்டை அவள் புறம் தள்ளினான். அவன்மீது உள்ள கோவத்தில் தானே ப்ரோக்ராம் போடத்துவங்கினாள். சிறிது நேரம் சென்று லேகா அவர்கள் இருப்பிடத்திற்கு வரவும் “என்ன அஸ்வத் ப்ரோக்ராம் அனன்யா மட்டும் தான் போடுறாள்” போல என்று கூற, நக்கலாக அஸ்வத்தை பார்த்து சிரித்தாள் அனன்யா. அவளை ஒரு முறை பார்த்துவிட்டு “அதெல்லாம் இல்லை மேடம் நான் ஐடியா கொடுத்தேன் அனன்யா போடுறாள்” என்று உரிமையாக கூறிவிட்டு ப்ரோக்ராமை லேகாவிற்கு விளக்கினான். அவன் விளக்கம் தருவதை அதிசயமாக பார்த்தாள் அனன்யா, சரியான மூளைக்காரன் போல நம்ம போடுறதை கொஞ்ச நேரம் தான் பார்த்தான் அதைவைத்தே இதான் செய்கிறோம்னு கரெக்டா சொல்லுறான், மனம் தன் போக்கில் நினைத்துக்கொள்ள லேகா அவனை பாராட்டிவிட்டு சென்றார். இப்போது நக்கலாக சிரிப்பது அஸ்வத்தின் முறையானது.    

அஸ்வத் அவளை மனதில் திட்டுவதும் பதிலுக்கு அனன்யா மனதில் திட்டுவதும் என்று அந்த லேப் சென்றுக்கொண்டிருக்க, ஒருபுறம் அருணின் திருவிளையாடல் போய்க்கொண்டிருந்தது.

ஆர்த்தி மேசைமேல் கைகளை ஊனி தலையை அழுத்தியவாறு அமர்ந்து இருந்தாள். “என்ன ஆர்த்தி தலை வலிக்குதா? நான் வேணும்னா மேடம்கிட்ட permission கேட்கவா? நீ போய் க்ளாஸ்ல ரெஸ்ட் எடுக்குரியா?”

நீ பேசுறதை நிறத்தினாலே போதும்டா என் தலை வலி தானா குறைஞ்சுடும் ஹ்ம்ம் என்று மனதில் புலம்பிக்கொண்டு ப்ரோக்ராம்மை டைப் செய்தாள்.

““ஆஹா ஆர்த்தி உன் கையெழுத்து முத்து முத்தா இருக்கு”” என்று முட்டாள்தனமாக ஐஸ் வைத்தான்.

“”டேய் கம்ப்யூட்டர்ல யாரு டைப் பண்ணினாலும் ஒரே மாதிரிதான் இருக்கும்டா லூசு”” என்று அருணின் மூலம் வந்த தலைவலியால் கத்தினாள்.

“”என்னது லூசா?! பரவாலை நீ தானே சொல்லுற”” என்று கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டாதவன் போல் தட்டிக்கொண்டான்.

“”ஹய்யோ இந்த லேப் எப்போது முடியும்?”” என்று தலையில் அடித்துக்கொண்டாள். ஒருவழியாக எல்லா கடலைகளும் கருகி காய்ந்து போக லேப் முடிந்துவிட்டது. விட்டால் போதும் என்று அனன்யா எழுந்து சென்றுவிட்டாள்.

ஆர்த்தி,அனன்யா,அபி மூவரும் பேசிக்கொண்டே லேப் முடிந்து சென்றுக்கொண்டு இருக்க, வழி முழுவதும் ஆர்த்தி அருணை கிழியோ கிழியென்று கிழித்தாள்..

“”ஹே போதும்டி என் காது வலிக்குது ஏன் இப்படி திட்டுகிற?”” என்று அபி கேட்க

“”பாரு கொஞ்ச நேரம் பேசுனதுக்கே உனக்கு காது வலிக்குதுல அந்த அருண் லூசு லேப் ஃபுல்லா என் காதை பிச்சு எடுத்துட்டான்”” என்று புலம்பிக்கொண்டே வந்தாள், அவள் புலம்புவதை கடனே என்று அபி கேட்டுக்கொண்டு வர அனன்யாவோ அஸ்வத்தின் நினைவில் வந்துக்கொண்டு இருந்தாள்.

“”ஹே அங்க மூணு ஜூனியர்ஸ் வராங்க பாரு கூப்பிடு கொஞ்சம் விளையாடி பார்போம்”” என்று விரேன் பக்கத்தில் இருக்கும் தன் தோழன் தேவ்யிடம் கூற அவன் ஆர்த்தி அபி அனன்யாவை அழைத்தான்.

மூவரும் அமைதியாக வந்து நின்றனர், “ம்ம்ம்ம் 1st  இயர் தானே” என்று கேட்க ஆம் என்று மெதுவாக தலையாட்டினர், போதுவானவிசாரிப்பாக எந்த department என்ன பெயர் என்றெல்லாம் கேட்ட பின்பு மூவரில் யாரை முதலில் ராக்கிங் செய்வது என்று யோசித்து கொண்டிருந்தான் விரேன்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.