(Reading time: 7 - 14 minutes)

16. கரை ஒதுங்கும் மீன்கள் - அருணா சுரேஷ் 

 Karai othungum meengal

ரு நிமிடம் திகைத்த தீபக் மறுநிமிடம் சமாளித்துக் கொண்டு " ஓ கீர்த்தி மேடமையா....? ஒருநாள் தற்செயலா பீச் போயிருக்கும் போது கீர்த்தியோட அம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்கடா...பாவம்...கீர்த்தி மேடம் யாருமில்லாம தவிச்சுட்டிருக்கும் போது நாந்தான் ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போனேண்டா....அப்புறம் அந்த ஹாஸ்பிடல் பில் அது இதுன்னு கொஞ்சம் பேப்பர்ஸ் என்னிடம் மாட்டிக் கொண்டது....அதான் இன்னிக்குக் கொடுத்துட்டுப் போகலாம்னு வந்தேன்....ஆமா....உனக்குக் கீர்த்தி மேடமை எப்பிடித் தெரியும்?..."
 "அவங்க ஷைனியோட ஆஃபீஸுலே வேலை பார்க்கிறாங்கடா...."

  சரி....இனியுமிங்கே இருந்தால் மாட்டிக் கொண்டு விடுவோம் என நினைத்த தீபக்....."சரி கீர்த்தி மேடம்  நான் அப்படியே தயா கூடக் கிளம்புறேன் ஆஃபீஸுக்கு நேரமாச்சு.... தயா வாடா....பேசிக் கொண்டே  கிளம்பலாம் " என இயல்பாகத் தோளில் கையைப் போட்டுக் கொண்டு இழுத்துக் கொண்டு போவது போல் போனான்.  
அவர்கள் அந்தப் பக்கம் போவதற்கும் இந்தப் பக்கம் ஷைனி வந்து சேரவும் சரியாக இருந்தது.  
"என்னாச்சு தீபக்கை எங்கே ? கிளம்பிட்டாரா?"  
"ஷைனி நீ இன்னிக்கு ஒரு நிமிடத்தில் தப்பிச்சுருக்கே....." 
 "ஏன்...என்னாச்சு" 
 "தயா வந்திருந்தார் ....."  
"என்னது தயாவா....இங்கேயா......" என்று அதிர்ந்தாள்.  
"ஆமா....அதனாலேதான் நீ வந்தா மாட்டிப்பேன்னு தீபக் வெளியே கூட்டிட்டுப் போயிட்டார்....."  
"எத்தனை நாளைக்கு  இப்படித் தப்பிச்சிட்டேன்னு சந்தோஷப் படறது?" 

 "ப்ச் சரி விடு ஷைனி...." 

 "ம்" என்று பெருமூச்சு விட்டபடி கண்களைத் துடைத்துக் கொண்டாள் ஷைனி.  
இருவரும் மெதுவாக வெளியே வந்து தீபக்கும் தயாவும் கிளம்புவதைப் பார்த்துவிட்டுக்  கிளம்பினார்கள். 

யா ஒருமுகத்துடன் இருப்பதில்லை....நிமிடத்துக்கொரு முறை நிறம் மாற்றிக் கொண்டேயிருப்பான்.அன்று எல்லோரையும் வளைத்துப் போடும் அன்பு முகத்துடன் இருந்தான். தீபக்குடன் குழைந்து குழைந்து பேசினான்.   

"தீபா....நீ மட்டும் எப்படிரா எனக்குக் கிடைச்சே....? என் கிட்டே எப்படிரா நீ மட்டும் வந்து மாட்டினே? இத்தனை நாளா நீயில்லாம எனக்குப் பெரிய இழப்புடா...பழையது போல விஷயம் எதுவுமே இல்லாம நம்ம  சும்மா பேசிக்கிட்டே கிடப்போமே அதுபோல இப்பவும் இருக்கணும் போல இருக்குடா...."  
"அதுக்கென்னடா பேசினாப் போச்சு.....ஆனா இப்பிடி வேலைக்குப் போகாம ஊர் சுத்திக்கிட்டிருந்தா எங்க ஆஃபீசுலே வீட்டுக்கு அனுப்பிருவாங்கடா தயா......உங்க ஆஃபீஸில் எப்பிடி?" 
 "நம்ம கிளாஸ் பசங்களையெல்லாம் ஒருதடவை சேரப் பார்க்கணும் போல இருக்குடா.....ஏதாவது பண்ணி எல்லாரையும் கூப்பிட்டு சின்ன வயசுலே பேசாத கதையெலாம் கூடப் பேசணும் போல இருக்குடா...." 

 "சரி பேசலாம்....ஆனா இப்போ ஆஃபீசுக்குப் போலாம்டா....."  மனமேயில்லாமல் கிளம்பிப் போனான் தயா.
 ஏதோ மீண்டும் ட்ராமா போடுகிறான் என்றே லைட்டாக எடுத்துக் கொண்டான் தீபக். 

ட்டிலில் நிமிர்ந்து படுத்துக் கிடந்தான் தயா.கடைக்கண் வழியாக கண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.நான் ஏன் இப்படியிருக்கிறேன்....எல்லோரும் ஏன் இப்படி என்னிடம் இப்படிப் பொய் பொய்யாகச் சொல்கிறார்கள். காலையில் ஷைனியை அந்த ரெஸ்டாரென்டில் வாஷ்ரூமை விட்டு வெளியே வரும் போதே பார்த்திருந்தான். கீர்த்தியையும் தீபக்கையும் அங்கே பார்த்தவுடன் அவனால் நம்பவே முடியவில்லை. எல்லோருமாய்ச் சேர்ந்து தனக்கு எதிராக ஏதோ சதித் திட்டம் போடுவதாகவே நினைத்தான்.தீபக் எப்படி ஷைனியுடன் சேர்ந்து கொண்டான்.....அவர்களுடன் கீர்த்தியும் எப்படிச் சேர்ந்து கொண்டாள்.எல்லோரும் என்ன திட்டம் போடுகிறார்கள்....தீபக் தன்னிடம் இப்படி  ஷைனியைப் பற்றிச் சொல்லாமல் எப்படி அழகாகப் பொய் சொல்கிறான்.......இவன் ஒருத்தன்தான் எனக்குன்னு நினைச்சுட்டிருந்தேனே....இவனும் போச்சா.....ஏன் எல்லாரும் நமக்கு எதிராகவேயிருக்கிறார்கள் என்று  மனசு விட்டுப் போயிருந்தது. வீட்டுக்கு வந்து  கட்டிலில் குப்புற விழுந்து வாழ்வின் கடைசி நாள் போல அழுது முடித்தான். லாப்பியில் ஷைனியுடனான் சேட் மெஸேஜையெல்லாம் மீண்டும் மீண்டும் படித்தான்....எங்கே தப்பு நடந்தது...இனி மீண்டும் பழைய மாதிரியான உறவு ஷைனியுடன் வாய்க்கவே வாய்க்காதா.....இனி யாரிடம் போய் கொட்டுவது?.....இருந்த ஒருத்தனும் நமக்கில்லை.....தாடி மாமா நினைவுக்கு வந்தார். உடனேயே  அவருக்குப் ஃபோன் போட்டான்.... 

"யோவ் தாடி....அங்கே  ஊர்லே  என்னய்யா ....குப்பை கொட்டுறீர்....இங்கே நான் படுற பாடு புரியுதாய்யா...." 

"என்னப்பா....என்னாச்சு" "என்ன ஆச்சா....உடனே கிளம்பி வாய்யா...."

 "டேய் கொள்ளை வேலை தலைக்கு மேலக் கெடக்கு உடனே கிளம்பி வாய்யான்னா....எப்புடி சாமி...." "வரப் போறியா...இல்லியா....?நீ வர்லினா நான் அங்கே வந்துருவேன்...." 

"அதைச் செய் சாமி ஷைனியைக் கூட்டிக்கிட்டு ஒரு நடை ஊர்ப்பக்கம் வந்துட்டுப் போ சாமி....." 
"அவ பேரை எடுத்தேன்னா கொலை விழும்...." "அய்யய்யோ ....என்ன சாமி இப்பிடிச் சொல்லுதே...? "நீ ஒரு நடை இங்கே வந்துட்டுப்போ கொலசாமிக்குக் கலியாணம் ஆனப்புறம் போடுற படையலை இன்னும் போடலை....அதைப் போட்டாச்சுன்னா எல்லாம் சரியாயிரும்....ஒரு நடை வந்துட்டுப் போ சாமி...." 

ஒரு நிமிடம் மனதில் மின்னல் வெட்டியது தயாவுக்கு. தீபக், ஷைனி , கீர்த்தி மூன்று பேரும்  போடுற திட்டத்தையும் முறியடிக்கணும்னா கொஞ்ச நாள் யாருக்கும் எதுவும் சொல்லாமல் எங்கியாவது போயிர வேண்டியதுதான்னு அந்த மனநிலையில் தோன்றியது. 
"சரி நான் வர்றேன்...." 
"அந்தப் புள்ளையைக் கூட்டியாய்யா..." 

"வர்றேன்யா.....ஃபோனை வையும்" பத்து நிமிடத்துக்குள் பெட்டியில் தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டான்.ஆஃபீஸுக்கு லீவுக்கான தகவலை அனுப்பிவிட்டு ஷைனி வீட்டுக்கு வருவதற்கு முன் கிளம்ப வேண்டுமென்று அவசர அவசரமாக அவன் வீட்டுக்கு வந்த சுவடே தெரியாமல் வெளியேறிப் போக நினைத்தும் மறதியாக ஷூவை விட்டு விட்டு செருப்பைப் போட்டுக் கொண்டு போனான்.

ப்போதும் போல் வீட்டுக்கு வந்த ஷைனி வீடு பூட்டியிருக்கவும் தன்னிடமிருந்த சாவியை வைத்து வீட்டைத் திறந்து செருப்பைக் கழற்றியவள் தயாவின் ஷூவைப் பார்த்ததும்....'ஆஃபீஸிலிருந்து வந்துட்டு எங்கே போயிருக்கார்'என்ற எண்ணத்துடன் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தாள்.  '              

 "இப்படி வெளியாட்களிடம் எல்லாம் உதவி கேட்கிறமாதிரி இந்தத் தயா நடந்து கொள்கிறானே'ஒண்ணரை வருடத்திற்கு முன் இருந்த ஷைனி எங்கே போனாள்....அழுகை என்பதே இல்லாமல் இருந்த நாட்கள்....பிடித்தமாகக் கழிந்த நாட்கள். அழுகை என்றால் மனதை அழுத்தும் திரைப் படங்கள் கொடுத்தவையாகவே இருந்திருக்கின்றன. தன் வீட்டுக் குட்டி நாய்க்குட்டியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு வாக்கிங்க் போன நாட்கள்...மழையினூடே ஹோய் என்று கத்திக் கொண்டு ஓடிய நாட்கள்.....மழைநாளில் மிளகு ரசமும் தேங்காய்த் துவையலுமாகத் தட்டிலிட்டுக் கொண்டே வெட்டிக் கதை பேசிய நாட்கள்....இன்னிக்கு தயா வரட்டும்...நிதானமாகப் பேசி பழையபடி அன்பைக் கொட்டும் தயாவாக இனி மாறவே மாட்டீங்களா.....ஏன் என்னை இப்பிடிப் பாடு படுத்துறீங்க.....நான் வேணும்னா உங்களை விட்டு ஒதுங்கிப் போயிரட்டுமா....என்று கேட்டு இந்த தினசரி ட்ராமாவுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியதுதான். என்றெல்லாம் நினத்துக் கொண்டே வேலையைப் பார்த்தாள ஷைனி.              

சலித்துக் கொண்டே தயாவுடன் இப்படிப் பேசலாமா....இதைச் சொல்லலாமா.....அதைச் சொல்லலாமா என்றெல்லாம் யோசித்துக் கொண்டே வேலைகளை முடித்து விட்டாள். திடீரென்று மணியைப் பார்த்தவள்....'என்னடா இன்னும் தயாவைக் காணோம் 'என்று கவலைப்பட ஆரம்பித்தாள். வாசலுக்கும் ஹாலுக்கும் அலைந்து அலைந்து  காலெல்லாம் வலிக்க  தொப்பென்று சோஃபாவில் உட்கார்ந்தாள்.நேரமாக ஆக....இன்னிக்கு ஏதோ வம்பு இருக்கு....என்று பதட்டப் பட்டாள். யாரிடம் உதவி கேட்பது....எங்கு போய்த் தேடுவது....ஃபோனும் கிடையாது...வெளியே பூத்துக்குப் போய்தான் கீர்த்தியைக் கூப்பிடவேண்டுமோ....இன்னும் எவ்வளவு நேரம் காத்திருந்து விட்டு ஃபோன்  போடப் போவது என்று குழம்பிக் கொண்டிருந்தாள். மெல்ல வெளியில் வந்து யாராவது ஆள் நடமாட்டம் இருக்கிறதா என்று பார்த்தாள். தூரத்தில் ஒரு உருவம் வருவதைப் பார்த்ததும் நல்ல வேளை தயாதான் வந்து விட்டான் என்று நினைத்தாள். கிட்டே வந்தபிறகுதான் அது தயா இல்லை என்று தெரிந்தது. கிட்டே வந்தது வாட்ச்மேன் . 

தனியாக ஷைனி நிற்பதைப் பார்த்ததும்..."என்னம்மா இந்நேரத்துக்குத் தனியா நிக்கிறீங்க....ஏதானும் வாங்கிட்டு வரணுமா...." என்றான். 

இவனிடம் போய் என்னிடம் ஃபோன் இல்லை ஒரு ஃபோன் போடவேண்டும் என்று சொல்ல ஒருமாதிரியாக இருக்கவே....."இல்லேப்பா.....அய்யா இன்னிக்கு காலைலியே லேட்டாதான் வரேன்னு சொன்னார்....ஆனா இவ்வ்ளோ லேட்டாகும்னு நினைக்கலை....அதான் காத்துகிட்டு இருக்கேன்...." என்றாள். 

"என்னம்மா....அய்யா சாயங்காலமே வந்துட்டாரே.....அப்புறமா பெட்டியும் கையுமா அவசர்மா கிளம்பிப் போனாரே.....உங்களுக்குத் தெரியாதா...?" என்று கேட்கவும் அதிர்ந்தாள் ஷைனி. 

தொடரும்

Karai othungum meengal - 15

Karai othungum meengal - 17

{kunena_discuss:678}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.