(Reading time: 12 - 23 minutes)

07. மனதிலே ஒரு பாட்டு - வத்ஸலா 

மனதிலே ஒரு பாட்டு

திடுக்கென்று நிமிர்ந்தாள் அர்ச்சனா.

'என்ன ஷாக் ஆயிட்டியா ?' சிரித்தான்  விவேக்.

'என் தங்கை வீட்டுக்கு நான் வருஷம் ஒரு தடவையாவது போறேன். வசந்த் அங்கே இருக்கிறது எனக்கு எப்படி தெரியாம இருக்கும்?

மெல்ல கண்களை தாழ்த்திக்கொண்டாள் அர்ச்சனா.

'அது மட்டுமில்லை. நீ தினமும் அவர்கூட கார்லே ஆபீஸ் போறதிலேயிருந்து, வியாழக்கிழமை ராத்திரி 9 மணிக்கு நீ அவர் வீட்டுக்கு போனது வரைக்கும் எனக்கு தெரியும் அர்ச்சனா.

மெல்ல கண்களை நிமிர்த்தி அவன் கண்களை பார்த்தாள்

 'ஸ்வேதாவை துருவித்துருவி எல்லாத்தையும் கேட்டிட்டிருக்கேன் அர்ச்சனா என்றவன் தொடர்ந்தான்,

'சரி இப்போ சொல்லு. என் மேலேதான் உனக்கு எந்த எண்ணமும் இல்லை, அவர் மேலே எப்படி?

அப்பாவை பார்க்க போலாமா? என்றாள் நிதானமாய்.

சட்டென்று பொங்கியது அவன் கோபம் ' சரி வா' கோபத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் நடந்தான்

இறுக்கமான மௌனத்துடனே மின்தூக்கியில் ஏறினான் விவேக்.

அந்த மௌனத்தை கலைக்க வேண்டியே கேட்டாள் ' இந்த ஹாஸ்பிட்டல்ல உங்களுக்கு எல்லாரையும் தெரியுமா? இவ்வளவு freeya மூவ் பண்றீங்களே?

'ஹலோ. இது எங்க சொந்த ஹாஸ்பிடல்' என்றான் விவேக்.

சட்டென தலையில் தட்டிக்கொண்டாள் 'ஆமாம். கரெக்ட். அப்பா முன்னாடி ஒரு தடவை சொன்னார் உங்களுக்கு இங்கே ஒரு ஹாஸ்பிடல் இருக்குன்னு. நான் தான் மறந்துட்டேன்'

'ஆமாம்' உனக்கு உங்க அப்பாவை தவிர வேற எதுவுமே ஞாபகம்  இருக்காது'. முணுமுணுத்தான்.

அப்பா இருக்கும் அறையை நோக்கி நடந்தப்படியே சொன்னாள் ' எத்தனை பேர் உயிரை காப்பாத்தறீங்க. டாக்டரா இருக்கிறது ரொம்ப பெரிய விஷயம்.'

சட்டென்று நின்று அவள் முகத்தை ஏறிட்டான்

அதே டாக்டர் நினைச்சா ரொம்ப ஈஸியா கொலைக்காரனா கூட ஆயிடலாம் தெரியுமா?

கண்கள் விரிய அவனை பார்த்தாள் அர்ச்சனா

'ஒண்ணுமே வேண்டாம். உயிருக்கு போராடிட்டிருக்கிற ஒரு பேஷண்டுக்கு போட வேண்டிய ஊசியை, போட வேண்டிய நேரத்துல போடலைன்னா போதும், அந்த பேஷண்ட் கதையை யாருக்கும் சந்தேகம் வராம ரொம்ப ஈஸியா முடிச்சிடலாம் இல்லையா அர்ச்சனா?

அவள் கண்களில் அதிர்ச்சி பரவியது.

'ஹேய்.... ஹேய்... சும்மா சொன்னேன்.  உடனே என்னை கெட்டவனாக்கி ஒரு ஸ்க்ரீன் ப்ளே உருவாக்கிடாதே. நான் ரொம்ப நல்லவன்மா. வா உங்கப்பாவை பார்க்கலாம்' சிரித்தபடியே நடந்தான் விவேக்.

ன்னடா கொலை பண்ணிட்டிருக்கே? என்றபடி வசந்தின் வீட்டினுள் நுழைந்தான் மனோ.

லேப்டாப்பில், ஏதோ ஒரு விளையாட்டில், யாரையோ சுட்டுக்கொண்டிருந்தான் வசந்த்.

'நீ உயிரை காப்பாத்துற கேரக்டர். தயவுசெய்து உன் கேரக்டரை மாத்திக்காதே' என்று சிரித்தான் மனோ.

சரி அதை விடு 'என்றவன் அர்ச்சனா அப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம்டா'' சுகர் ரொம்ப லோ ஆயிடிச்சாம். ஹாஸ்பிடல்ல இருக்கார்.' என்றான்

அப்படியா? இப்போ பரவாயில்லையா? என்றவனிடம் சில நொடிகள் ஏனோ ஒரு இறுக்கமான மௌனம் நிலவியது.

பின்னர் சட்டென சுய நினைவுக்கு வந்தவனாய் கேட்டான்,

'இது தனியா என்னடா பண்ணுது?  அழுதிட்டு உட்கார்ந்திருக்கா?'

இல்லை. இல்லை. என்றான் மனோ 'உன்னோட எம்.என்.நம்பியார் சிங்கபூர்லேயிருந்து வந்திட்டார். அவர் தான் அவ கூடவே இருக்கார்.

யாரு? விவேக்கா? சிரித்தான் வசந்த்.

'ஆமாம்' சிரித்தப்படியே எழுந்தான் மனோ.

'நானும் சென்னை போய் என்னாச்சுன்னு  பார்த்திட்டு வந்திடறேன். அதை சொல்லத்தான் வந்தேன்.வரட்டுமா' என்றபடி நகர்ந்தான் மனோ.

ப்பாவின் அருகில் அமர்ந்தாள் அர்ச்சனா.

கண்களை சோர்வு அழுத்த மெல்ல கண்களை திறந்து பார்த்தார் அப்பா.

'என்னாச்சுப்பா' என்றபடியே அவர் கையை பற்றிக்கொண்டாள் அர்ச்சனா.

'என்ன அங்கிள் இப்படி திடீர்னு மயக்கம் போட்டுட்டீங்க? இனிமே தயவுசெய்து  முன்னாடியே சொல்லிட்டு, அட்லீஸ்ட் கதவை எல்லாம் திறந்து வெச்சிட்டு மயக்கம் போடுங்க. ப்ளீஸ்.................என்றபடியே அர்ச்சனாவின் அருகே அமர்ந்தான் விவேக்.

'ரொம்ப பயமுறுத்திட்டீங்கபா' என்றாள் அர்ச்சனா.

'எனக்கு வேற ஒண்ணும் இல்லைமா ' என்றார் அப்பா. நீ இல்லாமல் இருக்க முடியலை அவ்வளவுதான்

'அதுக்குதான் சொல்றேன்' வேலையை விட்டுட்டு என் கூட வந்திடுங்கன்னு' என்றாள் அர்ச்சனா

'வரேன்மா' என்றார் அப்பா . ஆனால் அதுக்கு முன்னாடி உனக்கு ஒரு கல்யாணம் நடக்கணும் என்றவர் அருகருகே  அமர்ந்திருந்த இருவரையும் மாறி மாறி பார்த்தார்.

அவர் பார்வையின் அர்த்தமும், எண்ண ஓட்டங்களும் மெல்ல புரியத்துவங்கியது அர்ச்சனாவுக்கு.

காரில் கிளம்பிய மனோ அன்றிரவுக்குள் சென்னை வந்துவிட்டிருந்தான்.

மறுநாள் காலை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்தார் அப்பா.

மதிய உணவுக்கு பிறகு அப்பா, விவேக், மனோ மூவரும் ஹாலில் அமர்ந்திருந்தனர்.

அப்பா மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று உள்ளே அமர்ந்திருந்த அர்ச்சனாவுக்கு தெளிவாய் புரிந்திருந்தது.

அப்பா எந்த நிமிடத்திலும் விஷயத்தை துவக்கி விடக்கூடும் என்று அவள் யோசித்த நிமிடத்தில் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டிருந்தார் அப்பா.

அவர் பேசியது அவள் காதில் தெளிவாய் விழுந்தது.

'விவேக், உனக்கு அர்ச்சனாவை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா.? என்றார் அப்பா.

சட்டென்று நிமிர்ந்தான், தன் கைப்பேசியில் பார்வையை பதித்திருந்த மனோ. இதை இத்தனை சீக்கிரம் அவன் எதிர்பார்க்கவில்லை.

'என் சம்மதம் இருக்கட்டும் முதல்ல அர்ச்சனாவை கேளுங்க' நாளிதழின் பக்கத்தை திருப்பியபடியே கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் சொன்னான் விவேக்.

அப்பாவின் அழைப்பு அவளை ஒரு நொடி குலுக்கியது.  தான் பேச வேண்டியதை மனதிற்குள் ஒரு முறை சொல்லிப்பார்த்துக்கொண்டு நடந்தாள் அர்ச்சனா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.