(Reading time: 33 - 65 minutes)

09. காதல் பயணம்... - Preethi

Kaathal payanam

****திருப்பூர்****

னெக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் விளக்குகளையெல்லாம் அணைத்துவிட்டு, தனது மெத்தையில் படுத்துக்கொண்டு, “எப்படா ஃபோன் பண்ணுவ? ஹ்ம்ம், வர வர உனக்கு கொழுப்பு ஏறிபோயிடுச்சு” என்று குப்பற படுத்துக்கொண்டு போனில் உள்ள அர்ஜுனின் புகைப்படத்தை பார்த்து திட்டியவாறு அஹல்யா படுத்திருந்தாள். “ஒன்னு ஃபோன் பண்ணினால் அட்டென்ட் பண்ணி கொஞ்சம் லேட் ஆகும்னு சொல்லணும் இல்லை மெசேஜாவது அனுப்பனும் இப்படி ஒண்ணுமே பண்ணாமல் இருந்தாள் என்னனு நினைப்பேன்” என்று மனதில் பெரிய பூஜையே நடத்திக்கொண்டு இருந்தாள். இப்படியே திட்டி திட்டி நேரம் நகர்த்திக்கொண்டு இருந்தவளுக்கு தூக்கம் கண்ணைகட்டியது. சொக்கிவிழுந்து ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்தவள் மணி பார்க்க நேரம் வெகுவாக கடந்து இருந்தது. கண் பாதி திறந்து பார்த்தவள் அந்த தூக்கத்திலும் சின்னதாக மனதில் அவனை திட்டிவிட்டு உறங்கிபோனாள்.

ஆபீசில் மீட்டிங்கில் அமர்ந்து இருந்த அர்ஜுனுக்கு தன் டீம் லீடை பார்க்க பார்க்க கோவமாக வந்தது. “யோவ் உனக்கு இதையெல்லாம் டிஸ்கஸ் பண்ண வேற நேரம் கிடைக்கலையா ஹ்ம்ம், மணியை பாருயா” என்று கூறியவாறே தன் கையில் இருந்த வாட்சை பார்த்துக்கொண்டான். “என் லியாக்கு 9 மணிக்கே தூக்கம் வந்துரும், இப்போ மணி பத்து அவள் தூங்கியே இருப்பாள், இனிமே நான் போயி... அவளை எழுப்பி.... ஹ்ம்ம் அவள் எழுந்த மாதிரிதான்” என்று மனதில் திட்டியவனுக்கு தனக்கு முன்னால் இருப்பவன் மூச்சு முட்ட பேசுவது காதிலேயே விழவில்லை. ஒருவழியாக மீட்டிங் முடிந்து பைக்கில் பறந்து தான் தங்கி இருக்கும் விடுதிக்கு வந்தவன், அவசர அவசரமாக பேசுவதற்கு தயாராகி மெத்தையில் படுத்துக்கொண்டு அவளை அழைத்தான். நல்ல வேளை நாளைக்கு சனிக்கிழமைதான் அவளுக்கு காலேஜ் இருக்காது என்று கூறியவாறு அழைத்தான். ஒரு முழு ரிங் அழைத்து நின்றும் அவள் எடுக்கவில்லை, எங்கே சத்தமாக வைத்தாள் மாட்டிக்கொள்வோம் என்று vibration மோடில் வைத்திருந்தாள்.

“அச்சோ எடுக்க மாட்டிங்குறாலே, தூங்கிட்டாள்ப் போல நாளைக்கு ஃபோன் பண்ணலாமா? ஐயோ வேண்டாம் வேண்டாம் ஏன் ஒன்னுக்கு இரண்டு மூன்று முறை ஃபோன் பண்ணி எழுப்பிவிட்டால் குறைந்து போயிடுவிங்கலானு கேட்பாள்” என்று மனதில் அவள் கூறும் விதத்தை நினைத்து சிரித்துக்கொண்டே திரும்பவும் அழைத்தான். கையில் போனை வைத்துக்கொண்டே தூங்கி போனவள் பதறிப்போய் எழுந்து அழைப்பை எடுத்தாள்.

““ஹலோ....”” பாதி தூக்கத்தில் இருந்து எழுந்த கிறக்கத்தில் அவள் பேச, அவளது அந்த வழுவழு குரலில் அர்ஜுன் சறுக்கி விழுந்தான். “வேணும்னே இப்படி பேசி என்னை மயக்க வேண்டியது” என்று மனதில் செல்லமாக கடிந்துக்கொண்டு ““ஹாய் லியா...”” என்று காதலோடு அழைத்தான்.

அவனது அழைப்பில் தெளிவாக முழித்துக்கொண்டவள், ““எங்க இருக்கீங்க?”” என்றுதான் முதலில் கேட்டாள்.

““பாரா அக்கரையாமாம்...”” என்று அவளை கிண்டல் அடித்துவிட்டு, ““வண்டியில வந்துகிட்டு இருக்கேன்டி”” என்று அவன் சொல்லி முடிக்க அழைப்பை துண்டித்து இருந்தாள் அவளது லியா. அவனுக்கு தெரியும் அவளுக்கு தான் வண்டியில் வந்துக்கொண்டே பேசினால் பிடிக்காது என்று அப்படி அவன் கூறிய மறு நிமிடமே அழைப்பை துண்டித்துவிடுவாள் என்று, ஆனால் அவள் இப்படி தன் மீது அக்கறை காட்டுவது அர்ஜுனுக்கு பிடிக்கும் எனவே வேண்டும் என்றே கூறுவான். ஃபோனை எடுத்து ஒருமுறை பார்த்து சிரித்துவிட்டு மீண்டும் அழைத்தான்.

இம்முறை அவள் எடுத்து எதுவும் பேசாமல் காதில் வைத்துக்கொண்டே படுத்து இருக்க, அர்ஜுனே தொடர்ந்தான், ““லியா செல்லம்...” என்று அவன் ஆசையாக அழைக்க, “ப்ச்” என்று வெறுப்பான பதில் வந்தது.

““சாரிடா நான் வண்டில வந்துகிட்டேலாம் பேசலை ரூம்க்கு வந்துட்டேன்”” என்று பாசமாக பேசிக்கொண்டு இருந்தான்.

““தெரியும்”” என்று ஒற்றை வார்த்தை மட்டும் பதிலாக வந்தது.

““எப்படிடி கில்லாடி”” என்று ஆர்வமாக கேட்டான்

““அதான் உங்க ரூம் ஓட்டை ஃபேன் லொட லொடன்னு ஓடி ஊரையே கூட்டுதே”” என்று கிண்டலாக சிரிக்காமல் கூறினாள். அவள் சொல்லிய விஷயத்தை கேட்டு அவனுக்கு சிரிப்புவர ஆனந்தமாக சிரித்தான்... அவன் சிரிப்பதையே மௌனமாக ரசித்துக்கொண்டிருந்தாள். “சிரிப்பதை பார் ஹ்ம்ம் இப்படி சிருச்சே மயக்க வேண்டியது” என்று மனதில் திட்டுவது போல் கொஞ்சினாள்.

““சரிடி அறிவாளி அப்பறம் ஏன் ஃபோனை கட் பண்ணின?”” என்று கொஞ்சியவாறே பேசினான்.

““ஏனா? மணியை பார்த்திங்களா? கனவில நமக்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்து அவங்க ஸ்கூல் போகி, காலேஜ் போகி, அவங்களுக்கும் கல்யாணம் ஆகி அவங்களுக்கே குழந்தை பிறந்திடுச்சு. இப்போதான் நீங்க மெதுவா வந்து என்னை எழுப்புரிங்க இதுல எதுக்குன்னு ஒரு கேள்வி வேற”” என்று செல்லமா கண்டித்தாள்.

அவள் கோபப்படுவதைவிட அவள் கனவிலும் தன்னை பற்றி மட்டும் தான் நினைக்கிறாள் என்று நினைப்பதே அவனுக்கு ஆனந்தமாக இருந்தது. கோவப்படுகிறாளாம், கோவப்படும் அழகை பார் என்று மனதில் அவளை கொஞ்சிக்கொண்டான். ““சரி சரி போகி முடிஞ்சு பொங்கல் வந்துச்சா இல்லையா?”” என்று அவன் அவள் பேசியதை கிண்டல் செய்ய, ““ஹ்ம்ம் சரியான மொக்கை”” என்று அலுத்துக்கொண்டாள்.  

அவளது செயல்கள் எல்லாம் காதல் உணர்வை தட்டிவிட அவளை அணைத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது அவனுக்கு, ““ஹய்யோ என் பொண்டாட்டி....”” என்று ஆசையாக அழைத்தான்... அவ்வளவு நேரம் கத்திக்கொண்டு இருந்தவள் அவனது பொண்டாட்டி என்ற அழைப்பில் அடங்கிப்போனாள். அர்ஜுன் அவளை அப்படி அழைப்பது அவளுக்கு பிடிக்கும். இதழோரம் புன்முறுவல் பூக்க மௌனமானாள்.

““ஹ்ம்ம்ம்ம்ம்”” என்று ஒரு பெருமூச்சு மட்டும் மறுமுனையில் இருந்து வந்தது. எதற்கு என்று புரியாமல் அவள் யோசனையாக புருவம் உயர்த்த, ““ஏன் பெருமூச்சு விட்டேன்னு கேட்கிருயா?!”” என்று அவனே கேட்டுக்கொண்டு காரணத்தையும் கூறினான். தனது மனதை புரிந்தவன் என்று மனம் சிலிர்த்தது அவளுக்கு.

““ஆமாம் என் தேவதை அங்க இப்போ அழகாய் வெட்கப்பட்டிருப்பாள், முகம் சிவந்து இருக்கும் என்னால அதை பார்க்க முடியலையே....”” என்று இழுத்தான். அவன் கிண்டல் செய்ததில் மீண்டும் வெட்கம் வர இன்னும் முகம் சிவந்தது. அதற்கும் அவன் ஏதோ சொல்ல துவங்க ““போதும் போதும் நிறுத்துங்க உங்களை திட்ட வந்தால் இப்படி பேச்சை மாத்திடுவிங்களே”” என்று செல்லமாக கடிந்தாள். அவளது பேச்சில் இருந்த உண்மை உணர்ந்து சத்தம் இல்லாமல் ரசித்து சிரித்தான்.

““சாரிடா இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு அதான் இல்லாட்டி எப்பவும் என் லியாக்கு சீக்கரமே ஃபோன் பண்ணிடுவேன்ல”” என்று அவள் போக்கிலேயே பேசினான்.

அதுவும் உண்மை தான் என்று தோன்ற, ““சரி பொழச்சு போ அர்ஜுன்”” என்று கூறி சன்ன குரலில் சிரித்தாள்.

““எல்லாம் என் நேரம்டி... எப்போ மரியாதை வருது எப்போ தேயுதுனே தெரியலை”” என்று உள்ளத்தில் ரசித்தாலும் வெளியே விளையாட்டாக கூறினான்.

““அதெல்லாம் அப்படித்தான் போடா...”” என்று மீண்டும் கூறி சிரித்தாள் அவளது சிரிப்பு அவனுக்கும் ஒட்டிக்கொள்ள சேர்ந்து சிரித்துக்கொண்டனர்...  

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.