(Reading time: 18 - 36 minutes)

26. என் இனியவளே - பாலா 

En Iniyavale

ன் முகத்தையே பதிலுக்காக ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார் ராஜலக்ஷ்மி.

சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது.

“அத்தை”

“நாம இதைப் பத்தி நாளைக்கு பேசலாமா”

“என்னை உங்களுக்கு பிடிக்கலையான்னு மட்டும் சொல்லுங்க அத்தை”

“ஐயோ இனியா” என்று அவளை அனைத்துக் கொண்டார் ராஜலக்ஷ்மி.

“என்னை இப்படி பேசி கொல்லாதம்மா. உன்னை பிடிக்கலைன்னு நான் எங்கடா சொன்னேன். எப்படி நான் அப்படி சொல்லுவேன், சொல்லு. ஆனா எனக்கு கொஞ்சம் யோசிக்கணும்.”

அவரை அணைத்த நிலையிலேயே சிறிது கண்ணீர் வடித்த இனியா தன்னை தேற்றியவளாக “சரி அத்தை நான் கிளம்பறேன்” என்று திடீரென்று கிளம்ப எத்தனித்தாள்.

“என்னம்மா அதுக்குள்ளே கிளம்பற. இரு. கொஞ்சம் சாப்டுட்டு போ”

“வேண்டாம் அத்தை. நான் வரேன். ஹாஸ்பிடல் போகணும்”

“இல்ல கொஞ்ச நேரம் இரு. கொஞ்சம் சாப்டுட்டு கிளம்பு”

“இல்ல அத்தை. ப்ளீஸ்” என்றவளாக அங்கிருந்து கிளம்பினாள்.

எழுந்து தன் பேகை எடுத்துக் கொண்டு கிளம்பியவளை விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தான் சந்துரு.

அவனை பார்த்தும் அந்த நிலையில் ஏதும் பேச இயலாதவளாக கிளம்பி விட்டாள்.

சிறிது நேரம் அப்படியே நின்ற நிலையிலேயே இருந்தான் சந்துரு. அவனுக்கு சிறிது அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆனால் அதே நேரம் மிகவும் சந்தோசமாகவும் இருந்தது.

எதை எதையோ மனதினுள் யோசித்துக் கொண்டிருந்தவன் அந்த நிலையில் இருந்து வெளி வந்து பார்த்தால் அவனின் தாய் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தார்.

அவரை சமாதானம் செய்யலாம் என்று ஒரு அடி எடுத்து வைத்த சந்துரு  நின்று விட்டான்.

அவனின் தாயோ “கடவுளே என் பிள்ளைங்களுக்கு பிடிச்சதையே என்னால செய்ய முடியலையே, என்னை ஏன் இந்த மாதிரி ஒரு நிலைமைல வச்சிருக்க. எல்லாருக்கும் எது நல்லதோ அதையே செய் கடவுளே” என்று புலம்பிக் கொண்டே கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.

“சரி அவர்கள் யோசித்து நல்ல முடிவாக எடுக்கட்டும்” என்று எண்ணி அவன் வந்த சுவடே இல்லாமல் போய் விட்டான்.

அண்ணனிடம் இங்கு நடந்தவற்றை எல்லாம் சொல்ல வேண்டும் என்று எண்ணி போன் செய்தால் நாட் ரீச்சபல் என்று கூறியது.

ஸ்பிடல் சென்ற இனியாவிற்கு அங்கு சிறிதும் நேரம் இல்லாமல் வேலை இருந்தது. 

ஹாஸ்பிடல் சென்ற இனியாவிற்கு அங்கு சிறிதும் நேரம் இல்லாமல் வேலை இருந்தது.

ஆழ்ந்த மூச்சிக்களை எடுத்துக் கொண்டு தன் பர்சனல் நிகழ்வுகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

இரண்டு அப்பாயின்மென்ட் முடித்து விட்டு அப்போது தான் வந்து அமர்ந்தவளுக்கு ரிசப்ஷனில் இருந்து அழைப்பு வரவே வெளியே போனால் அங்கு ஸ்வேதா நின்றுக் கொண்டிருந்தாள்.

ஸ்வேதாவை அங்கு பார்த்தவளுக்கு மிகவும் ஆயாசமாக இருந்தது. கஷ்டப்பட்டு எதையும் நினைக்க கூடாது என்று எண்ணி கட்டுப்படுத்திக் கொண்டிருப்பவளை அவள் எண்ணங்களை தகர்ப்பது போல் வந்து நிற்பவளை கண்டு சிறிது எரிச்சல் வந்தாலும், தன்னை மீறி பரிதாபமும் வர தான் செய்தது.

முகம் முழுவதும் சோகம் பரவி இருக்க அமர்ந்திருந்தவளைக் கண்டு தன்னையே மனதிற்குள் கடிந்துக் கொண்டு அவளருகில் சென்றாள் இனியா.

“வா ஸ்வேதா. வீட்டுக்கே வந்திருக்கலாம் இல்ல”

“இல்லக்கா. மாமா எப்படி பேசினாங்கன்னு உங்களுக்கு தான் தெரியும்ல அப்புறம் எப்படி நான் அங்க வர முடியும். அதான்”

“மாமா பேசறதை எல்லாம் நீ ஏன் பெருசா எடுத்துக்கற. அவர் ஏதோ கோபத்துல பேசி இருப்பாரு”

“ம்ம்ம். அது சரி தான்க்கா. ஆனா நான் அங்க வந்துட்டு உங்க கிட்ட எந்த அளவுக்கு பேச முடியும். அங்க எல்லாரும் இருப்பாங்க இல்ல. அதான் இங்கே வந்தேன்.”

“ஓ சரி. வா. என் ரூம்ல போய் பேசலாம்”

அவர்கள் இருவரும் அவளின் அறைக்குள் சென்ற உடனே இனியாவிற்கு போன் வந்து விட்டது.

“ஹலோ”

“ஹலோ மிஸ் இனியா.  நான் பிரபு பேசறேன்.”

“சொல்லுங்க டாக்டர்”

“எனக்கு நீங்க ஒரு ஹெல்ப் பண்ணனுமே”

“என்ன விஷயம் டாக்டர் சொல்லுங்க.”

“வேளச்சேரில என் பிரண்டோட ஹாஸ்பிடல் இருக்கு. அங்கே ஏதோ சூசைடு கேஸாம். அவங்க ஹாஸ்பிடல் சைக்காடிஸ்ட் அவுட் ஆப் ஸ்டேஷனாம். அவங்களால ஹான்டில் பண்ண முடியலையாம். நீங்க கொஞ்சம் அங்கே போக முடியுமா. ஏன்னா என் பிரண்ட் என் கிட்ட பர்சனலா ரிக்வஸ்ட் பண்ணிக்கிட்டாங்க”

“ஓகே டாக்டர். நோ ப்ராப்லம். நான் போறேன். நீங்க எனக்கு அந்த அட்ரஸ் மட்டும் சொல்லுங்க”

“ஓகே மா. நீ ரிசப்ஷன்ல அந்த அட்ரஸ் வாங்கிக்க. தான்க் யூ வெரி மச். சீக்கிரமே அங்க முடிஞ்சிட்டாலும் நீ அப்படியே வீட்டுக்கு கிளம்பிடு. நோ நீட் டு கம் பாக் டு ஹாஸ்பிடல். ஓகே”

“ஓகே டாக்டர்”

இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஸ்வேதாவிற்கு தான் எரிச்சலாக வந்தது.

நேற்று தான் வீட்டிற்கே சென்றும் ஏதும் பேச இயலவில்லை. இன்றாவது இங்கு சந்தித்து விட வேண்டும் என்று பார்த்தால் இப்போதும் எங்கோ செல்ல போகிறாள் போலிருக்கிறதே என்று கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சாரி ஸ்வேதா. ஒரு அர்ஜென்ட் கேஸ். நான் வேளச்சேரி வரைக்கும் போகணும்.”

“ஓ. அப்படியா. சரி போயிட்டு வாங்க” என்று சோகம் போல் முகத்தை வைத்துக் கொண்டு கூறினாள்.

அவள் முகத்தை பார்த்து வருந்திய இனியா “நீ வேணும்னா என் கூட கிளம்பி வா. அங்கே வொர்க் முடிஞ்ச பிறகு நாம பேசலாம்.” என்றாள்.

உடனே உற்சாகமாக “சரி அக்கா. அப்படியே செய்யலாம்” என்று ஆவலுடன் கிளம்பினாள் ஸ்வேதா.

ஹாஸ்பிடல் சென்ற பிறகு அவளை இங்கேயே வெயிட் செய் என்று கூறி விட்டு இனியா பேஷன்ட்டை பார்க்க போய் விட்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.