(Reading time: 13 - 25 minutes)

03. நீரும் நெருப்பும் - மோஹனா

நீரும் நெருப்பும்

“ Until you make the unconscious conscious , it will direct your life and you will call it fate. ”

ன்ன அண்ணா, என்னை அடையாளம் தெரியலையா? இல்லை உங்களுக்கு ஒரு தம்பி இருக்கான் என்பதையே மறந்துட்டிங்களா??!!” கண்களில் ஆதங்கத்துடனும் நீருடனும் தன் தமையனை வினவினான்....

“விஷ்ணு ......!!!” தாங்கமாட்டாமல் கண்ணீர் விட்டான் ஹரி... இல்லை இல்லை ஆனந்தக்கண்ணீர் விட்டான் ஹரி .......

கிட்டத்தட்ட அதே நிலையில் தான் சுபியும்....

தோட்டத்தில் ஒருவன் அதிவேகமாக ஒரு அழகான பூங்கொத்தை செய்துக்கொண்டிருந்ததையும் ... செய்தவுடன் மின்னல் வேகத்தில்  ஹரியின் அறையை நோக்கி சென்றுக்கொண்டிருந்ததையும் பார்த்தாள் சுபி ....

‘இவன் போகும் வேகத்தை பார்த்தால் ஹரியை முன்பே தெரியும் போல் இருக்கிறதே!!! ‘ என்று எண்ணியபடியே அவனை பின்தொடர்ந்தாள்.... பின்தொடர்ந்து அவனை யார் என்றும் கண்டுக்கொண்டாள்.....

“அண்ணா !!! நான் என்ன பாவம் செய்தேன் அண்ணா.... நீங்களும் அம்மாவும் ஏன் என்னை இத்தனை வருடம் பிரிந்திருந்தீர்கள்.....”

“உன்னை பிரிந்ததில் எனக்கு மட்டும் வருத்தம் இருக்காதா விஷ்ணு ?.. காலம் நம்மைப் பிரித்து விட்டது ....அதுபோகட்டும் நீ எப்படி இருக்கிறாய்?....”

“எனகென்ன அண்ணா ராஜா போல் இருக்கிறேன் .... நீங்கள் எப்படி இருக்கிர்கள்?... நம் அம்மா எப்படி இருக்கிறார்கள்...? ஏன் அம்மா வரவில்லை?.....”

“நானும் அம்மாவும் நன்றாய் இருக்கிறோம் விஷ்ணு .... அம்மாவுக்கு இங்கே வரப்பிடிக்கவில்லை .. அதுதான்....”

“இங்கே வரப்பிடிக்காதளவுக்கு என்ன நடந்தது அண்ணா???...”

“எனக்கும் தெரியவில்லை கண்ணா!!!... நானும் அப்போது சிறுப்பிள்ளை .... பெரியவனானதும் அம்மாவிடம் கேட்க துணிவில்லைப்பா ...”

“எனக்குப் புரிகிறது அண்ணா ... விடுங்கள் காலம் செய்த கோலம் தான் இது.... அண்ணா எனக்கு அம்மாவைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது!!....” சிறு பிள்ளை ஆசையுடன் ‘அந்த பொம்மை வேண்டும்‘ என்று கேட்பது போல் கேட்டான் ...

‘ஐயோ !! என் தம்பியின் நிலை இவ்வளவு மோசமாக வேண்டுமா?.... நான் யாரை நோவது?...இவன் சிறுப்பிள்ளையாய் இருக்கும் போதே பிரிந்து விட்டானே !!! எப்படி தாய் முகம் பார்க்காமல் வளர்ந்தான்.... இருக்கட்டும் பிறகு மாமாவிடம் கேட்டு கொள்ளலாம் ‘..... சிந்தனைக்கிடையில் தன் மடிக்கணினியை உயிர்ப்பித்து அதில் இருந்த தன் தாயின் போட்டோவை காட்டினான்.....

‘கண்களில் கனிவும் அதற்கு சமமான சோகமும் தென்பட்டது...’

“அம்மா......... “ கணினித்திரையை கண்ணீருடன் அணைத்துக்கொண்டான்.....

“அண்ணா !! பென்டிரைவில் காப்பி பண்ணி கொடுங்கள் அண்ணா !!! அப்பாவிடம் காட்டுகிறேன் .......”

‘அப்பா’.... ‘அவர் இருந்தும் தனக்கு ஏன் இந்த நிலைமை ....‘ சிறுவயதில் அப்பாவிற்காக ஏங்கியது நினைவு வந்தது .. கூடவே அம்மாவின் துயரமும் நினைவு வந்தது.... தன் தந்தையின் மேல் கோபம் உண்டானது .....

“நீ பார்க்க வேண்டும் என்றாய் காட்டினேன்....உனக்கு அம்மாவை காண வேண்டும் என்று ஏக்கம் இருக்கும்... ஆனால், அப்பாவின் நிலை எப்படியோ!!!!.....”

“அதில்லை அண்ணா... அப்பா பாவம் .... இருவர் நிலையும் ஒன்று தான்... இருபக்கமும் துன்பம் தாண்டவமாடுகிறது.... “

‘எவ்வளவு கூறியும் அவன் முகம் கனிந்தபாடில்லை...’

“காலக்கொடுமை விஷ்ணு !!! கணவன், மனைவியின் போட்டோவைக் காண மகனிடன் அனுமதி வாங்கவேண்டும் போல் இருக்கிறதே!!!...” ஆதங்கத்துடனும் சிறு கோபத்துடனும் விஷ்ணுவின் அருகில் வந்தமர்ந்தாள் அபி..

‘இவள் எப்போது வந்தாள்’... அவளை கூர்ந்து நோக்கினான் ஹரி... கன்னங்களில் கண்ணீரின் சுவடு தெரிந்தது ...’ஆகா .. இவள் மின்னமே வந்து விட்டாள்.... இவ்வளவு நேரம் பேச்சில் இடையூறு செய்யாமல் தன் தந்தையை குறை கூறியவுடன் வரிந்துக்கட்டி வந்துவிட்டாள் போலும்.. மாமா ஆயிற்றே விடுவாளா....’ ஊகித்தான் ஹரி...

“அப்படியெல்லாம் சொல்லாதிர்கள் அண்ணி....”

‘அவனின் பார்வையை தவிர்த்துவிட்டு , விஷ்ணுவிடம் “பின்ன என்ன விஷ்ணு... நான் சொன்னதில் ஏதாவது தவறு இருக்கிறதா!!!?.....”

“ஆமாம் அண்ணி .. அண்ணனை நீங்கள் அப்படி சொல்ல கூடாது ....”

“விடு விஷ்ணு ... பேசிக்கொள்ளட்டும் ... வட்டியும் மொதலுமாக பிறகு வசூல் செய்து விடுகிறேன் .....”

‘அவனை எரித்து விடுவதை போல் பார்த்தாள் அபி...’

‘நானாவது உன் பார்வையில் அடங்குவதாவது என்கிற பாவனையில் பார்த்தான் ஹரி.’..

இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த விஷ்ணுவும் சுபியும் சிரித்தார்கள் .. இரு சிரிப்பு சத்தம் கேட்கவும் மூவரும் சிரிப்பு வந்த திசையை நோக்கினார்கள்...

‘யார் இவர்கள் ... புதிதாக இருக்கிறார்களே ...’ எண்ணியதை கேட்டும் விட்டான் விஷ்ணு....

“இவள் என் தோழி விஷ்ணு .. பெயர் சுபா .... “

‘தோழியா... நம் அண்ணிக்கு போட்டியாக வந்தவர்களோ!!!’ அண்ணனை நோக்கினான் ..

அவன் என்ன ஓட்டத்தை புரிந்துக்கொண்டாற்போல் மறுப்பாக தலை ஆட்டினான் ஹரி..

“சரி சரி ... நான் வந்த விஷயத்தையே மறந்து விட்டேனே .. அம்மா உங்கள் எல்லோரையும் சாப்பிட அழைத்தார்கள் ....”

“என்ன அண்ணி இவ்வளவு தாமதமா சொல்றிங்க ... நமக்கு சாப்பாடுதான் முக்கியம் ... வாங்க வாங்க எல்லோரும் சாப்பிட போலாம் ... அத்தையோட நளபாகம் சூப்பரா இருக்கும்...”

“மெதுவா வாயேன் விஷ்ணு .. சாப்பாடு பறந்தா போய்விடும்... நீ கிழே விழுந்து விட்டால், எங்களால் உன்னை தூக்குவது மகா சிரமம் ...”

“அண்ணி ... வேண்டாம்... அழுதுடுவேன் “விடிவேல் பாணியில் விஷ்ணு செய்து காட்ட அனைவரும் சிரித்துக்கொண்டே சாப்பாட்டு மேசைக்கு வந்து சேர்ந்தார்கள் .....

‘அங்கே , பாலா அமர்ந்திருக்க ‘ “அண்ணி நான் ஏன் அவசரமாக வந்தேன் தெரியுமா ....”என்று பாலாவை பார்த்துக்கொண்டே வினவினான்...

‘சரிதான் .. இவன் நமக்கு குழிவெட்டுகிறான் போல... உஷாராக இரு பாலா ‘ தனக்குள் சொல்லிக்கொண்டே அவனின் குழியை அறிய “எதற்கு அவசரமாக வந்தாய் விஷ்ணு “ என்று கேட்டார்...

“இதோ .. என் அன்பு மாமா அத்துனை சாப்பாட்டையும் விழுங்கி விட்டால், என்ன செய்வது என்றுதான்.....ஆ” ... ஒரே சமயத்தில் பிரேமாவும் அபியும் விஷ்ணுவின் முதுகில் தபேலா வாசிக்க அங்கே ஒரு சிரிப்பலை உருவாகியது....

திடும்என்று ஒரு நொடி அபியின் முகம் வாடி சரியாகியது .... அதை கவனிக்க தவறவில்லை விஷ்ணுவும் ஹரியும் .... ‘என்ன ‘ என்று கண்ணால் வினவினான் விஷ்ணு... அவள் ஒன்றுமில்லை போல் முகத்தை வைத்துக்கொண்டாள் .... இந்த பார்வை பரிமாற்றத்தை கவனிக்க தவறவில்லை ஹரி...

“நன்றாக நாலு போடு பிரேமா....”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.