(Reading time: 23 - 46 minutes)

30. என் இனியவளே - பாலா 

En Iniyavale

ரி சொல்லுங்க” என்று இளவரசன் கேட்க ஆரம்பித்தான்.

“நீங்க ஸ்வேதாவை சந்துருக்கு மேரேஜ் பண்ணி வைக்கறதுக்கு ஒத்துக்காததுக்கு என்ன காரணம்”

“அது இருக்கட்டும். இதை கேட்டு அன்னைக்கு என்ன ஒரு குழப்பு குழப்புனீங்களே, நீங்க முதல்ல என்ன விஷயம்ன்னு சொல்லுங்க. இல்லன்னா என் தலையே வெடிச்சிடும்” என்று சிரித்தான்.

“ஸ்வேதாவை என் வீட்டுக்காரருக்கு மேரேஜ் பண்ணி வைக்கறதா தான் முதல்ல இருந்துச்சி. ஆனா அவருக்கு சின்ன வயசுல இருந்தே பார்த்து பழகன பொண்ணு, அதுவும் இல்லாம அவ சின்ன பொண்ணுன்னு அந்த மேரேஜ்ல இஷ்டம் இல்லை. அப்புறம் எங்க மேரேஜ் நடந்து, எல்லாமே மாறி போயிடுச்சி”

“எனக்கே முதல்ல ஸ்வேதாவை பிடிக்காது தான், அவரை மேரேஜ் பண்ணிக்க இருந்தவ அப்படிங்கறதும் ஒரு ரீசன், இன்னும் அவளும் என்னை ஸ்டார்டிங்ல கொஞ்சம் வெறுப்பேத்தி இருக்கா. பட் எல்லாம் முடிஞ்சி போச்சி.”

“அவளுக்கு அவர் மேல காதல் அப்படின்னு எல்லாம் ஒன்னும் இருந்திருக்காது. வீட்டுல இவருக்கு தான் மேரேஜ் பண்ணி வைக்க போறோம்னு சொன்னதுல ஏதோ ஒரு அட்ராக்சன் வேணும்னா இருந்திருக்கலாம். ஆனா அதுக்காகவா நீங்க இந்த மேரேஜ்க்கு ஒத்துக்க மாற்றீங்க.”

“அவ இனியா கிட்ட சொன்னாளாம். மாமாவை தான் மேரேஜ் பண்ணிக்க போறேன்னு வீட்டுல எப்பவுமே சொல்லிட்டு இருந்தாங்க. அதனால எனக்கும் அப்படி ஒரு எண்ணம் இருந்துச்சி. பட் அது ஒரு இன்பாக்டுவேஷன் தான். ஆனா சந்துருவை பார்த்ததுக்கு அப்புறம் தான் இது தான் உண்மையான காதல்னு நான் புரிஞ்சிக்கிட்டேன். ஆனா அதுவும் எனக்கு நிலைக்கலை. மாமாவை நான் லவ் பண்ணேன்னு தான் இந்த கல்யாணத்துக்கு அவங்க அண்ணன் ஒத்துக்க மாற்றாங்க. சந்துருவும் இப்ப அவர் பேச்சை கேட்டு இப்ப எல்லாம் என்னை அவாய்ட் பண்றாரு.” அப்படின்னு சொல்லி அழுதாளாம்.

“நீங்களே சொல்லுங்க. அவளோட சின்ன வயசுல இருந்து வீட்டுல சொன்ன ஒருத்தர் மேல ஒரு இஷ்டம் வரர்து சகஜம் தானே. ஆனா உங்களால இதெல்லாம் புரிஞ்சிக்க முடியும் தானே.”

இளவரசனுக்கு ஆச்சரியாமாக இருந்தது.

இளவரசன் பேச ஆரம்பித்தான். (இந்த டிவில எல்லாம் முக்கியமா பேசறத ம்யூட்ல போட்ட மாதிரி சவுண்ட் கேட்காத மாதிரி பேசிப்பாங்களே. இதையும் அப்படியே இமேஜின் பண்ணிக்கோங்க.)

இளவரசன் பேசுவதை கேட்க கேட்க ஜோதிக்கு கோபமாக வந்தது.

ஒரு வழியாக பேசி விட்டு வைத்து விட்டாள். ஆனால் அவள் ஆத்திரம் மட்டும் அடங்குவதாக இல்லை.

வித்ரா பவித்ரா” என்று கூப்பிட்டார் லக்ஷ்மி.

ஆனால் பதிலில்லை.

ஹாலிற்கு சென்று பார்த்தால் அவள் அங்கு தான் அமர்ந்துக் கொண்டிருந்தாள்.

அவளருகே சென்று அமர்ந்தார் லக்ஷ்மி.

ஆனால் பவித்ராவிடம் அசைவில்லை.

மெதுவாக அவள் தோளில் கை வைத்தார்.

உடனே தூக்கி வாரி போட்டவளாக பவித்ரா சுய நினைவுக்கு வந்தாள்.

“என்னடா” என்றார் லக்ஷ்மி.

“ஒன்னும் இல்லை பெரியம்மா”

லக்ஷ்மிக்கு குழப்பமாக இருந்தது.

எப்போதுமே கலகலப்பாக இருப்பவள் பவித்ரா. வீட்டிலே பிரளயமே நடந்துக் கொண்டிருந்தாலும் அது அவளை பாதிக்கவே பாதிக்காது. அவள் நார்மலாகவே இருப்பாள்.

ஆனால் இப்போது ஏன் இப்படி இருக்கிறாள் என்று எண்ணி பார்த்தார் லக்ஷ்மி. ஆனால் அதற்கு விட தான் கிடைக்கவில்லை.

“அப்புறம் ஏன் மா இப்படி இருக்க”

“இல்லையே பெரியம்மா. நான் நல்லா தானே இருக்கேன்”

“எனக்கு அப்படி தெரியலையே”

பவித்ரா இப்போது விழித்துக் கொண்டாள்.

எல்லோரும் தன்னை என்னவென்று கேட்கும் நிலையிலா தான் இருக்கிறோம் என்று அதை தவிர்க்கும் பொருட்டு,

“அப்ப எப்படி தெரியுது, சரியா தெரியலைன்னா உங்க கண்ல தான் மிஸ்டேக்” என்றாள் சிரித்துக் கொண்டே.

லக்ஷ்மிக்கு அவள் தான் நார்மாலாக தான் இருக்கிறாள் என்று தன்னை நம்ப வைக்க இப்படி பேசுகிறாள் என்று அவருக்கு நன்றாக தெரிந்தது. ஆனால் அதைக் காட்டிக் கொண்டால் அவள் திரும்ப கூட்டுக்குள் அடைந்துக் கொள்வாள். அதற்கு இதுவே பெட்டெர் என்று எண்ணி அவரும் சிரித்துக் கொண்டே “இது தான் என் பொண்ணு பவித்ரா. அவளுக்கு இந்த சோக சீன் எல்லாம் செட் ஆகாதே” என்றார்.

“ம்ம்ம். அவ்வளவு கொடுமையா பண்ணிட்டேன் உங்களை. என் மூஞ்சி அப்படியா இருந்துச்சி” என்றாள்.

“ஆமா ஆமா. ரொம்ப அழுமூஞ்சியா இருந்துச்சி”

“பெரியம்மாஆஆஆ”

“சரி சரி. என் பொண்ணு இப்படி சிரிச்சிட்டே இருந்தா தான் எனக்குப் பிடிக்கும். சரியா”

“சரி பெரியம்மா. ஏதோ யோசனையில இருந்திருப்பேன். மத்த படி நீங்க நினைக்கற மாதிரி எதுவுமே இல்லை. ஓகே வா”

“சரிடா.” என்று போய் விட்டார் லக்ஷ்மி.

பவித்ரா தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

உடனே யாராவது பார்த்து விடுவார்களா என்று எண்ணி கையை தலையிலிருந்து எடுத்து விட்டு அமர்ந்தாள்.

அவள் நிலையை எண்ணி அவளுக்கே வருத்தமாக இருந்தது.

இத்தனை வருடங்களாக ஆசை ஆசையாக கிளம்பி வரும் பெரியப்பா வீடு, வந்து விட்டால் கிளம்ப பிடிக்காத வீடு, ஆனால் இன்று இதே வீடு தன்னை தவிக்க வைக்கும் என்று அவள் எண்ணவில்லை.

அவள் எதிர்பார்த்த தனிமையையும், நேரத்தையும் யாரும் அவளுக்கு கொடுப்பதாக இல்லை.

இனியாவிற்கு உடல் நிலை சரியில்லை என்பதால் ஜோதி அவளை இங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டாள். அதுவும் ஓகே தான். இங்கே இருக்க அவளுக்கு விருப்பம் தான், ஆனால் இந்த வீடும் ஏதோ ஒரு வகையில் அவனை அவளுக்கு நினைவு படுத்தியது.

ஆனால் இதையும் விட, சற்று நேரத்திற்கு முன் அவள் தந்தை போன் செய்து, அவர் ஊருக்கு செல்லவிருப்பதாகவும், அதற்கு முன் இங்கு வந்து அவளை அழைத்துக் கொண்டு சென்று அவள் அத்தையின் வீட்டில் விட்டு விடுவதாகவும் கூறினார்.

அவனை நியாபகப் படுத்தும் இடத்தை நினைத்தே அவள் வருத்தப் பட்டுக் கொண்டிருக்க, அவரோ அவளை அவனிடமே அழைத்துக் கொண்டு விடுவதாக சொல்கிறார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.