(Reading time: 12 - 24 minutes)

04. பொம்முவின் தேடல் - லோகேஷ் 

ஜென்மம் னா  என்ன அரவிந்த்?” – பொம்மு

Bommuvin thedal“என் அம்மா சொல்லுவாங்க ஜென்மம் னா ஒரு மனிஷனோட ஒரு பிறவி காலம்னு” – அரவிந்த்

“பிறவி காலமா?” – பொம்மு

“ஆமா மனிஷனோட ஒரு பிறவிக்கான வாழ்நாள் தான் அது....ஒவ்வொரு மனிஷனுக்கும் 7 ஜென்மங்கள் இருக்கு..” – அரவிந்த்.

“7 ஜென்மம்...இதெல்லாம் உண்மையா?”– பொம்மு

“நடக்குற சம்பவங்கள வச்சு பாக்கும் போது இதெல்லாம் நம்பி தான் ஆகணும் பொம்மு.” –அரவிந்த்

இப்படியே பொம்முவும் அரவிந்தும் பேசிக் கொண்டே அந்த பயங்கர காட்டில் நீண்ட தூரம் கடந்து வந்துக் கொண்டிருந்தனர். அந்த காட்டில் ஏதேதோ வித்யாசமான சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தது. மாதவனும் அவர்களிடம் வந்து சேரவில்லை. அவர்களுக்கு வழிக்காட்டி முன்னே செல்லும் கருப்பு நாய் பைரவன் தான் இப்போது அவர்களுக்கு துணை.

“அந்த மாதவன் இன்னும் வரல....என்னால ரொம்ப தூரம் நடக்க முடியாது...எனக்கு தாகமா இருக்கு ” என்று அரவிந்த் சோர்ந்து போய் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தான்.

“இரு நான் போய் பக்கத்துல எதாவது தண்ணி கிடைக்குதான்னு பாத்துட்டு வரேன்!” என்று பொம்மு அங்கிருந்து விலகி சென்றாள். பைரவன் அரவிந்த் அருகில் அமர்ந்தது.

பொம்மு சுற்றி சுற்றி தேடியபடி சிறிது தூரம் சென்றாள். அங்கே ஒரு இடத்தில் ஒரு ஆச்சர்யம் அவள் கண்டாள். ஒரு அழகான மரத்தில் அதன் துவாரத்தில் இருந்து அருவி போல நீர் ஊற்றிகொண்டு இருந்தது.

அந்த தண்ணீர் மரத்தின் அடியில் சென்றாள் பொம்மு. தண்ணிரில் விளையாடினாள். அங்கே கிழே இருந்த ஒரு கொட்டங்குச்சியை எடுத்து அதில் தண்ணிரை நிரப்பிக் கொண்டிருந்தாள்.

“மாமிசம்...மாமிச வாசனை ரொம்ப நாள் கழிச்சு எனக்கு வருது! இங்க தான் பக்கத்தில் எங்கோ இருக்கு..” என்று ஒரு வினோத குரல் கேட்டு பொம்மு மரத்தின் பின்னே எட்டி பார்த்தாள்.

சற்று தூரத்தில் இரண்டு வினோத உருவங்களை கண்டாள் பொம்மு. மனிதனின் ளவுதான் இருந்தன. ஆனால் கால்கள் இல்லாமல் காற்றில் மிதந்து வந்துக் கொண்டிருந்தது. இரண்டு சிவப்பு கண்கள், மேல்நோக்கி வீசும் கூந்தல், கருமை நிற உடல், நீண்ட கோர பற்கள் என்று அவை பார்க்கவே பயங்கரமாக இருந்தது. அந்த வினோத உருவங்கள் அரவிந்தின் திசை நோக்கி மிதந்து கொண்டிருந்தனர். பொம்மு அந்த பயத்திலேயே கொட்டாங்குச்சியை கிழே போட அந்த சத்தத்தில் அந்த வினோத பேய்கள் பொம்முவை சட்டென கண்டு பிடித்தனர். பொம்மு உடனே ஓட ஆரம்பித்தாள். அந்த வினோத உருவங்கள் வெறித்தனமாக அவளை துரத்தி வந்தனர். பொம்மு அரவிந்தின் திசை பக்கம் தேடி ஓடினாள். இறுதியாக துரத்தில் அரவிந்த் பைரவனுடன் அமர்ந்திருப்பதை கண்டாள் பொம்மு.

“அரவிந்த்...ஓடு! ஓடு!” என்று கத்தியபடி அவனிடம் நோக்கி ஓடிவந்தாள். அரவிந்த் அந்த உருவங்கள் அவளை துரத்துவதை அதிர்ச்சியுடன் கண்டு எழுந்தான். பைரவன் சீறி பாய்ந்து அந்த வினோத உருவங்களிடம் சண்டை  போட ஆரம்பித்தது. பொம்மு அரவிந்திடம் தாவினாள்.அரவிந்த் போம்முவை தூக்கி கொண்டு எங்கோ ஒரு திசையை நோக்கி ஓட ஆரம்பித்தான். ஒரு உருவம் பைரவனிடம் சண்டை போடா இன்னொரு உருவம் அரவிந்தை துரத்தி வந்தது. அரவிந்த் நீண்ட நேரம் அந்த உருவத்தின் சிக்காமல் ஓட திடிரென அந்த உருவத்திடம் சிக்கும் நேரம் வந்தது.. அரவிந்தின் காலை கவ்வியது அந்த உருவம் உடனே அரவிந்த் பொம்முவுடன் மண்ணில் விழுந்து புரண்டான். அந்த உருவம் தன கோர வாயை திறந்த படி அரவிந்தை நோக்கி வந்தது. பொம்மு அந்த உருவத்தை தடுக்க வர அடகு ஒரே அடியில் பொம்மு தூர போய் விழ செய்தது. அரவிந்த் பயத்தில் உறைந்து போனான். அந்த உருவன் வேகமாக அரவ்விந்தை நோக்கி வந்தது. திடிரென குறுக்கே பாய்ந்த பைரவன் அந்த உருவத்தின் முகத்தை தாக்கியது. பைரவன் வாயில் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.

Bommuvin thedalநீண்ட நேரம் பைரவனும் அந்த உருவமும் சண்டை போட்டு கொண்டிருக்க சட்டென அங்கே விரைந்த மற்றொரு வினோத உருவம் பைரவனின் கழுத்தை வாயால் கவ்வியது. பொம்முவும் அரவிந்தும் செய்வதறியாமல் பதட்டத்துடன் நின்றனர். அந்த உருவம் மேலும் மெல்லும் பிரவின் கழுத்தை கடிக்க பிரவின் கழுத்தில் ரத்தம் தண்ணிரை போல வந்தது. இறுதியில் பைரவன் இறந்து போனது.

இறந்து போன பைரவனை கிழே போட்ட  அந்த உருவங்கள் அடுத்து அரவிந்தை பார்த்தனர். அரவிந்த் திடுகிட்டான். இம்முறை இரண்டு உருவங்களும் அரவிந்தை நோக்கி வேகமாக வந்தனர். பொம்மு ஓடி அரவிந்த் பக்கம் ஓடி வந்தாள்.

“படார்!” என்ற சத்தத்துடன் ஒரு கழுகு பறந்து வந்து அந்த உருவங்களை தாக்கியது. அரவிந்தும் பொம்முவும் அதிர்ச்சியில் மேலே கண்டனர். அவர்களை காப்பாற்ற ஒரு கழுகு கூட்டமே அங்கு விரைந்து வந்தது. அந்த இரண்டு உருவங்களையும் அந்த கழுகுகள் மாறி மாறி தாக்க ஆரம்பித்தனர். அந்த உருவங்கள் தப்பிக்க முடியாமல் அங்கேயே இறந்து போயின.

ஒரு கழுகு இறந்து போன பைரவனை தூக்கிகொண்டு முன்னே பறந்து சென்றது. இரண்டு கழுகுகள் பொம்முவையும் அரவிந்தையும் தூக்கி கொண்டு அந்த முதல் கழுகை தொடர்ந்தனர். மற்ற கழுகுகள் பின்னே தொடர ஆரம்பித்தனர்.

ரவிந்துக்கும் பொம்முவும் ஒன்றும் புரியவில்லை. மின்னல் நேரத்தில் நடந்த அதிர்ச்சியில் அவர்கள் வாயடைத்து காணப்பட்டனர். அந்த கழுகுகள் மிக உயரத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தனர். அங்கே ஒரு மிக உயர்ந்த மலையின் உச்சியை நோக்கி அவை பறந்து கொண்டிருந்தன. அந்த உச்சியில் ஒரு மிகப்பெரிய கோபுரம் இருந்தது. அந்த கோபுரத்தை பார்க்கும்போதே அது ஒரு கோவில் என்று புரிந்தது.

அந்த கழுகள் கோவிலின் வெளியே பரந்த பாறை இடத்தில் அரவிந்தையும் பொம்முவையும் விட்டு சென்றன. அந்த இறந்த போன பைரவனின் உடலை மட்டும் அந்த கழுகுகள் எங்கோ தூக்கி சென்று விண்ணில் மறைந்தன. அந்த கழுகுகள் எதற்காக தங்களை காப்பாற்ற வேண்டும்? பைரவனின் உடலை மட்டும் அவைகள் ஏன் எடுத்து செல்ல வேண்டும் ? என்று பல கேள்விகள் பொம்முவின் மனதில் ஓடின. பொம்முவும் அரவிந்தும் சுற்றி சுற்றி பார்த்தனர். அந்த கோவிலின் பெரிய கதவு மூட பட்டிருந்தது. அந்த பழமையான கோவிலை பார்க்கும் போதே அது நீண்ட வருடமாக மூட  பட்டிருப்பது அவர்களுக்கு தெரிந்தது. பொம்முவும் அரவிந்தும் சுற்றி பார்க்கும் போது. கண்ணுக்கெட்டியதூரம்  மலைக்கு கிழே காடுதான். அதோடு அந்த உலகமே சூரிய வெளிச்சத்தை முழுதாக கண்டதில்லை என்பதுபோல் வானம் எப்போதும் கருப்பு மேகங்களால் சூழ்திருந்தது.

“பொம்மு ....அங்க பாரு...” என்று ஓரிடத்தை பொம்மு காட்ட அங்கே அரவிந்த் பார்த்தான். அங்கே ஒரு ஒரு பாறையாலான நுழைவாயில் போன்ற ஒன்றில் பெரிய ஆலயமணி தொங்கிக் கொண்டிருந்தது. பொம்முவும் அரவிந்தும் அதன் அருகில் சென்றனர். கோவிலை போலவே அந்த ஆலய மணியிலும் நிறைய தூசி படிந்திருந்தது.

“என்ன?” – அரவிந்த்.

“இந்த மணிய அடிச்சு பாப்போம் ! யாரவது பக்கத்தில இருந்த இங்க வருவாங்க” – பொம்மு.

“எனக்கு அப்படி ஒன்னும் தோணலை...இந்த இடம் பல  வருஷமா இப்படியே தான் இருக்கு போல..” – அரவிந்த்.

பொம்மு அந்த ஆலயமணியின் கயிற்றை பிடித்து அசைக்க ஆலயமணியின் சத்தம் பயங்கரமாக கேட்டது.

திடீரென அந்த சத்தத்தை விட பெரிய சத்தத்துடன் அந்த கோவில் கதவு மெல்ல திறந்தது. பொம்முவும் அரவிந்தின் சற்று தயங்கியபடி கோவிலை கண்டனர். அங்கிருந்து நிறைய கிராம மக்கள் வெள்யே சந்தோஷமாக ஓடி வந்துக் கொண்டிருந்தனர். அவர்கள் மிக சந்தோஷத்துடன் ஓடி வந்து பொம்முவையும் அரவிந்தையும் தூக்கி கொண்டாட ஆரம்பித்தனர். பொம்முவுக்கும் அரவிந்துக்கும் ஒன்றும் புரிய வில்லை. அவர்களில் ஒரு கம்பிரமான மனிதர் வந்தார். பெரிய மீசையும் கையில் கம்பையும் வைத்திருந்தார். உடனே பொம்முவையும் அரவிந்தையும் அந்த மக்கள் கிழே மெல்ல இறக்கி விட்டனர்.

“ வணக்கம்! உங்க பேரு என்னனு தெரிஞ்சுக்கலமா?” என்று அவர் கேட்டார்.

“என் பேரு பொம்மு....இவன் பேரு அரவிந்த்” – பொம்மு

“ரொம்ப சந்தோஷம்! என் பெயர் காளியன். இந்த கோவிலோட காவல்காரன். எங்களை காப்பாத்த வந்த உங்களுக்கு நாங்க எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது!” – என்றார்.

“என்ன சொல்றீங்க? நான் காப்பாத்த வந்தேனா?....இல்ல நீங்க தப்பா புரிஞ்சுக்கிடீங்க!” – பொம்மு

“இல்ல இல்ல...எல்லாம் புரிஞ்சுதான் சொல்றேன்! விதிப்படி நீங்க எங்கள காப்பாதிருக்கீங்க! ...காப்பாத்தவும் போறீங்க!” – காளியன்

“நீங்க சொல்றது எனக்கு புரியல!” – பொம்மு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.