(Reading time: 6 - 11 minutes)

02. உன்னிடம் மயங்குகிறேன்..! சொல்ல தான் தயங்குகிறேன்..! - ஸ்வேதா

உன்னிடம் மயங்குகிறேன்..!சொல்ல தான் தயங்குகிறேன்..!

காரில் படபடப்புடன் பயணம் தொடர்ந்தது கவிதாவிற்கு. பக்கவாட்டில் காரை செலுத்திக்கொண்டிருந்தவனை ஒர பார்வையால் பார்த்தாள், வெளிர் நிறம், சிரித்த முகம், அடர்ந்த முடி, யாரையுமே வசீகரிக்கும் தோற்றம். இவனையா நிஷா வேண்டாமென்றாள்??. அவன் கவியை நோக்கி பார்வையை  திரும்பியதும் செய்வது அறியாது முழித்தாள் கவி.

மாட்டிக்கொண்டாயா என்பது போல் அவன் பார்க்க பதறியது நெஞ்சம். ஆகாஷ் விட்டு பிடிக்கலாம் என்று எண்ணினானோ சூழ்நிலையை இலகுவாக்க,

"உங்க ஊரில் ஆடு ஏதாவது காணாம போயிருக்கா என்று விசாரிக்கணும்" என்றான்.

இது என்ன சம்மந்தமே இல்லாத பேச்சு என்று கவி நினைத்து கொண்டே,

"நீங்க  பிஸ்னெஸ் பண்றீங்க என்று தானே நான் கேள்விபட்டது!" என்றாள்.

அவன் கேள்வியாய் நோக்கவும். "இல்லை நீங்க கேட்ட கேள்வியில் ரகசியபோலீசோ என்று நினைத்தேன்" என்றாள்.

அவன் விளக்கம் தரும் தோரணையில்,

"இப்படி திருட்டு முழி முழிச்சா வேற என்ன கேட்பாங்கலாம்" என்றான்.

இருவருக்குமே சிரிப்பு பொங்கியது.

பின் பேச்சு சுவாரஸ்யம் கூட கூட ஆகாஷின் நகைச்சுவையில் கண்களில் நீர் வர சிரித்தாள் கவி. படபடப்பு குறைந்து இருந்தது. மனம் கேள்வி எழுப்பியது " இவனா கஞ்சிபோட்ட சட்டை போல் விறைப்பாக இருப்பவன்?" உடனே பதிலும் சொல்லி கொண்டது "தொழிலில் மட்டும் அப்படி இருப்பான் போலும்” என்று.

வீட்டையே தலை கீழாக புரட்டி போட்டு கொண்டிருந்தார் வேணிம்மா என்னும் கிருஷ்ணவேணி. இன்னும் ஆறு  ஏழு மாதத்தில் எழுபதை தொடபோகிறது வயது. ஆனாலும் சுறுசுறுப்பிற்கு குறைவு இல்லை.  சென்ற வாரம் கூட ரத்த அழுத்தம் அதிகமாகி படுத்தவர் தான். ஆனால் இன்று அவருக்கு நோய் என்பதோ அயர்ச்சி என்பதோ அவையெல்லாம் பறந்தே விட்டது. இருக்காதா என்ன வீட்டிற்க்கு விளகேற்ற பெண் வரபோகிறாள்.

அவருடன் சேர்ந்து அந்த வீட்டிற்க்கு அவருக்கு அறிந்தே மூன்றாவது தலைமுறையான மாட்டுப்பெண் என்று கூட சொல்லலாம்.

வந்தவள் உடனே எல்லாம் விளகேற்ற போவதில்லை. காரணம் அவள் வருவது தொழிலை எப்படி நடத்துவது என்று அர்ஜுனிடம் கற்றுக்கொள்ள. அப்படி தான் நிஷாவின் தந்தையும் அவரும் பேசி நிஷாவை அவர்கள் வீட்டில் தங்க வைக்க போகிறார்கள்.

இப்படி தினமும் பார்த்து பேச பழகி ஒருவருக்கு ஒருவரை பிடித்து போகாதா என்ன?? என்று வேணி அவருக்கு அவரே திட்டத்தை கேட்டு அமல் படுத்தினார். நிஷாவின் தந்தைக்கு பின் அவள் தானே தொழிலை கவனிக்க வேண்டும். படிப்பு அறிவு மட்டும் போதுமா என்ன?? அனுபவ பாடமும் வேண்டும் தானே. என்று பலவாறு பேசி பேரனிடம் அவளிற்கு உதவுமாறு கேட்டு வைத்தும் இருந்தார் வேணி. தெரியாத வீடு பெண் வருவதை விட அந்த பாரம்பரியமான குடும்பத்திற்கு அவருக்கு சிறு வயது முதலே தெரிந்த நிஷா வரட்டுமே என்பது அவரின் கணக்கு.

விதாவிற்கு நிஷாவை போல் ஆகாஷும் உடனே நண்பன் ஆனான். இப்படி எண்ணியதும் நிஷாவை பற்றி மனம் அக்கறை கொண்டு சிறிது நேரம் அமைதியாக இருக்க. ஆகாஷ் அவளை ஆராய்வதுப்போல் பார்ப்பதை உணர்ந்தாள். உடனே தெளிந்து பேச்சு கொடுத்தாள்.

"வீடு எப்போ வரும் ஆகாஷ்”  என்று அவள் கேட்கவும் அவன் கரை நிறுத்தவும் சரியாக இருந்தது.

நெஞ்சம் படப்படக்க, மூச்சு முட்டுவதுபோல் இருக்க, மனம் " இறங்க வேண்டுமா??" என்று கேட்டது. இன்னொரு பக்கம் எந்த பிரச்சனை வந்தாலும் சந்திக்கலாம், போரரட்டம் தான் வாழ்கை என்று அவளுக்கு அவளே உபதேசம் செய்தாள்.

வீட்டினுள்ளே "வேணிம்மா, எதற்கு இப்படி காலையிலிருந்து நடந்துகிட்டே இருக்கீங்க" -அர்ஜுன்

பேரனின் அக்கறை பூரிப்பு கொடுத்தாலும் வயற்றில் புலி கரைசல் தான்.

"நிஷா வரப்போகிறாள்!" என்று ஆனந்தமாக சொன்னார் அவர்.

"நிஷா தானே!!" என்று உணர்ச்சியே இல்லாமல் சொன்னான் அர்ஜுன்.

காற்று போன பலூன் போல் ஆனாலும் முயற்சி பலன் தரும் என்ற நம்பிக்கை கொண்டவர் வேணி. முயற்சியை தொடர்ந்தார்.

வாசலில் கார் சத்தம் கேட்டதும் பேரனின் அதட்டலில் உட்கார்ந்திருந்தவர் வேகமாக எழ முன்னே இருக்கும் டிபாயில் இடித்துக்கொண்டார். உடனே சீறினான் அர்ஜுன்

"பார்த்தும்மா" என்று.

முறைத்துகொண்டே அழுத்தமாக,

"நான் போய் பார்க்கிறேன், நீங்கள் இங்கே இருங்கள்" என்றான்.

அந்த அழுத்த குரல் அடுத்தவரை அடுத்து என்ன என்பதை மறக்க செய்யும்.வேணியும் உடனே பணிந்தார்.

அவரின் முதிர்ந்த மனம் " அதுவும் சரியே," என்று பேரனின் நல்லதிற்காக அமர்ந்துக்கொண்டது.

ந்த பிரமாண்டமான வீட்டிற்கு முன் வந்து நின்றவளிற்கு தொண்டை வரண்டது. வீட்டின் முகப்பிற்கு வர்ண பூச்சு வேலை நடந்து கொண்டிருந்தது. ரசித்துக்கொண்டே பார்த்தவளுக்கு வாசலில் உள்ளிலிருந்து ஒருவன் வருவது தெரிந்தது. ஆகாஷின் முகமே இன்னும் சற்று முதிர்ந்ததுப்போல் இருந்தவன், ஆனால் முகம் கல்லுப்போல் இறுகி இருந்தது. வருபவன் கண்களில் கனல் தெறித்தது.  வீட்டிற்க்கு வெளியே அவன் வரவர வீட்டின் மேல்புறம் வண்ணம் பூசிக்கொண்டிருந்தவன் கையிலிருந்த வாளியை தவற விட அவன் மேல் பீச் நிற அபிஷேகம்.

சட்டென பொங்கியது சிரிப்பு அவளுக்குள். வாய் விட்டு சத்தமாக  சிரிக்க தொடங்கினாள். சிரிப்பு சத்தம் ,கேட்டு காரின் இன்னொரு பக்கம் இருந்தவன் எட்டி பார்க்க சிரிப்பு வந்தாலும் பதறி,

"அர்ஜுன் அண்ணா" என்று ஓடினான்.

"அண்ணன்ணா?" என்று உறைந்தாள் கவி. எதோ ஒன்று விளங்கியது போல்,! இடி சத்தமின்றி இறங்கியதுப்போல் உணர்ந்தாள். ஆகாஷ் நல்லவனாக நண்பனாக தெரிந்தானே! உண்மையை சொல்லி கொஞ்ச நாள் தங்க மட்டும் அனுமதி வாங்கி வேலை கிடைத்த பின் வெளியேறிட வேண்டும் என்று நினைத்தாளே. அவள் நினைத்தது போல் இல்லையா என்ன என்று மனம் இருண்டது.

சூழ்நிலை புரிந்து உதவிக்கு என்று முகத்தை இறுக்கமாக்கி கொண்டு அவன் எதிரில் போய் நின்றாள். அதற்குள் கிழே விழுந்தவன் சமாளித்து எழுந்து அவள் மேல்  பார்வை மட்டும் வீசி விட்டு ஆகாஷுடன் உள்ளே சென்று விட்டான். அந்த குழப்பமான  இறுக்கமான சூழ்நிலையிலும் சிரிப்பு வந்து கொண்டே இருந்தது கவிதாவிற்கு. மற்றவருக்கு எதிர்பாராத விபத்து என்றாள் சிரிக்க கூடாது அது தவறு என்று தெரிந்தும் கொஞ்ச நாட்களாகவே சிரிக்க முடியாமல் மறந்தே விட்டிருந்தவளிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஒருவாறு சமாளித்து கொண்டு வெளியே ரொம்ப நேரம் நிற்க முடியாமல்  உள்ளே நடுவறைக்கு போனவளிற்கு காதில் தெளிவாக கேட்டது கணீர் குரலில் பேசிய பேச்சு

"அந்த சாடிஸ்ட் உடனே வெளியே அனுப்புங்கள், அவள் இங்கே இருப்பது எனக்கு பிடிக்கவில்லை" என்று.

ஆனால் அந்த பேச்சு அவளிற்கு எந்த மாற்றமும் கொடுக்க வில்லை. அது புது நண்பன் ஆகாஷ் பார்த்து கொள்வான் என்றா? இல்லை இடி மேல் இடி அவளை சலிக்க செய்து விட்டதாலா இல்லை போராட்டத்திற்கு அவள் மனம் தயாராகி விட்டதலோ என்னவோ???

தொடரும்!

Go to episode # 01

Go to episode # 03


{kunena_discuss:700}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.