(Reading time: 15 - 29 minutes)

05. நீரும் நெருப்பும் - மோஹனா

நீரும் நெருப்பும்

 

ன்ன அங்கே சத்தம்....” வெளியில் சென்று திரும்பி வந்த பாலா, பிரேமாவும் அபியும் மாடிக்கு விரைவதைக் கண்டு அங்கே வந்தார்.....

 

அவர் வேகமாக வரவும், விஷ்ணு ஊற்றிய எண்ணை என்ற குழியில் அவரும் விழுந்துவிட்டார். மறைவிலிருந்த விஷ்ணுவும், வெளியில் இருந்த அபியும், பிரேமாவும் , ஹரியும் பதறினர்..

 

ஆரவாரம் கேட்டு அங்கு வந்து சேர்ந்தார் கைலாசநாதர்... தரையில் பாலாவும் சோழனும் விழுந்துக் கிடப்பதைப் பார்த்தவருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.... இருந்தாலும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு அவர்களை தூக்க எத்தனித்தார்..

 

“ஐயோ!... கிழம் வழுக்கி தரையில் விழுந்துவிட்டதே!!...”- விஷ்ணு

 

“என்னது .... “-அபி.

 

“ஒண்ணுமில்லை அண்ணி.... “

 

“வெட்டிப் பேச்சு பேசாமல் வந்து அப்பாவை தூக்க உதவி செய்.....”

 

“இதோ.... வந்துட்டேன் அண்ணி.... வாங்கண்ணா...”

 

ஒருவழியாக இருவரையும் தூக்கி, சோழனை அவனின் வீட்டிற்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்து, பின் பாலாவை அவர் அரையில் படுக்க வைத்துவிட்டு, மருத்துவரை அழைத்து வந்துக் காட்டினர்... மருத்துவரும் வழக்கம் போல் மாத்திரைகளை கொடுத்துவிட்டு, பத்து நாள்களுக்குள் சரியாகிவிடும், அப்படி ஆகவில்லை என்றால் திரும்ப வருகிறேன் என்று கூறி சென்று விட்டார்....

 

“ஹுஹும்.... ஒன்னும்தேறாது போல் இருக்கிறதே... இதுக்கெல்லாம் ஏன் மருத்துவர் , மாத்திரை .. இருக்கவே இருக்கிறதே நாட்டு வைத்தியம்....”-விஷ்ணு

 

“நீ ஏன்டா பேசமாட்ட, பிள்ளையை கில்லி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல் ......”-பாலா

 

“மாமா ???!!! ...”

 

“என்னடா நோமா .... ஏன்டா அப்படி செய்த?.....”

 

“அப்பா இதுக் கூட்டு சதி... விஷ்ணுவை மாத்திரம் விசாரித்தால் எப்படி?.....”-அபி.

 

திருதிருவென விழித்தார்கள் சகோதரர்கள் இருவரும்....

 

“அதுதானே.... !”- அபியோடுக் கூட்டு சேர்ந்தார் கைலாஷ்....

 

எல்லாவற்றையும் புரிந்துக் கொண்ட பிரேமா, அவர்களை காப்பாற்ற முன்வந்தார்....

 

“விடும்மா அபி.... இப்போ அதுவா முக்கியம்.. அப்பாவைப் பார்க்க வேண்டாமா....  நீ கொஞ்சம் கிழேப் போய் வேலுச்சாமியை அழைத்து, சுளுக்கெடுக்கம் ஆளைக் கூட்டி வரச் சொல்.... “

 

சமயத்தில் உதவிய அத்தையை விழிகளால் வணங்கினர் அந்த அபூர்வ சகோதரர்கள் .... உங்களை பிறகு கவனித்துக்கொள்கிறேன் என்று ஜாடைக் காண்பித்து ஆகா வேண்டிய வேலைகளைப் பார்க்க சென்று விட்டார்.....

 

“ஏன்டா இப்படி பண்ணிங்க?... தரையில் எண்ணையை உற்றியது நீங்கள் தானே...?”

 

“அப்பா நான் தான் உற்றினேன்... அண்ணனுக்கு ஒன்றும் தெரியாது....”

 

“இல்லைப்பா ... நான் சொல்லித்தான் உற்றினான்.... “

 

“இல்லைப்பா... அண்ணன் போய் சொல்கிறார்....”

 

“அது சரி .... அபி சொன்னதுப் போல் கூட்டு சதி தான்... உங்களை இப்படியே விட்டால் சரிபடாது .... தண்டித்தால் தான் வழிக்கு வருவீர்கள்.....”

 

சகோதரர்கள் பாவம் போல் முகத்தை வைத்துக் கொள்ளவும், பாலாவிற்கே பாவம் என்று தோன்றியது...

 

“மாமா சரியாகும் வரை நீங்கள் இருவரும் அவர் செய்ய வேண்டிய வேலைகளை செய்து முடிக்கவேண்டும்....”

 

“விடுப்பா கைலாசம் .....”

 

“நீ பேசாதேப்பா... எல்லாம் நீ கொடுக்கும் இடம்..... “

 

“அப்பா எங்களை மன்னித்து விடுங்கள்.... மாமா வேலைகளை நாங்களே செய்கிறோம்.... “- ஹரி...

 

ஒருவழியாக அவர்களை மன்னித்து விட்டார். அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலை வாங்கிக் கொண்டு வெளியே வந்தனர்...

 

னைவரும் இரவு உணவு முடித்து உறங்க சென்றனர். வழக்கம் போல் அபி தங்கைகளைத் தூங்க  வைத்து விட்டு அவள் அறைக்கு சென்றாள்....

 

பாலாவும் பிரேமாவும் அவர்கள் அறையில் பேசிக்கொண்டிருந்தார்கள்..

 

இரவு உறக்கம் வராததால் அங்கே இங்கே என உலவிக் கொண்டிருந்தான் ஹரி.. மாமாவின் அறையில் விளக்கெரியவும், தூங்கிக்கொண்டிருந்த விஷ்ணுவை எழுப்பி உடன் அழைத்துக் கொண்டு மாமாவின் அறைக்கு சென்றான்....

 

ன்ன மாமா தூக்கம் வரலையா?..”

 

“இது நான் கேக்க வேண்டிய கேள்வி மாப்பிள்ளை...”

 

“மாமா!!!!”

 

“மாப்பிள்ளை, இப்போ தான் பிரேமா எல்லாக் கதையையும் சொன்னாள்..”

 

“அத்தை என்ன சொன்னாங்க...”

 

“நீங்க எதுக்கு தரையில எண்ணையை ஊற்றினிங்க, யாரை கூப்பிட்டிங்க, எதுக்கு கூப்பிட்டிங்கன்னு சொல்லிட்டு இருந்தாள்....”

 

“அத்தை நீங்க தெய்வம், தனியா நான் மட்டும் அண்ணன் கிட்ட மாட்டிக்கிட்டான் நினைத்தேன் ... இப்போ தான் தெரியிது நாங்க இரண்டு பேரும் உங்க கிட்ட மாட்டிக்கிட்டோம்னு....”

 

“நீங்க பன்னின வேலைக்கு அபிகிட்டயே மாட்டியிருப்பிங்க....”

 

“மாட்டியிருப்பிங்க இல்லை அத்தை மாட்டியாச்சு ....”

 

“மாட்டினா என்ன இப்போ ... அவளாலா என்ன பண்ண முடியும்...”ஹரி

 

“என்ன பண்ணமுடியுமா?.. அண்ணா ஒருத்தன் நன்றியை மறப்பானோ இல்லையோ, ஆனால் அவனுக்கு வச்ச ஆப்பை மட்டும் மறக்க மாட்டான்... அதை மறந்துட்டியே அண்ணா.... அந்த ஸ்வீட் மேட்டர்’அ எப்படி மறந்திங்கண்ணா.....”

 

‘ஆமாம்ல... ‘ மைன்ட் வாய்ஸ் சொன்னாலும், “அதெல்லாம் நான் பாத்துப்பேன்....” வீராப்பாய் சொன்னாலும் மனதில் பயம் இருந்தது...

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.