(Reading time: 14 - 28 minutes)

06. பொம்முவின் தேடல் - லோகேஷ் 

துதான் நாங்கள் அந்த வரைப்படத்தை ஒளித்து வைத்த இடம்.” என்றார் ஒரு துறவி.

பொம்முவும் அரவிந்தும் துறவீகளுடன்  அந்த அடர்ந்த காட்டில் உள்ள ஒரு ஒரு நதியின் கரைப்பக்கம் வந்திருந்தனர். பொம்முவும் அரவிந்தும் அந்த வரைபடம் எங்கே இருக்குமென சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்த  போது துறவிகள் அனைவரும் நதிக்குள் இறங்கி சென்றனர். அந்த நதியின் ஆழம் குறைவுதான். பொம்முவும் அரவிந்தும் அவர்கள் செய்யப் போவதை கவனித்தனர். நீரானது வேகமாக ஓடிக்கொண்டிருக்க துறவிகள்  ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திற்கு சென்று நிற்க அந்த நதியின் நீர் துறவீகளால் ஆங்காகே தடுபட்டு செல்ல ஆரம்பித்தது. தடுக்கப்பட்ட நீர் இறுதியாக இடது பக்கம் கரையில் மோதி சென்றது. நீர் மோதும் கரைப்பக்கம் மணல் சரிந்தது. துறவி ஒருவர் அந்த இடத்தில் சென்று மணலை சரியும் இடத்தில் தோண்டியபோது ஒரு சிவப்பு நிறத்தில் துணிச்சுருள் இருந்தது. அதுதான் வரைபடம் என்று பொம்முவும் அரவிந்தும் புரிந்துக்கொண்டனர். அந்த துணிசுருளை எடுத்துக்கொண்டு கரையேறி வந்தார்கள் துறவிகள்.

“இதுதான் அந்த வரைபடம் “ என்று துறவி அந்த துணிச்சுருளை போம்முவிடம் கொடுத்தார்.

Bommuvin thedalபொம்மு அந்த துணிச்சுருளை விரித்து நிலத்தில் வைத்து பார்த்தாள். அந்த பெரிய வரைபடத்தில் நீலயுகத்தின் கோவில் மலைதான் நடுவில் முக்கியமாக இருந்தது. அந்த மலையிலிருந்து வெவ்வேறு திசையில் மூன்று பாதைகள் சென்றனர். மூன்று பாதைகளும் காட்டில் எங்கெங்கோ வளைந்து சென்று முடியும் இடத்தில் ஒவ்வொரு பானை இருந்தது. அதாவது ஒவ்வொரு பாதையின் முடிவில் ஒவ்வொரு பானை இருந்தது. பொம்முவுக்கும் அரவிந்துக்கும் குழப்பம்.

“இந்த வரைபடத்துல மூணு பாதைகள் இருக்கு... அதோட மூணு பாதையின் முடிவிலும் ஒரு பானை இருக்கு. ஆனா அமிர்தம் கொண்ட பானைகள் ரெண்டுதான்னு காளியன் என்கிட்டே சொன்னாரே?” – பொம்மு.

“ஆமா...உண்மைதான் இந்த வரைபடத்தில் இருக்கிற மூன்று பானைகளில் ஏதோ இரண்டு மட்டுமே அமிர்தம் கொண்டது.” – துறவி.

“அப்போ மிச்சம் இருக்கிற ஒண்ணு?” – அரவிந்த்.

“போலி “ – துறவி.

“என்ன போலியா?...” – அரவிந்த்.

“யாரோ ஒரு சதிகாரர்கள் செய்த வேலைதான் அந்த போலி பானை...” – துறவிகள்.

“அப்படினா நாங்க தேடி போய் எடுக்கிற முதல் பானை போலியாக இருந்தா?” – பொம்மு.

“அந்த போலி பானையில் விஷமும் இருக்கலாம்.” – துறவி.

பொம்முவும் அரவிந்தும் அதிர்ந்து போயினர்.

“இதுல எது உண்மையான அமிர்தப்பானைகள் ? அது உங்களுக்கு தெரியுமா?” – பொம்மு.

“தெரியாது....ஆனால் இந்த அமிர்தம் தேடி இதற்க்கு முன் சென்றவர்கள் பலபேர் இன்றும் காணப்படவில்லை....அமிர்தம் கொண்ட பானைகளை கண்டுபிடிப்பதே ஒரு போராட்டம் அதிலும் சரியான பானைகளை நீங்கள் அடைவது மிக மிக குழப்பமான விஷயம்.....” – துறவி.

“இது ரொம்ப கொடுமையா இருக்கு...நாங்க நாங்க எப்பிடி சரியான பானையை கண்டுபிடிக்கறது?” – பொம்மு பல்லை கடித்தபடி.

“ஒரு யோசனை சொல்கிறேன்....உண்மையான அமிர்தத்தை கண்டுபிடிக்கும் திறமையை கொண்டது ஒரு குட்டிச்சாத்தான் “ – துறவி.

“என்ன குட்டிச்சாத்தானா?” – பொம்முவும் அரவிந்தும்

“ஆமாம் குட்டிச்சாத்தான்கள் ஒரு தீயகுணம் கொண்ட  குட்டி பேய்கள்தான். ஆனால் அவைகளுக்கு எது தீயசக்தி கொண்டது...எது நல்ல சக்தி கொண்டது என அறியும் திறமை உள்ளது. உங்களால் ஒரு குட்டிசாத்தனை உங்கள் வசபடுத்தினால் நீங்கள் எளிதில் அந்த உண்மையான அமிர்தம் கொண்ட பானையை கண்டுபிடிக்க முடியும்.” – துறவி.

“அப்படியா?...அப்போ நாங்க ஒரு குட்டிசாத்தானை பார்த்து உதவி கேட்டா ஈஸியா வேலை முடிஞ்சுதுல ?” – அரவிந்த் சந்தோஷமாக.

“ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை இருக்கிறது....குட்டிசாத்தன்களுக்கு மனிதர்களை பார்த்தாலே கொன்று விடும்!” என்று துறவி கூற அரவிந்த் முகம் மீண்டும் சோகமானது.

“ஆனா நான்  பொம்மைதானே?...நானே போய் இந்த வேலைய முடிக்கிறேன்” – பொம்மு.

“அதுதான் சரி...ஆனால் இந்த இரவில் நாம் யாரும் எங்கும் செல்ல வேண்டாம்...இங்கே எங்காவது ஓய்வு எடுத்துவிட்டு நாளை விடிந்தவுடன் பயணத்தை பற்றி முடிவெடுப்போம்” – துறவி.

“ஆமாம்...நீங்க சொல்றதும் கரெக்ட்தான் நாம இனிக்கு ராத்திரி இங்கேயே எங்காவது தங்கிடலாம்.” – அரவிந்த்.

பொம்மு , அரவிந்த்  மற்றும் துறவிகள் அருகில் நிறைய மரங்கள் நிறைந்த பகுதியில் சென்று ஓய்வெடுக்க ஆரம்பித்தனர். அனைவரும் உறங்க ஆரம்பித்தனர். பொம்மு தன் கையில் அந்த வரைப்படத்தை பத்திரமாக பிடித்துக்கொண்டு கண்கள் மூடி உறங்க ஆரம்பித்தாள். சிறிது நேரம் சென்றது. “ஸ் ஸ் !” என்று யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டது. பொம்மு கண்விழித்து சுற்றி சுற்றி பார்த்தாள். சுற்றியுள்ள துரவீகளும் அரவிந்தும் நன்கு உறங்கிக் கொண்டிருந்த பொது யாரோ அவளை மீண்டும் மீண்டும் “ஸ் “ சத்தம், போட்டு கூப்பிட்டனர். அந்த சத்தம் மரத்தின் மேல் இருந்த ஒரு கழுகின் சத்தம் என்று பொம்மு புரிந்துக் கொண்டாள். பொம்மு தன் கையில் அந்த வரைபடத்தை கெட்டியாக பிட்தபடி எழுந்து அந்த கழுகை பார்த்தாள். அவளுக்கு சற்று தூரத்தில் இன்னொரு கழுகு இருந்தது. இப்படியே அவள் ஒவ்வொரு கழுகை பார்த்தபடி துறவிகள் மற்றும் அரவிந்த் இருக்கும் இடத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி சென்று அந்த கழுகளைபின் தொடர்ந்தாள். அவள் நடந்து வரும் வழியெங்கும் நிறைய கழுகுகள் வழியில் ஆங்காங்கே கழுகுகள் இருந்தன. பொம்மு கழுகுகளை பார்த்தபடி அவளுக்கே தெரியாமல் வெகுதூரம் தாண்டி வந்தாள். அங்கே ஓரிடத்தில் எண்ணமுடியாத அளவுக்கு கழுகுகள் வானில் சுழற்காற்றை போல் சுழன்றுக் கொண்டிருந்தன. அந்த சூழலுக்கு கீழே யாரோ ஒருவர் நின்றிருந்தார். பொம்மு மெல்ல அவரை நோக்கி சென்றாள். பொம்மு மெல்ல மெல்ல அந்த நபரை நோக்கி சென்ற பிறகே தெரிந்தது. அது ஒரு வாலிபன். அவன் தான் கழுகளின் அரசன் ராஜேந்திரன். ஆனால் பொம்முவுக்கு அவன் யாரென்று தெரியவில்லை.

 “என் பெயர் ராஜேந்திரன்...கழுகளின் அரசன்! உன் பெயர் பொம்முனு எனக்கு தெரியும்” – ராஜேந்திரன்.

பொம்மு திடிகிட்டாள். அவளுக்கு உடனே கழுகுகள் தன்னையும் அரவிந்தையும் தூக்கி மலையிலிருந்து கிழே காட்டில் போட்டதுதான் நியாபகம் வந்தது.

“அப்போ நீங்க இனிக்கு ...” – பொம்மு சொல்ல முயன்றபோது.

“ஆமாம்.....இனிக்கு சாயங்காலம் உன்னையும் அந்த பையனையும் மலையிலிருந்து தூக்கி போட்ட கழுகுகள்  நான் அனுப்பிய கழுகுகள் தான்.....அதுமட்டுமில்ல காட்டில காட்டேரிகள்கிட்ட இருந்து உன்னையும் அந்த பையனையும் காப்பாத்திய கழுகுகளும் நான் அனுப்பிய கழுகுகள்தான்” – ராஜேந்திரன்.

“என்ன சொல்றீங்க....ஏன் இப்படி பண்றீங்க?” – பொம்மு மெல்ல.

“நாளுக்கு நாள் சூனியக்காரியோட காட்டேரிகள் படை அதிமாகிகிட்டு கிட்டு இருக்கு....இந்த நிலையுகதை தாண்டி வந்து மற்ற நாடுகளையும் அதுங்க தாக்க ஆரம்பிச்சிடுச்சுங்க......அதுமாதிரி என் நாடான கருடயுகத்தையும் தாக்கிடுசுங்க....அதுல காயமான என் மக்களை காப்பாற்ற அமிர்தம் கிடைச்சாதான் முடியும்...அந்த அமிர்ததிற்கான வரைபடத்தை நான் தேடிகிட்டு இருந்த நேரத்தில்தான் என்னை மாதவன்னு ஒரு பையன் வந்து சந்திச்சான்” – ராஜேந்திரன்.

“மாதவன்....அவனா?” – பொம்மு ஆச்சர்யமாக.

“ஆமாம்...அவனுக்கு வரைபடம் இருக்கிற இடம் தெரியும்னு சொன்னான். ஆனா அதை என்கிட்டே சொல்றதுக்கு அவன் என்னை ஒருசில வேலைகளை வாங்கினான்.” – ராஜேந்திரன்.

பொம்மு எதுவும் பேசாமல் கவனித்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.