(Reading time: 12 - 23 minutes)

07. நீரும் நெருப்பும் - மோஹனா

வாசலை நோக்கி சென்றுக் கொண்டிருந்த ரிஷியை தடுத்து உணவு உன்ன அழைத்து சென்றாள் அபி..

வந்திருந்த ரிஷிகள் அனைவருக்கும் உணவு படைத்து அவர்களிடம் மனதார ஆசி பெற்று வழியனுப்பிக் கொண்டிருந்தனர் பாலா-பிரேமா மற்றும் அபி....

Neerum neruppumஅப்பொழுது ஒரு ரிஷி அபியிடம்,

“அபி இந்த பரிசு உனக்கு உதவும் என்று நினைக்கிறேன்....” என்று ஒரு புத்தகத்தை வழங்கினார்... அவர் மேலும் இது ரகசியமாக இருக்கட்டும் என்று சைகையும் செய்தார்.... பின் அவரையும் வழியனுப்பிவிட்டு யாரும் அறியாமல் கோவிலின் பின் புறம் சென்றாள்...

அந்த புத்தகத்தை திறந்து பார்த்தாள்... மிகவும் அதிர்ந்தாள்.... குழம்பி மீண்டும் புத்தகத்தின் அட்டைப் பக்கம் திருப்பினாள்.. அட்டையில் புத்தகத்தின் பெயர் எழுதப் படவில்லை... அதே போல் புத்தகத்திலும் எதுவும் எழுதப் படவில்லை.... அதிர்ச்சி, ஆச்சர்யம், குழப்பம் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆக்கிரமித்திருந்தது அவளை. ‘இதில் என்ன இருக்கிறது’ குழப்பத்தோடு குடும்பத்தோருடன் இணைந்துக் கொள்ள எத்தனிக்கும் பொழுது ஹரி அவளை நோக்கி வந்தான்...

“அபி அம்மா லைனில் இருக்காங்க.............” என்று போனை அவளிடம் கொடுத்தான்..

“ஹேலோ அத்தை.... “

“அபி சாமி தரிசனம் கிடைத்ததாம்மா?...”

“அதெல்லாம் கிடைத்தது அத்தை... நீங்கள் இங்கே இல்லாதது பெரும் குறையாக தெரிகிறது அத்தை..” சிறு விசும்பலுடன் சொல்லி முடித்தாள்..

பாரம் மனதை அழுத்த ”அபி நீ ரொம்ப அழகாயிருக்க.. அதுவும் இல்லாம உனக்கு இந்த புடவை ரொம்ப பொருத்தமா இருக்கு....” என்று பேச்சை மாற்றினாள்.. 

முகம் மலர்ந்து “அப்படியா?... நீங்கள் எப்போது பார்த்தீங்க...?.........”

“அபி... உனக்கு ஒன்னு சொல்லட்டுமா?... ஹரி தான் உன்னை போட்டோ எடுத்து எனக்கு அனுப்பினான்... நீ மாடியிலிருந்து இறங்கிக்கொண்டிருந்த.. அதுமட்டுமில்லாமல், இது உனக்கு தெரியக் கூடாதாம்.. ரகசியமாய் எடுத்ததாம்... அது இதுன்னு ஏகப்பட்ட ப்ராமிஸ் வாங்கிக்கொண்டு தான் உன்னிடம் கொடுத்தானென்றாள் பார்த்துக்கொள்... சீக்கிரமா நீங்க இரண்டு பேரும் கல்யாணம் செய்துக்க கூடாதா....? இன்னும் எத்தனை நாள் தான் காத்துகிட்டு இருப்பிங்க?.... நான் சொன்னதை யோசனை பண்ணு....சரியா?....” ஒருவாறு விஷயத்தை உடைத்தாள்..

“ம்ம்ம்ம்......மாமாவிடம் கொடுக்கிறேன் அத்தை....” ஹரியிடம் கொடுத்து விட்டு சிட்டாய் பறந்து விட்டாள் அவள்...

மாமா என்ற அவளது அழைப்பில் சற்று மெய்மறந்துதான் போயிருந்தான்...

“ஹேலோ.... ஹேலோ.... ஹரி.... ஹரி....... லைனில் இருக்கியா?... ஹரி....”

“இருக்கேன் அம்மா சொல்லுங்க.... ஒருவழியாய் நிலைக்கு திரும்பினான்...

“என்னடா இது.... இவ்வளவு ஆசை இருப்பவன் சீக்கிரம் அவளை திருமணம் செய்து கொள்ளலாம் அல்லவா?.....”

“அம்மா!!!!...”

“என்னடா....”

“நீங்களா இப்படி பேசுறிங்க....”

“ஆமாம்... “

“என்னால நம்பவே முடியலை....”

“நம்பித்தான் ஆகா வேண்டும்.... ”

“சரிம்மா.... இதுகுறித்து நாம் பிறகு பேசலாம்... பாய் மாம்...” ஒரு

பெருமூச்சுடன் இணைப்பை துண்டித்தான்...

அவனும் அவளும் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டார்கள்.. அத்தை சொன்ன விஷயமும் புத்தகத்தின் குழப்பமும் அவளை ஆட்கொண்டிருந்தது.. அவளின் சின்ன அசைவைக் கூட கவனித்துக் கொண்டிருந்த ஹரிக்கும் ‘அந்த புத்தகத்தில் என்ன இருக்கிறது’ என்ற ஆவல் தொற்றிக்கொண்டது.... கோவிலில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு அங்கிருந்து அந்த குடும்பத்தினர் கிளம்பினார்கள்...

டேய் அண்ணா!!!!....... உன் செசெலக்ஷன் சூப்பர்.....அவங்களை எப்போ நம்ம விட்டிற்கு அண்ணியாக கூட்டிட்டு வர போற?....”

“வாழ்க்கையில் பொறுமை மிக அவசியம் கண்ணம்மா..... உனக்கான பதிலை விரைவில் சொல்கிறேன்.....”

“அதுதான் எப்போ?...”

“பொறுமை.....”

“அது சரி....”

“எனக்கு அந்த பெண்ணை பிடித்திருக்கு கண்ணா.....”

“எனக்கு தெரயும்மா... என் செலக்ஷனா கொக்கா?...”

“க்கும்...... முதலில் அண்ணியிடம் பேசுற வழியை பாரு.. அப்புறம் வைத்துக்கொள்ளலாம் இந்த வாய் பேச்சை....” கேளிப்பேசுக்களுடன் வீடு திரும்பினார்கள்....

வர்கள் திருச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்கள்... அபியும் ஹரியும் அவர்கள் சிந்தனையில் தொலைந்திருக்க, மற்றவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்...

வழியெங்கும் வயல்களும், அங்கங்கே இருந்த ஆற்றையும் வேடிக்கை பார்த்து கொண்டு வந்தாள் சுபா.... விஷ்ணு தியாவை அவ்வபோது சீண்டிக்கொண்டே வந்தான்... தியாவிற்கோ இவன் ஏன் என்னை சீண்டுகிறான் என்ற எண்ணம்.. பெரியவர்கள் எல்லோரும் அவர்களது ஸ்வீட் மெமொரிசை பகிர்ந்துக் கொண்டு வந்தார்கள்...  கார் திருச்சி நகரத்திற்குள் நுழைந்துக்கொண்டிருந்தது... “இறைவன் இல்லம்” என்ற கேட்டின் வாசலில் நின்றது கார்.... அனைவரும் இறங்கி உள்ளே சென்றனர்... அங்கிருந்த குழந்தைகள் அபியை சூழ்ந்துக்கொண்டு, பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள்... பின் அனைவரும் சேர்ந்து கேக் வெட்டினார்கள்.... பின் குழந்தைகள் அவளுக்கு பரிசளித்தனர்..

ஒரு குழந்தை அவளுக்கு அழகிய மலர்கள் கொண்டு வண்ண பூங்கோத்தை பரிசளித்தது.. இன்னொரு குழந்தை அவளுக்கு தானே பாடலையும் எழுதி அதற்கு மெட்டும் அமைத்த அந்த பாடலைப் பாடிக் காட்டினாள்... அனைவரும் ரசித்துக் கேட்டனர்.... மற்றும் சில குழந்தைகள் குழுவாக சேர்ந்து கைவண்ண பொருட்கள் அமைத்து அவளுக்கு பரிசளித்தனர்.. அப்படி பரிசளித்ததில் ஒரு குழுவின் பரிசு சிந்தனையைத் தூண்டும் விதமாக இருந்தது... அது முழுக்க முழுக்க மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலும், மேலும் அதற்கு வண்ணத்தை இயற்கை முறையில் தயாரித்திருந்தார்கள்... செயற்கைக்கும் இயற்கைக்கும் மிக அறுமையான எடுத்துக்காட்டாக இருந்தது... வண்ணம் மட்டுமில்லாமல் அந்தப் பரிசின் கருத்தும் இயற்கையை எடுத்துரைத்தது... அதன் அர்த்தம் புரிந்தாலும், அதை அந்த குழந்தையின் வாயால் கேட்க விரும்பினாள்...

இதன் அர்த்தம் என்ன சுமதி (குழுவின் தலைவி)” அதாவது அக்கா, நாம் மனிதர்கள் நம் வசதிக்காக நிறைய இயந்திரங்களைக் உருவாக்குகிறோம். அதை தவறான முறையில் இயங்க வைத்து நாம் இயற்கையை மாசுப் படுத்துகிறோம்... அதை சரியான முறையில் இயக்கி நம் இயற்கை அன்னையை காக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம் அக்கா....”

“இல்லையே நாம் சரியான முறையில் தானே இயக்குகிறோம்.... நீ சொல்வது போல் தவறான முறையில் இயக்கினால் நிறைய விபத்துகள் தானே ஏற்படும்?.... அவ்வபொழுது தானே கவனக் குறைவால் விபத்துகள் ஏற்படுகின்றன.....”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.