(Reading time: 8 - 16 minutes)

08. நீரும் நெருப்பும் - மோஹனா

ங்கே அவன் கண்ட காட்சி அவனை அதிர வைத்தது.... அங்கே அபியை நோக்கி ஹரி கை உயர்த்திவிட்டிருந்தான்...

“அண்ணா!!!......... “ கோபத்துடனும் அதே சமயம் மற்றவர்கள் வந்து விட கூடாது என்பதற்காக நிதானமாகவும் அழைத்தான்......

Neerum neruppumஹரியின் ஓங்கிய கையை காட்டி ”கையை இறக்குங்கள் அண்ணா!!...... அவர்கள் என் அண்ணியாக்கும்... என் இரண்டாவது அன்னை....”

“அவள் என்னை மணந்தால் தானே நீ சொல்வதெல்லாம்........”

“ஆமாம்..........”

“நாங்கள் தான் இன்னும் திருமணமே செய்து கொள்ளவில்லையே, பிறகெப்படி இவள உன் அண்ணி ஆவாள்?.. இரண்டாம் அன்னை ஆவாள்?...”

பதிலளிக்காமல் விஷமமாய் சிரித்தான் விஷ்ணு....... ஹரியின் அனல் பார்வையை கண்டு சிரிப்பை நிறுத்திவிட்டு,

“ஏன் அண்ணா?.... உங்களுக்கு இப்படி ஒரு கேள்வி.......?...........”

“???????......”

“நீங்கள் தான் மணக்க போகிறீர்கள் என்ற உண்மை எனக்கு மட்டுமல்ல நம் சொந்தங்கள் அனைவருக்கும் தெரியுமே... நம் பெற்றோரும் அண்ணியின் பெற்றோரும் என்றோ நிச்சயம் செய்ததை மறந்து விட்டீர்களா?.......”

“நல்லது......... எனக்கு அது நன்றாக நினைவிருக்கிறது....அவளுக்கு நினைவு படுத்து.........” சொல்லிவிட்டு விருட்டென அறையை விட்டு வெளியேறிவிட்டான்....

ஹரி கடைசியாக சொன்ன வார்த்தைகளை கேட்டு விஷ்ணு குழப்பம் அடைந்தான்... தன் அண்ணியை நோக்கினான்....... அவளின் முகத்திலும் ஒன்றும் அறிந்து கொள்ள முடியவில்லை.....

“அண்ணி... என்ன ஆயிற்று?.....”

அவ்வளவு நேரம் திடமாக இருந்தவள், இப்பொழுது சிறு குழந்தையை போல் அழுதாள்....

என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினான் விஷ்ணு... ‘இவர்கள் இருவருக்கும் என்ன ஆயிற்று?’....  அவன் எவ்வளவோ முயன்றும் அவளை சமாதானம் செய்யமுடியாவில்லை....... விஷ்ணுவை அவன் அறைக்கு அனுப்பிவிட்டு யாரும் அறியாவன்னம் தலையணையில் முகம் புதைத்து அழுதாள்......... ‘நானா அப்படி பேசினேன்....’ ‘என் ஹரி வேறு பெண்ணை திருமணம் செய்துக் கொள்வானா?....’ ‘அப்படி நடந்தால் நான் இந்த உலகத்தில் இருப்பதற்கு அர்த்தமே இல்லை....’ பலவாரு எண்ணி அழுதுக்கொண்டேயிருந்தாள்....

மிகவும் சோர்ந்து அமர்ந்திருந்தான் ஹரி.......

சிறு வயதில் இவர்கள் இருவரையும் சொந்தங்கள் முன் நிறுத்தி தாம்பூலம் மாற்றிக் கொண்டது முதல் கடைசியாக அவன் அவர்களை பிரியும் முன் வரை நடந்ததையெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தான்... பசுமையான  தென்றல் போல் தோன்றினாள் அபி... உடனே அவன் முகன் கடினமாக மாறியது... ‘ச்சே... எப்படி இருந்தவள், சட்டென இப்படி பேசிவிட்டாள்....’ மனம் மறுத்தும் அவளையே சுற்றிக் கொண்டிருந்தது...

பி நான் திருமணம் செய்துக்கொள்ளலாமா?.........” பேச்சினுடே கேட்டான் ஹரி...

அவ்வளவு நேரம் நல்ல தோழியாய் பேசிக்கொண்டிருந்த அபியின் முகம் மாறியது....

“அபி... அபி... உன்னைத்தான்.... ஏன் அமைதியாய் இருக்கிறாய்?....”

“அது....”

“சொல் அபி... “

“எதற்கு இப்பொழுது இந்த பேச்சு... வேறு பேசலாமே....”

“எப்படியும் இதை பற்றி நாம் பேசித்தானே ஆகவேண்டும்..... அது ஏன் இப்பொழுதாக இருக்க கூடாது.....? சரி சொல்... உன் விருப்பத்தை.. நாம் திருமணம் செய்துக்கொள்ளலாமா?.....” காதல் கலந்த ஆசையோடு கேட்டான்...

“இல்லை..... எனக்கு..... திருமணத்தில் ....விருப்பம் இல்லை..... திக்கி திணறி சொல்லி முடித்தாள்.....”

“என்னது?....... “ அதிர்ந்தே விட்டிருந்தான் ஹரி....

அப்படியென்றால் அவளுக்கு என்னை பிடிக்கவில்லையா? அல்லது.....

“அபி வேறு யாரையேனும் விரும்புகிறாயா?............”

அவள் முறைத்த முறைப்பிர்க்கு சக்தியிருந்தால் அவன் சாம்பலாகியிருப்பான்......

“பின் ஏன் வேண்டாம் என்கிறாய்?.......” குழப்பத்துடன் கேட்டான்..

“எனக்கு சில நிபந்தனைகள் இருக்கிறது......அதெல்லாம் நீங்கள் ஒப்புக்கொண்டால் திருமணம் குறித்து பேசலாம்......”

“என்ன அது?.........”

“நீங்கள் என்னை திருமணம் செய்துக் கொண்டாள் இங்கே தான் இருக்க வேண்டும்.........நம் வீடு இது தான்........ “

கோவத்தில் அவனது கண்கள் சிவந்தது.....

“அதாவது வீட்டோடு மாப்பிளையாய் இருக்க வேண்டும் என்கிறாய்.... அப்படிதானே?....”

“கிட்ட தட்ட அப்படித்தான்........... இதனால் உங்களுக்கு கோபம் வரலாம்... ஆனால், என்னால் இந்த நிபந்தனையை மாற்றிக் கொள்ள முடியாது.... ஏன் என்றால் இது என் முன்னோர்களின் வழக்கம்... ஆண் பிள்ளையானாலும் பெண் பிள்ளையானாலும் அவர்கள் பிறந்த இந்த வீட்டில் தான் வாழ்கையை நடத்த வேண்டும்....... அந்த கட்டுப்பாட்டிற்கு இணங்கி தான் என் தந்தை தாயின் பிறந்த வீட்டிலே வசிக்கிறார்.... ‘ஏன் இந்த கட்டுபாடு’ என்று எனக்கு தெரியாது... ஆனால், என்னால் இதை மீறமுடியாது....இதற்கு சம்மதித்தால் திருமணம் குறித்து பேசலாம்....”

“என்னால் அப்படி இருக்க முடியாது.... அது எனக்கு அவமானம்.... “

அதற்கு அவள் ‘நான் என்ன செய்ய முடியும்’ என்பது போல் கையை விரித்து காட்டினாள்..

“என்னால் இங்கே இருக்க முடியாது..... என் வர்த்தகம் முழுவதும் வெளிநாட்டில் உள்ளது... இங்கிருந்து என்ன செய்ய?........ மேலும் இப்படி பெண் வீட்டில் இருப்பது எனக்கு அவமானம்.....”

“அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது..... நீங்கள் திருமணம் குறித்து கேட்கவும் தான் இதை சொன்னேன்.....”

“நான் உன்னை காதலிக்கிறேன்... உன்னை பிரிந்து இருக்க முடியாது என்ற நிலையில் தான் உன்னிடம் திருமணம் குறித்து பேசினேன்.......”

அவள் அமைதிகாக்க ,

“நீ என்னை விரும்புகிறாயா?.......”

“இந்த வானின் அளவு பிடிக்கும்...”

“பிறகு ஏன் அபி..........?”

“ஏன் என்றால் நான் என்ன செய்ய முடியும்.... இந்த குடும்ப விதியை உடைத்து என்னால் உங்களுடன் வர முடியாது.....”

“இது தான் உன் முடிவா?...”

“நிச்சயமாய் ஆமாம்....”

“அப்படியென்றால் நானும் என் முடிவை சொல்லிவிடுகிறேன்......... என்னால் இப்படி வீட்டோடு மாப்பிளையாய் இருக்க முடியாது....... “

“அப்படியென்றால் வேறு பெண்ணை திருமணம் செய்துக்..........”

அவள் சொல்லி முடிக்கும் முன் அவளை கோபமாய் நோக்கி கையை உயர்த்தி விட்டிருந்தான் ஹரி..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.