(Reading time: 18 - 36 minutes)

20. மனதிலே ஒரு பாட்டு - வத்ஸலா

லர்ந்து போன  முகத்துடன் கேட்டாள் அனு. அவங்க எங்கே இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியுமா?

சரியாய் அந்த நேரத்தில் அங்கே வந்த வசந்தின் அப்பா சற்று திடுக்கிட்டுத்தான் போனார்.

மனதிலே ஒரு பாட்டு ‘இல்லை எனக்கு யாரையும் தெரியாது. அவங்களை பார்த்தா, நீ என்ன செய்வேன்னு தெரிஞ்சுக்கறதுக்காக கேட்டேன்’ அர்ச்சனாவின் அப்பா நிதானமாய். சொன்னார்.

எனக்கு அவங்களை பார்க்கணும்னு ரொம்ப ஆசை. எனக்கு சின்ன வயசு ஞாபகம் கொஞ்சம் கொஞ்சம் இருக்கு. எனக்கு ஒரு குட்டி தங்கச்சி கூட இருக்கா. அவளை பார்க்கணும், அவ கூட இருக்கணும்னு நான் எப்பவும் நினைப்பேன். .உங்களுக்கு அவங்களை பத்தி ஏதாவது தெரிஞ்சா சொல்றீங்களா? கண்கள் மின்ன சிறு குழந்தையாய் கேட்டாள் அனு.

‘தெரிஞ்சா கண்டிப்பா சொல்றேன் வசந்தின் அப்பாவை பார்த்தபடியே ‘ அவர் சொன்ன நொடியில் சட்டென இடையில் புகுந்தார் வசந்தின் அப்பா.

அவ..... அவளுக்கு நா......ன் நான் தான் அப்பா, அம்மா எல்லாம். அவளுக்கு வேறே யாரும் வேண்டாம் நான் இருந்தாலே போதும். இல்லை அனு? சற்று தவிப்புடன் அனுவின் முகத்தை பார்த்து அவர் கேட்க, அனு மெல்ல தலையசைத்த போது ஏதோ ஒன்று புரிந்தது போலே இருந்தது அர்ச்சனாவின் அப்பாவுக்கு.

அதற்கு மேல் எதுவும் பேசவில்லை அவர். இருந்தாலும் அவர் மனம் கணக்கு போட்டுக்கொண்டிருந்தது.

வர் சென்னை திரும்பிய பிறகு அர்ச்சனாவின் பிறந்தநாளன்று அவள் அழைப்பை ஒவ்வொரு நிமிடமும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தவருக்கு ஏமாற்றமே.

அவர் மனம் எரிமலையாய் மாற துவங்கியது. அந்த வசந்தும் அவன் குடும்பமும் அவளை தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டு இயக்குகிறார்கள். அவள் என்னை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து விடுவாள்.

எனக்கு இனிமேல் தனிமை தானா? அர்ச்சனாவை பார்க்காமல் என்னால் இருந்து விட முடியுமா? இல்லை டில்லிக்கே சென்று அந்த வசந்துக்கு அடி பணிந்துக்கொண்டு, அவன் சொல்வதை கேட்டுக்கொண்டு  வாழ முடியுமா? இரண்டுமே சாத்தியமில்லை.

இந்த திருமணம் நிச்சியமான விதத்தையே அவரால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அவள் திருமணம் பற்றி எத்தனை கனவுகள் இருந்தது எனக்கு?

இது எதைப்பற்றியுமே யோசிக்கவில்லையே யாரும்?. அர்ச்சனா உட்பட யாருமே என்னிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லையே. நடந்தவைகளை மனதால் ஜீரணித்துக்கொள்ளகூட நேரமில்லாமல் அடுத்தடுத்து எல்லாம் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறதே.?

அர்ச்சனாவை அந்த வசந்த் திட்டமிட்டு இயக்கிக்கொண்டிருக்கிறான். எதையுமே மறுக்ககூட முடியாமல் வேறு வழியின்றி நானும் இயங்கிக்கொண்டிருக்கிறேன்.

எத்தனை முயன்றும் நடந்தவைகளை ஏற்றுக்கொள்ளவே முடியாமல், நடக்கபோவதை எதிர்கொள்ளவும் மனம் இல்லாமல், கடைசியில் ஒரு முடிவுக்கு வந்திருந்தார் அவர்.

கூடாது. இந்த திருமணம் நடக்ககூடாது. அர்ச்சனாவுக்கு நான் பார்த்து நிச்சயிப்பவனே கணவனாக வரவேண்டும்.

மனோவின் திருமணத்திற்காக டில்லியை விட்டு வசந்தும், அர்ச்சனாவும் பெங்களூர் கிளம்பிய தினம்.

அனுவின் பெற்றோர் ஏதோ ஒரு வேலையாக டில்லி சென்றிருப்பது தெரிய வந்தது அர்ச்சனாவின் அப்பாவுக்கு.

மனதிற்குள் ஏதோ முடிவு செய்துக்கொண்டவராய் டில்லிக்கு கிளம்பிவிட்டிருந்தார் அவர்.

அவர்களை தேடிப்பிடித்து ஏதேதோ சாக்கு சொல்லி, என் சம்மந்தியை நீங்கள் சந்தித்தே ஆக வேண்டும்மென்று வறுப்புறுத்தி அழைத்துக்கொண்டு வசந்தின் வீட்டை அடைந்தார்.

அப்போது அனு வீட்டில் இருக்கவில்லை.

அனுவின் அம்மாவின் முகத்தை பார்த்த நிமிடத்திலேயே வசந்தின் அப்பாவின் முகம் மாறிவிட்டிருந்தது.

‘இவர் சந்துரு. என் கூட வேலை பார்க்கிறார். ஆமாம் அனு எங்கே? வெகு இயல்பாய் கேட்டார் அர்ச்சனாவின் அப்பா.

அனுவா? முகம் மலர கேட்டனர் அனுவின் பெற்றோர். ‘உங்க பொண்ணு பேரும் அனுவா? எங்களுக்கும் அனுன்னு ஒரு பொண்ணு இருந்தா. சின்ன வயசிலேயே காணாம போயிட்டா.

சுவாசம் அழுந்துவது போல் உணர்ந்தார் வசந்தின் அப்பா. பேச்சை மாற்றி ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாலும், அவர். மனதிற்குள்ளே அனு இப்போது திரும்பிவிடக்கூடாது என்று வேண்டியபடியே அமர்ந்திருந்தார்.

அவள் திரும்புவதற்குள் கிளம்பி விட்டனர் அவள் பெற்றோர். அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே வந்தார் அர்ச்சனாவின் அப்பா.

அடுத்த நொடி சொன்னார் வசந்தின் அப்பா ‘என் பொண்ணை என்கிட்டே இருந்து தயவு செய்து பிரிச்சிடாதீங்க’

‘அப்போ என் பொண்ணை என்கிட்டே திருப்பி கொடுத்திடுங்க. இந்த கல்யாணம் நடக்க கூடாது.'  அதை நீங்களாகவே நிறுத்திடுங்க என்றார் நிதானமாக.

அதிர்ந்து போனார் வசந்தின் அப்பா. 'அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?

எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை. அவ என் பொண்ணு . அவ எப்பவும் என் பொண்ணாதான் இருக்கணும். அர்ச்சனாவோட வாழ்கையை நான் தான் முடிவு பண்ணனும். நீங்க எல்லாரும் சேர்ந்து முடிவு பண்ணக்கூடாது.

வசந்தின் அப்பாவால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

வேண்டாம். தயவு செய்து வேண்டாம். மனசார பழகுற ரெண்டு பசங்களையும் பிரிக்க வேண்டாம். அர்ச்சனா இந்த வீட்டுக்கு வந்தா ரொம்ப சந்தோஷமா இருப்பா. அவங்களை வாழ விடுங்க.' அவரது கெஞ்சல்கள் எதற்கும் இறங்குவதாக இல்லை இவர்.

தோற்றுத்தான் போனார் வசந்தின் அப்பா. அனுவா? அர்ச்சனவா? என்கிற போராட்டத்தில் அனுவையே தேர்ந்தெடுத்தார்.

இதயம் நொறுங்கிப்போக, மனம் இறுகிப்போக திருமணத்தை நிறுத்தினார் அவர்.

அதோடு எல்லாம் முடிந்தது என்றுதான் நினைத்தார் அர்ச்சனாவின் அப்பா.

இப்படி அவர் அவசரப்பட்டு முடிவெடுப்பார் என்று கனவிலும் நினைக்கவில்லை.

வசந்தின் அப்பா இப்படி செய்துவிட்டார் என்ற செய்தி பத்து நாளைக்கு பிறகே அர்ச்சனாவின் அப்பாவை எட்டியது.

அப்போது அவரை பார்க்க வந்திருந்தார் அவருடைய அண்ணன். மனோவின் அப்பா.

வந்தவர் நிதானமாகத்தான் பேச துவங்கினார். 'போதும்டா. நடந்ததெல்லாம் போதும் அந்த பையன் ரொம்ப உடைஞ்சு போயிட்டான்டா. இப்பவாவது ரெண்டு போரையும் சேர்த்து வெச்சிடு. சந்தோஷமா இருக்கட்டும்.

தன்னால் ஒரு உயிர் போய்விட்டது என்ற எண்ணம் அவரை உலுக்கத்தான் செய்தது. அதே நேரத்தில் இன்னொரு பயம் அவரை பிடித்துக்கொண்டது. நடந்ததெல்லாம் அர்ச்சனாவுக்கு தெரிந்தால் அவள் என்னை மொத்தமாய் வெறுத்துவிட மாட்டாளா?

வந்தவரை அர்ச்சனா வருவதற்குள் கிளப்பிவிடவேண்டுமென்றே துடித்தார். அவருடைய பயமும் சுயநலமும் அவரை செலுத்த 'ஆமாம் அவன் என்ன தப்பு பண்ணானோ? தற்கொலை பண்ணிகிட்டான். அதுக்கு நான் பொறுப்பா.? என்றார் மனசாட்சி இல்லாமல்.

கொதித்தே போனார் அவர் அண்ணன். பேச்சு வார்த்தை முற்றிப்போக ஆத்திரத்தில் இவர் மீது கை ஓங்கி விட்டிருந்தார் அண்ணன்.

கடைசியில் அவருடனான உறவையே முறித்துக்கொண்டவராய் கிளம்பி சென்றார் மனோவின் அப்பா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.