(Reading time: 9 - 18 minutes)

09. என் இதய கீதம் - Parimala Kathir

தினமும் காலையில் கண்விழிக்கும் போதும் அன்று புவியை கண்ணார பார்க்கும் ஆனந்தத்துடன் தன் துயில் களைவது அஸ்வினின் வழக்கமாகிவிட்டது. அன்றும் அபி கல்லூரிக்கு கிளம்பிச் சென்று சிறிது நேரங்களில் தானும் தனது காரில் அவளது கல்லூரிக்கு சென்று விட்டான். தனது தங்கையின் கண்ணில் படாமல் ஆனால் புவியின்  வரவு தெரியும் வகையில் தனது காரை மறைவாக நிறுத்தி வைத்திருந்தான். அவனது பொறுமையை சோதிக்காது புவிக்கா அன்றும் அவனுக்கு தரிசனம் வழங்கினாள்.  அவளைப் பார்த்த ஆனந்தத்தில் தனது ஆபிசுக்கு சென்று கொண்டிருந்தான். அப்போது தான் சங்கரின் நினைவு வந்தவனாக அவனை அடைத்து வைத்திருந்த இடத்துக்கு காரை திருப்பினான்.

En ithaya geetham

"என்னாச்சு இன்னிக்கும் அடம் பிடிக்கிறானா? சகாதேவன்."

"ஆமா சார் ஆனால் அவனைப் பார்த்தாலே பாவமாய் இருக்கு  அவன் தப்பானவன் போல தெரியல சார்."

அஸ்வின் சகாதேவனை ஒரு தடவை முறைத்துப் பார்த்து விட்டு சங்கரை அடைத்து வைத்துள்ள அறையை நாடிச் சென்றான்.

அங்கு அஸ்வினை கண்டதும்  தன் துயர் நீக்க வந்த ஈசன் என்று சங்கர் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
இந்த கயவர் கூட்ட்டத்திலிருந்து தனை காப்பான் என்று இச்சை கொண்டான்.  ஆனால் பாவம் அந்த கயவர் கூட்டத்தின் தலைவனே அஸ்வின் என்று அறியாது விட்டானே.

அதனை அறிந்த போது அவன் இதயம் நின்று விடுவது போன்று உணர்ந்தான். 
"நீ.... நீங்களா? என்னை கடத்தி வச்சிருக்கீங்க?  என்னால நம்பவே முடியல, ஆனால் எதுக்கு இது  என் அபிக்கு தெரிஞ்சால் என்ன ஆகும் என்று தெரியும் இல்லையா அவ என் மேல உயிரே வச்சிர்க்கா உங்க மேல அதுக்கும் மேலான நம்பிக்கையும் உயிரும் வச்சிருக்கா அனால் நீங்க ச்சா? தயவு செய்து என்னை விட்டிடுங்க நான் இத பத்தி யார்கிட்டையும் சொல்லல அவ என்னை காணாம தவிச்சு போயிடுவா?"

ஒரு வில்லத்தனமான சிரிப்புடன் "நீ  சொன்னதெல்லாம் கரக்ட் தான்.  அவ உன் மேல பத்தியமாய் தான் இருக்கா, அத வச்சு தானே நீ இந்த ஆட்டம் போடுறே."

அவன் என்னென்று தெரியாது அஸ்வினை பார்த்தான்.

"நடிக்காதடா இந்த நடிப்பை எல்லாம் அபி கிட்ட வச்சுக்கோ.  ஸ்... இனி அதுவும் முடியாதே  அவளுக்கு இன்னும் வன் மந்தில வெட்டிங் பிக்ஸ் பண்ணியாச்சு  அது முடிஞ்சதுக்கு அப்றமாய் தானே  உன்னை இங்கிருந்து  வெளியே விடுவன் அதுக்குள்ள  அவ உன்னை மறக்குற  மாதிரி நான் பாத்துக்குவன். "

"நீங்க ஏதோ  தப்பா முடிவெடுத்திருக்கீங்க அஸ்வின்  அவ ஒரு போதும் என்னை மறக்க மாட்டா.  என்னாலயும் அவள பிரிந்து வாழ முடியாது. எங்களை பிரிக்காதீங்க."

"ஹா......  பரவாயில்ல அசராம நடிக்கிறாய். உனக்கு பணம் தானே  முக்கியம் அதுதான் நான் உனக்கு ஒரு தொகை தாரன் என்று சொல்றனே  அது மட்டும் இல்ல உன்னை வாரின் அனுப்பி அங்க ஒரு நல்ல வேலைக்கும் ஏற்பாடு செய்து தாரன் அது போதாதா உனக்கு?"

"நீ எவ்வளவு உருக்காமாய் பேசினாலும் நான்  உன்னை நம்ப மாட்டன்  உனக்கு அவள  விட அவ சொத்து மேல தான் காதல்."


"யாருக்கு சார் வேணும் உங்க பணம் அத நீங்களே வச்சுக்கோங்க எனக்கு என்னோட அபி  கட்டிய துணியோடு இல்ல அத கூட நானே என் சொந்த பணத்தில வாங்கி அவளை உங்க வீட்டில  இருந்து கூட்டிட்டு போறன்  உங்க காசே வேணாம் என்று வேணும் என்றால் பத்திரம் எழுதி கையெழுத்திட்டு தருகிறோம் இது போதுமா?"  

அஸ்வின் ஏதும் பேசாது  ஒரு அரக்க தனமான சிரிப்போடு  அந்த அறையை விட்டு வெளியேறினான்.  சகாதேவனிடம் இன்னும் கூடுதல் பாதுகாப்பு போட சொல்லி விட்டு ஆபிசுக்கு புறப் பட்டான்.

ன்றிரவு   புவியின் தாய் திருமணத்திற்கு கொண்டு செல்ல தேவையான  சாறிகளை  எடுத்து  அடுக்கி கொண்டிருந்தார். அவர் கையில் ஒரு புகைப் படம் கிடைத்தது. அதைப் பார்த்தவர் நெஞ்சம் வெகுவாக  துடித்தது.  தனது  தாயின்  நினைவில் கண்கள் குளமாகின. தனது இளமைப் பருவம் அவர் கண்முன்னே விரிந்தது.  

இந்து சமுத்திரத்தின் முத்து, ஐந்து சமுத்திரத்தின் நித்திலம், ஈழம் என்ற பல புனைபெயர்களால் அழைக்கப்படும்  ஒரு அழகிய தீவு இலங்கையிலே  யாழினை மீட்கும் யாழ்ப்பாணத்திலே கண்ணகித்தாயும்  அவர் இளைய மைந்தன் முருகப் பெருமானும் எல்லை தெய்வங்களாக இருந்து காவல் புரிந்து வந்த இடம் தான் மட்டுவில். 

அழகியை தாமரைத் தடாகம், எங்கு பார்த்தாலும் பச்சைக் கம்பளம் விரித்தாரற் போன்று பசுமையான வயல் வெளிகள்  நான்கு திசையும் இயற்கை வளம் நிரம்பிய அழகிய சோலை தான் மட்டுவில். இவ்வழக்கு சோலையிலே தான்   பரமசேகரன் விசாலாட்சி அம்மாள்  தம்பதிகளுக்கு  இரண்டு ஆண் வாரிசுகளுக்கு ஒரு செல்ல மகளாக இந்த பூவுலகில் தன் மழலை மொழி பேச பிறந்தாள் லக்ஷ்மி.  

அவர்களது சொந்த பந்தங்களின் செல்ல குழந்தையாகிப் போனாள்.  லக்ஷ்மியும் பருவம் எய்தினாள் அவளுக்கு   திருமண வயதும் எட்டியது. அவளுக்கு எங்கெல்லாமோ மாப்பிள்ளை தேடினார்கள் சரியாக அமையவில்லை.  இறுதியில் அவர்களது தந்தைவழி உறவினரான  சின்னான் மங்கலதேவி அவர்களின் மைந்தனான நாராயணனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப் பட்டது.

நாராயணனின் குடும்பம் சற்று கல்வி வளம் நிறையப் பெற்றவர்கள். அனைவரும்  அரசாங்க அதிகாரிகளாக  தமது  சொந்த ஊராம்  மட்டுவிலை விட்டு  சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முதலே தமது குடிபெயப்பினை  கொழும்பிற்கு மாற்றிக் கொண்டனர்.

தனது  கட்டிட தொழில் சம்பந்தமாக  நாராயணன் யாழ்ப்பாணம்  சென்றிந்த போதுதான் தனது உறவினர்களை சந்திக்க நேர்ந்தது.  லக்ஷ்மியின் பெற்றோருக்கும் நாராயணனை பிடித்துப் போகவே  மேற்கொண்டு இது சம்பந்தமாக  பேச நாராயணனின் தந்தையை அணுகினார்கள். அவர்களும் தங்களது முழு சம்மதத்தை தெரிவிக்கவே அடுத்து வந்த சுப முகூர்த்தத்தில் லக்ஷ்மி கழுத்தில் மங்கள நாண்  ஏற்றப்பட்டது.

நாராயணன் தனது ஆசை மனைவிக்காக பார்த்துப் பார்த்து அழகிய வீடொன்றை கட்டினார். அதற்கு லக்ஷ்மி அகம் என்றும் பெயர் சூடினார். தமது மகளின் இன்பமான இல்லற வாழ்க்கையில் மன நிறைவு பெற்றனர் அவளது பெற்றோர்.

நாட்கள் பல கடந்து சென்றன. அவர்கள் வீட்டில் இன்னுமொரு மழலை தவழத்தொடங்கியது.  ஒரு குட்டி தேவதை அவளுக்கு நாராயணன் புவிக்கா என்ற நாமம் சூட்டினார். 

அவளும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வழரத்தொடன்கினாள். இந்நிலையில் நாட்டு நிலைமையும்   அரசாங்க மாற்றத்தால் சீர்குலையத் தொடங்கின. போர் மூழ்வதற்கான சாத்தியக் கூறுகளும் காணப் பட்டன.

அதற்கிடையில் அவர்களின் இளவரசியின் ஐந்தாவது பிறந்தநாள் வந்தது.  அதனை வெகு விமர்சையாக கொண்டாட ஆசைப்பட்டாள் லக்ஷ்மி. அவளது விருப்பத்தின் பெயரில்  இரு வீட்டு குடும்பத்தாரும் அயலவர்களும் சேர்ந்து  முதலில் அவர்களது வீட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடினார்கள்.  மறுநாள் மதியம் அநாதை ஆசிரம பிள்ளைகளுக்கு உணவளிப்பதாக ஏற்பாடாகி இருந்தது.  அதன்படி காலை பதினோரு  மணிக்கே அனைரும் புறப்பட்டு  ஆசிரமத்துக்கு சென்று விட்டனர். அங்கு சில மணி நேரம் பிள்ளைகளுடன் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்த புவிக்கா கீழே விழுந்து  காலில் இருந்து ரத்தம் கசியத் தொடக்கி விட்டது. அதனால் அவளை ஆசாத்துக் கொண்டு லக்ஷ்மியும் நாராயணனும் தமது வீட்டுக்கு கிளம்பி விட்டனர். தமது குடும்பத்தை இருந்து நல்ல படியாக  கவனித்து விட்டு வரும் படி கூறிச்  சென்றனர்.

அவர்கள் புறப்பட்டு அரைமணி நேரத்தில் அந்த ஆசிரமமே நிர்மூலமாகி விட்டது.  சந்தோஷமாக விளையாடிய சிறுவர்கள் பேத்தியின் பிறந்த நாளை சந்தோஷமாக கொண்டாட வந்த நாராயணனின் பெற்றோர் சகோதரர்கள்,  லக்ஷ்மியின் குடும்பம் என ஒட்டு பொத்த குடும்பமுமே அந்த செல்லடியில் இறந்து போயினர். 

அந்த கொடுமைவாதிகளின் கொடுமை அதோடு நிற்க வில்லை இன்னும் எத்தனை எத்தனையோ கொடும் செயல் வடமராட்சியிலே நடந்தேறியது. தமிழ் பேசும் மக்கள் இங்கையில் எங்கெல்லாம் வாழ்ந்தரளோ அங்கெல்லாம் அநீதிகளே இழைக்கப்பட்டன.

ஒரு வாறு  இந்த போரும் ஒரு  சற்று  குறைவடைந்து  ஒரு சமாதன உடன்படிக்கையின் பெயரில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக தமது இழப்புகளை ஏற்று மறந்து வாழத்தொடங்கினர். ஆனால் லக்ஷ்மியால் அவளவு எளிதில் எதையும் மறக்க முடிய வில்லை. 

எப்பொழுதும் ஒரு வித பயத்துடனேயே உலவி வந்தாள். அவள் பார்த்து ரசித்த வயல் வெளியும் குதித்து நீந்திய தாமரை குளமும்  அழகிழந்தாற் போன்று காணப்பட்டது. அவள் திரும்பிய இடம் எல்லாம் கை கால் இழந்த பிணத் திண்டுகளாக  காட்சி அழித்து அவளை படிப்படியாக சாகடிக்கும் மன நோய்க்கு ஆளானாள். 

முதலில் தமது பெற்றோர் சகோதரர்களை மறக்க முடியாது தவிக்கிறாள் என்று  நினைத்த நாராயணன் சிறிது காலத்திற்கு பின்னரே  அவளது மன உழைச்சலை கண்டு பிடித்தார். இங்கு இருந்தாள் அவளை முழுமையாக இழந்து விடுவோம் என்று அஞ்சி இந்தியாவில் உள்ள தனது பெரியப்பா மகனான கங்காதரனை தேடிப் புறப்பட்டார்.

கங்காதரன் வேலை நிமித்தம் இந்தியா சென்றவர். அங்கேயே தனது மனம் கவர்ந்த இலங்கை பெண் இந்திய குடியுரிமை பெற்ற ராஜியை  கைப் பிடித்தார்.  இராமேஸ்வரத்திலிருந்து  தனது தம்பி குடும்பத்தை அழைத்து வந்து அனுசரணையோடு பார்த்து வந்தார்.  புதிய இடமாற்றம் லக்ஷ்மியை கொஞ்சம் கொஞ்சமாக  குனமடையச் சென்றது.  ராஜியும் அதற்கு பக்க துணையாக இருந்தார். 

புவிக்காவை ராஜியின் பிள்ளைகளுக்கு  மிகவும் பிடித்து விட்டது. அவளும் எப்ப பார்த்தாலும் யானிகா மதுண்ணா என்று அவர்கள் பின்னாலேயே திரிவாள்.  

என்னம்மா புது பெயர் யானி என்று யாழினியின் தந்தை புவியிடம் கேட்ட போது மாதவன் தந்து தங்கைக்கு வக்காழ்த்து  வாங்கிக் கொண்டு வந்தான்.  யாழி அக்காவை நாங்க எல்லாம் யாழி, யாழினி என்று சுருக்க்கமாய் அழைக்கிறோம். அவள் செல்லமாய் யானி என்று அழைக்கிறாள். அக்காவுக்கே ஒன்றும் இல்லையாம் நீங்க என்ன விசாரணை பண்ணிட்டு என்று தந்தை மேல் பாய்ந்தான்.

இல்லடா உன்னோட செல்ல தங்கையை பற்றி நான் ஒண்ணுன் சொல்லல நீங்க போங்க தாயி என்று  புவியை மாதவனுடன் அனுப்பி வைத்தார்.  

மாதவனும் யாழினியும் நண்பர்களாகவே இருந்தனர்.  இப்போது புவி  அவர்களதும் செல்லம் ஆகி விட்டாள். நாட்கள் பல கடந்தன.  நாராயணனுக்கு கொடைக்கானலில் சரியாக தொழில் அமையாததால் தனது தமையனின் அறிவுரைப்படி சென்னையில் தமது வாழ்க்கையை ஆரம்பித்தனர் முதலில் சற்று திணறினாலும் விரைவிலேயே ஒரு நல்ல முன்னேற்றத்தை அடைந்தார் நாராயணன். 

யாழினியின் திருமணம் முடிந்து அடுத்த ஆண்டு ராஜி மாரடைப்பில் இறந்து போனாள்.  தாயாதரவற்று இருந்த பிள்ளைகளுக்கு லக்ஷ்மி தான் இன்று வரை தாயாக உள்ளாள்.  

"அம்மா நானும் ஏதாவது ஹெல்ப் பண்ணவா? இது நானே அண்ணிக்கு...." என்று வாயில் எதையோ குதப்பி கொண்டு வந்தவள். தாயிடம்  இருந்து எதிரொலி வராது போகவே தன் பேச்சை நிறுத்தி தாயை நிமிர்ந்து பார்த்தாள்.  அப்போது தான் தாயின் கையில் தனது சிறு வயது பிறந்த நாள் படம் இருப்பதை கண்டாள்.  தாயின் அமைதிக்கான காரணமும் அமைதியாக வழியும் கண்ணீருக்கான காரணமும் புரிபடலாயிற்று.  தான் வந்த சுவடே  இல்லாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

சில நிமிடங்களில் தந்தையின் கார் வரும் ஓசை கேட்டு  தாயிடம் சென்று நின்றாள்.  லக்ஷ்மியும் அவசரமாக தனை சீர் படுத்திக் கொண்டு கீழே இறங்கி வந்தாள்.  தாயிற்கு உதவும் பொருட்டு  தாயிடம் சில வேலைகளை ஏவி  விட்டாள் மகள்.  தாய் அழுதிருப்பது தெரிந்தால் தந்தைக்கு  பிடிக்காது என்பது மகள்   அறிந்ததுவே.

அது போல் ஒரு நிமிடம் பாத்தாலுமே மனைவியின் முக மாற்றத்தை நாராயணனால்  நன்றாகவே   தெரிந்து கொள்ள முடியும்.  மனைவின் வேதனை அறிந்ததால் சில சமயங்களில் பார்த்தும் பார்க்காதவர் போல இருந்து விடுவார்.

காலங்கள் கடந்தாலும் மனித நெஞ்சில் உள்ள காயங்கள் மறையாது என்பது  லக்ஷ்மியை பொறுத்தவரை  நிஜமே.  இன்று வரை அவரால் தன் சொந்தங்களின்  இழப்பிலிருந்து மீண்டு வர முடியவில்லை நீறு பூத்த நெருப்பாக நெஞ்சில் கனன்று கொண்டே இருக்கிறது. 

தொடரும்!

Go to episode # 08

Go to episode # 10


{kunena_discuss:702}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.